இந்திய மாநிலங்கள் மறுசீரமைப்பு / மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம் / வல்லபாய் படேல்

மாநிலங்களை மாற்றியமைத்தல்

இந்தியா பழம் பெரும் வரலாறு கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சி நிறுவப்படுவது வரையிலும் இந்தியாவில் பாரம்பரிய முறையிலான ஆட்சி நிலை கொண்டிருந்தது. பல்வேறு கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், அரசியல், சமயம், மொழி ஆகியவை இங்குப் பின்பற்றப்பட்டு வந்ததால் ஆட்சி முறை மாநிலத்திற்கு மாநிலம், தேசத்திற்கு தேசம் மாறுபட்டு காணப்பட்டது. நாடு பல்வேறு சுதந்திர அரசுகளைக் கொண்டு தன்னிச்சையாகச் செயல்பட்டு வந்தன. எனவே இங்கு ஒற்றுமையைத் தவிரப் பிரச்சினை வாதவே மேலோங்கி நின்றது. சுதந்திரத்திற்குப்பின் அனைத்து அரசு களையும் ஒருங்கிணைத்து ஒரு ஐக்கிய இந்தியாவை உருவாகக தலைவர்கள் முன் வந்தனர். இவ்வமைப்பு ஒரு கூட்டாட்சிக்கு வழிவகுத்தது. கூட்டாட்சி மாநிலங்களின் ஐக்கியத்தால் உருவானது. இதற்கு மாநிலங்களை மாற்றியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

சுதந்திரத்திற்குமுன் மாநிலங்களின் நிலை

நீண்ட நெடிய போராட்டடததிற்குப்பின் இந்தியா 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. போராட்ட காலத்தில் நிகழ்ந்த சில விரும்பப்படாத நிகழ்வுகளும் தலைவர்களின் விட்டுக் கொடுக்காத பிடிவாதப் போக்கும் இந்தியாவின் பிரிவினையில் முடிவுற்றது. இந்தியா, பாகிஸ்தான் என நாடு துண்டு வைக் கப்பட்டது. பிரிவினைத் தீர்மானத்தின்படி சிந்து பகுதி வடமேற்கு எல்கைப் பகுதிகள் பலுசிஸ்தான் மேற்கு பஞ்சாப், கிழக்கு வங்காளம், ஹையர்பூர், மஹாவால்பூர் மாநிலங்கள் ஆகியவற்றை ஒன்றாக இணைத்துப் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. எஞ்சிய அரசுகளும் மாநிலங்களும் இந்தியாவில் இடம் பெற்றிருந்தன.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் சுமார் 562 அரசுகள் ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தின் கீழ் செயல்பட்டு வந்தன. அவற்றுள் பலவற்றிலும் கொடுங்கோல் ஆட்சி நிலவின. இவ்வரசுகளுக்கிடையே பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பொருளாதார வசதியிலும் பெருத்த வேறுபாடுகள் நிலவின. அவற்றுள் ஹைதராபாத், காஷ்மீர், மைசூர், பட்டியாலா, திருவிதாங்கூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகியவை அதிக பரப்பளவுடயவைகளாகவும் பீக்கானீர் போன்ற அரசுகள் பரப்பளவில் சிறியனவாகவும் காணப்பட்டன. குறிப்பாக ஹைதராபாத் 82,000 சதுர மைல்கள் பரப்பளவும் 17 மில்லியன் மக்கள் தொகையையும் கொண்டது. இதன் வருடாந்தர நிதி நிலை பத்து கோடிகள். ஜம்மு – காஷ்மீர் அதிகமாக பரப்பளவு கொண்டிருந்தாலும், மக்கள் தொகையிலும் பொருளாதார வசதியிலும் குன்றி காணப்பட்டது. ஹைதராபாத் இந்துக்கள் அதிகமான வாழும் ஒரு பகுதி. ஆனால் ஒரு முஸ்லீம் ஆட்சியாளரின் கீழ் காணப்பட்டது. முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதி காஷ்மீர். இதை ஒரு இந்து ஆட்சியாளர் ஆட்சிபுரிந்து வந்தார். பல அரசுகள் ஆங்கியேர்களின் மேலாண்மையை ஏற்று அவர்களின் ஆணைக்கு உட்பட்டு செயல்பட்டு வந்தன. இநதியாவின் மொத்தப் பரப்பளவில் சுமார் 45 சதவிகித பரப்பளவில் இத்தகைய அரசுகள் செயல்பட்டு வந்தன. சுமார் 26 சதவிகித மக்கள் இத்தகைய ஆட்சியை ருசித்து வந்தனர். இவ்வாறு பல்வேறு தன்மை களைக் கொண்ட மக்கள் நலனில் அக்கறை அற்ற அரசுகள் இந்தியாவில் நிலை கொண்டிருந்தன.

மாநிலங்களும் ஆங்கிலேய அரசுக்குமுள்ள தொடர்பு

வணிகத்தின் பொட்டு இந்தியாவுக்கு வந்து நாளடைவில் ஆதிக்கம் பெற்று திகழ்ந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் அரசியல் ஈடுபாட்டை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 1957-1813 க்கும் இடைப்பட்ட காலத்தில் நடுநில மைக் கொள்கையைக் கடைபிடித்த கிழக்கிந்தியக் கம்பெனி உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் அதிக அக்கரை காட்ட வில் லை. கிழக் கிந்திய கம் பெனி யின் இக் கொள்கையை Ring-fence’ என்பர். இக்கொள்கையால் கம்பெனி அரசிற்கு எவ்வித ஆதாயமும் இல்லை என்பதை உணர்ந்த கவர்னர் ஜெனரல் (Wellesley) வெல்லஸ்லி 1798-ஆம் ஆண்டு இந்திய அரசுகளைக் கம்பெனியின் கட்டுப்பாட்டிக் கீழ் கொண்டு வர முனைந்தார். இதன் விளைவால் துணைப்படைத் திட்டம் (Subsidiary System) அமல்படுத்தப்பட்டது. இத் திட்டத்தின் படி இந்திய அரசுகள் கம்பெனி நிர்வாகத்துடன் உடன் படிக்கை செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டன. வெல்லஸ்லியின் இத்திட்டத்தை ஹைதராபார், மராத்திய, குவாலியர், பரோடா, அவுத், மைசூர் ஆகிய அரசுகள் ஏற்றுக்கொண்டன. இத்திட்டம் கம்பெனியின் மேலாதிக்கத்திற்கு வழி வகுத்தது. 1805-ஆம் ஆண்டு வெல்லஸ்லி தாய்நாடு சென்றதாலும் நெப்போலியனின் முற்றுகை ஐரோப்பாவில் வலுவடைந்த தாலும், இந்தியாவை ரஷ்யா முற்றுகையிடும் என்ற அச்சமும் எழுந்ததாலும் கம்பெனி நிர்வாகம் மீண்டும் நடுநிலைமைக் கொள்கையை வகுத்தது. இக்கொள்கை 1815-ஆம் ஆண்டு வரை நீடித்தது. ஆனால் 1815-1857 – இடைப்பட்ட காலத்தில் கம்பெனி அரசின் கொள்கையில் பெருத்த மாற்றங்கள் நிகழ்ந்தன.

தனது எல்லைகளை விரிவுபடுத்த கம்பெனி அரசு இந்திய அரசுகளைக் கைப் பற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டது. இதற்கு ஹேஸ்டிங்ஸ் (Hastings) வில்லியம் பென்டிங், டல்ஹசி ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர். பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்திய அரசுகள் ஒன்றன்பின் ஒனறாக மிகக் குறுகிய காலத்திற்குள் கம்பெனி அரசுடன் இணைக்கப்பட்டது. எனவே ஆங்கிலேயப் பேரரசை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தவர் டல்ஹஸி ஆவார்.

ஆங்கிலேயரின் பேரரசு விரிவாக்கல் கொள்கைக்கு எதிர்ப்புக்கள் ܊ வலுத்தன. 1857 – ஆம் ஆண்டில் கலகம் ஒன்று நிகழ்ந்தது. இதற்குப் பல்வேறு இந்திய அரசுகள் முழு ஆதரவு அளித்தன. இந்தியாவின் அரசியல் நிலையை உணர்ந்த இங்கிலாந்து அரசி 1858-ல் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். இப்பிரகடனத்தின் மூலம் இந்தியா இங்கிலாந்தின்  நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்திய அரசுகளின் முறைகள் ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டன. மக்கள் விரோத அரசுகள் அகற்றப்பட்டன. இந்நிலை 1905-ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.

1905 முதல் 1947 வரை இந்திய அரசியலில் வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்தன. மக்களிடையே சுதந்திர வேட்கை மேலோங்கி நின்றது. ஆங்கிலேயருக்கெதிராகத் தொடர் போராட்டங்கள் நிகழ்ந்த வண்ண மிருந்தன. இந்தியர்களைத் திருப்திபடுத்தும் நோக்கோடு சட்டங்கள் பல இயற்றப்பட்டன. அவற்றுள் 1919-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சட்டம் இரட்டை ஆட்சிமுறைக்கும் 1935-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் மாநில சுய ஆட்சிக்கும் வழிவகுத்தன. இவ்வற்றின் மூலம் சட்ட மன்றங்களுக்குப் பிரதிநிதிகளை அனுப்புவதற்கம், நிர்வாகத்தில் ஈடுபடுவதற்கும் இந்தியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

காந்திஜியின் வரவால் புதுப்பொலிவு பெற்று விளங்கிய இந்திய தேசிய காங்கிரஸ் சுய ஆட்சி வேண்டி போராட்டத்தைத் தீவிரப்படுத்தியதின் விளைவு, இந்தியாவுக்கு சுதந்திரத்தை வழங்க ஆங்கிலேய அரசு முடிவு செய்து இந்திய சுதந்திரச் சட்டத்தை 1947-ஆம் ஆண்டு நிறைவேற்றியது.

இந்திய அரசுகளை இணைத்தல்

இந்திய சுதந்திரச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது இந்தியாவின் நிலை பரிதாபகரமாயிருந்தது. நாடு பல்வேறு ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவை ஒருங்கிணைப்பதன் அவசியத்தை உணர்ந்த தலைவர்கள் அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கென 1947-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவின் இரும்பு மனிதன் என அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் மாநில அரசுகளின் அமைச்சரவை  டில்லியில் அமைக்கப்பட்டது. வி.பி.மேனோன் தெரிவு செய்யப் பட்டார். இம்முயற்சிக்கு மவுண்ட் பேட்டன் பிரபுவும் ஆதரவளித்தார். இவர்கள் மூவரும் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் நாள் அறிக்கை ஒன்றைக் கூட்டாக வெளியிட்டனர். இதில் காஷ்மீரைத் தவிர இந்திய அரசுகளும் கூட்டமாக இணைய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

ஐதரபாத் இனைப்பு ( ஆப்பரசேன் போலோ)

ஐதராபாத் சமஸ்தானத்தை முஸ்லீம் மன்னரான நிஜாம் ஆண்டு வந்தார். ஆனால், அந்த சமஸ்தானத்தில் வாழ்ந்தவர்களில் பெரும்பான்மையோர் இந்துக்கள். இந்தியாவுடன் இணைந்து விடுங்கள் என்று பட்டேல், மவுண்ட்பேட்டன் போன்றவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்தார், நிஜாம் இந்தியாவுக்கு எதிராக ரஜாக்கர்கள் என்ற பெயர் கொண்ட படையைத் திரட்டினார். நிஜாமுக்கு ஆயுத உதவி செய்ய பாகிஸ்தான் முன் வந்தது.நிஜாமுக்கு பாடம் கற்பிக்க பட்டேல் முடிவு செய்தார். 1948 செப்டம்பர் 13ந்தேதி, ஐதராபாத் துக்குள் இந்தியப்படை நுழைந்தது. மூன்றே நாளில் அடி பணிந்தார். நிஜாம் ஐதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. (பிற்காலத்தில் ஆந்திர மாநிலத்துடன் ஐதராபாத் சேர்க்கப்பட்டது.

காஷ்மீர்

இந்தியா சுதந்திரம் அடைந்த போது காஷ்மீர் சமஸ்தானத்தில் 8 லட்சம் இந்துக்களும், 32 லட்சம் முஸ்லிம்களும் வசித்து வந்தனர். அந்த சமஸ்தானத்தின் அரசர் ஒரு இந்து பெயர் ஹரிசிங் அவர் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைய விரும்ப வில்லை. காஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்.

ஆனால், காஷ்மீரில் உள்ள மலைவாசிகளை மன்னருக்கு எதிராக கலவரம் செய்யும்படி பாகிஸ்தான் தூண்டிவிட்டது. கலவரத்தை அடக்கமுடியாத மன்னர் ஹரிசிங், இந்தியாவுடன் இணைய முடிவு செய்தார். அதன் படி இணைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1947 அக்டோபர் 26-ந் தேதி இந்தியா வுடன் காஷ்மீர் இணைந்தது. காஷ்மீர் முதல்வராக ஷேக் அப்துல்லா நியமிக்கப்பட்டார்.

இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்ததால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான், தனது படைகளை அனுப்பி காஷ்மீரின் சில பகுதி களைக் கைப்பற்றிக்கொண்டது இந்திய ராணுவம் காஷ்மீருக்குள் புகுந்து பாகிஸ்தான் பட யுடன் போரிட்டது. பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீரின் பெரும் பகுதியை இந்தியா மீட்டது.

இந்நிலையில் ஐ.நா.சபையின் முயற்சியால் 1949-ல் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆயினும் காஷ்மீரில் பாகிஸ் தான் கைப்பற்றிய ஒரு பகுதி இன்றும் அதனிடம்தான் இருக் கிறது. அதை ஆசாத் காஷ்மீர் என்று பாகிஸ்தான் குறிப்பிடுகிறது. 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், காஷ்மீர் பிரச்சினை இன்னமும் நீடித்து வருகிறது.

ஜூனாகத்

குஜராத்தில் உள்ள ஜனாகத் சமஸ்தானம் ஒரு முஸ்லிம் மன்னரால் ஆளப்பட்டு வந்தது. அவர் பாகிஸ்தானுடன் சேர விருப்பம் தெரிவித்தார். அங்கிருந்த இந்துக்கள் மன்னருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். அதனால், மன்னர் பாகிஸ்தானுக்கு ஒட்டம் பிடித்தார். அந்தச் சமஸ்தானத்தின் திவானாக இருந்தவர் ஒரு முஸ்லிம் அவர், ஜூனாகத் விவகாரத்தில் உடனடியாகத் தலையிடும்படி இந்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஜூனாகத் சமஸ்தானத்துக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் 450 கிலோ மீட்டர் தூரம் இந்தியப் பகுதியாகும். எனவே, பூகோள ரீதியில் அதை இந்தியாவுடன் இணைப்பதே சரி என்று கருதப்பட்டது. என்றாலும், மக்கள் கருத்தை அறிய அங்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தனர். எனவே, ஜுனாகத் இந்தியாவுடன் இணைந்தது.

மாநிங்களை மாற்றியமைத்தல் மொழியடிப்படையில் மாநிலங்களைப் பிரித்தல்

சுதந்திரமடைந்த பொழுது நாடு அவல நிலையிலிருந்தது. சில அரசுகள் தனித்து இயங்க முனைந்தன. பாகிஸ்தான்டன் இணைய சில அரசுகள் துடித்தன. நாட்டு நலனில் அக்கரை கொண்ட பல அரசுகள் மத்திய அரசுடன் இனைந்தன. எனவே எதிர்பார்த்தபடி அனைத்து மாநிலங்களும் மத்திய அரசடன் இணையவில்லை. இணைப்பு முழுமையடையவில்லையெனில் இந்தியாவின் ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படும் எனக் கருதிய அரசு பட்டேல் தலைமையில் இணைப்பைத் தீவிரப்படுத்தின. பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக இணைப்பு நனவானது. இணைப்பிற்கு மட்டும் மத்திய அரசு முன்னுரிமையளித்ததே தவிர அதற்கான நெறிமுறைகளை முழுமையாகக் கடைபிடிக்கப் படவில்லை. எனவே சில மாநிலங்கள் அளவில் பெரியவையாகவும் சில மாநிலங்கள் சிறியவையாகவும், சில மாநிலங்கள் பல்வேறு மொழிமையும் கலாச்சாரத்தையும் பின்பற்றபவையாகவும் காணபபட்டன. இதனால் இணைப்பு முழுவெற்றியடையவில்லை. எனவே எல்லைகளில் போதிய மாற்றத்தை ஏற்படுத்தி அளைவருக்கும் திருப்தியளிக்கின்ற வகையில் மொழிகள் அடிப்படையில் மாநில்ங்களை மாற்றியமைக்க வேண்டுமென்ற ஒருமித்த கருத்து நிலவியது

பொட்டி ஸ்ரீராமுலு மரணம்

இந்நிலையில், தனி ஆந்திர மாநில கோரிக்கைகாக 1952 அக்டோபர் 13-ந் தேதி உண்ணா விரதம் தொடங்கிய பொட்டி பூரீராமுலு, 58 நாட்கள் சாப்பிடாமல் இருந்து, டிசம்பர் 15ந் தேதி உயிர் துறந்தார். இதைத்தொடர்ந்து வன்முறைக் கிளர்ச்சிகள் அதிக மானதால், தனி ஆந்திர மாநிலம் அமைக்க மந்திய அரசு சம்மதித்தது. சென்னை மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு 1-10-53-ல் “ஆந்திர மாநிலம்” உதயமாயிற்று.

ஆந்திர முதல் மந்திரியாக டி.பிரகாசம் பதவியேற்றார். சென்னை மாகாண முதல் மந்திரியாக ராஜாஜி தொடர்ந்து நீடித்தார்.

எஸ்.கே தார் கமிட்டி

எஸ்.கே. தார் தலைமையிலான மொழிவாரி மாகாண கமிஷனிடம், சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் ஒரு மனுவைக் கொடுத்தார். அந்த மனுவில், இனம், மொழி, இலக்கியம் ஆகியவை குறித்து கர்வம் கொள்ளும் மொழி வழிக் கட்டங்கள் இந்தியாவில் உள்ளன. எனவே மொழிவாரியாக மாகாணங்களை அமைத்தால், இந்தியா துண்டு துண்டாக உடைவதற்கு வழி ஏற்படக் கூடும் என்று எச்சரித்திருந்தார். அனைத்துத் தரப்புக் கருத்துக்களையும் கேட்டறிந்த பின் தார் கமிஷன், தனது அறிக்கையை அரசாங்கத்திடம் கொடுத்தது. மொழிவாரி மாகானப் பிரிவினைக்கு எதிரான கருத்தை அது தெரிவித்திருந்தது.

மொழிகளின் அடிப்படையில் மாகாணங்களை அமைப்பது இந்தியாவின் பொதுநலனுக்கு ஏற்றது அல்ல. எனவே, மொழிவாரி மாகாணங்களை அமைக்கக் கடாது” என்று கமிஷனின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஜே.வி.பி. குழு

தார் கமிஷனின் அறிக்கையை ஆராய 1948 டிசம்பர் மாதத்தில் உயர் அதிகாரக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவில், ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீத்தாராமப்யா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மூன்று தலைவர்களின் பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு இக்குழு ஜே.வி.பி. குழு என்று அழைக்கப்பட்டது.

பிரச்சினையை ஆராய்ந்த பிறகு இந்தக் குழு கொடுத்த அறிக்கையில், மொழிவாரி மாகானப் பிரிவினை, எத்தகைய பிரிவினைப் போக்குக்கும் ஆதரவு அளிப்பதாக இருக்கக் கூடாது. இந்தியாவின் பொருளாதார, அரசியல் ஸ்திரத் தன்மைக்கு பாதகம் இல்லாமல் இருக்கும் என்று உறுதிப் படுத்திக் கொண்ட பிறகுதான், மொழி வாரியாக மாகாணங்களைப் பிரிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது.

மானில மறுசீரமைப்புக் குழு

தனி ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்ட பிறகு மொழிவாரி மாகாணப் பிரிவினைக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்தது. “எங்களுக்கு மொழிவாரி மாகாணம் வேண்டும்” என்று கிளர்ச்சிகள் நடத்தினர்.இதனால், நீதிபதி எப். பசல் அலி தலைமையில் மாநிலங்கள் சீரமைப்பு கமிஷன் அமைக்கப் பட்டது. எச்.என். குன்ஸ்ரு, சர்தார் கே.எம். பணிக்கர் ஆகியோர் இதன் உறுப்பினர்கள்.

இந்த கமிஷன் ஏற்கனவே தார் கமிஷன், ஜேவிபி. குழு முதலிய கமிஷன்கள் கூறிய கருத்துக்களை ஆதரித்து, மொழிவாரியாக மாகாணப் பிரிவினை கூடாது என்று முடிவு கூறியது. எனினும், சென்னை, கேரளம், கர்நாடகம், ஐதராபாத், ஆந்திரம், பம்பாய், விதர்ப்பா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அசாம், ஒரிசா, ஜம்மு-காஷ்மீர் என்று I6 மாநிலங்களை அமைக்கலாம் என்று சிபாரிசு செய்தது.

மகாராஷ்டிரத்தையும், குஜராததையும் உள்ளடக்கிய ஒரு மாகாணத்தை உருவாக்கலாம் என்றும், பம்பாப் மாநகரத்தை ஒரு தனி அமைப்பாக வைத்திருக்கலாம் என்றும் அது யோசனைதெரிவித்தது.

1962-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பிறகு, ஐதராபாத்தை ஆந்திராவுடன் இணைத்து விடலாம் என்று அது கூறியது.

தட்சினப் பிரதேசம்

இதற்கிடையே, மொழி அடிப்படையில் சிறிய மாகாணங்களை அமைப்பதற்கு பதிலாக, இந்தியா முழுவதையும் ஐந்து அல்லது ஆறு பெரிய மாதானங்களாகப் பிரிக்க வேண்டும்” என்ற திட்டத்தை, அப்போதைய மேற்கு வங்காள முதல் அமைச்சர் டாக்டர் பி.சி.ராப் வெளியிட்டார். மேற்கு வங்காளத்தையும், பீகாரையும் ஒரே மாநிலமாக இணைக்க வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். இந்த யோசனைக்கு பீகார் முதல் மந்திரியும் ஆதரவு தெரிவித்தார்.பெரிய மாகாணங்கள் அமைக்கும் கருத்தை காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஆதரித்தனர்.

தென் இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மூன்று மாகாணங்களை உள்ளடக்கிய தட்சிண பிரதேசம் அமைக்கலாம் என்று யோசனை கூறப்பட்டது. தமிழ்நாட்டில் தி.மு.கழகம் இந்த தட்சினப் பிரதேச யோசனையைக் கடுமையாக எதிர்த்தது.

மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம்

கமிஷன் அளித்த அறிக்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அறிக்கையை அமல்படுத்தும் நோக்குடன் மசோதா ஒன்று வடிக்கப்பட்டது. இம்மசோதா 1956-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமானது இச்சட்டம் 14 மாநிலங்களுக்கும் 5 மத்திய ஆட்சிப பகுதிகளுக்கும் வழிவகுத்தன. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார், வங்காளம் , அஸ்ஸாம், ஒரிசா, ஆந்திரா, சென்னை, கேரளம், மைசூர், , மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான் என்பவை சட்டத்தில் இடம்பெற்றுள்ள 14 மாநிலங்கள் டெல்லி, மணிப்பூர், திரிபுரா, அந்தமான் லட்சத்தீவு, மினிக்காய் தீவுகள் சட்டத்தில் இடமபெற்றுள்ள ஐந்து மத்திய ஆட்சிப்பகுதிகள் மேற்குறிப்பிட்ட மாநிலங்கள் கிழக்கு வடக்கு மேற்கு தெற்கு மத்தியம் என ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் பொதுவாக எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒவ்வொரு மண்டலக் கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. மஹாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்கள் உருவாகுதல் மாநிலங்களை மாற்றி அமைப்பதற்கான கமிஷன் அறிக்கை பம்பாய் மக்களைப்பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எனவே பம்பாய் நகர மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர். மராத்தியர்களும், குஜராத்தியர்களும் இணைந்து வாழி இணங்கவில்லை. மஹாராஷ்டிர சமிதியும் மஹா குஜராத் பரிஷத்திற்குள் கலகம் மாநிலம் முழுவதும் வியாபித்தது. நிலமையைக் கட்டுப் படுத்த தனி மாநிலங்கள் அமைக்க அரசு முன்வந்தது. இதற்கென பாம்பே மாற்றியமைத்தல் சட்டம் 1960 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதன்படி மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய இருமாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பாம்பே மஹாராஷ்டிராவின் தலைநகரமாக்கப்பட்டது.

வடக்கெல்லைப் போராட்டம்

தமிழ்நாடு உருவாவதற்கு முன், தமிழகத்தின் எல்லைகளை மீட்பதற்கர்கச் சிலம்புச் செல்வர் நடத்திய வரலாற்று ம.பொ.சிவஞானம் போராட்டங்கள் முக்கியம் வாய்ந்தவை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது, தமிழ்நாடும், ஆந்திரமும் ஒன்றாக இணைந்த சென்னை மாகாணம் இருந்தது.

தமிழகத்திற்கும், ஆந்திரத்திற்கும் எல் ைவர் சிக்கலைத் தோற்றுவிக்கும் எண்ணத்துடன், வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து சித்தூர், கங்குந்திக் குப்பம், திருத்தணி, புத்தூர், பல்லவனேரி, காளத்தி, சந்திரகிரி (திருப்பதி) ஆகிய தாலுகாக்களையும், தெலுங்கு பேசப்படும் கர்நூல் மாவட்டத்தில் இருந்து மதனப்பள்ளி, வாயல்பாடி ஆகிய இரண்டு தாலுகாக்களையும் பிரித்து சித்தூர் மாவட்டம் என்ற பெயரில் இரு மொழி மாவட்டத்தை உருவாக்கினார்கள்.

சித்தூர் மாவட்டம் அமைக்கப்பட்ட பிறகும், பல ஆண்டுக்காலம் வேலூர்தான் அதன் தலைநகரமாக இருந்தது.திருப்பதி வைணவத் திருத்தலமாக இருந்ததாலும், ஆந்திரர்களுக்கு அதுவே பிரதானக் கோவிலாக விளங்கியதாலும், மெல்ல மெல்ல ஆந்திரர்களின் ஆதிக்கத்திற்குச் சென்று விட்டது.

திருப்பதியில்போராட்டம் இதையெல்லாம் உணர்ந்திருந்த ம.பொ.சி. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு மறுநாள் திருப்பதிக்குத் தொண்டர் படையுடன் சென்று, “திருப்பதி தமிழர்களுக்கே உரியது’ என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

சென்னை மாகாணத் திலிருந்து ஆந்திராவைப் பிரித்து, தனி ஆந்திர மாநிலம் அமைக்கமத்திய அரசு முடிவு செய்தபோது, சென்னை நகரம் தங்களுக்கு வேண்டும் என்று ஆந்திரர்கள் தோரினர். இதற்கு எதிராகத் தமிழகமே பொங்கி எழுந்தது. “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று முழங்கினார், ம.பொ.சி. “சென்னை நகரம், தமிழ் நாட்டுக்கே சொந்தம்” என்று சென்னை மாநகராட்சியும் தீர்மானம் நிறைவேற்றியது. இதன் பின்னர் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் திருத்தணி மற்றும் சில பகுதிகள் இனைக்கப்பட்டது. ம.பொ சிவஞானம் வடக்கெல்லைக் காவலர் என அறியப்படுகிறார்.

தெற்கெல்லைப் போராட்டம்

திருவாங்கூர் – கொச்சி பகுதிக்கு உட்பட்டிருந்த தமிழர் பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டமே குமரி இணைப்பு போராட்டம் ஆகும். இது தெற்கெல்லை போராட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நேசமணிதலைமையில் போராட்டம் நடந்து வந்தது. இந்தப் போராட்டத்தில் நேசமணி சிறை சென்றார்.

தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய தாலுகாக்களில் தமிழர்கள் பெருவாரியாக வசித்து வந்தனர். தமிழர் பகுதிகளில் மலையாளம் அலுவல் மொழியாக இருந்தமையும், தமிழ் பள்ளிகள் மிகக் குறைவாக இயங்கி வந்ததும் தமிழர்களுக்கு பல இன்னல்களை தோற்றுவித்து வந்தன. மொழி சம்பந்தமாக தமிழர்கள் விடுத்த கோரிக்கைகளை திருவாங்கூர் அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்தது.

மலையாள மொழி பேசப்படும் பகுதிகளை ஒருங்கிணைத்து கேரள மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ‘திருவாங்கூர் சமஸ்தான காங்கிரஸ்’ கட்சி ஆதரவு அளித்து வந்ததால், அக்கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தலைவர்கள் சிலர் அக்கட்சியை விட்டு வெளியேறினர். அவர்கள் 1945 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று நாகர்கோவிலில் கூடி வழக்கறிஞர் சாம் நத்தானியேல் தலைமையில் ‘அகில திருவாங்கூர் தமிழர் காங்கிரஸ்’ எனும் அரசியல் இயக்கத்தை தொடங்கினர். திருவாங்கூரின் தமிழர் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

1956 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் நாள் அன்று தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்கள் கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. செங்கோட்டை பகுதி நெல்லை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

வல்லபாய் படேல்

இந்தியாவின் பிஸ்மார்க் என்று புகழ்பெற்ற சர்தார் வல்லபாய் படேல், 1875 அக்டோபர் 3-ந் தேதி, சூரத் நகரம் அருகே ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். உயர்நிலைப் பள்ளியில் படிப்பு முடிந்ததும், 1910-ல் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம்  பயின்றார். மூன்றாண்டுகள் கழித்து ஆமதாபாத் திரும்பினார். 1917-ல் ஆமதாபாத் நகரசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டர். 1924 முதல் 4 ஆண்டுகள் நகரசபைத் தலைவராகப் பணியாற்றினார். இச்சந்தர்ப்பத்தில், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1918-ல், விளைச்சல் இல்லாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலவரியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி, போராட்டம் நடத்தினார். அதனால் காந்தியின் கவனத்தைக் கவர்ந்தார்.

பர்தோலி சத்தியாக்கிரகம்

1928-ல் நிலவரி உயர்த்தப் பட்டதை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தினார். பர்தோலி சத்தியாக்கிரகம் என்று அழைக்கப் பட்ட இந்தப் போராட்டத்தின் மூலம், படேலின் புகழ் நாடு முழுவதும் பரவியது. அது முதல் மகாத்மா காந்தியும், மற்றவர்களும் படேலை “சர்தார் என்று அழைக்கத் தொடங்கினர்.

சுதந்திரத்துக்காக வல்லபாய் படேல்

காந்தி நடத்திய போராட்டங்களில் எல்லாம் படேல் முக்கிய பங் கெடுத்துக் கொண்டார். 1931-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். இந்தியா சுதந்திரம் அடைந்ததும், நேரு மந்திரிசபையில் துணைப் பிரதமரானார். முக்கியமான உள்துறை இலாகா அவரிடம் இருந்தது.

இந்தியாவில் 562 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. சில சமஸ்தான அரசர்கள் பாகிஸ்தானுடன் சேரத் திட்டமிட்டனர். சிலர் சுதந்திரப் பிரகடனம் வெளியிட முயன்றனர். படேல் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து, சுதேச சமஸ்தானங்களை, இந்தியாவுடன் இணைத்தார்.மேலும் பிரிட்டிஷ் சிவில் பணியை ஒழித்து இந்திய குடிமைப் பணி முறையையும் மாற்றி அமைத்தவர்.அதன் மூலம் ‘இரும்பு மனிதர் என்ற அழியாப் புகழைப் பெற்ற படேல், 1950 டிசம்பர் 15ந் தேதி காலமானார்.

DOWNLOAD STATE RE ORGANISATION NOTED

error: Content is protected !!
  • Sign up
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.