நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 1 மற்றும் 2 , உலக வர்த்தக அமைப்பின் வேளாண் ஒப்பந்தம் விளக்கமாக

• ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எச் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி 24 ஆண்டுகளுக்குப்பின் இஸ்ரோவுக்குத் தோல்வியாக அமைந்தது.

கூடுதல் தகவல்கள்
o 1993-ஆம் ஆண்டு முதல் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.
o ஆக. 31-ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எச் செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி39 ராக்கெட் சுமந்து சென்றது
o வெற்றி பெற்றிருந்தால் வழிகாட்டி செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் நிறைவடைந்திருக்கும்.
o ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எச் செயற்கைக்கோளை பெங்களூரு ‘ஆல்ஃபா டிசைன் டெக்னாலஜிஸ்’ எனும் ராணுவத்துக்கு உபகரணம் தயாரிக்கும் நிறுவனம் 8 மாதக் கால உழைப்பில் தயாரித்துளள்ளது.

ருபிடியம் அணு கடிகாரம்:

துல்லியமாக இடத்தைக் கண்டறிய வேண்டுமானால் செயற்கைகோள்களில் மிகச்சரியான நேரம் பின்பற்றப்பட வேண்டும். இதனால் அணுக்கதிர் வீச்சு மற்றும் நுண்ணலை போன்றவற்றை கணக்கிட்டு சரியான நேரத்தைக் கண்டறிய வேண்டும். இதனால் அணுக்கதிர் வீச்சு மற்றும் நுண்ணலைகளை வெளிப்படுத்தும் வெள்ளி போன்ற தோற்றம் கொண்ட ருபிடியும் தனிமம் அணு கடிகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். பயன்பாடு

 செயற்கைக்கோள்கள் கடல் வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறது.
 இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கும் இந்த செயற்கைக்கோள்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 மேலும் 1,500 கி. மீ. சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். மேலும்
 தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும்.
 இந்த செயற்கைக்கோள் கார்கள், சரக்கு வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் இருப்பதை துல்லியமாக தெரிவிப்பதுடன், பயண நேரம் குறித்து சரியான தகவல்களையும் அளிக்கும்.
 பேரிடர் மேலாண்மை, செல்லிடப்பேசிகள் ஒருங்கிணைப்பு, புவியியல் வரைபடங்களை கண்காணித்தல், கார், கனரக வாகன (டிரக்ஸ்) ஓட்டுநர்களுக்கு குரல்வழி மூலம் முறையாக ஓட்டச்சொல்லி வாகனங்களை இயக்க வழிகாட்டும்.
 இந்தியாவுக்கான பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோள். அமெரிக்காவின் ஜிபிஎஸ் போல இந்தியாவுக்கான எஸ்பிஎஸ் வழிகாட்டியாக இந்தச் செயற்கைக்கோள்கள் அமையும்.
• மத்திய உள்துறை செயலராக ராஜீவ் கெளபா பொறுப்பேற்பு
• இந்தியாவிலேயே முதல்முறையாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 90 லட்சம் மாடுகளுக்கு தனித்த அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது
• சுனில் அரோரா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் தகவல்கள்

 இந்தியத் தேர்தல் ஆணையம் ஜனவரி 25 , 1950 முதல் நடைமுறைக்கு வந்தது. நிர்வாசன் சதன் என அழைக்கப்படுகிறது.
 தேர்தல் ஆணையர் இந்தியக் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார்.
 தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
 1993 ஆம் ஆண்டு முதல் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக செயல்படுகிறது. முடிவுகள் பெரும்பான்மையின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது.
• நிதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) அமைப்பின் துணைத் தலைவராக பொருளாதார நிபுணர் ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கூடுதல் தகவல்கள்

நிதி ஆயோக் திட்டக்குழுவுக்கு மாற்றாக 1.1.2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் இருப்பார். இதன் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்வது துனைத்தலைவரின் பணியாகும்.

• மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) புதிய தலைவராக அனிதா கர்வாலை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
• கருப்புப் பண ஒழிப்பிலும், வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி, சுவிட்சர்லாந்து அதிபர் டோரிஸ் லூதர்ட் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
கூடுதல் தகவல்கள்
 ரயில்வே துறையில் ஒத்துழைப்பது தொடர்பாக இருநாடுகளிடையே இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன
 இதற்கு முன்னர், கடந்த 1998, 2003, 2007 ஆகிய ஆண்டுகளில் சுவிஸ் அதிபர் இந்தியாவுக்கு வந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி, சுவிட்சர்லாந்துக்கு சென்றார்.
• சீனாவின் ஃபுஜியான் மாகாணம், ஜியாமென் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் அவர் அந்த மாநாட்டுக்குச் செல்கிறார்.
• இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெற்ற இந்திய பெருங்கடல் மானாட்டில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார்,
• வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு அளிக்கும் மானியத்தைக் குறைக்க வேண்டுமென்று உலக வர்த்தக அமைப்பில் (டிபிள்யூ.டி.ஓ.) இந்தியாவும், சீனாவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. வரும் டிசம்பர் மாதம் ஆர்ஜெண்டீனாவின் பியுனஸ் அயர்ஸ் நகரில் நடைபெறவுள்ள உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் இந்தியாவும், சீனாவும் இது தொடர்பாக நேரடியாக வலியுறுத்த உள்ளன.

உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் என்ன?

வேளாண்மை மானியம் விஷயத்தில், 1986-88ம் ஆண்டு உற்பத்தியின் அடிப்படையில் வேளாண்மை மானியத்தை 10 சதவீதத்துக்கு உள் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பின் உடன்பாட்டில் வலியுறுத்தப்படுகிறது. விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் இதுபோன்ற காலாவதியான விதி முறை யில் திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது


உலக வர்த்தக அமைப்பின் வேளாண்மை ஒப்பந்தம் என்றால் என்ன?

1995 ஆம் ஆண்டு காட் அமைப்பு நாடுகளுக்கிடையே வர்த்தக நலனை பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பாக மாறிய பின் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம். இவ்வொப்பந்தம் 1995 ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்த ஒப்பந்தத்தின் மூன்று அம்சங்கள்
1. சந்தை அனுகுமுறை
2. ஏற்றுமதி மானியம்
3. உள்னாட்டு மானியம்

சந்தை அனுகுறை

சந்தை அனுகுறை என்பது பல்வேறு நாடுகளுக்கிடையே சந்தையை விரிவுபடுத்துவதில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பது. அதாவது கோட்டா முறை இறக்குமதி , உள்னாட்டு பொருட்களுக்கு குறைந்த விலை நிர்ணயிப்பது,உரிமம் தர மறுப்பது போன்றவற்றை களைந்து அனைவருக்கும் சமமாக சந்தை அனுகுறையை மாற்றுவது

ஏற்றுமதி மானியம்

இது உறுப்பு நாடுகள் ஏற்றுமதிக்கு அளிக்கும் மானியத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது. ஏனெனில் வளர்ந்த நாடுகள் அதிக அளவில் மானியம் கொடுக்க இயலும் ஆனால் வளரும் நாடுகள் மானியம் குறைக்க இயலாது. எனவே வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் ஒரு குறிப்பிட்ட சதவீத அளவு ஏற்றுமதி மானியத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.

உள்நாட்டு மானியம்

உள்னாட்டு மானியத்தை மூன்று பெட்டிகளாக பிரிக்கிறது, அவை

பச்சைப்பெட்டி

இதனடிப்படையில் அரசு கொடுக்கக்கூடிய மானியம் நேரடியாக விவசாயிகளுக்கு விலையாக இருக்கக்கூடாது. அதாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு , பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு , சந்தை உருவாக்குவதல், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்றவற்றிற்காக அரசு கொடுக்கக்கூடிய மானியம் செலவினங்கள் இதில் அடங்கும்.

ஊதாப் பெட்டி

உற்பத்தியின் அளவை வரையறைக்குள் வைப்பதற்காக நேரடியாக கொடுக்கப்படும் மானியம். ஆனால் இதனை குறைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை

செந்நிறம்

மானியங்கள் உள்னாட்டு உற்பத்தியை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் அவை நாடுகளிடையேயான வர்த்தகத்தை பாதிக்க கூடாது என்பதனை வலியுறுத்துகிறது. இதனடிப்படையில் தான் வளர்ந்த நாடுகள் உள்னாட்டு உற்பத்திக்கு 5 சதவீத மானியமும் வளர்ந்த நாடுகள் 10 சதவீத மானியமும் 1986-88 ஆம் ஆண்டை அடிப்படையாக வைத்து மானியம் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

• அமெரிக்காவில் ‘ஹார்வி’ புயலால் 5,800 கோடி டாலர் (சுமார் ரூ.3.77 லட்சம் கோடி) அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது
• இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஜே.ஒய் பிள்ளை சிங்கப்பூரின் இடைக்கால செயல்படும் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
• போகோ ஹராம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நைஜீரியாவுக்கு முதல் கட்டமாக 20 கோடி பவுண்டு (சுமார் ரூ. 1,640 கோடி) நிதி உதவி வழங்கவிருப்பதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்
ஐசிசி தரவரிசை
• ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி ஆகியோர் முறையே 4 மற்றும் 5-ஆவது இடங்களை தக்கவைத்துக் கொண்டனர்.
• பந்துவீச்சாளர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-ஆவது இடத்திலும், இந்தியாவின் அஸ்வின் 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.
• ஆல்ரவுண்டர் தரவரிசையைப் பொறுத்தவரையில் வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஜடேஜா 2-ஆவது இடத்திலும், அஸ்வின் 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.
• 2020 டோக்கியோ ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளுக்கு இந்தியாவை தயார்படுத்தும் வகையிலான 13 பேர் கொண்ட அதிகாரமளித்தல் குழுவை ஏற்படுத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
• உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கெளரவ் பிதுரி அரையிறுதியில் தோல்வி கண்டு வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினார்.

DOWNLOAD CURRENT AFFAIRS IN TAMIL IYACHAMY ACADEMY

error: Content is protected !!
  • Sign up
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.