காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் குருப் 2 நேர்முகத்தேர்வுக்கான அறிவிக்கை சில தினங்களில் வெளியாக இருக்கிறது. அதனைப் பற்றி பல்வேறு முகநூல், வாட்சப் குழுக்களில் பலவிதமான தகவல் பகிரப்பட்டு வருகிறது.  ஆனால் பெரும்பால நண்பர்கள் குருப் 2 தேர்வினைப் பொருத்தவரை சாதாரணமாகவே எதிர்கொள்ள ஆயத்தமாய் இருக்கின்றீர்கள் எனென்றால் இந்த நேர்காணல் பதவிகளுக்கான முதல் நிலைத்தேர்வு முடிவுகள் அறிவிப்பு,முதன்மைத்தேர்வு , நேர்கானல் போன்றவை நெடிய காலம் எடுத்துக்கொள்வதால் தங்களால் அவ்வளவு காலம் இதனை பின்பற்றுவது கடினம் என என்னி இதனை சாதரணமாகவே அணுக  நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.  என்னைப் பொருத்தவரை இத்தேர்வு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி நேரடியாக உயர் பதவியை அடையலாம் ஆனால் நீங்கள் குருப் 4 அல்லது குருப்2 (a) தேர்வு ஒரே தேர்வு ஆகையால் உடணே அரசுப்பணிக்கு செல்லலாம் என எண்ணுகின்றீர்கள். நீங்கள் குருப் 4 தேர்வில் பணியில் சேர்ந்தால் குருப் 2 நேர்காணல் தரத்தில் உள்ள பணியிடங்களுக்கு பதவி உயர்வில் செல்வதற்கு சுமார் ஐந்திலிருந்து ஆறு ஆண்டுகள் ஆகலாம் ( துறைகளைப் பொறுத்து). ஆனால் இந்த தேர்வினை ஒரு ஏணியாகப் பிடித்து வெற்றிபெற்றால் நேரடியாக அந்தப் உயர் பதவிகளைப் பிடிக்க இயலும். இந்தக் குருப் 2 தேர்வில்  நகராட்சி ஆணையாளர், சார்பதிவாளார்,வணிகவரித்துறை அலுவலர், உள்ளாட்சி நிதித் தணிக்கை அலுவலர் என முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் உள்ளன எனவே முறையாக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இத்தேர்வினை ஏன் பெரும்பாலனவர்கள் கடினமானது எனக் கருதுகிறீர்கள் என்றால் முதன்மைத் தேர்வு விரிவாக எழுதுதல் வகையில் இருப்பதாலும் , இதுவரை நாம் தயார் செய்யாத பாடங்களான அறிவியல் தொழில்னுட்பம், தமிழக நிர்வாகம், சமூக பொருளாதார நிகழ்வுகள், கட்டுரை வடிவ நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றை நினைத்து அச்சம் கொள்கின்றோம் அதே வேளையில் இதற்கான குறிப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது எனவும் நாமாகவே  நினைத்துக் கொள்கிறோம் சமீபத்தில் வெற்றி பெற்ற மாணாக்கர்களைக் கேட்டால் மொழி ஒரு பொருட்டே இல்லை என புரியவைப்பர். ஆனால் முதல் நிலைத்தேர்விலிருந்து முதன்மைத் தேர்வுக்கு  நமக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் கிடைக்கும் அந்த உரிய காலத்தினை பயன்படுத்தி முதன்மைத் தேர்வுக்கு எளிதாக தயார் செய்ய இயலும்.

Operation Vardha| Study Schedule for General Tamil| English| GK| Motivation|

Operation Vardha| Study Schedule for General Tamil| English| GK| Motivation|

வாய்ப்பு ஒரு முறைதான் உங்கள் கதவைத் தட்டும்

பழைய பழமொழி ஒன்று ”வாய்ப்பு ஒரு முறைதான் உங்கள் கதவைத் தட்டும் ”எனக்கூறுகிறது. ஆனால் எனக்கு இக்கருத்தில் உடன்பாடில்லை வாய்ப்பு எப்போது உங்கள் கதவைத் தட்டிக் கொண்டிதானிருக்கிறது எப்போதென்றால் உங்கள் இலக்குகளின் மீது நம்பிக்கையும் , அதற்கான தொடர் முயற்சியும் இருக்கும் போது ,எப்போதும் உங்கள் கதவைத் தண்டிக்கொண்டிதானிருக்கும். பரவலாக எதிர்பார்க்கப்பட்ட வீ.ஏ.ஓ தேர்வு குருப் 4 தேர்வுடன் இனைந்து ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருக்கிறது . இந்த மாற்றம் தேர்வர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஏனெனில் இரண்டு தேர்வாக நடத்தப்படும் போது காலம், உழைப்பு , முயற்சி போன்றவை விரயமாகின்றது. இந்தப் புதிய மாற்றத்தின் படி விரைவாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் , இரண்டு தேர்வுகளுக்கு தனியே பயிற்சிக் கட்டணம் கட்ட தேவையில்லை. சுமையாக கருதிய அடிப்படை கிராம நிர்வாக அலுவலர் பகுதியும் நீக்கப்பட்டு விட்டதால்  ஒரே இலக்கில் இரண்டு மாம்பழங்களை நமது விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுக்கொள்ளலாம்.

தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட உடனேயே பரபரப்பாகவும் , பதற்றமாகவும் , பயம் கலந்த நம்பிக்கையுடன் படிக்கத் தொடங்கி இருப்பீர்கள் என கருதுகிறேன் இது மழைக்கு முன் வியர்வை போன்ற நிலைதான் சாதாரணமாக கடந்து செல்லுங்கள். தேர்வர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இந்த 80 நாள் காலகட்டம் ஒரு பயிர் செய்வதைப் போன்றது ஏனென்றால் முறையாக திட்டமிட்டு பயிரிட்டால் மட்டுமே விளைந்த பொருட்கள் வீடு வந்து சேரும் , காலம் தவறி பயிரிட்ட பொருள் முறையான விளைச்சலுமின்றி பின்னர் வரும் மழையினாலும் வயலிலிருந்து வீடு சேராது அது போல முறையான திட்டமிடலைக் கொண்டு வெற்றிக்கனியை  பறிக்க தயாராக இருங்கள்.

பாடத்திட்டத்தினை வைத்து தயார்செய்து படித்தல் என்பது சரியான  பாதையில் பயனம் செய்வது போன்றது , பாடத்திட்டம் இல்லாது கண்டவற்றைப் படித்தல் என்பது பெயர் தெரியாத ஊருக்கு வழிகேட்பது போலாகும்.  தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் பல மாணவர்களிடம் நான் கலந்துரையாடிய போது அவர்கள் செய்த தவறு பாடத்திட்டம் இல்லாமல் படித்தது ,மொழிப்பாடம் ,கணிதம் வரலாறு , அரசியலைமைப்பு, அறிவியல் என இந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து படிக்கின்றனர், இதனைத் தவிர்த்து பிற முக்கியப் பகுதிகளான நடப்பு நிகழ்வுகள் , அடிப்படை பொது அறிவு பகுதி ஆகியவற்றிற்கு பாடப்புத்தகங்கள் தவிர்த்து பிற பொதுவான புத்தகங்கள் படிக்காத காரணத்தால் 10-15 வினாக்களில் பணிவாய்ப்பை இழக்கின்றார்கள் எனவே  இதனை கவனத்தில் கொண்டு தயார் செய்தால் மாபெரும் பிரமாண்ட வெற்றி அசாதாரணம்.

வாழ்த்துக்களுடன்

ஐயாச்சாமி முருகன்

ஐயாச்சாமி அகாதெமி சென்னை

( ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்க 9952521550, கட் ஆப் ,தேர்வு அறிவிக்கை போன்ற சந்தேகங்களை தவிர்க்கவும் )

ஆப்பரேசன் வர்தா

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் பல்வேறு நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த அட்டவனையை தயாரித்துள்ளேன் படித்து பயன்பெறவும். மேலும் ஆப்பரேசன் மங்கல்யான் என நான் தலைப்பிட்டு கால அட்டவனை மூலம் பல நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது அதே வரிசையில் இதற்கு ஆபரேசன் வர்தா எனப் பெயரிட்டுள்ளேன்.

 

DOWNLOAD CCSE STUDY SCHEDULE NOVEMBER 18 TO DECEMBER 4- GS-ENGLISH-TAMIL

 

படிப்பதற்கான கால அட்டவனை பொதுத்தமிழ் மற்றும் தாவரவியல் விலங்கியல்

18/11/2017 லிருந்து 4/12/2017 வரை

தேதிதலைப்பு /பாட எண்படிக்கவேண்டிய புத்தகம்தலைப்புபடிக்கவேண்டிய புத்தகம்
18/11/17பாட எண் , 1,2,36ஆம் வகுப்பு முதல் தொகுதி1.    தாவரங்களின் உலகம்

2.   உணவு முறைகள்

3.   செல்லின் அமைப்பு

6வது முதல் மற்றும் 2வது பருவம்
19/11/17பாட எண் 1,2,36ஆம் வகுப்பு 2 தொகுதி1.    உயிரினங்களின் பல்வகைத்தன்மை

2.   நமது சுற்றுச்சூழல்

6வது 3 வது பருவம்
20/11/17பாட எண் 1,2,36ஆம் வகுப்பு 3 தொகுதி1.    அன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்கு

2.   தாவரங்கள் விலங்குகளின் உணவூட்டம்

3.   தாவர, புற அமைப்பாட்டியல்

4.   வகைப்பாட்டியல்

7வது முதல் பருவம்
21/11/17பாட எண் , 1,2,37ஆம் வகுப்பு 1 தொகுதி1.    மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம்

2.   சுவாசித்தல் –  தாவரம் மற்றும் விலங்குகள்

3.   சூழ் நிலை மண்டலம்

4.   நீர் ஓர் அறிய வளம்

7வது வகுப்பு பருவம் 2 மற்றும் 3
22/11/17பாட எண் , 1,2,37ஆம் வகுப்பு 2 தொகுதி1.    பயிர்ப்பெருக்கமும் மேலாண்மையும்

2.   வளரிளம் பருவத்தை அடைதல்

3.   தாவர உலகம்

4.   நுண்ணுயிரிகள்

8ஆம் வகுப்பு முதல் பருவம்
23/11/17பாட எண் , 1,2,37ஆம் வகுப்பு 3 தொகுதி1.    உடல் இயக்கங்கள்

2.   காற்று நீர் நிலம் மாசுபடுதல்

3.   உயிரினங்களின் பல்வகைத் தன்மை

4.   வனங்களையும் வன உயிரிகளையும் பாதுகாத்தல்

8ஆம் வகுப்பு பருவம் 2 மற்றும் 3
24/11/17பாட எண் , 1,2,38ஆம் வகுப்பு 1 தொகுதி1.    விலங்குலகம்

2.   செல்கள்

9வது முதல் பருவம்
25/11/17பாட எண் , 1,2,38ஆம் வகுப்பு 2 தொகுதி1.    உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்

2.   மனித உடலும் உறுப்பு மண்டலங்களும்

3.   உயிர் புவி வேதிய சுழற்சி

இரண்டாவது பருவம்
26/11/17பாட எண் , 1,2,38ஆம் வகுப்பு 3 தொகுதி1.    தாவரங்களின் அமைப்பும் செயல்பாடும்

2.   அடிமையாதலும் நலவாழ்வும்

3.   மாசுபடுதலும் ஓசோன் சிதைவடைதலும்

9வது 3வது பருவம்
27/11/17திருப்புதல் 6 முதல் 8 வரை தமிழ்6-8 வரையுள்ள

புத்தகங்கள்

1.    மரபும் பரிமாணமும்

2.   நோய்த்தடைகாப்பு மண்டலம்

3.   மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் தடைகாப்பும்

10வது அறிவியல்
28/11/17பாட எண் , 1,2,39ஆம் வகுப்பு 1 தொகுதி1.    தாவரங்களில் இனப்பெருக்கம்

2.   பாலூட்டிகள்

3.   வாழ்க்கை இயக்கச் செயல்பாடுகள்

10வது அறிவியல்
29/11/17பாட எண் , 1,2,39ஆம் வகுப்பு 2 தொகுதி1.    சுற்றுச்சூழல் பாதுகாப்பு

2.   கழிவு நீர் மேலாண்மை

10வது அறிவியல்
30/11/17பாட எண் , 1,2,39ஆம் வகுப்பு 3 தொகுதிதிருப்புதல் உயிரியல் 6 முதல் 10 வரை——
01/12/17பாட எண் , 1,2,3,410 ஆம் வகுப்பு1.    செல்லுயிரியல்

2.   மனித உள்ளுறுப்பமைப்பியல்

11வது விலங்கியல்
02/12/17பாட எண் , 5,6,710 ஆம் வகுப்பு1.    இனப்பெருக்க உயிரியல்

2.   சுற்றுச்சூழல் உயிரியல்

11வது தாவரவியல்
03/12/17பாட எண் 8,9,1010 ஆம் வகுப்புஉடற்செயலியல்12வது விலங்கியல்
04/12/17இலக்கணம்

6 – 10 வரை

6-10 வரை உள்ள புத்தகங்கள்

 

Study Schedule for General English and Botany/ Zoology

Schedule18/11/2017 to 04/11/2017

DateSubject / unit number

General English

BooksSubject / unit number

Science

Books
18/11/17Unit no 1,2

Unit no 1

Select the correct word (Prefix, Suffix)

6th Term -1

6th Term – 2

1.    The World of Plants

2.   Food Habits

3.   Cell Structure

6th Term-1&2
19/11/17Unit no 2

Unit no 1,2

Fill in the blanks with suitable Article

6th Term – 2

6th Term – 3

1.    Diversity of Organisms

2.    Our Environment

6th Term -3
20/11/17Unit no 1,2

Unit no 1  

Fill in the blanks with suitable Preposition

7th Term -1

7th Term – 2

1.    Animals in Daily life

2.   Nutrients in plants and animal

3.   Plant morphology

4.   Basics of classification

7th Term – 1
21/11/17Unit no 2

Unit no 1,2

Select the correct Question Tag

7th Term- 2

7th Term -3

1.    Human body form and function

2.   Respiration in plant and Animals

3.   Eco System

4.   Water a precious source

7th Term 2 & 3
22/11/17Unit no 1,2,3

Select the correct Tense

8th Term -11.    Crop Production & management

2.   Reaching the age of adolescence

3.   Pictorial features of plant kingdom

4.   Microorganisms

8th Term book -1
23/11/17Unit no 1,2

Select the correct Voice

8th Term -21.    Body Movement

2.   Air, water soil pollution

3.   Diversity in living organisms

4.   Conservation of plant and animals

8th  Term book 2 & 3
24/11/17Unit no 1,2

Fill in the blanks (Infinitive, Gerund, Participle)

8th Term -31.     Animal kingdom

2.   Cells

9th Term book 1
25/11/17Revision 6-8

sentence pattern

Find out the Error (Articles, Prepositions, Noun, Verb, Adjective, Adverb)

6-8 books1.    Improvement in Food Resources

2.   Human Body Organ System

3.   Bio-geo Chemical Cycle

9th Term book 2
26/11/17Unit no 1,2,3

Comprehension

9th Term -11.    Structure and Physiological Functions of Plants

2.   Addiction and Healthy Lifestyle

3.   Pollution and Ozone Depletion

9th Term book 3
27/11/17Unit no 1,2

Select the correct sentence

9th Term -21.    Heredity and Evolution

2.   Immune System

3.   Structure and Functions of Human Body Organ Systems

10th Science
28/11/17Unit no 1,2

Find out the odd words (Verb, Noun, Adjective, Adverb)

9th Term -31.    Reproduction in Plants

2.   A Representative Study of Mammals

3.   Life Processes

10th Science
29/11/17Unit no 1,2,

Select the correct Plural forms

10th Book1.    Conservation of Environment

2.   Waste Water Management

10th Science
30/11/17Unit no 3,4,5

Identify the sentence (Simple, Compound, Complex Sentense)

10th BookRevision 6 to 10thScience
01/12/17Unit no 6,7

Identify the correct Degree.

10th Book1.    Cell Biology( refer 11th botany too)

2.   Human System

11th zoology
02/12/17Revision 9&10

Form compound words (Eg: Noun+Verb, Gerund+Noun)  

School Books1.    Reproduction Biology

2.   Environmental Biology

11th Botany
03/12/17Refer previous year question1.    Human physiology12th Zoology
04/12/17————————–Revise from 1/12 to 4/12———–

Note: for English Grammar kindly refer Wren and Martin or any other Grammar book which you want.

  1. Daily Practice maths one hour / தினமும் கணிதம் ஒரு மணி நேரம் பயிற்சி செய்யவும்
  2. Daily study old Question paper with answer/ தினமும் பழைய வினாத்தாள்களை விடைகளுடன் படிக்கவும்.

பேய்மழையும் பேரிழப்பும்

பேய்மழையும் பேரிழப்பும்


சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைப் பேரிடரால் பல்வேறு  நாகரிங்களும் நகரங்களும்  நிலையிழந்து பல்வேறு பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. ஆனால் அம்மாதிரியான அழிவுகளுக்கு மனித இனத்தின் செயல்களே காரணமாகி இருப்பது புரியும். தற்போது தமிழ்நாட்டின் தலைநகரில் ஏற்பட்ட வெள்ளமும் அவ்வாறு ஒரு தற்காலிக நிலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.பூகோளரீதியில் தமிழ்நாடு நிலநடுக்கோட்டுக்கு தென்பகுதியில் அமைந்துள்ளது, பொதுவாக இந்திய காலநிலையையும் பருவநிலையையும் பார்க்கும்போது ஆண்டுதோறும் இரண்டு பருவக் காற்றின் மூலம் மழையைப் பெறுகிறது, பருவக் காற்றுகள் என்பது ஒரே திசையில் வீசும் காற்றுகள் திடிரென திசையை மாற்றிக் கொண்டு வீசும். இந்தியாவில் கோடைகாலத்தில் வடமேற்கு நிலப்பகுதியில் வெப்பம் அதிகரிக்கும் போது அங்கு குறை அழுத்தம் ஒன்று உருவாகும் அதே காலகட்டத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் வெப்பம் குறைவாக இருக்கும்போது உயர் அழுத்தம் ஏற்படும்   இதனால் உயர் அழுத்தப் பகுதியிலிருந்து தாழ்வழுத்தப் பகுதியை நோக்கி காற்றானது வீசத்துவங்கும் புவியின் சுழற்சி காரணமாக காற்றானது திசையைமாற்றி தென்மேற்காக வீசி இந்தியாவிற்கு தென்மேற்கு பருவமழையைக் கொடுக்கும், தமிழகம் , ஆந்திரம், ஒடிசா பகுதிகளைத் தவிர்த்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு ஜீன் முதல் செப்டம்பர் வரை மழையைக் கொடுக்கும் , இக்கால கட்டத்தில் தென் இந்தியாவில் குறைஅழுத்தம் உருவாகும் அப்போது காற்றானது திசைமாறி வடகிழக்காக வீசத்துவங்கும் போது வங்காளவிரிகுடா பகுதியில் இருந்து ஈரப்பதத்தை எடுத்துக்க் கொண்டு தென் இந்தியாவிற்கு மழையைக் கொடுக்கும், இந்த வடகிழக்கு பருவக்காற்றாலே தமிழகம் ,ஆந்திரம்,ஒடிசா, கர்நாடகவின் சிலபகுதிகள் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர்வரையிலான காலகட்டத்தில் மழையை பெறுகின்றன , இக்காலகட்டத்தில் வங்கக் கடல் பகுதியில் புயல்சின்னங்களும் தோன்றி மழையைக் கொடுக்கும்.   இந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கியது, நவம்பர் மாதத்தில் தீவிரமடைந்தது இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது , அனைத்து மாவட்டங்களும் பரவலாக மழையைப் பெற்றன, ஆனால் கடலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது, மனித உயிரிழப்புகள் 400க்கும் அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம், இத்துடன் பொருளாதார இழப்பு, போன்ற என்னற்ற இழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம், இவற்றிற்கெல்லாம் யார் காரணம்?


இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் பருவமழையே முன்கூட்டியே கணிக்கும். இவ்வாறு கணிப்பதில் இரண்டு உட்கூறுகள் உள்ளன , ஒன்று பருவகாலத்தின் போதும் மற்றொன்று பருவகாலம்  அல்லாத நேரங்களிலும் வானிலை அறிக்கை தெரிவிப்பது. ஆண்டுதோறும் பருவமழைக்கு துவங்குவதற்கு முன்பும், முடிவடைந்த பின்னரும், நாள்தோறும் வானிலை சார்ந்த தகவல்களை அரசிற்கு வழங்கி வருகிறது, தற்போதைய அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடுகளின் மூலம்  நவீன ஆண்ராய்டு தொழில் நுட்பத்தின் துனை கொண்டு அனைவரும் அறிந்து கொள்ளும் வசதியிருக்கிறது, இவ்வளவு வசதிகள் இருந்தும் பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவுதான் இந்தப் பேரிடர்க்கு காரணம் .
தேசியப்பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன் படி பேரிடர் மேலாண்மையை அரசியலமைப்புன் ஏழாவது அட்டவனையில் சேர்த்துள்ளது. தேசிய அளவில் பிரதமர் தலைமையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும், மாநில முதல்வர் தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மையும் ஆணையமும் , மாவட்ட அளவில்  மாவட்ட ஆட்சியரை தலைமையாகக் கொண்ட மாவட்டப் பேரிடர் மேலாண்மை ஆணையமும் அமைக்கப் பட்டிருக்கிறது , இவர்களுடைய முக்கியப் பணி ஆண்டுதோறும் பேரிடர் ஏற்பட்டால் அதனை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசின் பல்வேறு துறைகளுடன் கலந்துரையாடி திட்டம் தயாரிப்பதுதான் ஆனால் இந்த ஆணையங்கள் முறையாக செயல்படாததும் தான் பேரிடரிழப்பை சமாளிக்க முடியாமல் போகின்றது


உலகவங்கி நடத்திய கணக்கெடுப்பின் படி ஆண்டுதோறும் இந்தியாவில் இயற்கைச் சீற்றங்களால் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2% இழப்பு  ஏற்படுகிறது என்பது தெரிய வந்திருக்கின்றது, தமிழ் நாட்டைப் பொருத்த வரை, 2004ல் சுனாமி, 2008ல் நிஷா புயல் ,2011ல் தானே புயல் ஆகியவற்றால்தான் அதிகபாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, குறிப்பாக இந்த மூன்று முக்கியப் பேரிடர்களிலும் பாதிக்கப் பட்ட மாவட்டங்கள்குறிப்பாக சென்னை, கடலூர் ஆகியவைதான் இப்போதும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் இந்த மாவட்டங்கள் தான். ஹுட் ஹூட் புயலின்போது எடுக்கப் பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் பெரும் இழப்பைத் தவிர்த்தன .


நவம்பர் மாத துவக்கத்திலேயே பெய்த பெருமழையில் பாடம் படிந்திருந்தால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டிருக்காது, இத்தவறுக்கு நாம் அரசினை மட்டுமே குற்றம் சுமத்த இயலாது, அரசியல்வாதிகள், சென்னை மாநகராட்சி, பொதுமக்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அவற்றின் விளம்பரதாரர்களாகிய   சின்னத்திரை நட்சத்திரங்கள், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்த  அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் என நாம் இந்தப் பட்டியலை நீட்டிக்கொண்டே செல்லலாம் ஆனால் .    இப்போது அவற்றைப் பற்றி பேசிப் பயனில்லை.


உடனடியாக வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை தேசியப் பேரிடர் மீட்புகுழு மற்றும் முப்படைகளின் உதவியுடன் மீட்பது, தகவல் தொடர்பு, போக்குவரத்துமின்சாரம், உணவு , மருத்துவம், இருப்பிடம் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், ஏனென்றால் பிற மாவட்ட்த்தில் உள்ள மக்கள் தலைநகரில் அதிக அளவில் உள்ளதால் அவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப் படவேண்டும், சாலைகளை தற்காலிகமாக சீரமைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீண்ட கால அடிப்படையில் நகர்மயமாதல் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கொள்கைகளை வகுத்தி அவற்றை ஊழல் இல்லாமல் திறமையாக செயல்படுத்தவேண்டும்.

இனிவரும் காலங்களில் பேரிடர்களைத் தடுக்க

1.     மக்கள் இயக்கம் உருவாக்க வேண்டும்

2.    அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பேரிடர் குறித்த விழிப்புணர்வு நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும்

3.    பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்

4.    மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்

5.    நீண்டகால அடிப்படையில் நகர்மயமாதல் மற்றும் பேரிடர் மேலான்மைக் கொள்கைகளை உருவாக்குதல்

உலகமே வியக்கும் வகையில் நாம் பொருளாதாரம்  மற்றும் பிற துறைகளில் வளர்ச்சியடைந்திருந்தாலும் பேரிடரை சமாளிப்பதில் பின்தங்கிதான் இருக்கிறோம். இப்போது நமக்குத் தேவை பணம் அல்ல, ஆங்காங்கே வெள்ளத்தில்  சிக்கியிருக்கும் மக்களை மீட்பது, அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதுதான் ஆகும்

ஐயாச்சாமி முருகன்

06/12/2015
போட்டித்தேர்வர் திருநெல்வேலி

9952521550

சட்டம் வேண்டுமா?

பெண்கள் நாட்டின் கண்கள்,வீட்டின் கண்மணிகள், இந்தியாவைப் பொறுத்தவரை பெண் தெய்வங்களுக்க்ப் பஞ்சமில்லை,பெண்கள் புராணங்களிலும் இலக்கியங்களிலும் போற்றப்படுகிறார்கள் வரலாற்றில் பெண் புலவர்களும்,பண்டிதர்களும்,வீராங்கனைகளும் அடிச்சுவடிகளை பதித்துச்சென்றுள்ளனர் .இந்தியாவில் உள்ள பெண்களின் எண்ணிக்கை உலகில் உள்ள பல நாடுகளில் உள்ள மக்கள் தொகையைவிட அதிகம் என்பதைக்கொண்டு பார்க்கும்பொழுது,இந்தியப்பெண்கள் சமூக அடிப்படையில் வலிமையானவர்களாகவும்,அதிகாரம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று என்று எதிர்பார்ப்பது இயல்பானது தான் ஆனால் நமக்கு தெரிந்த வரை எதார்த்தம் வேறுவிதமாக உள்ளது.இந்திய அரசியல் சட்டத்தில் பாலின சமநிலைக்கொள்கைக்கு முக்கியத்துவம் தரப்பட்ட போதிலும் ,பெண்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட போதிலும் ,இந்தியாவில் உள்ள பெண்கள் தொடர்ந்து சமூக பாராபட்சத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
maxresdefault-1i48zdn
19ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமூக-சமய சீர்திருத்த இயக்கங்கள் பெண்களை மூடப்பழக்க வழக்கங்களில் இருந்து விடுவிக்க முயற்சிகள் மேற்கொண்டன. நாடு சுதந்திரத்திற்கு பிறகு பெண்களுக்கு வாக்குரிமை உறுதிசெய்யப்பட்ட்து,ஆயினும் குறிப்பிட்த்தக்க அளவில் அரசியல் சமநிலை எட்டப்படவில்லை .
பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக தேசிய மகளிர் ஆணையம் 1992 ஜனவரி,31ல் அமைக்கப்பட்ட்து. தேசிய மகளிர் ஆணையத்தின் பணி மிகவும் விரிவானது.பெண்களின் நலன் மற்றும் மேம்பாடு சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களிலும் இந்த ஆணையம் முக்கியபங்காற்றுகின்றது.அரசியல் சாசனப்படியும்,சட்டப்படியும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தல்,கண்கானித்தல் போன்றவற்றில் தேசிய மகளிர் ஆணையம் முக்கியப்பங்காற்றுகிறது .
பெண்களின் நலன் தொடர்பாக தற்போது உள்ள சட்டங்கள் அனைத்தையும் ஆய்வு செய்யும் இந்த ஆணையம் எங்கெல்லாம் குறைகளும் பலவீன்ங்களும் இருக்கிறதோ அவற்றை ஆய்வு செய்து அரசிற்கு தேவையான திருத்தங்களை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்கிறது.இவை தவிர எத்தகைய புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளையும் ஆணையம் வழங்குகிறது,பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்து கொள்கை விசயங்களிலும் அரசுக்கு ஆலோசனை வழங்குதல் ஆகியன தான் தேசிய மகளிர் ஆணையத்தின் முக்கியப்பணியாகும்,
தேசிய மகளிர் ஆணையச்சட்டப்படி, ஆணையத்தில் ஒரு தலைவரும், ஒரு உறுப்பினர் செயலரும், 5 அலுவல் சாராத உறுப்பினர்களும் இருப்பார்கள். இவ்வாணையத்தின் செயல்பாடுகள் மொத்தம் 4 பிரிவுகளாக பிரிக்கபட்டிருக்கிறது.1.புகார்கள் மற்றும் விசாரனைப்பிரிவு, 2.சட்டப்பிரிவு,3.வெளி நாடு வாழ் இந்தியப்பிரிவு, 4.ஆய்வுப்பிரிவு ஆகியவைதான். ஆணையத்தின் அனைத்து செயல்பாடுகளும் இந்த நான்கு பிரிவுகளால்தான் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் பாலியல் தொழில் சட்டமாக்கப்பட வேண்டும் எனக் கருத்து தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பதிவு செய்யப்பட்ட பெண் தொழிலாளர்கள் 2012 ல் 7 லட்சம் என மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விபரமும்,13 லட்சம் தொழிலாளர்கள் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கமும் ,இவர்களில் 40% பேர் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சக புள்ளி விபரமும் தெரிவிக்கிறது, என்வே இதனை முறைப்படுத்த வேண்டும் என்றே தோன்றுகிறது இத்தொழிலில் ஈடும்படும் 40% பெண்கள் பிற சமூக விரோதிகளால் ஈடுபடுத்தப்படுகின்றனர்,மீதம் உள்ளவர்கள் சமூக பொருளாதார காரணிகளால் இத்தொழிலில் ஈடுபடவேண்டிய நிலைமை இருக்கின்றது.
மேலும் பாலியல் தொழிலைக் கட்டுப்படுத்த அல்லது முறைப்படுத்த பரத்தமைத் தடுப்புச் சட்டம் 1956(Immoral Traffic Prevention Act) இருக்கிறது இச்சட்டம் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தடை செய்யவில்லை ஆனால் காவல் துறைக்கு சில அதிகாரங்களை அளித்திருக்கிறது,மேலும் இச்சட்டம் பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களைச் சார்ந்து வாழும் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் உறவினர்களையும் தண்டிக்கும் அதிகாரம் அளித்திருக்கிறது. மேலும் 2007 ல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்ப்பாட்டு அமைச்சகம் உஜ்வலா என்ற திட்ட்த்தை அறிமுகப்படுத்தி இத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு கொண்டு வரப்பட்ட்து ஆயினும் இத்திட்டம் உரிய பயனை அடையவில்லை. மேலும் 2011 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் ப்ரதீப் கோஷல் குழுவினை அமைத்து பரத்தமைத் தடுப்புச் சட்ட்த்தினையும்,பாலியல் தொழிலாளர்களின் மறுவாழ்வு பற்றியும் ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுகொண்டுள்ளது,இந்தக்குழு இந்த ஆண்டில் அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியல் தொழிலை சட்டமாக்கி முறைப்படுத்துவதால், பாலியல் தொழிலார்கள் கன்னியமாக வாழ வழிவகைசெய்யப்படும். காவல்துறையிடமிருந்தும் ,சமூகத்தினரிடமிருந்தும் பாதுகாக்கபடுவார்கள்.பாலியல் தொழில் முறைப்படுத்தப்பட்டால் அரசின் திட்டங்களின் மூலம் அவர்களது குழந்தைகள் கல்வி பெற வழிசெய்யப்படும்.பாலியல் தொழிலை முறைப்படுத்தினால் சுகாதாரமற்ற,மற்றும் பாதுகப்பாற்ற நிலைமை தொழிலார்களுக்கு இருக்காது,மேலும் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதனால் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் இத்தொழிலில் ஈடுபடுவது தவிர்க்கப்படும், மேலும் புரோக்கர்கள் ,சமூக விரோதிகள் இத்தொழிலாளர்களை சுரண்டுவது தடுக்கப்படும், அதே போல் இத்தொழில் சட்டமாக்கபட்டால் பெண்களின் மீதான மரியாதை கேள்விக்குறியாகிறது,மேலும் இளந்தலைமுறையினருக்கு தவறான செய்தியை தருவதைப்போல் ஆகிவிடும் எனவே அரசுகள் உரிய முறையில் சிந்தித்து நெறிப்படுத்த வேண்டும்.

திரும்பிப் பார்க்கையில்

அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கு நமது விடுதலைப்போராட்ட வீரர்களின் தீவிர , அரசியல்,அஹிம்சை போராட்டத்தின் விளைவாக இந்தியா விடுதலை மசோதா பிரிட்டிஷ் பாரளமன்றத்தில் ஜீலை 18 1947ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு அதன் விளைவாக இந்தியா ,பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் ஆகஸ்ட் 15 ,1947ல் ஏற்படுத்தப்பட்டன.
புதுடெல்லியில் கூடிய இந்திய அரசமைப்பு சட்டமன்றத்தில் தலைவர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.சபாநாயகர் தலைக்கு மேலிருந்த கடிகாரம் பன்னிரெண்டு முறை அடித்து ஒய்ந்தது. நள்ளிரவின் நிசப்தத்திற்கு இடையே நேருவின் குரல் கணீரென்று ஒலித்தது,நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னால் நாம் விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அந்த ஒப்பந்த்திலிருந்து விடுவித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இந்த நள்ளிரவு நேரம் உலகமே உறங்கிக்கொண்டிருக்கையில் இந்தியா சுதந்திரமாக வாழ்வதற்கு விழித்துக்கொள்கிறது.இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மெளண்ட்பேட்டன் பிரபு இந்தியா விடுதலை அடைகிறது என்று அரசியல் அமைப்பு சட்டமன்றம் செய்த பிரகடனத்தில் கையொப்பமிட்டார்
1947 ஆகஸ்ட் 15ம் நாள் விடுதலைபெற்ற நமது நாட்டிற்கான அரசியல் சாசனத்திற்கு அரசியல் சாசன சபை 1949 நவம்பர் 26ல் ஒப்புதல் வழங்கியது. 1950 ஜனவரி 26ல் முழு சுதந்திரம் கொண்ட சோசலிச ஜனநாயக அமைப்பிற்கு வித்திடும் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது,இதுவே நமது குடியரசு தினமாகும். நமது அரசியல் சாசனம் நடைமுறைப்படுத்தப்பட்டு 65 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.66 வது குடியரசு தின விழாவினை கொண்டாடும் இந்நேரத்தில் நமது நாடு சாதித்துள்ள சாதனைகளையும்,எட்டிப்பிடித்த சிகரங்களையும் எண்னிப்பார்ப்பது சரியானதாகும்.இருந்த போதிலும் நமது வெற்றிகளை குறைத்து மதிப்பிடும் எதிர்மறை சிந்தனைவாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். நமது நாடு பல்வேறு துறைகளில் பெற்றுள்ள வெற்றிகளை மதிப்பிடுவது அவ்வளவு எளிதல்ல,ஆயினும்  நாம் செய்துள்ள சாதனைகளை வளர்ச்சியை எடுத்துக்காட்டும் அளவுகோல்களாக்க் கருதி பட்டியலிடுகிறேன்.
உறுதியான ஜனநாயகம்:
நாம் சுதந்திரம் பெற்ற அதே காலகட்டத்தில் வேறுசில நாடுகளும் சுதந்திரம் பெற்றன. ஆனால் அவற்றில் பெரும்பான்மையான நாடுகளில் ஜனநாயக முறை தட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கையில் , நமது நாட்டில் ஜனநாயக அமைப்பு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவது உலக அரங்கில் நமக்கு தனி இடத்தை பெற்றுத்தந்தது. நாம் அனைவருக்கும் வயது வந்தோர் வாக்குரிமை அளித்தபோது கல்வியறிவு குறைவாக உள்ள அதே சமயம் அதிக மக்கள் தொகை கொண்டுள்ளதால் நமது நாட்டில் ஜனநாயக அமைப்பு வெற்றிபெறாது என்று எள்ளி நகையாடியவர்கள் வியக்கும் வண்ணம் ஜனநாயகமுறை தழைத்தோங்கி வருகிறது. வாக்களார்களின் முதிர்ச்சியும் அதிகரித்து வரும் பங்கேற்பும் இதற்கு வலுவூட்டி வருகின்றன்.1952ல் நமது நாட்டில் நட்த்தப்பட்ட முதலாவது பொதுத்தேர்தல் தொடங்கி குறிப்பிட்ட இடைவெளிகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன்.இதுவரை 16 பொதுத்தேர்தல்கள் நடைபெற்றன.இதேபோல் மாநில சட்டப்பேரவைகளுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நட்த்தப்பட்டு வருவது நமது ஜன நாயகத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறது.
கிராம வளர்ச்சி
இந்தியா”கிராமங்களில் வாழ்கிறது” என்றார் காந்தி ,கிராமங்கள் வாழ்ந்தால்தான் இந்தியாவால் வாழமுடியும் என்று கருதினார் நேரு.இன்றைய இந்தியாவில் மக்கட்தொகையில் பாதிக்கும் மேற்பட்ட விழுக்காட்டினர் கிராமப்புறங்களில்தான் வாழ்ந்து வருகின்றனர். இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் விதி,40 கிராமப்பஞ்சாயத்துகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனக்கூறுகிறது,கிராம முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் பொருட்டு சமுதாய வளர்ச்சித்திட்டம், தேசிய விரிவுப்பணித் திட்டம் ஆகியற்றைத் தொடர்ந்து 1959ல் முதல்முறையாக பஞ்சாயத்து அமைப்புகள் இராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்ட்து,ஆயினும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு 1992ல் 73வது அரசியலைப்புச்சட்ட திருத்ததின்படி அரசியலைமப்பு அதிகார அந்தஸ்து வழங்க்கப்பட்டு கிராம ஊராட்சிகளுக்கு அதிகாரமளிக்கப்பட்ட்து.
வேளாண்மை மற்றும் உணவு உற்பத்தி
நாடு சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் உணவுதானிய உற்பத்தி 51 மில்லியன் டன் மட்டுமே எனவே வேளாண்மைக்கு ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு , பசுமைப்புரட்சி,வெண்மைப் புரட்சி,மஞ்சள்புரட்சி, அன வேளாண்மை சார்ந்த புரட்சிகளை செய்ததின் மூலம் நாம் உணவு உற்பத்தியிலும் வேளாண்மையிலும் தன்னிறைவு அடைந்துவிட்டோம்.2013-2014 ஆம் ஆண்டில் நமது நாட்டின் உணவுதானிய உற்பத்தி 259 மில்லியன் டன் ஆகும்.மேலும் வேளாண்மைப் பொருட்கள் உற்பத்தியில் நாம் பல்வேறு பொருட்களில் உலக அளவில் முன்னனியில் உள்ளோம்.குறிப்பாக பால் உற்பத்தியில் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளோம் என்பது பெருமைப்படத்தக்கது  ஆகும்
போக்குவரத்து
போக்குவரத்து என்பது மக்கள் மற்றும் பொருட்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இட்த்திற்கு கொண்டு செல்வதற்கு பயன்படுகிறது.இந்தியாவில் மூன்று வகையான போக்குவரத்து வசதிகள் உள்ளன், நமது நாட்டின் இரயில்வே போக்குவரத்து ஆசியாவிலே முதல் இட்த்தையும்,உலக அளவில் நான்காவது இட்த்திலும் உள்ளது,தின்ந்தோறும் 2 கோடி பயனிகளையும்,40 லட்சம் டன் சரக்குகளையும் இரயில்வே ஏற்றிச்செல்கிறது.தரைவழிப் போக்குவரத்தும் முக்கியப்பங்கு வகிக்கின்றது,தங்க நாற்கரச் சாலைத்திட்டம் நாட்டின் முன்ன்னி நகரங்களை இனைக்கிறது, நமது நாடு இந்தியப்பெருங்கடலின் தலைப்பகுதியில் அமைந்துள்ளதால் கடல்வழிப்போக்குவரத்திலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. நமது நாட்டின் விமானப் போக்குவரத்து அதிக அளவில் நடைபெறுகிறது, சுமார் 30 நிமிட இடைவெளிகளில் நாம் உலகின் எந்த நாட்டிற்கும் நமது நாட்டிலிருந்து பயனம் செய்யக்கூடிய அளவில் விமானப்போக்குவரத்து உள்ளது.
கல்விவளர்ச்சி
மக்களின் பண்பாட்டினை உருவாக்கி மேம்படச் செய்வதில் கல்வி முக்கியப்பங்கு வகிக்கின்றது.சமுதாயத்தின் பல்துறை சார்ந்த வளர்ச்சிக்கும்,அறிவார்ந்த முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக கல்வி திகழ்கிறது. நவீன யுகத்தில் ஒரு நாட்டின் வளர்ச்சி நிலையினை கணிக்கும் ஒரு முக்கிய அளவுகோலாக கல்வி கருதப்படுகிறது.எனவே அரசு கல்வி மேம்பாட்டிற்காக பல புதிய திட்டங்களை செயல்படுத்துகிறது. இதன் விளைவாக நமது நாட்டின் எழுத்தறிவு சதவீதம் 74.04 ஆக உள்ளது. குழந்தைகளுக்கு துவக்கக் கல்வியானது அடிப்படை உரிமையாக நமது நாட்டில் வழங்கப்பட்டிருக்கின்றது.உயர்கல்வி அளிப்பதில் இந்தியா உலகின் உயரிய இடத்தில் உள்ளது.அண்மைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 42 மத்தியப் பல்கலைக்கழகங்களும்,275 பிற பல்கலைக்கழகங்களும்,130 நிகர்னிலை பல்கலைக்கழகங்களும்,90 தனியார் பல்கலைக்கழகங்களும் செயல்பட்டு வருகிறது.இவைதவிர தொலைதூரக்கல்வி,திறந்த வெளிப்பல்கலைக்கழகம் போன்ற சிறப்பு வசதிகளும்,உயர் தொழில்நுட்பம், மேலாண்மை போன்றவற்றில் கல்வி அளிக்க,இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் மற்றும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியன உள்ளன்.
தகவல் தொடர்பு:
தகவல் தொடர்பு சாதனக்கருவிகள் கண்டுபிடிப்பு மனித வளர்ச்சியின் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.தகவல் தொடர்பு சாதன வளர்ச்சியில் இந்தியா மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.தகவல் தொடர்பு சாதனாங்களான இணையம்,தொலைபேசி,வானொலி,பத்திரிக்கை ஆகியவற்றில் அதிக அளவு வளர்ச்சி பெற்றுள்ளது,குறிப்பாக இனையத்தின் மூலம் அரசாங்கம் மின்ன்னு ஆட்சிக்கு (E-Governance) மாறியுள்ளது எனலாம். உலகிலேயே அதிக அளவு மக்கள் தொலைபேசியை பயன்படுத்துவது நமது நாட்டில்தான்.
பொருளாதார வளர்ச்சி
ஆர்ம்ப காலத்தில் இந்தியா கலப்பு மற்றும் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை கடைபிடித்த்து.1991 ஆம் ஆண்டிற்கு பிறகு தாராளமயமாதல் பொருளாதார கொள்கையை கொண்டுள்ளது. விரைவான பொருளாதார வளர்ச்சி கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியா அண்மைக் காலமாக உலகப் பொருளாதார வல்லரசாக உருவெடுத்து வருகிறது,2003முதல் 2007 வரை ஆண்டிற்கு 4 சதவீத வளர்ச்சியை அடைந்த்து.2008 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலையின் காரனமாக நமது வளர்ச்சி வீதமும் தடைபட்ட்து எனினும் மீண்டும் மீட்சிப்பாதையில் செல்லத் துவங்கி இருக்கிறது.2035 ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகத் திகழும் என்று உலகப் பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
விஞ்ஞான வள்ர்ச்சி
India_super_power
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் விக்ரம் சாராபாய் அவர்களால் துவங்கப்பட்ட இந்திய விண்வெளித்திட்டப் பயனம் அறிவியல் உலகில் நமக்கு தனி இடத்தைப் பெற்றுத்தந்துள்ளது. நமது அறிவியலாளர்களின் சாதனையை பறைசாற்றும் விதமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விளங்கி வருகிறது.உலகின் ஆறு முக்கிய முகமைகளில் முதன்மையான நிறுவனமாக இஸ்ரோ திகழ்கிறது.1969ல் துவங்கப்பட்ட இஸ்ரோ பல்வேறு மைல்களை எட்டித் தனது மணிமகுடத்தில் பல வைரங்களை பதித்துக் கொண்டு வருகிறது.விண்வெளித் தொழில்நுட்பத்தை நாட்டு நலனுக்கு பயன்படுத்துவதில் முன்ன்னியில் உள்ள இஸ்ரோ பி.எஸ்.எல்.வி,ஜி.எஸ்.எல்.வி, என்ற இருவகை ஏவுகலங்களை படைத்துள்ளது. பல தகவல் தொடர்பு செயற்கைக் கோளையும், புவி நோக்கு செயற்க்கைக் கோளையும் ஏவியுள்ள இஸ்ரோ 2008ல் நிலவுக்கு சந்திராயன் என்ற விண்கலத்தை செலுத்தி உலகப்புகழ் பெற்றது அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற விண்கலத்தை செலுத்து ஒரு புதிய உலகச்சாதனை ஒன்றையும் படைத்த்து.உலகிலேயெ முதல்முறையாக முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு அதுவும் மிக்க் குறைந்த செலவில் இதனைச் சாதித்தது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது எனலாம்

sekar
நாடு விடுதலை அடைந்த பிறகு மக்களின் மேம்பாட்டிற்காக்கவும் , நலனுக்காகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பணிகள் சிலவற்றை பற்றியும் அதில் எட்டப்பட்டுள்ள சாதனைகளையும் கோடிட்டுக் காட்டுவதே மேலே உள்ள தகவல்கள் ஆகும்.இது விரிவானது ஆகாது ஆயினும் இந்த 66 ஆண்டுகளில் நமக்கு என்ன பலம் கிட்டியுள்ளது என அங்கலாய்க்கும்  எதிர்மறைச் சிந்தனையாளர்களை ஒரளவு திருப்தி அடையச்செய்யலாம் எனினும் நாம் இன்னும் பயனிக்க வேண்டிய தூரம் உள்ளது
இந்தக் கட்டுரை இந்த ஆண்டு குடியரசு தினத்திற்காக நான் எழுதியது ஆனால் எந்தப் பத்திரிகையும் இதைப் பிரசுரிக்க வில்லை.

இட ஒதுக்கீடு மறுபரிசீலனை தேவை

இடஒதுக்கீடு என்பது எப்போதும் விவாதத்திற்கு உரியதாகவும், விவகாரத்திற்கு உரியதுமாகத் தான் இருந்து வருகிறது,சமூக நீதி எனக் கருதப்படும் இடஒதுக்கீடு என்பது என்ன என்பதில் எப்போதும் ஒரு சிக்கல் இருக்கத்தான் செய்கிறது,                                              
இடஒதுக்கீடு எனும் சமூகநீதிக் கொள்கையின் தோற்றுவாய் என்ன? அதன் துவக்கம் எப்போது என்பது? போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பது என்பது சற்று கடினமானது தான், வேதகாலத்திலிருந்து தான் ஜாதி எனும் அமைப்பு தோன்றி , சுல்தான்கள்,மொகலாயர்கள்,ஆங்கிலேயர் வரை 21 ஆம் நூற்றாண்டு வரை இந்தக்கொடுமை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையளிக்க கூடிய செய்தி.

முதன்முதலாக1882 ஆம் ஆண்டு ஜோதிராவ் பூலே எனும் சமூக சீர்திருத்தவாதி ஆங்கிலேய அரசுக்கு கோரிக்கை வைக்கிறார் , தாழ்த்தப்பட்டார்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசாங்கம் சலுகைகள் தரவேண்டும் என்று. 1909 ஆம் ஆண்டு மிண்டோ மார்லி சட்டம் தான் இடஒதுக்கீடு வழங்கியது, இதனைத் தொடர்ந்து சென்னை மாகானத்தில் 1921ல் ஆட்சியில் இருந்த  நீதிக்கட்சி இடஒதுக்கீட்டு ஆணை என்ற ஒன்றைப் பிறப்பித்தது. இதன்படி பிராமனர் அல்லாதவர்களுக்கு44 சதவீதமும், பிராமனர்களுக்கு 16 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் ஆகியோர்களுக்கு தலா 16 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது.


1930 ஆம் ஆண்டு  இலண்டனில் நடைபெற்ற முதலாவது வட்ட மேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களின் சார்பாக கலந்து கொண்ட டாக்டர் அம்பேத்கர் , தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 1932 அம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் வகுப்புவாரித்தீர்வை வெளியிட்டார் இதன்படி தாழ்த்தப்ப்ட்டோருக்கு தனித்தொகுதிகள் வழங்கப்பட்டன, ஆனால் காந்திஜி இதனை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டார் இதன்படி டாக்டர் அம்பேத்கருக்கும் காந்திக்கு இடையே பூனா ஒப்பந்தம் கையெழுத்தாகியது இதன்படி ஆங்கிலேயர் அறிவித்த இடங்களைவிட அதிகமான இடங்களை தாழ்த்தப்பட்டோருக்கு தர காங்கிரஸ் கட்சி சம்மதித்தது.
அரசியலைமைப்புச்சட்டக் குழுவில் இடஒதுக்கீடு பற்றி பலவாறு விவாதிக்கப்பட்டு இறுதியாக1950, ஜனவரி,26 ஆம் நாள் நடைமுறைக்கு வந்த அரசியல் சாசனம் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கப்படவேண்டும் எனறு கூறியது, ஆனால் தற்போது வரை இடஒதுக்கீடு என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது,
இடஒதுக்கீடு தொடர்வதைப் பற்றி நாம் சிந்திக்கும் பொழுது சில வினாக்களுக்கு பதில் வேண்டும், இடஒதுக்கீடு என்பது ஜாதியை அளவுகோலாக கொண்டுதான் இருக்கவேண்டுமா? அல்லது பொருளாதாரத்தை அடிப்படையாக வழங்க முடியாதா? என்ற வினாக்கள் எழுகின்றன.


அரசியலைப்பு சாசனத்தில் பிற்பட்ட வகுப்பினரைப் பற்றியும் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றியும் தெளிவான வரையறை இல்லை , பின் எவ்வாறு இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அட்டவனைகளில் சேர்க்கப்படுகின்றனர்.பிற்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு பட்டியலிடுவதற்காக முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1953 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட்து, இவ்வாணையம் 2399 ஜாதிகளை பிற்படுத்தப்பட்டோர் என பட்டியலிட்ட்து,மேலும் பிற்பட்டோருக்கு 25 சதவீதம் முதல்40 சதவீதம் வரை கல்வி நிறுவனங்களிலும்


 ,அரசுப்பணிகளிகலும் இட ஒடுக்கீடு செய்யலாம் எனப்பரிந்துரைத்தது,ஆனால் அரசு இவ்வறிக்கையை கிடப்பில் போட்டுவிட்டது. இதனிடையே 1951 ஆம் ஆண்டு செண்பகம் துரைராஜ் எதிர் மெட்ராஸ் அரசு இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாதியை அடிப்படையாக வைத்து இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்துக்கு முரணானது என தீர்ப்பளித்தது இதன்பின்னர் தான் அரசியல் சாசனத்தில் முதலாவது அரசியலைப்பு திருத்தச் சட்டத்தின்படி ஷரத்து 15(4) சேர்க்கப்பட்டு ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்யப்பட்ட்து.


1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனதா அரசாங்கம், 1979 ஆம் ஆண்டு இரண்டாவது பிற்பட்டோர் ஆணையத்தை அமைத்து,கல்வி மற்றும் சமூக நிலைகளில் பிற்பட்டோரை இனம் கானும் படியும், முன்னேற்றத்துக்கு வழிவகை கூறும்படியும், இடஒதுக்கீடு எவ்வாறு வழங்கவேண்டும் போன்ற்வற்றிற்கு தீர்வுகானும் படி கேட்டுக்கொண்ட்து. 1980 ஆம் ஆண்டு அறிக்கையை அரசாங்கத்திற்கு அளித்தது. இவ்வாணையம் 3248 ஜாதிகளை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் படியும் பரிந்துரைத்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை

1990 ஆம் ஆண்டு தேசிய முண்ணனி அரசின் பிரதமர் வி.பி சிங் மண்டல் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார் ஆனால் இது தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது, பின்னர் ஆட்சிக்கு வந்த நரசிம்ம ராவ் அரசாங்கத்திடம் இது தொடர்பாக
உச்சநீதிமன்றம் கருத்துக் கோரியது , ராவ் அரசாங்கம்27 சதவீத பிற்பட்டோர் இடஒதுக்கீட்ட்டுடன் சேர்த்து 10 சதவீதம் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்க்கும் இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்த்து, ஆனால் இறுதியாக உச்ச நீதி மன்றம் 10 சதவீத பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு செல்லாது எனவும், பிற்ப்ட்டோர் ஒதுக்கீட்டில் கிரிமிலேயர் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட்து. இந்த முறைதான் இப்போதும் தொடர்கிறது.
இடஒதுக்கீடு இத்தனை ஆண்டுகளும் தொடரவேண்டிய காரணமென்ன? தாழ்த்தப்பட்டவர்,பிற்படுத்தப்பட்டவர்கள் இன்னும் பிற்படுத்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்களா? இவர்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா? அல்லது அரசியல் ஆதாயத்திற்காகவும் வாக்கு வங்கி அரசியலுக்காகவும் தொடர்கிறதா? என்பது புரியவில்லை
பொதுவாக இடஒதுக்கீட்டினால் பயனடைந்தவர்கள் யார்? இதற்கு பதில் இடஒதுக்கீட்டுக் கொள்கை சலுகையை அனுபவித்த நபர்களே மறுபடி மறுபடி இதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.இட ஒதுக்கீடு என்பது ஒரு முறை வாய்ப்பாகவே வழங்கப்பட வேண்டும், உதாரணமாக ஒருவர் வேலைவாய்ப்பைப் பொறுத்த வரையில் போட்டித்தேர்வின் மூலம் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஒரு பணியைப் பெற்றுக்கொள்பவர் மீண்டும் இன்னொருமுறை போட்டித்தேர்வெழுதி வேறு பணியைப் பெற்றுவிடுகிறார், இதனால் புதிய நபர் இச்சலுகையை பயன்படுத்த இயலாமல் போகிறது. இளைய தலைமுறை இதனை தவறாக புரிந்து கொள்கிறது. தாங்கள் அதிக மதிப்பெண்கள் போட்டித்தேர்விலும், பள்ளிகளிலும் எடுத்த போதிலும் எங்களால் நாங்கள் நினைத்த பதவிகளையும், கல்வி நிறுவன்ங்களையும் கிடைக்கவில்லை என்பதால் தான் அவர்கள் இடஒதுக்கீடு என்பதை மாற்றுக் கண்ணோட்ட்த்தில் கான்கின்றனர். இடஒதுக்கீடு என்னும் சமூக நீதிக்கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரமிதுஇடஒதுக்கீடு வேண்டாம் என்பது வாதமல்ல முறையாகவும், உரியவர்கள் பயனைடயும்படியும் இருக்க வேண்டும் என்பது தான் விருப்பம்.
error: Content is protected !!
  • Sign up
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.