நடப்பு நிகழ்வுகள் மார்ச்-17,18-2016-குருப் 2 மெயின் வினா.

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-17,18-2016-குருப் 2 மெயின் வினா.
v அரசியல், பொது வாழ்வில் நேர்மைக்கான 2016-ஆம் ஆண்டின் காயிதே மில்லத் விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.
v கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,350 கோடிக்கு சணல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சணல் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தின் கழிமுக சமவெளிப்பகுதியில் சணல் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சணல் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சணல் பொருள்கள் அமெரிக்கா,பிரேசில் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதோடு, சணல் உற்பத்தியில் 84 ஆலைகள் செயல்படுகின்றன. இதன்மூலம், ஆண்டுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகின்றன.
v காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் பாபு, தமிழக அரசின் சிறந்த நெசவாளர் விருதைப் பெற்றுள்ளார்.
v பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, பாகிஸ்தானின் 6 பேர் அடங்கிய கூட்டு விசாரணைக் குழு, வரும் 27ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். பாகிஸ்தானில் வரும் நவம்பர் மாதம் 9,10 ஆம் தேதிகளில், சார்க் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்து, அதற்கான அழைப்பிதழை சர்தாஜ் அஜீஸ், சுஷ்மா ஸ்வராஜிடம் வியாழக்கிழமை நேரில் அளித்தார்.
v இணையத்தில் செல்வாக்கு மிக்க 30 உலகத் தலைவர்களின் பட்டியலை அமெரிக்காவின் “டைம்இதழ் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
v டெல்லியில் முதல் உலக சூஃபி மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
v உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு டென்மார்க் என 158 நாடுகளின் தர வரிசை பட்டியலில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட இந்தியா பின்தங்கி 118-வது இடத்தை பிடித்துள்ளது.

ü தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன.
ü இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பது டென்மார்க் ஆகும். கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஸ்சுவிட்சர்லாந்து தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 
ü ஐஸ்லாந்து 3-வது இடத்திலும், நார்வே 4-வது இடத்திலும், பின்லாந்து 5-வது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா(9), இஸ்ரேல்(11), அமெரிக்கா(13) இடங்களை பிடித்துள்ளன. 
ü உலகிலேயே மகிழ்ச்சி குறைந்த 5 நாடுகள் பட்டியலில் டோகோ, புரூண்டி, சிரியா, பெனின், ருவாண்டா இடம் பெற்றிருக்கின்றன.
ü இக்குறியீட்டை ஐ. நா வின் நிலையான வளர்ச்சி தீர்வுக் குழு )Sustainable Development Solutions Network (SDSN) ஆண்டு தோறும் வெளியிடுகிறது.
ü மொத்த மகிழ்ச்சிக் குறியீடு என்ற குறீயிட்டை 1972 ஆம் ஆண்டு பூட்டான் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுங் அறிமுகப்படுத்தினார்,
v 21 வது சட்ட ஆணையத்தின் தலைவராக நீதிபதி பால்பீர் சிங் செளகான் நியமனம் செய்யப் பட்டுள்ளார்
கூடுதல் தகவல்கள்
ü சட்ட ஆணையம் மத்திய அரசால் அமைக்கப் படுகிறது.
ü மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படும்
ü இதுவரை 20 சட்ட ஆணையங்கள் அமைக்கப் பட்டுள்ளன, முதலாவது சட்ட ஆணையம் 1955 ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது.
ü இது வரை சட்ட ஆணையம் 262 பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது, இவ்ற்றுள் நீதித்துறை சீர்சிருத்தம், மரண தண்டனை கூடாது, குடும்ப நல நீதி மன்றங்கள் அமைத்தல், பல்வேறு சட்டப் பிரிவுகளை மறு ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துறை செய்துள்ளது.
ü முதல் சட்ட ஆணையத்தின் தலைவராக எம்.சி சேட்வலாட் என்பர் நியமிக்கப்பட்டார், இவரே மத்திய அரசின் முதல் தலைமை வழக்கறிஞர் ஆவார்.
v  இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக 17 பிரத்யேக வாக்குச்சாவடிகள் அமைக்கப்படு வதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
v பிரபல ஷெனாய் இசைக் கலைஞர் உஸ்தாத் அலி அகமது ஹுஸேன் கான் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 77. இந்துஸ்தானி இசைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி கடந்த 2009-ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் மேற்கு வங்க அரசும் கடந்த 2012-ம் ஆண்டு இவருக்கு பங்கபூஷண்விருது வழங்கி கவுரவித்தது.
v இஸ்ரேல் நாட்டில் வசித்து வருபவர் இஸ்ரேல் கிறிஸ்டல், போலந்து நாட்டில் 1903-ம் ஆண்டு, செப்டம்பர் 15-ம் தேதி பிறந்தவர். 2 உலகப் போர்களை கண்டிருக்கிறார். அவரது வயது 112 வருடங்கள் 178 நாட்கள். இதனால் உலகிலேயே அதிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்தார். இதற்கு முன் ஜப்பானை சேர்ந்த யாசுதரோ கொய்டே (112 வயது, 312 நாட்கள்) என்பவர்தான், உலகின் மிக வயதான மனிதராக இருந்தார். அவர் சமீபத்தில் மரணமடையவே, உலகின் வயதான மனிதர் என்ற சாதனையை கிறிஸ்டல் பெறுகிறார் சில குறிப்பிட்ட கலப்புகளை கொண்ட மருந்துகளை தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட உத்தரவுக்கு, தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து விக்ஸ் ஆக்ஷன் 500′ உள்ளிட்ட பிரபலமான மாத்திரைகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன.
v மேடம் துஸாட் அருங்காட்சியகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகுச் சிலைகள் அடுத்த மாதம் (ஏப்ரல்) அமைக்கப்படவுள்ளன. மேடம் துஸாட் அருங்காட்சியகங்கள் லண்டன், சிங்கப்பூர், ஹாங்காங், பாங்காக் ஆகிய நகரங்களில் உள்ளன. உலகம் முழுவதும் புகழ்பெற்ற மனிதர்களின் மெழுகுச் சிலைகள் இந்த அருங்காட்சியகங்களில் வைக்கப்படுவதே இதன் சிறப்பம்சம் ஆகும்.
v அமெரிக்க உச்ச நீதிமன்றப் பதவிக்கு நீதிபதி மெரிக் கார்லண்டை (63) உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒபாமா செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தார்.
v ஆண்ட்ரூ வில்ஸ் என்னும் கணித பேராசிரியக்கு ஏபேல் பரிசானது வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.4.7 கோடி. இந்த பரிசு சிறந்த கணிதவியலாளருக்கு வழங்கப்படும் உயரிய கவுரவமாக கருதப்படுகிறது.
v 1637ம் ஆண்டு பிரெஞ்சு கணிதவியலாளர் பெய்ரி டி ஃபெர்மட் உருவாக்கிய சமன்பாட்டுக்கு தீர்வு கண்டுபிடிக்க ஏராளமானோர் முயற்சித்தனர்.
v கடந்த மூன்று நூற்றாண்டுகளாக கணிதவியலாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வந்த இந்த சமன்பாட்டிற்கு 62 வயதாகும் ஆண்ட்ரூ வில்ஸ் என்னும் கணித பேராசிரியர் தீர்வை கண்டுபிடித்துள்ளார்.
v பெண்கள் வாகனம் ஓட்டுவதே குற்றமாகக் கருதப்படும் சவூதி அரேபியாவுக்கு, ராயல் ப்ரூனே ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று, முழுக்க முழுக்க பெண் விமானிகளைக் கொண்டு இயக்கப்பட்டு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இது வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஷரிபா க்ஸரினா, ப்ரூனே நாட்டின் முதல் பெண் விமானியாக பதவியேற்று 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
v மாஸ்கோவில் நடைபெற்று வரும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடனான ஆட்டத்தை டிரா செய்தார் ஆனந்த்.
இன்று முதல் குருப் 2 மெயின் தேர்விற்கு தினமும் ஒரு கேள்வி கொடுக்கப் படும், விடைகளை எழுதி அதனை புகைப்படம் எடுத்தோ அல்லது தட்டச்சு செய்தோ , 9952521550 என்ற எண்ணிற்கு whatsapp மற்றும்  Telegram messenger or iyyasamy5@gmail.com அனுப்பவேண்டும்.
From today every day one question will be given for group 2 main writing practice For those who writing their answers should be  send as image or typing to following whatsapp and telegram, 9952521550, and this mail, iyyasamy5@gmail.com.
Today Question –  கட்டுரை
1.          Discuss the contribution of A P J Abdul Kalam to indigeniousation and development of new technology in India.?
டாக்டர் ஆ.பெ.ஜெ அப்துல்கலாம் அவர்களின் புதிய தொழில்னுட்ப    கண்டுபிடிப்புகளைப் பற்றி விவாதி?

நடப்பு நிகழ்வுகள் 23,பிப்ரவரி-2016-குஜராத் தகவல்கள்

நடப்பு நிகழ்வுகள்  23,பிப்ரவரி-2016-குஜராத் தகவல்கள்

v நாகை மாவட்டம், தில்லையாடியில் உள்ள தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் வள்ளியம்மையின் 102-ஆவது நினைவுநாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. வள்ளியம்மையின் முன்னோர்கள் தில்லையாடியிலிருந்து தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர்கள். அங்கு 1898ஆம் ஆண்டு வள்ளியம்மை பிறந்தார். தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு எதிராக, இந்தியர்களின் உரிமைக்காக மகாத்மா காந்தி நடத்திய போராட்டத்தில் பங்கேற்று வள்ளியம்மை சிறை தண்டனையை அனுபவித்தார். சிறையிலேயே நோயுற்ற அவர் விடுதலையான பின்னரும் நோயால் அவதியுற்று 16 வயது கூட பூர்த்தியாகாத நிலையில் 1914-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
v ஏழை-எளிய மாணவர்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் மேஜை விளக்குகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்
v புதிதாக தொடங்கப்பட்டுள்ள “தூய்மை சுற்றுலா செல்லிடப்பேசி செயலியில் தமிழகத்தின் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், மாமல்லபுரம் கடற்கரைகோயில் உள்பட 25 நினைவுச் சின்னங்கள் இடம் பெற்றுள்ளன. நாட்டில் நினைவுச் சின்னங்களில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில், பொதுமக்கள் புகார்களைத் தெரிவிப்பதற்காக “தூய்மை சுற்றுலா செல்லிடப்பேசி செயலிதொடங்கப்பட்டுள்ளது.
v சீனாவின் ஷாங்காய் நகரில், வரும் 26ஆம் தேதி முதல் 2 நாள்கள் நடைபெறும் ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்க மாட்டார்.
v சுற்றுலா நாடான ஃபிஜி தீவு பகுதியில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பட்ட கடும் வின்ஸ்டன்  புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்தது. 
v தேசிய அனல் மின் நிறுவனத்தில் (என்டிபிசி) மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 5 சதவீத பங்கு விற்பனை செவ்வாய்க்கிழமை (பிப்.23) தொடங்குகிறது.
v ஆசிய இண்டோர் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில்தமிழகத்தைச் சேர்ந்த பிரேம் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 
குஜராத்- தகவல்கள்
குஜ்ஜர்களின் நாடு. குர்ஜார்ராட்ரா என்று அழைக்கப்பட்டுப் பின்னாளில் குஜராத் ஆனது.
வரலாறு
சபர்மதி, மாகி நதிகளின் கரையோரங்கள், லோத்தல், ராம்பூர், ஆம்ரி உள்ளிட்ட இடங்களில் கற்கால மனிதர் வாழ்ந்த தடயங்களும் சிந்து சமவெளி நாகரிகத்தின் மச்சங்களும் உள்ளன. குஜராத் பழங்காலத்தில் எகிப்து, பஹ்ரைன், பாரசீக வளைகுடா நாடுகளுடன் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியிருக்கிறது.
பண்டைய குஜராத்தை மவுரிய வம்சம் ஆண்டது. பிறகு சாகர்கள், மைத்ராகா வம்சத்தினர் ஆண்டனர். அவர்களுக்குப் பிறகு, சாதவாகனர் வம்சம், குப்த பேரரசு, சாளுக்கிய வம்சம், ராஷ்ட்ரகூடர், பாலா பேரரசு, குர்ஜாரா- ப்ரத்திகாரா பேரரசு, சவ்ரா, சோலங்கி, பாகிலா பழங்குடி வம்சங்கள், ராஜபுத்திரர்கள், வகேலாக்கள் என்று குஜராத்தில் பல அரசுகள் மாறி மாறி வந்துள்ளன. கி.பி.1297-ல் அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியும் குஜராத்தில் ஏற்பட்டது. குஜராத்தின் முதல் சுல்தானாக ஜாபர்கான் முசாபர் ஆனார். பின்னர் மராத்தியர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
1600-களில் டச்சு, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் குஜராத்தின் கடலோரப் பகுதியில் தங்களின் தளங்களை நிறுவினர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி 1614-ல் சூரத்தில் முதல் தொழிற்சாலையை நிறுவியது. பின்னர் ஆங்கிலேயர்- மராட்டியர் போர் நிகழ்ந்தது. ஆங்கிலேயர் ஆதிக்கம் வளர்ந்த போது, பாம்பே ராஜதானி உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் குஜராத் வந்தது.
இந்தியாவின் நகை
இந்திய விடுதலையின் விதையைப் போன்ற காந்தியடிகள் பிறந்தது இந்த மண்ணில்தான். சர்தார் வல்லபாய் பட்டேல், மொரார்ஜி தேசாய், உள்ளிட்ட விடுதலை வீரர்களின் தலைமையிலான போராட்டம் ஆங்கிலேயரை உலுக்கியது.
நாடு விடுதலையடைந்த பிறகு 1948-ல் குஜராத்தி மொழி பேசும் மக்களை உள்ளடக்கிய தனி மாநிலக் கோரிக்கையாக மகா குஜராத்முழக்கம் முன்வைக்கப்பட்டது. 1960 மே 1-ல் பாம்பே ராஜதானி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. குஜராத், மகாராஷ்ட்ரம் மாநிலங்கள் உதயமாகின. குஜராத்துக்கு முன்பு அகமதாபாத் தலைநகராக இருந்தது. 1970-ல் அது காந்தி நகருக்கு மாற்றப்பட்டது. குஜராத்துக்கு இந்தியாவின் மேற்குப் பகுதி நகைஎன்னும் பெயர் உள்ளது.
மக்களும் மொழியும்
குஜராத்தின் எல்லையாக, 1600 கி.மீ நீளத்துக்கு கடற்கரை உள்ளது. மேற்கில் அரபிக்கடலும், வடக்கில் பாகிஸ்தானும் வடகிழக்கில் ராஜஸ்தான், கிழக்கில் மத்தியப் பிரதேசமும் தெற்கில் மகாராஷ்ட்ரா, டாமன் டையூ, நாகர் ஹவேலி ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன.
மக்கள் தொகை ஏறத்தாழ 6 கோடிப்பேர் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் என்ற பாலின விகிதாச்சாரம். எழுத்தறிவு 79.31 சதவீதம். இந்து மதத்தை 89.09 பேரும் இஸ்லாமை 9.06 பேரும் சமணத்தை 1.03 பேரும் மற்றவர்கள் ஏனைய மதங்களையும் பின்பற்றுகின்றனர்.
சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழிகளின் கலவையே குஜராத்தி மொழி. பெரும்பாலும் குஜராத்தி, இந்தி பேசுகின்றனர். உருது, அராபி மற்றும் பாரசீகம், மராத்தி, மார்வாரி, பஞ்சாபி, தமிழ், தெலுகு, பெங்காலி, ஒரியா, மலையாளம் என பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன.
தொழில் வளம்.
ரசாயனம், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மருந்து உற்பத்தி, சிமெண்ட், ஜவுளி, முத்து மற்றும் நகைகள், துறைமுக மேம்பாடு, வாகன மற்றும் பொறியியல்உற்பத்தியில் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியை குஜராத் எட்டியுள்ளது.
வேளாண்மை
மாநிலத்தில் நர்மதை, தபி உள்ளிட்ட 61 நதிகள் பாய்கின்றன. 63 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். கோதுமை, எண்ணெய் வித்துகள், பருத்தி, நிலக்கடலை, பேரீச்சம், கரும்பு, பால் மற்றும் பால் பொருட்கள், மாம்பழம், வெங்காயம், கத்திரிக்காய், இஞ்சி ஆகியவை மகசூல் செய்யப்படுகின்றன.
கலாச்சாரச் செழுமை
இந்து, இஸ்லாமிய, ஐரோப்பிய கலாச்சாரங் களை உள்வாங்கிய கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது குஜராத். கார்பா, கார்பி, ராஸ், தாண்டியா நடனங்கள், ஹல்லிசாகா குழு நடனங்களும் லுல்லாபீஸ், நுப்தியல் மற்றும் ரான்னடே பாடல்களும்பாவை, ராம்லீலா நாடகங்களும் பிரசித்தி பெற்றவை. 1650-களில்  அக்யான் என்ற கதை சொல்லும் வழக்கம் இருந்தது.
சுற்றுலா
குஜராத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளன. இவற்றில் அக்ஷார்தம் கோயில், அம்பாஜி கோயில், துவாரகாதேஷ், பகவத், சோம்நாத் மற்றும் சூரியக் கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. லகோட்டா, உபக்கோட், தபோய், ஓகா, சின்ஜுவாடா, பத்ரா உள்ளிட்ட இடங்களில் உள்ள பழங்கால கோட்டைகளும், மகாத்மா காந்தியின் நினைவுகளைத் தாங்கி நிற்கும் காந்தி சமரக் சங்கராலாயா அருங்காட்சியகமும் உலக மக்களைக் கவர்ந்து இழுக்கின்றன.
சிங்கங்களின் புகலிடமாகத் திகழும் கிர் காடுகள், பிளாக் பக் தேசியப் பூங்கா, மரைன் தேசியப் பூங்காக்கள் மற்றும் 21 பறவைகள் சரணாலயங்கள் இங்கு உண்டு. அதனால் ஒரு சுற்றுலா தேசமாக குஜராத் திகழ்கிறது.
ஆளுமைகள்
பாகிஸ்தானின் தந்தை எனப்படும் முகமது அலி ஜின்னா, சர்தார் வல்லபாய் படேல், இந்த அணு விஞ்ஞானி விக்ரம் சாராபாய்உள்ளிட்ட ஆளுமைகளின் தேசம் இது. காந்தி பிறந்ததாலேயே குஜராத்துக்கு ஏகப்பெருமை. இந்தியா முழுவதுமே காந்தி தேசமாக இருந்தாலும் காந்தியின் பிறந்த தேசம் குஜராத் என்பதால் வந்த பெருமை அது.
 
நடப்பு நிகழ்வுகள் 24,பிப்ரவரி-2016 – மேகாலாயா தகவல்கள்

நடப்பு நிகழ்வுகள்  24,பிப்ரவரி-2016 மேகாலாயா தகவல்கள்

 • v முடக்கம் வேண்டாம், விவாதம் வேண்டும்: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை.நாட்டில் புதிய தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்வாகத் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
 •   விவசாய நலன்: விவசாயிகள் தங்கள் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்கு உதவியாக தேசிய அளவில் இணையவழி வேளாண் சந்தையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயிகள் நலமாக இருந்தால்தான் இந்தியா வளர்ச்சியடைய முடியும்.
  பொருளாதார சக்தி: இந்தியப் பொருளாதாரம் இப்போது மிகவும் உறுதியாக உள்ளது. அன்னிய முதலீடு வரத்து 39 சதவீதம் அதிகரித்துள்ளது. தொழில் தொடங்குவதற்கு மிகவும் வசதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 9 இடங்கள் முன்னேறியுள்ளது. தேசத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  மின்பற்றாக்குறை குறைந்தது: நிதிப்பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை குறைந்துள்ளது. பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நமது நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.
  முன்பு நாட்டின் மின்சாரத் தேவையில் 4 சதவீதம் பற்றாக்குறை இருந்தது. புதிய அரசு பதவியேற்ற பிறகு, மின்சாரப் பற்றாக்குறை 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு மே மாதத்துக்குள் நாட்டில் ள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு அளிக்கப்பட்டு விடும்.

முனைப்புடன் செயல்படுகிறது: பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டத்தின்கீழ் 21 கோடி பேருக்கு புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.32,000 கோடி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் வெற்றிகரமான மக்கள் நலத்திட்டமாகும்.

 • v மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கடந்த 48 நாள்களாக நடைபெற்று வந்த யானைகள் நலவாழ்வு முகாம்செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததை அடுத்து, முகாமில் இருந்து அனைத்து யானைகளும் பிரியாவிடை பெற்றுச் சென்றன
 • v முல்லைப் பெரியாறு அணையில் நான்கு பேர் கொண்ட மத்திய நீர்வள ஆணைய குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 152 அடிக்கு உயர்த்துவது தொடர்பாக மத்திய நீர்வள ஆணையத் தலைவர் எல்..வி.நாதன் தலமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 • v தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்ஹெச்ஆர்சி) புதிய தலைவராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்துவை(65) நியமிக்கலாம் என்று குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மனித உரிமை ஆணையத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு, பிரதமர் தலைமையில், உள்துறை அமைச்சர்,மக்களவை மற்றும் மாநிலங்கவை எதிர்க்கட்சித் தலைவர், மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துனைத் துலைவர் ஆகியோர் அடங்கிய குழு பரிந்துரை செய்யும். மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் தலைவர், ரங்கனாத் மிஸ்ரா. 1993 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
 • v உலக அளவில் வாழ்வதற்கு உகந்த இடங்களின் பட்டியலில், இந்தியாவில் ஹைதராபாத் நகரம்முதலிடம் பிடித்துள்ளது.
  பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமான மெர்ஜர் வெளியிட்டுள்ள பட்டியலில், இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  உலக அளவில் வாழ்வதற்கு உகந்த இடங்களில், வியன்னா (ஆஸ்திரியா) முதலிடத்தில் உள்ளது. ஜூரிச் (ஸ்விட்சர்லாந்து), ஆக்லாந்து (நியூசிலாந்து), மூனிச் (ஜெர்மனி), வான்கோவர் (கனடா) ஆகிய நகரங்கள் முறையே 2 முதல் 5ஆவது இடங்களைப் பிடித்துள்ளன. லண்டன் 39ஆவது இடத்தையும், பாரீஸ் 37ஆவது இடத்தையும், நியூயார்க் 44ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.
  இந்தியாவில் ஹைதராபாத் நகரம் முதலாவதாக இருக்கிறது. அந்நகரம் உலக அளவில் 139ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கடுத்து, புணே (144), பெங்களூரு (145), சென்னை (150), மும்பை (152), கொல்கத்தா (160) ஆகிய நகரங்கள் உள்ளன. 
 • v அஸ்ஸாம் மாநில தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சமூகபொருளாதார முன்னேற்றத்துக்காக ரூ.5,568 கோடி சிறப்பு நிதியுதவி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் தருண் கோகோய் வலியுறுத்தியுள்ளார்.
 • v இந்தியாவில் முதல் முறையாக தங்கம் மற்றும் இரும்பு தாது சுரங்கங்களின் ஏலங்கள் நடத்தப்படவுள்ளன. அதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 26-ஆம் தேதி தங்கச் சுரங்க ஏலமும், ஒடிஸா மாநிலத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 2-ஆம் தேதி இரும்புத் தாது சுரங்கம் ஏலமும் நடத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
 • v தொழில் புரட்சியால் புவியின் வெப்பம் அதிகரித்ததன் காரணமாக, கடந்த 27 நூற்றாண்டுகளில் இல்லாத வகையில் கடந்த நூற்றாண்டில் கடலின்நீர்மட்டம் 14 செ.மீ. அதிகரித்ததாகஅமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

v உலகளாவிய அளவில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. சுவீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம்சார்பில் உலகில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் குறித்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த மையம் கடந்த 2015-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இதில், சவுதி அரேபியா முதலிடத்திலும்இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

மேகாலாயா மேகங்களின் நாடு

புதிய கற்காலத்திலிருந்தே மனிதர்கள் இங்கே வசித்துள்ளனர். காசி, காரோ மலைகளில் அதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூர்வகுடி மக்களான காசி, ஜெய்ன்தியாஸ் மற்றும் காரோ பழங்குடியினரின் சுயாட்சிப் குதிகளாக இவை இருந்தன. பின்னர் 19-வது நூற்றாண்டில்தான் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. ஆங்கிலேயர் அசாமுடன் மேகாலயாவை 1835-ல் இணைத்தனர்.

மாநில அந்தஸ்து

நாடு விடுதலை அடைந்தபோது இன்றைய மேகாலயா அசாமுக்கு உள்ளேயே இரண்டு மாவட்டங்களாக இணைந்து இருந்தது. தனியாக மலை மாநிலம்அமைக்கக் கோரி 1960-ல் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து அசாம் மறுசீரமைப்பு (மேகாலயா) சட்டம் 1969-ல் கொண்டுவரப்பட்டது. அசாமில் இருந்து பிரிந்து தன்னாட்சி பெற்ற பிரதேசமாக மேகாலயா 1970 ஏப்.2-ல் உதயமானது.

வடகிழக்கு மாநிலங்களின் மறுசீரமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் 1971-ல் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் மேகாலயா தனி மாநில அந்தஸ்தை 1972 ஜனவரி 21-ல் பெற்றது.

வடகிழக்கின் 7 சகோதரிகள் என வர்ணிக்கப்படுகிற ஏழு மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்றானது.தெற்கிலும் மேற்கிலும் வங்கதேச நாடும் மற்ற பகுதிகளில் அசாம் மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன. வங்கதேசத்துக்கும் மேகாலயாவுக்கும் இடையே 440 கி.மீ. தூரத்துக்கு எல்லை அமைந்துள்ளது. மேகாலயாவின் மொத்த நிலப்பரப்பில் 70 சதவீதம் காடுகள்தான்.

கிறிஸ்தவர்கள்

மக்கள் தொகை 29.64 லட்சம். எழுத்தறிவு 75.48 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் மூன்று மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. இங்குள்ள மக்களில் 70.25 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். இந்து மதத்தை 13.27 சதவீதம் பேரும் இஸ்லாமை 4.27 சதவீதம் பேரும் மற்ற மதங்களை 11.90 சதவீதம் பேரும் பின்பற்றுகின்றனர்.

மொழிகள்

ஆங்கிலம் அலுவல் மொழியாகவும் பரவலாகப் பேசப்படும் மொழியாகவும் உள்ளது. மக்களால் பேசப்படும் மொழிகளில் முக்கியமானவை காசி, காரோ. காசி மொழியில் பயன்படுத்தப்படும் அனேக வார்த்தைகள் இந்தோ ஆரிய, நேபாள, வங்க, அசாமிய மொழிகளில் இருந்து தருவிக்கப்பட்டவை. காரோ மொழி கோச், போடோ மொழியின் நெருக்கமான வடிவமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தவிர, பினார், பியாட், நேபாளி மொழிகளும் புழக்கத்தில் உள்ளன.

தாய் வழி சமூகம்

மேகாலாயாவின் மண்ணின் மைந்தர்களாக, காசிஸ், ஜெய்ன் தியாஸ், காரோ இன மக்கள் உள்ளனர். இவர்களின் பண்பாடு தனித்துவமானது. பண்டைக்காலச் சமூக முறையான தாய்வழிச் சமூகத்தை இவர்கள் பின்பற்றுகிறார்கள். இந்த இனக் குழுக்களை டேவிட் ராய் என்பவர் ஆய்வு செய்துள்ளார். ‘‘இந்தச் சமூகத்தில் பெண்ணைச் சார்ந்தே ஆண் இருக்கிறான். குடும்பத்தினரின் நம்பிக்கைக்குப் பாத்திர மாகப் பெண் இருக்கிறார்’’ என்கிறார் அவர்.

சொத்துகளைப் பெண்களே நிர்வகிக்க வேண்டும். அவர்களே வயதான பெற்றோர்களையும் மணமுடிக்காதவர் களையும் பாதுகாக்க வேண்டும். பெண் பிள்ளைகள் பிறக்காத வீடுகளில் தத்து எடுப்பதும் அல்லது மருமகளாக வரும் பெண்களிடத்தில் குடும்பத்தின் பொறுப்புகளை ஒப்படைப்பதும் இவர்களின் சமூகக் கட்டமைப்பாக உள்ளது. தாய்வழிச் சமூகக் கட்டமைப்பு மேகாலயாவில் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது.

வேளாண்மை

வேளாண்மையில் 80 சதவீத மக்கள் ஈடுபடுகின்றனர். நெல், சோளம் முதன்மை பயிர்களாக உள்ளன. உருளை, இஞ்சி, மிளகு, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, கொய்யா, வாழை, பிளம்ஸ் உள்ளிட்ட பழங்கள், தேயிலை, முந்திரி, எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், தக்காளி, கோதுமை, காளான் ஆகியவை மேகாலயாவின் முக்கியமான பயிர்கள்.

மேகாலயாவில் அதிக எண்ணிக்கையிலான ஆறுகள் உள்ளன. நிலக்கரி, சுண்ணாம்பு, கிரானைட், களிமண் உள்ளிட்ட தாதுக்கள் நிரம்பிய பூமியாக மேகாலயா உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் வளம்பெற உதவுகிறது. இங்கே விளையும் மஞ்சள் உலகில் தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது.

பண்டிகைகள்

நடனங்களால் தங்களைத் தனித்துவ மிக்கவர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் காசி இன மக்கள். பாம் கானா, சா சக், மைன்சியம், செங்குத், ஸ்நெம் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர்.

ஜெய்ன்தியாஸ் இன மக்கள்

மனிதன் கலாச்சாரம் இயற்கை ஆகியவற்றின் சமநிலையைப் பராமரிக்கும் வகையிலான விழாக்களையே கொண்டாடு

கின்றனர். இதில் சமூக இணக்கமும் ஒற்றுமையை வலியுறுத்தும்படியான அம்சங்களும் மேலோங்கி இருக்கும். புலித்திருவிழா, பாம் பலார், பாம் தோ, ராங் பிலிகான், துர்கா பூஜைஉள்ளிட்ட பண்டிகைகள் இவர்களுக்கானவை.

காரோ மக்களின் முக்கியமான பண்டிகை டென் பிளஸ்ஸியா, வாங்கலா, ரோங்குச்சு கலா, ஜமங் சாய் உள்ளிட்ட 15 வகைத் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றனர்.

இவர்களின் பழங்குடிப் பண்பாட்டின்மீது கிறிஸ்துவம் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை மூன்று இன மக்களும் பொதுவானதாகக் கொண்டாடுகின்றர்.

சுற்றுலா தேசம்

சுருள் சுருளாய் மேகக் கூட்டங்கள் தவழும் பள்ளத்தாக்குகள், எங்கும் பசுமை, முடிவுறா மலைத்தொடர்கள், நீர் வீழ்ச்சி, அடர்த்தியான காடுகள் என்று உலகைக் கவரும் சுற்றுலா வளத்தைக் கொண்டது மேகாலயா. நோகாளிகை அருவி, ஸ்வீட் அருவி, வேர்ட்ஸ் வேக், லேடி ஹைதரி பூங்கா, இயற்கையாகவே அமைந்த சுண்ணாம்புப் பாறை, மண் குகைகள் உள்ளிட்டவை பார்க்கப் பார்க்கத் திகட்டாதவை.

மேகாலயா என்றால் மேகங்களின் தாயகம் என்கிறது சமஸ்கிருதம். மேகங்களைப் போர்த்தியபடி படர்ந்து கிடக்கும் இந்தப் பசுமைப் பிரதேசம் இயற்கை வாசம் செய்யும் தேசம்.

நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி என்பது நம்பிக்கை உடையோரிடம் மட்டுமே வரும்!!!!!