IAS IPS IFS இந்தியக் குடிமைப் பணித்தேர்வு அறிவிக்கை 2018 தமிழில் | CIVIL SERVICE NOTIFICATION 2018 SIMPLIFIED IN TAMIL

IAS IPS IFS இந்தியக் குடிமைப் பணித்தேர்வு அறிவிக்கை 2018 தமிழில் | CIVIL SERVICE NOTIFICATION 2018 SIMPLIFIED IN TAMIL

மத்திய பணியாளர் தேர்வாணையம் (IAS,IPS,IFS) பாடத்திட்டம்

அறிவிக்கை /பொதுவான தகவல்கள்-2018

DOWNLOAD UPSC 2018 NOTIFICATION IN TAMIL EXPLAINED

இந்திய ஆட்சிப்பணி என்பது பட்ட்த்தை பெறுவது போல் அல்லாமல் போட்டித்தேர்வில் கலந்து கொண்டு தகுதிப் பட்டியலிலும் தரவரிசையிலும் முன்னிலை பெறுவது ஆகும். மத்திய பணியாளர் தேர்வாணையம் IAS,IPS,IFS,IRS போன்ற 23 உயர்ந்த பதவிகளுக்கான இந்த ஆண்டுக்காண முதல்நிலைத் தேர்விற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பத் தொடக்க நாள்:07-02-2018

விண்ணப்பிக்க கடைசி நாள் :06/03-2018 மாலை 6 மணி வரை (இனைய வழி மட்டுமே)

இணையதளம்: https://upsconline.nic.in/mainmenu2.php

தேர்வு தேதி: 03-06-2018

கல்வித்தகுதி :

ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம், இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க இயலும்.ஆனால் முதன்மைத் தேர்வின்போது மாணவர்கள் பட்டப்படிப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

 

தேர்வுமுறை

        இது மூன்று நிலைகளைக் கொண்ட்து,

                1.முதல் நிலைத்தேர்வு (கொள்குறி வகை)

                2.முதன்மைத்தேர்வு (விரிவாக விடையளித்தல்)

 1. நேர்கானல்

முதல் நிலைத்தேர்வு- பாடத்திட்டம்

இரண்டு தாள்களை கொண்டது

தாள் ஒன்று- பாடத்திட்டம் தாள் இரண்டு- பாடத்திட்டம்
     தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு நிகழ்வுகள்

இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம்

இந்திய மற்றும் உலக புவியியல் (மேற்புற,பொருளாதர,சமூக)

இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சி முறை,பொதுக் கொள்கை,உரிமைகள்,பஞ்சாயத்து ராஜ்,

சமூக பொருளாதார மேம்பாடு, நிலைத்த வளர்ச்சி,வறுமை,சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள்

சுற்றுச்சூழல்,உயிரன வாழ்க்கைச் சூழல்,பல்லுயிரன மேம்பாடு,பருவநிலை மாற்றம் தொடர்பான  நிகழ்வுகள்

பொது அறிவியல்

     புரிந்துகொள்ளும்திறன், நுண்ணறிவு,

காரணகாரியம் பகுத்தாய்தல்

முடிவெடுக்கும் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன்

பொதுவான அடிப்படை வாழ்வியல் கணக்குகள்

அடிப்படை எண்கள்

தகவல் பகுத்தாய்தல் (Data Interpretation)

ஆங்கில திறன்(பத்தாம் வகுப்பு தரத்தில் இருக்கும்)

( இதில் 33 சதவீத மதிப்பெண்கள் பெற்றாலே போதும்,
)

 

படிக்கவேண்டிய புத்தகங்கள்

தாள் ஒன்று

 1. வரலாறு-CBSE- 11மற்றும் 12ஆவது வகுப்பு புத்தகங்கள்,பண்டைய இந்தியா, இடைக்கால இந்தியா ஆர்.எஸ். சர்மா, நவீன இந்தியா (தமிழில் நவீன இந்தியா வெங்கடேசன்)
 2. புவியியல் 11ஆவது மற்றும் 12 வது வகுப்பு CBSE பாடப்புத்தகங்கள்,வரைபடம் ஒன்று
 3. இந்திய அரசியலைமைப்பு லக்‌ஷ்மிகாந்த் ( ஆங்கிலம்), லட்சுமிகாந்த் , தமிழில் சந்திரசேகர் அல்லது டாக்டர் கே.வெங்கடேசன்
 4. இந்தியப்பொருளாதாரம், சங்கர் கனேஷ், மற்றும் இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை,பிரதியோகிதா தர்பன் சிறப்பிதழ், CBSE 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொருளாதாரப் புத்தகங்கள்.
 5. இந்தியா ஆண்டு புத்தகம் மற்றும் LUCENT பொது அறிவுப்புத்தகம்
 6. சுற்றுச்சூழலியல் , திறந்த நிலைப் பள்ளி புத்தகங்கள் (NIOS)
 7. செய்தித்தாள், தி இந்து
 8. DISHA PUBLICATION OLD QUESTION PAPER

தாள் இரண்டு

 • ஏதாவது ஒரு பதிப்பகத்தின் இரண்டாம் தாளுக்கான கையேடு,மற்றும் கேள்வித்தாள் தொகுப்பு .
 • பழைய கேள்வித்தாள்களின் தொகுப்பு

வயது பற்றிய தகவல்கள்

பிரிவு  அதிக பட்ச வயது வாய்ப்புகள்
( எத்தனை முறை எழுதலாம்)
OC  பொதுப்பிரிவினர் 32 6 முறை
OBC-இதர பிற்படுத்தப்பட்டோர் 35 9 முறை
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் SC/ST 37 37 வயது வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்
மாற்றுத்திறனாளிகள், 32+10=42 ü  பொதுப்பிரிவினர் 9 முறை

ü  OBC 9 முறை

ü  SC/ST உச்சபட்ச வயது வரம்பு வரை

குறிப்பு:               ( தமிழ்நாட்டில் BC, MBC, DNC பிரிவுகள் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் அடங்கும் )

முதன்மைத்தேர்வு பற்றிய தகவல்கள்

முதன்மைத்தேர்வு
தாய்மொழி தேர்ச்சி அடைந்தால் போதும் ( குறைந்தபட்ச மதிப்பெண்) மதிப்பெண் தரவரிசைப்பட்டியலுடன் சேர்க்கப்படாது) 25 % மதிப்பெண் பெற்றால் போதும்)
ஆங்கிலம் தேர்ச்சி அடைந்தால் போதும் ( குறைந்தபட்ச மதிப்பெண்) ( மதிப்பெண் தரவரிசைப்பட்டியலுடன் சேர்க்கப்படாது)
கட்டுரை 250 மதிப்பெண்
பொது அறிவுத்தாள் மொத்தம் 4 தாள்கள்

4 * 250 = 1000 மதிப்பெண்கள்

விருப்பப்பாடம் ( நீங்கள் விரும்பியதை எடுத்துக்கொள்ளலாம்) 500 மதிப்பெண்கள் ( ஒரே பாடம் இரண்டு தாள்களாக பிரிக்கப்படும்)
எழுத்துத்தேர்வின் மொத்த மதிப்பெண் 1750
 நேர்முகத்தேர்வு மதிப்பெண் 275
மொத்த மதிப்பெண்கள் 2025

 

கல்லூரி இறுதியாண்டு படிப்பவர்கள் விண்ணப்பிக்க முடியுமா?

21 வயது பூர்த்தியாயிருந்தால் விண்ணப்பிக்க இயலும். ஆனால் முதன்மைத்தேர்வின்போது தேர்ச்சி பெற்று சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவத்தேர்வு மாணவர்கள் இன்டர்ன்ஷிப் முடித்திருக்க வேண்டும்.

கட்டண விவரங்கள்

OC  பொதுப்பிரிவினர் OBC-இதர பிற்படுத்தப்பட்டோர் ஆண்கள் 100 ரூபாய் முதல் நிலைத்தேர்விற்கும், 200 ரூபாய் முதன்மைத்தேர்விற்கும் செலுத்தவேண்டும்
பெண்கள் / மாற்றுதிறனாளிகள்/பட்டியல் சாதியினர் ஆகியோர்க்கு கட்டணம் ஏதும் இல்லை

ஓபிசி OBC சான்றிதழ் விவரங்கள்

 

கிராம நிர்வாக அலுவலர்களிடம் விண்ணப்பம் அளித்து பெற்றுக்கொள்ளவேண்டும், அதற்கெண்று தனி விண்ணப்பம் உள்ளது

முக்கிய குறிப்பு- கவனமாக விண்ணப்பிக்க

 • Non Creamy Layer பாலேடு அடுக்கு ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு குறைவாக வருமானம் பெறுபர்களுக்கு

 • Creamy Layer ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு அதிகமாக ஆண்டு வருமானம்.

 • ஆண்டு வருமானம் உங்கள் பெற்றோருடைய வருமானத்தை சார்ந்ததாகும் உங்கள் வருமானத்தை சார்ந்ததல்ல.

 • அரசு ஊழியர்களின் குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களளின் வருமானம் பொருந்தாது . பணியின் தரத்தைப் பொறுத்துதான் Non Creamy Layer வரம்பில் வருவார்கள் தேர்வரின் பெற்றோர் குருப் சி பிரிவில் 9 லட்சம் சம்பளம் பெற்றாலும் Non Creamy Layer  வருவார்கள் . குருப் அ பிரிவில் வேலைபார்த்து 4 லட்சம் பெற்றாலும் Non Creamy Layer   வரமாட்டார்கள்.

 

விண்ணப்பிக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

 • விருப்பப்பாடத்தை முதல் நிலைத்தேர்வின்போதே தேர்வு செய்யவேண்டும், பின்னர் மாற்றிக்கொள்ள இயலாது.
 • மொழிப்பாடம் மற்றும் எந்த மொழியில் முதன்மைத்தேர்வு எழுதப்போகிறோம் என்பதனையும் இப்போது முறையாக தெரிவு செய்து கொள்ளவும், பின்னர் மாற்றிக்கொள்ள இயலாது.
 • உங்களது புகைப்படம் மற்றும் கையோப்பம் ஸ்கேன் செய்து 40 KB அளவுக்குள் JPEG வடிவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
 • தேர்வு மையங்களையும் சரியாக தெரிவு செய்து கொள்ளவும் பின்னர் மாற்ற இயலாது.
 • ஒருவர் விண்ணப்பத்தில் ஏதாவது தவறு செய்துவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் ஆனால் நுழைவுச்சீட்டை தரவிறக்கம் செய்யும்போது கடைசியாக விண்ணப்பித்த பதிவு எண்ணைக்கொண்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும்.
 • தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதால் நீங்கள் உங்கள் வாய்ப்பு பயன்படுத்தப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. நீங்கள் தேர்வு எழுதினால் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 • தாள் 1-ல் பெறப்பட்ட மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்
 • வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இருக்கும்
 • தமிழ்நாட்டில், முதல்நிலைத் தேர்வு மையங்கள், சென்னை,மதுரை,கோவை,திருச்சி,வேலூர் ஆகிய இடங்கள்
 • ஒவ்வொரு தேர்வுக்கும் தலா இரண்டு மணி நேரம்,பார்வையற்றோர்களுக்கு கூடுதலாக 20 நிமிடங்கள் ஒதுக்கப்படும்
 • தவறான கேள்விகளுக்கு மூன்றில் ஒருபங்கு மதிப்பெண் குறைக்கப்படும்
 • தாள் 1-ல் பெறப்பட்ட மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வாழ்த்துக்களுடன்

ஐயாச்சாமி முருகன்

திருநெல்வேலி

https://www.facebook.com/iyachamy

http://www.iyachamy.com/

Whatsapp: 7418521550

Please follow and like us:

Comments

ADMISSION OPEN FOR TNPSC GROUP I & II PRELIMS

 1.  GROUP I & II & PRELIMS DIRECT / ONLINE/POSTAL CLASSES/ TEST BATCH

 2. GROUP I & II & MAINS DIRECT / ONLINE/POSTAL CLASSES/ TEST BATCH

 3. CLASSES WILL BEGIN FEBRUARY 2ND WEEK

FOR MORE DETAILS: 9952521550

 

Useful Website? Please spread the word :)

error: Content is protected !!