‘குவாட்’ பாதுகாப்பு உரையாடல் | Quadrilateral security dialogue

‘குவாட்’ பாதுகாப்பு உரையாடல் | Quadrilateral security dialogue

‘குவாட்’ பாதுகாப்பு உரையாடல்

‘குவாட்’ பாதுகாப்பு உரையாடல் என்றால் என்ன?

இந்திய மற்றும் பசுபிக் கடல் பிராந்தியத்தில் , அமெரிக்கா , இந்தியா மற்றும் ஜ்ப்பான் நாடுகள் இனைந்து தங்களுடைய , கூட்டுறவை அமைதி ,பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஒரு உரையாடல் ஆகும். மேலும் இந்த குவாட் உரையாடலில் ஆஸ்திரேலியாவையும் இணைக்கும் நோக்கத்துடன் அந்த நாட்டுனும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை ஜப்பான் 10 ஆண்டுகளுக்கு முன்பே முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.

நோக்கம் மற்றும் முக்கியத்துவம்

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் வல்லாதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் , மேலும் சீனாவின் பட்டுப்பாதைக்கு எதிராக இதனை அமெரிக்கா மற்றும் ஜப்பான் முன்னெடுக்கிறது.

உரையாடலின் முக்கிய அம்சம் / நோக்கம்

வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அரிக்கைப் படி , இந்த குவாட் திட்டம் இன்னும் ஒரு கருப்பொருளாக  மட்டுமே இருக்கிறது. இதன்படி கூட்டாண்மை நாடுகள் வெளிப்படையான , திறந்த மனதுடனும் , அமைதி, நிலைத்தன்மை , வளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நீண்ட கால அளவில் கூட்டாண்மை நாடுகளுக்கும் , உலக நாடுகளுக்கும் பலன் தரும் வகையில் குவாட் திட்டம் இருக்கும்.

இந்தியாவுக்கு என்ன நன்மை

இத்திட்டம் இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் ஒரு மைல்கல் எனவும் மேலும் இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் ஒரு அதிகாரத்துவமும் கிடைக்கும் என கருதலாம். மேலும் சீனாவின் முத்துசரம் ( String of Pearls) திட்டம் எனப்படும் இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ச்சியான துறைமுகங்களை நிறுவியுள்ளது. இந்த முத்துச்சரம் திட்டத்திற்கு எதிராக இந்தியா குவாட் திட்டத்தின் மூலம் சீனாவின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடலாம் என நினைக்கிறது.

இந்தியா கவனமாக கையாள வேண்டுமா?

அமெரிக்கா ஏற்கனவே சீனாவின் ஒரே பாதை திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில் , இந்தியா குறுகிய கால பயன்பாடுகளுக்காக உடனே இக்கூட்டமைப்பில் சேர்ந்து விடாமல் நீண்ட தெளிவான பேச்சுவார்த்தைக்கு பின்னரே இனைய வேண்டுமேன கொள்கையாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் இத்திட்டம் இன்னும் கருத்தளவில் உள்ளாதால் தீவிரமான பேச்சுவார்த்தைக்கு பின்னர் குவாட் திட்டத்தினை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

Source ( The Hindu ) 

 

 

வரலாற்றுக்கு முந்தைய காலம்|சிந்து சமவெளி நாகரிகம் பாடக்குறிப்புகள்

வரலாற்றுக்கு முந்தைய காலம்|சிந்து சமவெளி நாகரிகம் பாடக்குறிப்புகள்

வரலாற்றுக்கு முந்திய காலம் : ( Pre Historic Period)

மனித குல வளர்ச்சியின் ஆரம்ப நிலைகளைப் பற்றிய விவரங்களை குறிப்பிடும் காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகிறது. இக்காலம் பற்றிய ஆவணங்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. இயற்கையின் அழிவிலிருந்து மிஞ்சிய சில தடயங்கள், உலகின் பழங்கால மனிதர்கள் உபயோகித்த ஆயுதங்கள், கருவிகள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கற்காலம், உலோக காலம் என வரலாற்றுக்கு முந்திய காலத்தை வகைப்படுத்துகின்றனர். மனிதன் கற்களிலாலான ஆயுதங்களையும் கருவிகளையும் உபயோகித்த காலத்தையே கற்காலம் என்று அழைக்கிறோம். கற்காலத்தை பழைய கற்காலம் அல்லது பேலியோலிதிக்காலம்(Palaeolithic Age) என்றும் புதிய கற்காலம் அல்லது நியோலிதிக்காலம் (Neolithic Age) எனவும் இருவகைகளாகப் பிரிக்கலாம்.

பழைய கற்கால வாழ்க்கை : Palaeolithic Age

 பழைய கற்காலத்தில் மனிதன் உணவைத் தேடி நாடோடியாக அலைந்தான். பழங்கள், காய்கள், கிழங்குகள் மற்றும் கொட்டைகளை சேகரித்து உண்டான். பின் மிருகங்களை வேட்டையாடினான். சிக்கி முக்கிக் கற்களை உரசி நெருப்பைக் கண்டு பிடித்தான். இலைகளாலும், மரப்பட்டை களாலும், மிருகங்களின் தோலினாலும் தன் உடலைப் பாதுகாத்துக் கொண்டான்.

இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்விடங்கள் பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகாமையிலேயே உள்ளன. பழைய கற்கால மக்கள் வசித்த பாறை இடுக்குகளும், குகைகளும் துணைக் கண்டம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. சில இடங்களில் அவர்கள் இவைகளால் வேயப்பட்ட குடிசைகளிலும் வாழ்ந்தனர். இந்தியாவில் காணப்படும் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த இடங்கள் வருமாறு :

 • வடமேற்கு இந்தியாவில் சோன் பள்ளத்தாக்கு மற்றும் பொட்வார் பீடபூமி
 • வடஇந்தியாவில் சிவாலிக் குன்றுகள்
 • மத்திய பிரதேசத்தில் பிம்பேட்கா
 • நர்மதைப் பள்ளத்தாக்கில் ஆதம்கார் குன்று
 • ஆந்திரப் பிரதேசத்தில் கர்நூல்
 • சென்னைக் கருகிலுள்ள அத்திரம்பாக்கம்

புதிய கற்கால வாழ்க்கை : Neolithic Age

புதிய கற்காலத்தில் மனிதன் வேளாண்மையில் ஈடுபட ஆரம்பித்தான். பயிர்களின் வளர்ச்சிக்கு செழுமையான சமவெளிகளைத் தேர்ந்தெடுத்து நாகரிக வாழ்க்கைக்கு வழிவகுத்தான். மிருகங்களை வளர்க்கக் கற்றுக் கொண்டான். இந்த காலகட்டத்தில் சக்கரம் கண்டு பிடிக்கப் பட்டது. இக்கண்டுபிடிப்பு மனிதனின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சக்கரங்களின் உதவியினால் வண்டிகள் செய்து பெருஞ் சுமைகளை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல மனிதன் கற்றுக் கொண்டான். இதை அறிவியல் வளர்ச்சியின் முதல்படி என்று கூறலாம். மிகச்சிறிய நேரம் காட்டி (கடிகாரம்) முதல் பிரம்மாண்டமான ஆகாய விமானம் வரை சக்கரமே அடிப்படையாக உள்ளது. சக்கரத்தின் உதவியினால் கற்கால மனிதன் மட்பாண்டங்கள் உருவாக்கவும் கற்றுக் கொண்டான். இப்படியாக புதிய கற்கால மனிதன் நாகரிக வளர்ச்சிக்கு அடிகோலினான்.  

இடைக்கற்காலம்- Mesolithic

மனிதகுல வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை இடைக் கற்காலம் என்று அழைக்கிறோம். இது சுமார் கி.மு. 10000 முதல் கி.மு. 6000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும். பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடையே ஏற்பட்ட மாற்றங்களை இக்கால வரலாறு எடுத்துரைக்கிறது. இடைக்கற்கால சின்னங்கள், குஜராத்தில் லாங்கன்ச், மத்திய பிரதேசத்தில் ஆதம்கார், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாறைக் குகைகளில் காணப்படும் ஓவியங்களிலிருந்து இடைக்கற்கால மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி ஒரளவு யூகிக்க முடிகிறது.

உலோக கால வாழ்க்கை : Chalcolithic

உலோகங்களின் கண்டு பிடிப்பு மனிதனின் மிகப்பெரிய சாதனையாகும். ஆயுதங்கள் செய்வதற்கு உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. இக்கால கட்டத்தில் மக்கள் பெரும்பாலும் ஆற்றுப் படுகைகளின் அருகிலேயே வசித்தனர். எனவே ஆற்றங்கரைகளில் நாகரிகம் வளர்ந்தது. உலோக காலத்தை செம்புக்காலம், வெண்கலக் காலம் மற்றும் இரும்புக் காலம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இரும்புக் காலத்தில் கலப்பைகளும், கத்திகளும் இரும்பால் செய்யப் பட்டன. எல்லா வகைகளிலும் மனித குலத்தின் முன்னேற்றம் ஏற்பட இக்காலம் வழிவகை செய்தது.

பொதுவாக, ஆற்றங்கரைகளிலேயே செம்பு – கற்காலப் பண்பாடுகள் வளர்ச்சியடைந்தன. குறிப்பாக, ஹரப்பா பண்பாடு செம்பு – கற்காலப் பண்பாட்டின் ஒரு பகுதியேயாகும். தென்னிந்தியாவில் கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்திரா, பெண்ணாறு, காவிரி ஆகிய நதிகளின் பள்ளத்தாக்குகளில் இக்காலத்தில் குடியானவ சமுதாயங்கள் தோன்றி வளர்ந்தன. உலோக காலத்தின் தொடக்கத்தில் இவர்கள் உலோகத்தைப் பயன்படுத்தவில்லை என்றாலும், சுமார் கி.மு. 2000 ஆண்டுவாக்கில் செம்பும் வெண்கலமும் இப்பகுதியில் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. தமிழ்நாட்டிலுள்ள பையம்பள்ளியில் வெண்கலம் மற்றும் செம்பு ஆகியவற்றாலான பொருட்கள், சுடுமண் உருவங்கள், மண்பாண்டங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன

ஹரப்பப் பண்பாடு  ( Harappa Civilization)

சான்றுகள் Resources  :  மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா என்னு மிடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலமாக ஹரப்பப் பண்பாடு பற்றி நமக்கு தெரிய வந்துள்ளது. சர் ஜான் மார்ஷல் தன் குழுவுடன் மொகஞ்சதாரோவின் பல இடங்களில் ஆராய்ச்சி செய்தார். இந்த அகழ்வாராய்ச்சிJ.M. மக்கே, G.F. டேல்ஸ் மற்றும் M.S. வாட்ஸ் ஆகியோரால் தொடரப்பட்டது. இதன் விளைவாக மிக மேன்மையான நாகரிகம் இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன்பே இருந்தது என நமக்குத் தெரிகின்றது. சர் ஜான் மார்ஷல் குழுவினரின் கண்டுபிடிப்புகள் ஹரப்பப் பண்பாடு பற்றிய அடிப்படைச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

கி.பி.1921-ல் ஹரப்பா என்னுமிடத்தில் நடந்த அகழ் வாராய்ச்சியின்போது இந்த சான்றுகள் கிடைத்ததால் இதை ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கிறோம். சிந்து நதியின் உபநதியான ராவி (Ravi) நதிக்கரையில் அமைந்த இடம் ஹரப்பா. பாக்கிஸ்தானிலுள்ள மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் ஒடும் நதி ராவி, ஹரப்பா நாகரிகம் கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டிற்கு அடுத்த ஆண்டு, கி.பி.1922-ல் சிந்து மாகாணத்தில் உள்ள (தற்போது பாக்கிஸ்தானைச் சேர்ந்தது) லர்கானா மாவட்டத்தில் உள்ள மொகஞ்சதாரோ என்னும் நகரம் தோண்டி எடுக்கப்பட்டது.

நகரங்களை கண்டுபிடித்தவர்கள்

 நகரம் நதிக்கரைகண்டுபிடித்த ஆண்டுகண்டுபிடித்தவர்
ஹரப்பாராவி1921தயாராம் சஹானி
மொஹஞ்சதரோசிந்து1922ஆர் டி பானர்ஜி
ரோபார்சட்லஜ்1953சர்மா
லோத்தல்போகவா1957எஸ் ஆர் ராவ்
காளிபங்கன்காக்கர்1959பி.பி லால்
பன்வாலிகாக்கர்1974ஆர் எஸ் பிஸ்ட்

 

ஹரப்பப் பண்பாடு சிந்து நதிக்கரையில் செழித் தோங்கியது. பழைய நாகரிகங்கள் ஏன் ஆற்றங்கரையிலேயே வளர்ந்தன என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அவைகளில் ஒரு சில பின்வருமாறு :

 1. பெரிய குடியிருப்புகளுக்குத் தேவையான தண்ணிர் ஆறுகளிலிருந்து தாராளமாகக் கிடைத்தது.
 2. ஆறுகளைச் சார்ந்துள்ள நிலப்பகுதிகள் செழுமை வாய்ந்தவை. எனவே பலதரப்பட்ட பயிர்களை எளிதாகப் பயிர்செய்ய முடிந்தது.
 3. சாலைகள் இல்லாத காலகட்டத்தில் ஆறுகள் மிக மலிவான, எளிதான போக்குவரத்திற்குச் சாதகமாய் அமைந்தன.

சுற்றுப்புறச் சூழல் :

 சிந்து, ஹரப்பா பிரதேசங்கள் ஈரப்பதம் நிலவிய நிலங்களைக் கொண்டதாகக் காணப்பட்டன. எனவே புலி, யானை மற்றும் காண்டாமிருகங்கள் வசித்த அடர்ந்த காடுகள் அங்கு இருந்தன. நகரங்களுக்குத் தேவையான செங்கற்களை தயாரிக்கும் செங்கல் சூளைகளுக்கு வேண்டிய மரங்கள் அக்காடுகளிலிருந்து கிடைத்தன.

காலம் :

 இந்நாகரிகம் சால்கோலித்திக் காலம் (Chalcolithic Period) அல்லது செம்பு கற்காலம் என்று அழைக்கப்பட்ட புதிய உலோக காலத்தைச் சேர்ந்தது. இக்காலத்தில் தகரத்தையும், தாமிரத்தையும் சேர்த்து வெண்கலம் என்ற புதிய உலோகம் தயாரிக்கப்பட்டது. இந்த வெண்கலம் உறுதியாகவும், மக்களின் தேவைக்கு ஏற்பவும் இருந்தது. தரத்தில் மேம்பட்ட கருவிகள் விவசாய வளர்ச்சிக்கு உதவின. சிந்து சமவெளி மக்களுக்கு இரும்பின் பயன் பற்றி தெரியாது. சர் ஜான் மார்ஷலின் கருத்துப்படி சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு. 3250 முதல் கி.மு. 2750 வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பரப்பு :

ஹரப்பப் பண்பாடு சிந்து, குஜராத், ஹரியானாவை உள்ளடக்கிய பிரிக்கப்படாத பஞ்சாப், ஜம்மு, உத்திரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதி, ராஜத்தானத்தின் வடபகுதி (காலிபங்கன்) ஆகிய இடங்களில் பரவியிருந்தது. இப்பகுதிகளில் காணப்பட்ட தடயங்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ பகுதிகளில் காணப்பட்ட சான்றுகளை ஒத்திருந்தன.

மற்ற நாகரிகங்களுடன் தொடர்பு : சிந்து சமவெளி மக்கள் சுமேரியா, பாபிலோனியா, எகிப்து போன்ற நாடுகளுடன் கடல் கடந்து வாணிபம் செய்தனர். மேற்கு நாடுகளான சுமேரியா, அக்காட், பாபிலோனியா, எகிப்து, அசிரியா ஆகிய நாடுகளுக்குச் சமமாக சிந்து சமவெளி மக்கள் திகழ்ந்தனர்.

திட்டமிட்ட நகரங்கள் :

மொகஞ்சதாரோவும், ஹரப்பாவும் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரங்கள். மிகப்பெரிய இந்த இரு நகரங்களுக்கும் இடையில் 600 கி.மீ. இடைவெளி இருந்தாலும் தொழில்நுட்பமும் கட்டட அமைப்பும் ஒரே மாதிரியாக இருந்தன. அவைகள் அநேகமாக இரட்டைத் தலைநகரங்களாக (Twin Capitals) இருந்திருக்கக் கூடும். மொகஞ்சதாரோ என்றால் “இறந்தவர்களின் நகரம்’ என்பது பொருள். மொகஞ்சதாரோ நகர அமைப்பை மூன்று வகை யாகப் பிரிக்கலாம். அவை நகரின் உயரமான பகுதியான கோட்டை அல்லது சிட்டாடல் (Citadal), சற்றே தாழ்ந்த பகுதியில் அமைந்த நகரம் (Lower Town), ஊருக்கு வெளியே அமைந்த சிறிய குடிசைகள் ஆகியன ஆகும்.

கோட்டைப்பகுதி அல்லது சிட்டாடல் :

இந்த இடம் நகரின் உயரமான பகுதியில் காணப்பட்டது. அது சாதாரணமாக கோட்டை அல்லது நிர்வாகம் செய்யும் பகுதியாக அழைக்கப்பட்டது. அங்கு மக்கள் வாழ்ந்திருக்கக்கூடும். அவர்களில் ஆட்சியாளர் களும், சமயத்தலைவர்களும், செல்வந்தர்களும் அடங்குவர். சிந்து நதியின் வெள்ளப் பெருக்கிலிருந்து நகரைக் காக்க பிரம்மாண்ட சுவர்கள் கோட்டையைச் சுற்றிக் கட்டப்பட்டன. அக்கோட்டையில் மிகப் பெரிய தானியக் களஞ்சியம், மக்கள் கூடும் நகர மன்றம் (Town Hall), அமைந்திருந்தன.

பெருங்குளம் :

கோட்டையில் காணப்படும் இந்த பெரியகுளம் 11.88 மீட்டர் நீளமும் 7.01 மீட்டர் அகலமும் 2.43 மீட்டர் ஆழமும் உடையதாகக் காணப்பட்டது. இருபக்கங் களிலும் படிக்கட்டுகள் அமைந்த அக்குளம் செங்கற்களும், சுண்ணாம்பும் மணலும் கலந்த கலவையைக் கொண்டு கட்டப்பட்டிருந்தது. அக்குளத்தின் மேல்பகுதியில் சுத்தமான தண்ணிர் உள்ளே வரவும், கீழ்பகுதியில் உபயோகித்த நீர் வெளியே செல்லவும் வழி வகைகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் குளத்து நீர் எப்போதும் சுத்தமாக வைக்கப்பட்டு இருந்தது. குளத்தின் அருகில் காணப்படும் சிறிய அறைகள் உடை மாற்றும் அறைகளாக இருந்திருக்கக்கூடும். அந்த அறைகள் ஒன்றில் பெரிய கிணறு ஒன்று அமைந்திருந்தது.

தானியக் களஞ்சியம் :

மொகஞ்சதாரோவில் காணப்படும் மிகப்பெரிய கட்டட அமைப்பு தானியக் களஞ்சியம் ஆகும். அது 45.71 மீட்டர் நீளமும், 15.23 மீட்டர் அகலமும் கொண்டது. ஹரப்பாவில் 6 தானியக் களஞ்சியங்கள் இருந்தன. தானியக் களஞ்சியங்களின் தென்பகுதியில் வட்ட வடிவில் அமைந்த செங்கற்களாலான மேடைகள் காணப்பட்டன. இவை தானியங்களை பிரித்தெடுக்கும் இடமாகக் கருதப்படுகின்றன.

நகர மன்றம் :

நகரமன்றம் அல்லது பொதுக்கூடம் 61 மீட்டர் நீளமும் 23.4 மீட்டர் அகலமும் கொண்ட மிகப் பிரம்மாண்டமான அமைப்பைக் கொண்டது. நகரமன்ற கட்டடச்சுவரின் அடர்த்தி 1.2 மீட்டரிலிருந்து 1.5 மீட்டர் வரை அமைந்திருந்தது. அது நிர்வாகச் சம்பந்தமான கட்டடமாகவும், மக்கள் கூடும் இடமாகவும், பிரார்த்தனை கூடமாகவும், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கமாகவும் இருந்திருக்கக்கூடும்.

தாழ்ந்த பகுதியில் அமைந்த நகரம் :

அது கோட்டைப் பகுதியை ஒட்டிய தாழ்வானப் பகுதி நகரப்பகுதியாகும். அங்கு சிறு வியாபாரிகளும், கைவினைக் கலைஞர்களும் வசித்தனர். அந்த நகரம் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டு அகல சாலை களைக் கொண்டதாகக் காணப்பட்டது. சாலைகள் கிழக்கு மேற்காகவும், வடக்கு தெற்காகவும் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த சாலைகள் ஒன்றையொன்று செங்கோண நிலைகளில் வெட்டும் வகையில் அமைந்திருந்தன. எனவேதான் எஞ்சிய செங்கற்களின் வரிசையை அங்கு நம்மால் காண முடிகிறது. அங்கு செயல்பட்ட கழிவுநீர் கால்வாய் திட்டம் பாராட்டிற்குரியது. தெரு விளக்குகளுக்கான வசதிகளும் இருந்தன.

வீடுகள் :

வீடுகள் ஒரிரு மாடிகள் கொண்டதாக இருந்தன. எல்லா வீடுகளும் ஒரே மாதிரியான சுட்ட செங்கல் கற்களால் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீடும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறைகள், ஒரு குளியலறை, ஒரு சமையலறை மற்றும் வீட்டுடன் சேர்ந்த முற்றம், வெளியிடம் ஆகியன கொண்டதாக இருந்தன. வீடுகளில் கதவுகளும், சிறிய ஜன்னல்களும் காணப்பட்டன. சமையல் அறைக்கு வெகு அருகில் தானியங்கள் அரைக்கும் கற்களாலான அரவைக் கற்கள் (Grinding stones) காணப்பட்டன.

கழிவுநீர் கால்வாய் திட்டம் :

சமையலறையிலிருந்தும் குளியல் அறையிலிருந்தும் வெளியேறிய கழிவுநீர் வெளியே செல்ல வழி செய்யப்பட்டிருந்தது. தெருக்களின் ஒரங்களில் கழிவுநீர்கால்வாய்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. அவை பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. கழிவுநீர் ஓட்டம் சரிவர அமையுமாறு பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. அப்பாதைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டன.

மக்களின் தொழில் :

சிந்து சமவெளி மக்களில் விவசாயிகள், நெசவாளர்கள், மண்பானைகள் செய்வோர், உலோக வேலையில் வணிகர் என பலதரப்பட்ட மக்கள் காணப்பட்டனர். விவசாயம் மக்களின் முக்கியத் தொழில் ஆகும். வளமான நிலங்களில் விவசாயிகள் இருமுறை விவசாயம் செய்தனர். நெற்பயிர் மற்றும் பருத்தி ஆகியவற்றை முதன்முதலில் விளைவித்தவர்கள் சிந்து சமவெளி மக்களேயாவர். நீர்பாசன முறையின் பல வகைகளும் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. கரும்பு பயிரிடுதல் பற்றி அவர்களுக்கு தெரியாது. அவர்கள் கலப்பையையும், அரிவாளையும் உபயோகித்தனர். மட்பானை செய்தல் பெயர் பெற்ற தொழிலாகத் திகழ்ந்தது. குயவர்கள் பானை செய்யும் சக்கரத்தை உபயோகிப் பதில் மிகத்திறமை பெற்றவர்களாக இருந்தனர்.

கால்நடை வளர்ப்பு : சிந்துசமவெளி மக்கள் காளை, எருது, வெள்ளாடு, செம்மறியாடு, பன்றி, கழுதை, ஒட்டகம் ஆகிய வற்றை பழக்கி வைத்திருந்தனர்.

நூல் நூற்றலும் நெசவுத் தொழிலும் :

சிந்து சமவெளி மக்கள் நூல்நூற்பதிலும் ஆடைகள் நெய்வதிலும் திறமை பெற்றிருந்தனர். வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளின் உரோமத்திலிருந்து கம்பள ஆடைகளைத் தயார் செய்தனர்.

பொம்மை செய்தல் மற்றும் சிற்ப வேலை : டெர கோட்டா எனப்படும் சுடு மட்பாண்டத் தொழில் மக்களின் முக்கியத் தொழிலாகத் திகழ்ந்தது. பொம்மைகள், மிருகங்களின் சிறு உருவச் சிலைகள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் எருதுகளால் இழுக்கப்படும் ஒட்டுனருடன் கூடிய பொம்மை வண்டி குறிப்பிடத்தக்கது. மக்கள் வணங்கிய திமில்காளை, புறா போன்றவைகளின் உருவம் பொறித்த சில சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பெண் கடவுளர்களின் உருவங்கள் சமய நோக்கிற்கு பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

சின்னங்கள் : இங்கு 2000க்கும் மேற்பட்ட சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவைகளில் மிருகங்களின் உருவங்களும் சித்திர எழுத்துக்களும் பொறிக்கப்பட்டு உள்ளன. சுடுமண் சுதையினால் வேகவைக்கப்பட்ட இந்தச் சின்னங்கள் வியாபாரத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும். மேலும் சிந்துசமவெளி மக்களின் வாழ்க்கை முறை, சமயம், தொழில், பழக்கவழக்கம் மற்றும் வாணிபம் பற்றிய விவரங்களை அறிய இவை உதவுகின்றன.

கட்டடத் தொழில் :

ஏராளமான மக்கள் கட்டடத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். செங்கற்கள் உற்பத்தியும் முக்கியதொரு தொழிலாக இருந்தது. செங்கற்கள் அனைத்துமே ஏறக்குறைய ஒரே அளவில் இருந்தன.

கலைகள் மற்றும் கைவினை

பல்வேறு கைத்தொழில்களில் தேர்ச்சிபெற்ற கைவினைஞர்கள் இக்காலத்தில் வாழ்ந்தனர். பொற்கொல்லர்கள், செங்கல் செய்வோர், கல் அறுப்போர், நெசவுத் தொழிலாளர், படகு கட்டுவோர், சுடுமண் கலைஞர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். வெண்கலம் மற்றும் செம்பாலான பாத்திரங்கள் ஹரப்பா பண்பாட்டு உலோகத் தொழிலுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தங்கம் மற்றும் வெள்ளியாலான ஆபரணங்கள் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மட்பாண்டங்கள் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மட்பாண்டங்கள் பெரும்பாலும் சாதாரணமாக இருந்தன. ஒருசில இடங்களில் சிகப்பு மற்றும் கருப்பு வண்ணம்பூசிய மட்பாண்டங்களும் கிடைத்துள்ளன. அரிய வகை கற்களாலான மணிகளும் உற்பத்தி செய்யப்பட்டன.  வெண்கலத்திலான நாட்டிய மங்கையின் சிலை   மற்றும் தாடியுடன் கூடிய மனிதன் சிலை ஆகியவை மொகஞ்சதரோவில் காணப்பட்டது.

வாணிபம் :

சிந்து சமவெளி மக்கள் உள்நாட்டு, வெளி நாட்டு வாணிகங்களிலும் ஈடுபட்டிருந்தனர். மெசபட்டோமியோவின் சின்னங்கள் பல சிந்து சமவெளி நகரங்களிலும், சிந்து சமவெளிச் சின்னங்கள் பல மெசபட்டோமியா பகுதியிலும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. குஜராத்தில் உள்ள லோத்தல் என்ற இடத்தில் துறைமுகம் ஒன்று இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி நடந்திருக்கக்கூடும். வியாபாரிகள் செல்வச் செழிப்பான வாழ்க் கையை நடத்தினர். பொருட்களை அளக்க அளவுகோலைப் பயன்படுத்தினர். மேலும் எடைக் கற்களும், அளவுகளும் உபயோகத்தில் இருந்தன. அவர்கள் 16ன் மடங்குகளை அளவுகளாக பயன்படுத்தினர்.

அரசியல் அமைப்பு:

செல்வமுடைய வணிகர்களும், சமயத் தலைவர்களும் நகர நிர்வாகத்தை மேற்கொண்டனர். அங்கு உள்ளாட்சி அமைப்பும் காணப்பட்டது. அவை நகரத்தின் சுகாதார வசதிகளில் கவனம் செலுத்தின. அவை வணிகத்தினையும் ஒழுங்குபடுத்தின. நகர நிர்வாகம் வரியை தானியமாக வசூலித்தது. நகராட்சி நகரின் சட்டம், ஒழுங்கினைப் பராமரித்தது.

சமூக வாழ்க்கை :

சமுதாயம் மூன்று வித சமூக குழுக்களைக் கொண்டிருந்தது. முதல் குழு அல்லது ஆளும் குழுவைச் சேர்ந்தவர்கள் கோட்டைப் பகுதியில் வசித்தனர். செல்வம் மிக்க வணிகர்களும் சமயத் தலைவர்களும் அக் குழுவில் இடம் பெற்றனர். இரண்டாவது பிரிவில் சிறு வியாபாரிகள், கைவினைஞர்கள், கைத்தொழிலாளர்கள் இருந்தனர். மூன்றாவது வகையைச் சேர்ந்த தொழிலாளிகள் சிறு குடிசைகளில் வசித்தனர். பொதுவாகக் கூறினால் சமூக அமைப்பானது வரையறுக்கப்பட்ட கட்டுக்கோப்புடன் காணப்பட்டது.

மக்களின் வாழ்க்கை :

சிந்து சமவெளி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஒய்வுநேரம் அவர்களுக்கு நிரம்பக் கிடைத்தது. மக்களின் உணவு, பழக்கவழக்கங்கள், உடை, பொழுது போக்கு ஆகியவற்றில் பெருத்த முன்னேற்றம் காணப்பட்டது.

உணவு :

கோதுமையும், பார்லியும் முக்கிய உணவாகக் கருதப்பட்டன. அதைத் தவிர பால், மாமிசம், மீன், பழங்கள், பேரீச்சை ஆகியவற்றையும் அவர்கள் உபயோகித்தனர்.

ஆடைகளும் நகைகளும்

 இடுப்பைச் சுற்றி ஒட்டியாணம் (அரைக்கச்சை) போன்ற அமைப்புடன் கூடிய குட்டைப் பாவாடைகளை பெண்களும், தைக்கப்படாத, நீண்ட, தளர்ச்சியான ஆடைகளை ஆண்களும் அணிந்தனர். பெண்கள் கழுத்து ஆரம், வளையல், கடகம் எனப்படும் கைக்காப்பு (bracelets), காதணி, இடுப்புக் கச்சை போன்றவற்றை அணிந்து கொண்டனர். இவைகள் தங்கம், வெள்ளி, எலும்பு, கற்கள், கிளிஞ்சல்கள் மற்றும் தந்தத்தினால் செய்யப்பட்டிருந்தன.

ஆண்களும் கையைச் சுற்றி அணியும் காப்பு வளையங்களை (Armlets) அணிந்தனர். செல்வந்தர்கள் தங்கம், வெள்ளி, தந்த ஆபரணங் களையும் ஏழ்மை நிலையில் இருந்தவர்கள் கிளிஞ்சல், தாமிரம், வெள்ளி ஆகியவற்றால் செய்த ஆபரணங்களையும் உப யோகித்தனர். பெண்கள் சீப்பினால் தங்கள் கூந்தலை சீவும் பழக்கம் இருந்தது.

சிந்து எழுத்து முறை :

இங்கு கிடைத்துள்ள சின்னங்களின் மீது எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை ஒரு சில வார்த்தைகளே. படங்களைக் கொண்ட எழுத்து முறை வளர்ச்சி யுற்றிருந்தது. மொத்தம் சுமார் 250 முதல் 400 வரை இத்தகைய பட எழுத்துக்கள் கொண்ட சின்னங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த எழுத்துக்களின் பொருள் இன்னமும் அறியப்பட வில்லை என்பது வியப்புக்குரிய தொன்றாகும்

சமய வாழ்க்கை : அவர்களது சமய வழிபாட்டின் சின்னமாக அரசமரம் விளங்கியது. அம்மக்கள் பசுபதி என்ற சிவனையும் பெண் கடவுளையும் வணங்கினர். பெண் கடவுள் உயிரோட்டத்தைப் பிரதி பலித்தது. அங்கு காணப்படும் புதை பொருட்களில் கோயில் போன்ற அமைப்பு கொண்ட கட்டடம் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. சிந்து சமவெளி பசுபதி சின்னம் மக்கள் மறுபிறவியில் நம்பிக்கைக் கொண்டிருந்தனர் என்பது தெரிய வருகின்றது. ஏனெனில் அவர்கள் இறந்தவர்களை புதைத்த போது அச்சடலங்களுடன் உணவு, அணிகலன்களையும் சேர்த்து புதைத்தனர். மேலும் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் பயன் படுத்திய பொருட்களையும் மிகப்பெரிய தாழிகளிலிட்டுப் புதைத்தனர்.

ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சி ;

ஹரப்பா நாகரிகம் ஏறக்குறைய 500 ஆண்டுகள் சிறப்புற்றிருந்தது. அந்த காலத்தில் மக்கள் ஒரே விதமான வீடுகளில் வசித்தனர். உணவு மற்றும் அவர்கள் உபயோகித்த கருவிகளிலும் மாற்றம் ஏதும் இல்லை. மொகஞ்சதாரோ நகரம் பலமுறை அழிவுக்குள்ளாகி மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது. அந்த அழிவிற்குச் சரியான காரணங்கள் இன்னமும் நமக்குக் கிடைக்கவில்லை. இயற்கைச் சீற்றங்களான பூகம்பம், வெள்ளம் போன்றவற்றாலோ அல்லது சிந்துநதியின் திசை மாற்றத்தாலோ அந்த அழிவுகள் ஏற்பட்டிருக்கலாம். அந்நகரங்கள் ஆரியரின் படையெடுப்பினாலும் அழிந்தன. காடுகள் அழிக்கப்பட்டதும் அந்த நாகரிகம் வீழ்ச்சியுற மற்றொரு காரணம் எனலாம்.

 

Download Prehistoric – Indus Valley Civilization

Types of Rocks / பாறைகளின் வகைகள்

பாறைகளின் வகைகள் / Types of Rocks

பாறைகள் அவை உருவாவதின் அடிப்படையை வைத்து மூன்று பிரிகளாக வகைப்படுத்தப்படுகின்றன

 1. தீப்பாறைகள் Igneous Rocks
 2. படிவுப்பாறைகள்: Sedimentary Rocks
 3. உருமாற்றப் பாறைகள்: Sedimentary Rocks

தீப்பாறைகள் Igneous Rocks:

இக்னியஸ்’ என்ற சொல், ‘தீ’ என பொருள்படும் இலத்தீன் மொழியிலிருந்து வந்ததாகும். ஆனால் உண்மையில், இக்னியஸ் பாறை என்பது எரிந்துக் கொண்டு இருக்கும் நெருப்பு போன்றது என பொருள் கொள்ளக் கூடாது. மிக அதிக வெப்பத்தைக் உடைய திரவ நிலையிலுள்ள பொருள்களால் ஆனது என பொருள்படும். பசால்ட் பாறையும் கிரானைட் பாறையும் தீப்பாறையின் இரண்டு வகைகளாகும்.

பசால்ட் பாறை உந்துப்பாறைப் பிரிவையும். கிரானைட் பாறை தலையீடு பாறைப் பிரிவையும் சார்ந்தவை. பசால்ட் தீப்பாறை எரிமலை தீவுகளில் உருவாகின்றன. பெருங்கடல் ஒட்டின் பெரும்பகுதி குறிப்பாக, மத்திய-அட்லாண்டிக் தொடர் பசால்ட் வகைப் பாறையினால் ஆனது. புவி ஒட்டில் காணப்படும் பாறைகளில் 95 சதவீதம், தீப்பாறை வகையைச் சார்ந்தவைகளாக இருக்கின்றன. தீப்பாறைகளை இரண்டாகப் பிரிக்கலாம். அவையாவன:

 1. உந்துப்பாறைகள் மற்றும் 2. தலையீடு பாறைகள்.
 2. உந்துப்பாறைகள் : ஆழமான விரிசல்களின் வழியாக புவியின் மேற்பரப்பை வந்தடைகிற மாக்மாவினாலும், எரிமலை முகட்டுவாய் அருகிலும் உந்துப்பாறைகள் உருவாகின்றன. புவியின் மேற்பரப்பில் வழிந்து ஒடுகிற மாக்மாவை “லாவா” என அழைக்கிறோம். புவி பரப்பில் வழிந்தோடுகிற லாவா, சமமான பரந்த விரிப்புகளை போல உருவாகிறது. அல்லது முகட்டு வாயிலிருந்து அடிக்கடி வெடித்து வெளியேறுகிற லாவா எரிமலையாக உருவாகிறது. பெரும்பாலான லாவா வகைகள் அதிவேகமாக குளிர்ந்து விடுகின்றன. இதன் விளைவாக உருவாகின்ற பாறைகள் மிக நுண்ணிய படிகங்களைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் பசால்ட் பாறைகள் உந்து வகை தீப்பாறைகளாகும், ஹவாய் மற்றும் ஐஸ்லாந்து போன்ற பல எரிமலை தீவுகள் பசால்ட் பாறைகளை கொண்டு இருக்கின்றன.

படிவுப்பாறைகள்: Sedimentary Rocks

அக்கினிப் பாறைகள் இயற்கைச் சக்திகளால் அழிக்கப்படுகின்றன. அரிக்கப்பட்ட தூள்களைக் காற்று, மழை, ஆறு, பனிக்கட்டியாறு, கடல் அலைகள் ஆகியவை சுமந்து சென்று வெவ்வேறு இடங்களில் படிவிக்கின்றன. இப்படிவுகள் நாளடைவில் உறுதியாகிப் படிவுப் பாறைகளாக உருவாகின்றன.

முதலில் படிவுகள் மிருதுவாகவும். தளர்வாகவும் இருக்கின்றன. இப்படிவுகள் ஒன்றன்மேல்ஒன்றாக அடுக்குகளை போல படிய வைக்கப்படுகின்றன.மேலடுக்கின் சுமையினால் கீழடுக்கிலுள்ள பொருள்கள் அழுத்தப்படும் அதேநேரத்தில், பாறைகளில் உள்ள தாதுக்களும் நீரில் கரைந்து, அப்பாறையிலுள்ள துகள்களை சுற்றித் தங்குகின்றன. தாதுக்களின் கரைசல் படிவப்பொருள்களை ஒன்றோடுஒன்றாக உறுதியாகப் பிணைக்கிறது. இதனால் மிருதுவான படிவுகள் திடமானதாக மாறுகிறது. இவ்வாறு மாறிய படிவுகளே கடைசியாகப் படிவுப்பாறையாக உருபெறுகிறது.

ரசாயனச் சக்திகளோ பிற சக்திகளோ அழிக்க முடியாத சில உலோகங்கள் உண்டு. அவற்றைச் சேர்ந்ததுதான் படிகக்கல் இது அதிகமாகக் கலந்துள்ள படிவுகளிலிருந்துதான் மணற்கற்கள் உண்டாகின்றன. சில படிவுகளில் களிமண் அதிகமாயிருக்கும். அவற்றிலிருந்து களிப்பாறைகள் உண்டாகின்றன. சில களிமண் படிவுகளில் இரும்பும் கலந்திருக்கும். இவற்றிலிருந்துதான் படிவு இரும்புத் தாது மூலங்கள் உண்டாகின்றன. சில சமயங்களில் இதைப் போலவே மாங்கனிஸும் உற்பத்தியாகும். சுண்ணும்பு அதிகமுள்ள படிவுகளிலிருந்து சுண்ணும்புப்பாறைகளும் டாலமைட்டும் உற்பத்தியாகின்றன. கடல் கீரில் சோடியம் குளோரைடு (உப்பு) உள்ளது. சில பகுதிகள் வறண்ட் வெப்ப நிலை காரணத்தால் கடல் நீர் வற்றி உப்பளங்களாக மாறுகின்றன. இவ்வாறு மாறும்பொழுது சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை அடியில் படிந்து விடுகின்றன. உலகின் சில இடங்களில் ஒருவிதக் கருப்புக் களிப் பாறைகள் உள்ளன. இவற்றில் , நிலக்கரி, செம்பு, ஆர்சனிக்கு, வெள்ளி, காட்மியம், காரீயம், வனேடியம், மாலிப்டினம், அன்டி மனி, பிஸ்மத்து, தங்கம், பிளாட்டினம், யுரேனியம் ஆகிய தனிமங்கள் காணப்படுகின்றன.

பாறைச் சுழற்சி ROCK CYCLE

உருமாற்றப் பாறைகள்: Sedimentary Rocks

உருமாறியப்பாறைகள் என அழைக்கப்படும் பாறைகள், மூன்றாவது வகைப் பாறையாகும். மெடமார்ஃபிக் என்ற இச்சொல், வடிவமாற்றம் (Change of form) என பொருள்படும் கிரேக்கச் சொலி லாகும். தீப்பாறைகளிலிருந்தும். படிவுப்பாறைகளிலிருந்தும் உருமாறிய பாறைகள் உருவாகின்றன

வண்டல் மண் அடுக்கடுக்காய்ப் படிகின்றது. அதனுல் பலகோடி ஆண்டுகள் கழித்து இப்படிவுகள் அதிக கனமுள்ளவையாகி விடுகின்றன. படிவுகளின் கீழ்அடுக்குகளின் மேல், அதிக அழுத்தம் இருக்கும். இவ்வடுக்குகள் ஒன்றேடொன்று உராய்வதால், அவற்றுள் அதிக வெப்பம் உண்டாகிறது. இந்த வெப்பமும் அழுத்தமும் தனித்தனியாகவோ சேர்ந்தோ இந்தப்படிவுகளின் உருவையே மாற்றிவிடுகின்றன. இதன் விளைவாக உண்டாகும் பாறைகளுக்கு உருமாற்றப் பாறைகள் என்று பெயர். படிகக்கல் படிவுப் பாறைகள், குவார்ட்சைட்டு என்ற உருமாற்றப் பாறைகளாகவும், சுண்ணாம்புக்கல் பாறைகள் சலவைக்கல்லாக அல்லது படிகச் சுண்ணாம்புக் கல்லாகவும் மாறிவிடுகின்றன. அதைப் போலவே களிப்பாறைகள் பில்லேட்டு மற்றும் கற்பலகைகள் என்னும் பாறைகளாக மாறிவிடுகின்றன.

மேற்கூறிய பாறைகள் யாவும் உலோகங்களால் ஆனவை. உதாரணமாக, அக்கினிப் பாறைகள் பொதுவாக சிலிக்கேட்டுகளால் ஆனவை. அவற்றில் சிறப்பாகப் பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னிசியம், இரும்பு, அலுமினியம் ஆகிய தனிமங்கள் இருக்கும். பிற தனிமங்களும் சிறிளவு கலந்தோ கலவாமலோ இருக்கலாம்.

Download the Types of Rocks PDF

 

TNPSC GROUP IIA SYLLABUS AND BOOK IN TAMIL – DETAILED NOTIFICATION IN TAMIL 2017 PDF

TNPSC குருப் 2 நேர்கானல் அல்லாத பணியிடங்கள் / அறிவிக்கை / பாடத்திட்டம் /பொதுவான  தகவல்கள்  தமிழில்

குருப் 2 நேர்கானல் அல்லாத பணியிடங்களுக்கான தேர்வில் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1953 உதவியாளர் பணியிடங்களை உள்ளடக்கிய தேர்வு. அதாவது குருப்4 பதவிக்கு அடுத்த நிலையில் உள்ள பணியிடமாகும். இத்தேர்வு ஒரே நிலையைக் கொண்டதாகும் , அதாவது  நடத்த்ப் படும் தேர்வில் வெற்றிபெற்றால் நேரடியாக பணி நியமனம் தான் , நேர்முகம் ( interview ) போன்றவை கிடையாது. தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவை அடிப்படையாகக் கொண்டு பணியிடங்கள் நிரப்பப் படும்.

விண்ணப்பத் தொடக்க நாள் : 27/04/2017

விண்ணப்பிக்க கடைசி நாள் : 26/05/2017        ( இனைய வழி மட்டுமே)

தேர்வு நாள் : ஆகஸ்டு – 6

 

TNPSC NOTIFICATION

DOWNLOAD SYLLABUS AND BOOK LIST IN TAMIL PDF

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும்.

குறிப்பு :

 1. தேர்வர்கள் 10 ,ஆம் வகுப்பு + 12 ஆம் வகுப்பு + பட்டப்படிப்பு வரிசையாக படித்திருக்க வேண்டும்,
 2. 10 ஆம் வகுப்பு முடித்து பின் 12 ஆம் வகுப்பு படிக்காமல் டிப்ளமோ படித்து பின் பட்டப்படிப்பு பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க இயலும் ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அதற்கு தகுந்த அரசானையை கான்பிக்க வேண்டும்
 3. தொலைதூரக்கல்வி படித்தவர்களும் தகுதியானவர்களே ஆனால் 10+12+3 இந்த அடிப்படையில் படித்திருக்க வேண்டும்

தேர்வு முறை :  ஒரே தேர்வு ( கொள்குறி வகை) 200 வினாக்களபாடத்திட்டம் :

பொது தமிழ் (அ) பொது ஆங்கிலம்100 வினாக்கள்
பொது அறிவு 75 வினாக்கள்
கணிதம் மற்றும் நுண்ணறிவு25 வினாக்கள்

 ( விளக்கமான பாடத்திட்டம் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது)

வயது பற்றிய தகவல்கள்

இடஒதுக்கீட்டுப் பிரிவுஅதிகபட்ச வயது வரம்பு
Open 30
BC வயது வரம்பு  இல்லை
MBC/ DNCவயது வரம்பு  இல்லை
SC/SC(A) / ST வயது வரம்பு  இல்லை

 

கட்டணம் விபரங்கள் : 1/03/2017 முதல்

இடஒதுக்கீட்டு பிரிவுகட்டணச்சலுகை குறிப்பு
BC /MBC மூன்று முறை இலவசமாக விண்ணப்பிக்கலாம்100 ரூபாய்
SC/SC(A) / STகட்டணம் செலுத்த தேவையில்லைபொருந்தாது
உடல் ஊனமுற்றோர் கட்டணம் செலுத்த தேவையில்லைஊனத்தின் அளவு 40 % மேல் இருக்க வேண்டும்
முன்னாள் இராணுவத்தினர் இரண்டு முறை மட்டும்ஏற்கனவே 2 முறை பயன்படுத்தி இருந்தால் பொருந்தாது.
ஆதரவற்ற விதவை கட்டணம் செலுத்த தேவையில்லை ஆதரவற்ற விதவைக்கான சான்று முறையான அலுவலரிடம் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு : இதற்குமுன் இலவசமாக விண்ணப்பித்து தேர்வு எழுதாமல் இருந்தாலும் கட்டணச்சலுகையை பயன்படுத்தியதாகவே கருதப்படும் எனவே கவனமாக விண்ணப்பிக்கவும்.

பொதுவான அறிவுரைகள்

 1. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது , சாதிச்சான்றிதழ், பிறந்த தேதி, 10 ஆம் வகுப்பு சான்றிதழ் மற்றும் பட்டப்படிப்பிற்கான சான்றிதழ் ஆகியவற்றின் எண்/ மற்றும் வழங்கப்பட்ட தேதி ஆகியவற்றை  கவனமாக விண்ணப்பம் செய்யவும்.
 2. கட்டணச் சலுகையை பொறுத்தவரை நீங்கள் எத்தனை முறை பயன்படுத்தி இருக்கின்றீர்கள் என்பது சரியாக தெரியாத பட்சத்தில் கட்டணம் செலுத்திய விண்ணப்பம் செய்யவும். ( கட்டணப் பிரச்சனையில் தேர்வில் வெற்றி பெற்றிருந்தும்  தேர்வாணையம்  அவர்கள் கோரிக்கயை ஏற்கவில்லை)
 3. 10 ஆம் வகுப்பு தேர்வை தனியராக எழுதியிருந்தால் இறுதியாக பெற்ற மதிப்பெண் சான்றிதழில் உள்ள எண்ணை பதிவு செய்யவும்
 4. விண்ணப்பத்தை விண்ணப்பித்த பின் மாற்றம் செய்வதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரையிலும் அனுமதி உண்டு  ஆனால் ( பிறந்த தேதி, சாதிச்சான்றிதழ் , போன்றவற்றை மாற்றுவதற்கு அனுமதி இல்லை,தேர்வு மையம் மற்றும் பாடம் மாற்றிக்கொள்ள இயலும், எனவே கவனமாக விண்ணப்பிக்கவும்)
 5. ஆதரவற்ற விதவைகள் வருவாய்க் கோட்டாட்சியரிமிடருந்து ஆதரவற்ற விதவைக்கான சான்று மாத வருமானம் 4000 ரூபாய்க்கு மிகாமல் வாங்கியிருந்தால் மட்டுமே செல்லுபடி ஆகும்.
 6. கம்ப்யூட்டர் மையங்களில் விண்ணப்பிப்பவர்கள் கவனமாக விண்ணப்பிக்கவும் ஏனெனில் அவர்கள் உங்களுக்கு தெரியாமலேயே கட்டணச் சலுகையை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
 7. தடையின்மைச் சான்றிதழ்  மாதிரி இனைக்கப்பட்டுள்ளது
 8. தமிழ் வழியில் படித்தர் அறிவிக்கை வருவதற்கு முன்பாகவே அதற்கான சான்றிதழ் வாங்கி வைத்துக்கொள்ளவும். PSTM

வெற்றிவாகை சூட வாழ்த்துக்களுடன்

ஐயாச்சாமி முருகன்

9952521552,

[email protected]

 

தடையின்மைச் சான்றிதழ் மாதிரி

துறைத்தலைவர் அல்லது அலுவலகத் தலைவர் அல்லது பணியமர்த்தும் அலுவலர் அளிக்கும் தடையின்மைச் சான்றிதழ்

 1. விண்ணப்பதாரர் பெயர்
 2. வகிக்கும் பதவியின் பெயர்
 3. விண்ணப்பதாரர் அவசர விதிகளின் கீழ் நியமிக்கப்பட்ட தற்காலிகமான பணியாளரா? அல்லது விண்ணப்பதாரர் மாநில அல்லது சார்நிலைப் பணிகளில் தகுதிகாண் பருவத்தினரா?அல்லது தகுதிகாண்பருவம் முடிந்து ஒப்பளிக்கப்பட்டவரா? அல்லது நிலை உறுப்பினரா?
 4. பணியாற்றிய காலம் ———— நாள் முதல்————— நாள் வரை

மேற்குறிப்பு எண்.———————— நாள்————

 1. ———————— என்ற பதவிக்கான தேர்வுக்கான இவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதில் எனக்கு மறுப்பில்லை.
 2. திரு/திருமதி/செல்வி——————————–க்கு கீழ்க்கண்ட தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன தண்டனை ஏதும் விதிக்கப்பட்டிருக்கவில்லை என்று சான்றளிக்கப்படுகிறது.
 3. அவர் மீது குற்றச்சாட்டுகள் குற்ற வழக்குகள் ஏதும் நிலுவையிலில்லை நிலுவையிலுள்ளது நிலுவையிலுள்ள இனங்களில் ஆவணங்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்

 

இடம்                                           அலுவலக முத்திரை                       கையொப்பம்

 

நாள்                                                                                                         பதவியின் பெயர்

பொதுவான  அறிவுரைகள்.

 1. முதலில் பள்ளிப்பாடப்புத்தகங்களை படிக்கவும் திருப்புதலுக்காக மட்டுமே அல்லது ஏதேனும் கூடுதல் தகவலுக்காக வேறு நிறுவனத்தின் பாடக்குறிப்புகளை படிக்கவும்
 2. ஒரு நாளைக்கு 5- 7 மணி நேரம் படித்தால் போது உங்களால் வெற்றிபெற முடியும். சிலர் கூறுவது போல் 10 மணி நேரம் படிப்பதென்பது சிறந்ததாக இருக்காது. நாம் எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதை விட எப்படி படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். மேலும் அனைத்து நாட்களிலும் உங்களால் ஒரே போல் படிக்க இயலாது சில நாட்கள் அதிக நேரம் படிக்கலாம், சில நாட்கள் குறைவான நேரம் படிக்கலாம் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. அனைவரும் இது மாதிரி பிரச்சனையை எதிர்கொள்வர்.
 3. பாடத்திட்டத்தை மையமாக வைத்தே படியுங்கள் அது உங்கள் தயாரிப்பினை நெறிப்படுத்தும். முடிந்தால் நீங்கள் படிக்கும் இடத்தில் பாடத்திட்டத்தினை நீங்கள் பார்க்கும் படி வைத்தால் சிறப்பாக இருக்கும்.
 4. சிலர் பல்வேறு பயிற்சி மையங்களின் பாடக்குறிப்புகள் ( மெட்டீரியல்ஸ்) சேகரிப்பர் ஆனால் அவற்றை படிக்க மாட்டார்கள். எனவே நீங்கள் ஏதாவது ஒரு பயிற்சி மையத்தின் பாடக்குறிப்பினை பயன்படுத்துங்கள்.
 5. பொதுவாக மொழிப்பாடம் தமிழ்/ஆங்கிலம்/ மற்றும் அறிவுக்கூர்மை மற்றும் நடப்பு நிகழ்வுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் உங்களால் சரியாக 125 கேள்விகளுக்கு இந்த மூன்று பகுதிகளில் இருந்து விடையளிக்க இயலும். இதை கவனத்தில் கொள்ளுங்கள்.
 6. கூடுமானவரை பழைய வினாத்தாள்களை அடிப்படையாக வைத்து உங்கள் தயாரிப்பினை மேம்படுத்துங்கள்.
 7. பாடப்புத்தகம் தவிர்த்து,மனோரமா பொது அறிவுப் புத்தகம், அல்லது விகடன் பொது அறிவுப் புத்தகம் , ஆங்கிலத்தில் அரிஹந்த் அல்லது லூசெண்ட் பொது அறிவு புத்தகத்தில் ஏதாவது ஒன்றை நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டும். நீங்கள் இப்புத்தகத்தினை படித்தால் அதிகபட்சம் சராசரியை விட கூடுதலாக உங்களால் 15 வினாக்களுக்கு சரியான விடையளிக்க வேண்டும். டாக்டர் சங்கர சரவணின் பொது அறிவுக் களஞ்சியம் என்ற புத்தகத்தையும் வாசிக்க வேண்டும்
 8. நாம் எவ்வளவுதான் படித்தாலும் தேர்வு நாளன்று நாம் 3 மணி நேரத்தில் எவ்வாறு விடையளிக்கப்போகிறோம் என்பதில் தான் இருக்கிறது அங்கு நாம் பண்ணுகின்ற தவறு என்னவென்றால் கேள்வியை தவறாக புரிந்து கொண்டு விடையளிப்பது இதை தவிர்ப்பதற்காக ஏதேனும் ஒரு வினாத்தாள் ( சக்தி அல்லது சுரா )தொகுப்பினை வைத்து ஒவ்வொரு வாரமும் பயிற்சி செய்யுங்கள் .
 9. உங்களுக்குதேவையான ,பாடக்குறிப்புகள் (www.iya.competitiveexam.in) இனையதளத்தில் பதிவேற்றப்படும்.

பாடத்திட்டம்

பொதுஅறிவியல்

இயற்பியல்

பேரண்டத்தின் அமைப்பு-பொது அறிவியல் விதிகள்-புதிய உருவாக்கங்களும் ,கண்டுபிடிப்பும்-தேசிய அறிவியல் ஆராய்ச்சி கூடங்கள் பருப்பொருள்களின் பண்புகளும்,இயக்கங்களும்,இயற்பியல்அளவுகள்,அளவீடுகள்மற்றும்அலகுகள்-விசை,இயக்கம்மற்றும் ஆற்றல் காந்தவியல், மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல்-வெப்பம்,ஒளிமற்றும்ஒலி-அனு மற்றும்அனுக்கரு இயற்பியல்.

படிக்க வேண்டிய புத்தகங்கள்

 • 6 முதல் 10 வரை உள்ள அறிவியல் புத்தகம்
 • மனோராமா பொது அறிவுப்புத்தகத்தில் உள்ள அறிவியல் பகுதி
 • 12 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் 6மற்றும் 8 வது பாடத்தில் அடிப்படையான பகுதிகளை மட்டும் படிக்கவும்.

வேதியல்

தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்-அமிலங்கள் ,காரங்கள் மற்றும் உப்புகள்-செயற்கை-உரங்கள் உயிர்கொல்லிகள்,நுண்ணுயிரிக் கொல்லிகள்- ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்கவினைகள்-தாதுக்கள் மற்றும் உலோகங்களின் வேதியல் -கார்பன், நைட்ரஜன் மற்றும் அதன் கூட்டுப்பொருட்கள்.

படிக்கவேண்டியபுத்தகங்கள்

 • 6 முதல் 10 வரை உள்ள அறிவியல்புத்தகம்
 • 11 வது வேதியியல் 8 வது பாடம் (நைட்ரஜன்தொடர்பாக), 17 , 18 பாடங்கள்.
 • 12 வதுவேதியியல்21 ,22 பாடங்கள்.

உயிரியல்

வாழ்க்கை அறிவியலின் முக்கியகருத்துக்கள்-செல்லின் அடிப்படை பற்றிய அறிவியல்-உயிரினங்களின் பல்வேறு வகைகள்-உணவூட்டம் மற்றும் திடஉணவு.

படிக்கவேண்டியபுத்தகங்கள்

 • 6 முதல் 10 வரைஉள்ளஅறிவியல்புத்தகம்
 • 11 வதுதாவரவியல்பாடஎண் 2,4,7பாடங்கள்மட்டும்.
 • 12 வதுதாவரவியல்பாடஎண் 3,4, 6 மட்டும்.

விலங்கியல்

இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி– நாளாமில்லாசுரப்பிமண்டலம் அமைப்பு-இனப்பெருக்க அமைப்புமுறை-மரபியல் மற்றும் பாரம்பரிய அறிவியல்-சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்- உயிரிய நலம் மற்றும் சுகாதாரம்-பல்லுயிரினவேறுபாடும் அதன் பாதுகாப்பும்-மனிதநோய்கள் முன்தடுப்பு மற்றும் பராமரித்தல்-பரவும்தன்மையுள்ள நோய்கள்-பரவாத்தன்மையுள்ள நோய்கள்.

படிக்கவேண்டியபுத்தகங்கள்

 • 6 முதல் 10 வரை உள்ள அறிவியல் புத்தகம்
 • 12 வது விலங்கியல் 1,4, 5 மற்றும் 6 வதுபாடம்.
 • 11 வது விலங்கியல் 3 வதுபாடம் .

இந்தியப்புவியியல்

பூமியும் பேரண்டம்-சூரிய குடும்பம்-காற்று மண்டலம்- நிலக்கோளம்- நீர்க்கோளம்-பருவக்காற்று,மழைப்பொழிவு,காலநிலைமற்றும் தட்பவெப்பநிலை- நீர்வள ஆதாரங்கள்- இந்திய ஆறுகள்-மண் வகைகள், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள்-காடுகள் மற்றும் வன உயிரிகள்-விவசாய முறைகள்-போக்குவரத்து மற்றும் தரைவழிப் போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம்-சமூகப்புவியியல்-மக்கட்தொகை அடர்த்தி மற்றும் பரவல்-இயற்கைப் பேரழிவுகள்-பேரிடர்நிர்வாகம்.

படிக்கவேண்டியபுத்தகங்கள்

 • 6 முதல் 10 வரை புவியியல் பாடப்புத்தகம்
 • தமிழக புவியியல் பற்றிய பகுதிகளுக்கு தமிழ்நாடு பற்றியபகுதியை மனோரமா பொது அறிவு புத்தகத்தில்பார்க்கவும்.
 • மனோரமா பொது அறிவுப்புத்தகத்தில் இந்தியா பகுதியில் மக்கள் தொகை,, போக்குவரத்து போன்ற பகுதிகளை பார்க்கவும்.

நடப்புநிகழ்வுகள்

சமீபத்திய நடப்புகள்-தேசம் –தேசிய சின்ன்ங்கள் – மாநிலங்களின் குறிப்புகள்-தேசியப்பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் – பன்னாட்டு நிறுவனங்கள்-முக்கிய மாநாடுகள், நிகழ்வுகள்-பிரபல நபர்கள் – சமீபத்திய பிரபல இடங்கள்-விளையாட்டு ,கோப்பைகள்,போட்டிகள் தொடர்பானவை, முக்கிய புத்தகங்கள் மற்றும் எழுத்தாளார்கள்-இந்திய மற்றும் சர்வேதசே அளவில்முக்கிய விருதுகள்-கலாச்சாரநிகழ்வுகள்-வரலாற்று நிகழ்வுகள்-இந்தியா மற்றும் அண்டை நாடுகள் தொடர்பானவை-சமீபத்திய கலைச்சொற்கள்-முக்கிய நியமனங்கள். இந்திய வெளினாட்டுக் கொள்கை-முக்கிய நீதிமன்றத் தீர்ப்புகள்-பொதுத்தேர்தல் மற்றும் நடத்துவதில் உள்ள பிரச்சனைகள்- இந்திய அரசியல் கட்சிகள் அமைப்பு மற்றும் செயல்பாடு-பொதுவிழிப்புணர்வு மற்றும் பொதுநிர்வாகம்-தன்னார்வ தொண்டு நிறுவங்களின் பங்களிப்பு மற்றும் அரசு நிறுவங்கள்-அரசின் சமூக நலத் திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள். புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் சார்ந்த அரசு மற்றும் பன்னாட்டு நிறுவங்களின் கொள்கைகள். தற்போதைய சமூக-பொருளாதாரபிரச்சனைகள்-புதிய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அரசு நிறுவனங்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலில் தற்கால கண்டுபிடிப்புகள்-தற்கால உடல் நலம் சார்ந்த கண்டுபிடிப்புகள்-தகவல் தொழில்னுட்பம் சார்ந்த நிகழ்வுகள்.

 • மனோரமா பொது அறிவுப்புத்தகம்
 • மனானா நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
 • iya.competitiveexam.in

குறிப்பு : அதாவது தேர்வுக்கு எட்டு மாதங்கள் வரை ஏதாவது ஒன்றை தெளிவாக படித்தால் போதும் . நடப்பு நிகழ்வுகள் படிப்பதற்கு ஒருநாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் இடமளிக்க வேண்டாம்.

வரலாறுமற்றும்பண்பாடு– இந்தியா/தமிழ்நாடு

தமிழர் பண்பாடு மற்றும் நாகரிகம் ஐரோப்பியர்களின் வருகை-பிரிட்டிஷ் ஆதிக்கம் ஆட்சி பிரிட்டிஷாரின் ஆட்சியினால் சமூக-பொருளாதார-பண்பாட்டு மாற்றங்கள் –-சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியா-இந்தியப் பண்பாட்டின் தன்மைகள்-வேற்றுமையில் ஒற்றுமை-இனம், நிறம்,மொழி மற்றும் பழக்க வழக்கங்கள்-மதச்சார்பற்ற நாடு-கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புகள்-பகுத்தறிவாளர்கள் எழுச்சி-தமிழ்நாட்டில் திராவிட இயக்கம்-அரசியல் கட்சிகள் மற்றும் அதன் பிரபல திட்டங்கள்- -இந்திய சமூகச்சமய சீர்திருத்த இயக்கங்கள் எழுச்சி- கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புகள்-பல்வேறு துறையில் முக்கியமான பிரபலங்கள் –கலை -அறிவியல்- இலக்கியம் -தத்துவம்-அன்னைதெரசா- விவேகானந்தர்- பண்டிதரவிசங்கர்- எம். எஸ்சுப்புலட்சுமி- ருக்மனிஅருண்டேல்-ஜிட்டுகிருஷ்ணமூர்த்தி

இந்தியதேசியஇயக்கம்

தேசிய மறுமலர்ச்சி-1857க்கு முன் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்ட எழுச்சி-1857 பெருங்கலகம்-இந்திய தேசிய காங்கிரஸ்-தேசியத்தலைவர்களின் எழுச்சி-காந்தி, நேரு, தாகூர்- நேதாஜி- தேசிய போராட்ட்த்தின் பல்வேறுநிலைகள்-பல்வேறு சட்டங்கள்-உலகப்போர்கள்அதன் இறுதிநிலை – மதவாதமும் தேசப்பிரிவினையும்-சுதந்திரப்போராட்ட்த்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு-ராஜாஜி-வ.உ.சிதம்பரனார்-பெரியார்-பாரதியார்மற்றும்பலர்- அரசியல் கட்சிகள் மற்றும் சுதந்திரத்திற்கு பிந்தையை அரசியல் முறை,

படிக்கவேண்டியபுத்தகங்கள்

 • 6 முதல் 10 வரை உள்ள வரலாறு( 9 வது வரலாறு நீங்கலாக ஏனென்றால் உலக வரலாறு பாடத்திட்டத்தில் இல்லை)
 • 11 வது வகுப்பு மற்றும் 12 வது வகுப்புவ ரலாறு (குறிப்பிட்ட பாடம் மட்டும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் படிக்கவும், முழுவதும் படித்தால் நல்லது)
 • கூடுதலாக பழைய வினாத்தாள் தொகுப்பினை படிக்கலாம்

இந்தியஅரசியல்அமைப்பு

இந்திய அரசியல் அமைப்பு-அரசியலைப்பின் முகவுரை-அரசியலைப்பின் சிறப்பியல்புகள் -மத்திய – மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள்-குடியுரிமை-அடிப்படை உரிமைகள் –கடமைகள்-மனித உரிமைப்பட்டயம்-மத்தியச் சட்டமன்றம்-பாராளமன்றம்-மாநிலச் சட்டமன்றம்- உள்ளாட்சிஅரசு- பஞ்சாயத்துராஜ்-தமிழ்நாடு- இந்திய நீதித்துறையின் அமைப்பு- சட்டத்தின் ஆட்சி- முறையான சட்ட அமைப்பு- தேர்தல்கள்- அலுவலக மொழி மற்றும் 8வது அட்டவணை-பொது வாழ்வில் ஊழல்- ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்-மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்-லோக் அதாலத்- குறைதீர்ப்பாளர்- கணக்குத் தணிக்கை அலுவலர்- தகவல் அறியும் உரிமை-மத்திய மாநில ஆணையங்கள் பெண்கள்முன்னேற்றம்- நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்- அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்-  நிர்வாகச் சீர்திருத்தங்கள்.

படிக்கவேண்டியபுத்தகங்கள்

 • 6 முதல் 10 வரை உள்ள குடிமையியல் பகுதி
 • 12 வது வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்
 • பாக்யா பயிற்சிப்பட்டரையின் அரசியலைப்பு புத்தகம்

இந்தியப்பொருளாதாரம்

இந்தியப் பொருளாதரத்தின் இயல்புகள்-ஐந்தாண்டு திட்டங்கள்-மாதிரிகள்-மதிப்பீடு- நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை-வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு-தொழில்வளர்ச்சி- கிராம நலம்சார்ந்த திட்டங்கள்- சமூகம் சார்ந்த பிரச்சனைகள்- மக்கள்தொகை – கல்வி – சுகாதாரம்- வேலைவாய்ப்பு- வறுமை- தமிழகத்தின் பொருளாதார நிலை- ஆற்றல் மற்றும் அதன் பல்வேறு மூலங்கள் மற்றும் வளர்ச்சி- நிதிக்குழு-தேசியவளர்ச்சிகுழு-திட்டக்குழு – வறுமை ஒழிப்புத் திட்டங்கள்-தொழில் வளர்ச்சி-மூலதன ஆக்கம் மற்றும் முதலீடுகள்-பொதுத்துறை நிறுவங்களின் பங்களிப்பு மற்றும் பங்குவிலக்கல்-அடிப்படை  கட்டமைப்பு மேம்பாடு-தேசிய வருமானம்.

படிக்கவேண்டியபுத்தகங்கள்

 • 11 ஆம் வகுப்பு இந்திய பொருளாதாரம்
 • 12 ஆம் வகுப்பு இந்தியப் பொருளாதாரப் புத்தகம்கடைசி இரண்டு பாடங்கள் மட்டும்.
 • அரிகண்ட் அல்லது லூசெண்ட் (LUCENT) பொது அறிவுப்புத்தகத்தில் உள்ள பொருளாதாரப் பகுதி

அறிவுக்கூர்மைப்பகுதி

கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை தகவலாக மாற்றுதல்-புள்ளி விவரம் சேகரித்தல்- வகைப்படுத்துதல் மற்றும் அட்டவனைப் படுத்துதல்-குழு-வரைபடம் மற்றும் விளக்கபடம்-முழுமைத் தொகுதியாக தகவல்களை தெரிவித்தல்-கொடுக்கப்பட்ட தகவல்களை பகுப்பாராய்வு செய்தல்- சதவீதம்-மீ.பெ.வ. மற்றும் மீ.சி.ம, விகிதம் மற்றும் விகிதாச்சாரம்- தனிவட்டி-கூட்டுவட்டி- பரப்பளவு-கனஅளவு- நேரம் மற்றும் வேலை-தர்க்க அறிவு-புதிர்கள்- பகடை தொடர்பானவை- படம் தொடர்பான தர்க்க அறிவு – எண்முறை தொடர்பானவை-முடிவெடுத்தல் மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல்.

 • பாடப்புத்தகத்தில் உள்ள கணக்குகள்
 • கணியன் கணிதப்புத்தகம் ( தமிழில்மட்டுமேஉள்ளது)
 • பழைய வினாத்தாளில் உள்ள வினாக்களை பயிற்சி செய்தால் போதும்.

பொதுத்தமிழ்

பகுதி – (அ)

இலக்கணம்

 1. பொருத்துதல்: பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்– புகழ் பெற்ற நூல் நூலாசிரியர
 2. தொடரும் தொடர்பும் அறிதல் -இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்–அடைமொழியால் குறிக்கப்பெறும்நூல்
 3. பிரித்தெழுதுக
 4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
 5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
 6. பிழைதிருத்தம் –சந்திப்பிழையை நீக்குதல் –ஒருமை பன்மை – பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச்சொற்களை நீக்குதல் – பிறமொழிச் சொற்களை நீக்குதல்
 7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
 8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
 9. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
 10. வேர்ச்சொல்லைதேர்ந்தெடுத்தல்
 11. வேர்சொல்லைக் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயா;, தொழிற்பெயரை –உருவாக்கல்
 12. அகரவரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்
 13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
 14. பெயர்ச்சொல்லின் வகையறிதல்
 15. இலக்கணக் குறிப்பறிதல்
 16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல
 17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிதல்
 18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிதல்
 19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல்
 20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்

பகுதி (ஆ)

இலக்கியம்

 1. திருக்குறள் தொடா;பான செய்திகள், மெற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல்,செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக்கொடல், பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவைகூறல்
 2. அறநூல்கள் நாலடியார்நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னாநாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம, ஏலாதி, ஓளவையார்பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
 3. கம்பராமாயணம் – தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.
 4. புறநானூறு – அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
 5. சிலப்பதிகாரம்-மணிமேகலை – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும்ஐம்பெரும் – ஐஞ்சிறுங்காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
 6. பெரியபுராணம் – நாலாயிர திவ்வியப்பிரபந்தம் – திருவிளையாடற்புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம்தொடர்பான செய்திகள்.
 7. சிற்றிலக்கியங்கள்:திருக்குற்றாலக்குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது, நந்திக்கலம்பகம் -விக்கிரமசோழன் உலா, முககூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், பெத்தலகெம் குறவஞ்சி, அழகா; கிள்ளைவிடுதூது, இராகூராகூன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.
 8. மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில்பாட்டு – இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்– அழகியசொக்கநாதர்தொடர்பான செய்திகள்).
 9. நாட்டுப்புறப்பாட்டு – சித்தர்பாடல்கள் தொடர்பான செய்திகள்.
 10. சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர்,சுந்தரர், மாணிக்கவாசகர்;, திருமூலர்;, குலசேகர ஆழ்வார்;, ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார்;, எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, உமறுப்புலவர்,தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப்பெயர்கள்.

பகுதி – இ

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

 1. பாரதியார்,பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்ததொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
 2. மரபுக்கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா. கண்ணதாசன், உடுமலைநாராயணகவி,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள்.
 3. புதுக் கவிதை – ந.பிச்சமுர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன,; சாலினி இளந்திரையன, ஆலந்தூர்மோகனரங்கன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் புதிய நூல்கள்.
 4. தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு: நேரு – காந்தி – மு.வ. அண்ணா–ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.
 5. நாடகக்கலை – இசைக்கலை தொடர்பான செய்திகள்
 6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல்
 7. கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்.
 8. தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
 9. உரைநடை – மறைமலையழகள் – பரிதிமாற்கலைஞா; ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப் பிள்ளை, திரு.வி.க. வையாபுரிப்பிள்ளை – மொழி நடை தொடர்பான செய்திகள்..
 10. உ.வெ.சாமிநாத ஐயா;, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்;, சி.இலக்குவனார்; – தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
 11. தேவநேயப்பாவாணா; – அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார்;, தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.
 12. ஜி.யு.போப் – வீரமாமுனிவர்; தமிழ்ததொண்டு சிறபபுத் தொடர்கள்
 13. பெரியார்; – அண்ணா – முத்துராமலங்கத் தேவர் – அம்பேத்கார் – காமராசர்- சமுதாயத் தொண்டு.
 14. தமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
 15. உலகளாவிய தமிழா;கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப் பணியும்.
 16. தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
 17. தமிழகமகளிரின் சிறப்பு – அன்னி பெசண்ட் அம்மையார்;, மூவலூர்; ராமாமிர்தத்தம்மாள்,டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி – விடுதலைப் போராட்டத்தில் மகளிர்பங்கு (தில்லையாடி வள்ளியம்மை, ராணிமங்கம்மாள்)
 18. தமிழர்வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற் பயணிகள் – தொடர்பான செய்திகள்
 19. உணவே மருந்து – நோய் தீர்க்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.
 20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர்;, இராமலிங்க அடிகளார்,; திரு.வி. கல்யாண சுந்தரனார்; தொடர்பானசெய்திகள் – மேற்கோள்கள

படிக்கவேண்டியபுத்தகங்கள்

 • 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் புத்தகம்
 • ஏதாவது ஒரு தமிழிலக்கிய வரலாறு (முனைவர்தேவிரா- டாக்டர்பாக்கியமேரி- எம்மார் அடைக்கலசாமி – ( என்னைப் பொருத்தவரை பாலசுப்ரமணியன் புத்தக்ம்மிக அருமையாக உள்ளது)
 • பழைய வினாத்தாளில் உள்ள வினாக்களுக்கான விடையையும் சேர்த்து கூடுதலாகப் படித்தால் உங்களால் தமிழில் 90 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க முடியும்.

கேள்விகளின் எண்ணிக்கை பகுப்பாய்வு

பாடம் கேள்விகளின் எண்ணிக்கை
அரசியலமைப்பு10 – 12
வரலாறு மற்றும் தேசிய இயக்கம் 12-18
பொருளாதாரம் 5-10
புவியியல் 5-10
நடப்பு நிகழ்வுகள்15-20
பொது அறிவியல் 20
பொது அறிவு5-10

 

PROGRAMS OFFERED

 1. GROUP I MAINS TEST / CLASS
 2. GROUP II A CLASS WEEKDAYS / WEEKEND
 3. GROUP II A TEST / WEEKDAYS/ WEEKEND/ ONLINE TEST ALSO AVAILABLE

FOR ADMISSION CONTACT; 9952521550, 044- 48601550, 7418521550

 

DOWNLOAD THE PREVIOUS YEAR GROUP IIA ORIGINAL QUESTION PAPER

GENERAL TAMIL ;   http://www.tnpsc.gov.in/anskeys/24_01_2016_general_tamil.pdf

GENERAL ENGLISH ; http://www.tnpsc.gov.in/anskeys/24_01_2016_general_english.pdf

GENERAL STUDIES : http://www.tnpsc.gov.in/anskeys/24_01_2016_general_studies.pdf

 

error: Content is protected !!
 • Sign up
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.