காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் குருப் 2 நேர்முகத்தேர்வுக்கான அறிவிக்கை சில தினங்களில் வெளியாக இருக்கிறது. அதனைப் பற்றி பல்வேறு முகநூல், வாட்சப் குழுக்களில் பலவிதமான தகவல் பகிரப்பட்டு வருகிறது.  ஆனால் பெரும்பால நண்பர்கள் குருப் 2 தேர்வினைப் பொருத்தவரை சாதாரணமாகவே எதிர்கொள்ள ஆயத்தமாய் இருக்கின்றீர்கள் எனென்றால் இந்த நேர்காணல் பதவிகளுக்கான முதல் நிலைத்தேர்வு முடிவுகள் அறிவிப்பு,முதன்மைத்தேர்வு , நேர்கானல் போன்றவை நெடிய காலம் எடுத்துக்கொள்வதால் தங்களால் அவ்வளவு காலம் இதனை பின்பற்றுவது கடினம் என என்னி இதனை சாதரணமாகவே அணுக  நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.  என்னைப் பொருத்தவரை இத்தேர்வு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி நேரடியாக உயர் பதவியை அடையலாம் ஆனால் நீங்கள் குருப் 4 அல்லது குருப்2 (a) தேர்வு ஒரே தேர்வு ஆகையால் உடணே அரசுப்பணிக்கு செல்லலாம் என எண்ணுகின்றீர்கள். நீங்கள் குருப் 4 தேர்வில் பணியில் சேர்ந்தால் குருப் 2 நேர்காணல் தரத்தில் உள்ள பணியிடங்களுக்கு பதவி உயர்வில் செல்வதற்கு சுமார் ஐந்திலிருந்து ஆறு ஆண்டுகள் ஆகலாம் ( துறைகளைப் பொறுத்து). ஆனால் இந்த தேர்வினை ஒரு ஏணியாகப் பிடித்து வெற்றிபெற்றால் நேரடியாக அந்தப் உயர் பதவிகளைப் பிடிக்க இயலும். இந்தக் குருப் 2 தேர்வில்  நகராட்சி ஆணையாளர், சார்பதிவாளார்,வணிகவரித்துறை அலுவலர், உள்ளாட்சி நிதித் தணிக்கை அலுவலர் என முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் உள்ளன எனவே முறையாக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இத்தேர்வினை ஏன் பெரும்பாலனவர்கள் கடினமானது எனக் கருதுகிறீர்கள் என்றால் முதன்மைத் தேர்வு விரிவாக எழுதுதல் வகையில் இருப்பதாலும் , இதுவரை நாம் தயார் செய்யாத பாடங்களான அறிவியல் தொழில்னுட்பம், தமிழக நிர்வாகம், சமூக பொருளாதார நிகழ்வுகள், கட்டுரை வடிவ நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றை நினைத்து அச்சம் கொள்கின்றோம் அதே வேளையில் இதற்கான குறிப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது எனவும் நாமாகவே  நினைத்துக் கொள்கிறோம் சமீபத்தில் வெற்றி பெற்ற மாணாக்கர்களைக் கேட்டால் மொழி ஒரு பொருட்டே இல்லை என புரியவைப்பர். ஆனால் முதல் நிலைத்தேர்விலிருந்து முதன்மைத் தேர்வுக்கு  நமக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் கிடைக்கும் அந்த உரிய காலத்தினை பயன்படுத்தி முதன்மைத் தேர்வுக்கு எளிதாக தயார் செய்ய இயலும்.

Add a Comment

You must be logged in to post a comment

Shopping Basket
error: Content is protected !!