ரேன்சம்வேர் மற்றும் பிட்காயின்

உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் விஷயமாக ‘வான்னா க்ரை’ (Wanna Cry or Wanna Crypt) ரான்சம்வேர் மாறியுள்ளது. இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கணினிகள் ‘வான்னா க்ரை’ மூலம் பாதிப்படைந்துள்ளன. இதுவரை நடந்த சைபர் அட்டாக்குகளில் இது தான் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு அமைப்பின் “இணைய ஆயுதங்கள்’ கசிந்ததைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் முக்கிய அரசு வலைதளங்கள் உள்ளிட்ட ஏராளமான வலைதளங்கள் பாதிப்புக்கு உள்ளாகின.

ரான்சம்வேர் என்றால் என்ன?

கணினியைத் தாக்கி அதில் தீங்கு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் மென்பொருள் மால்வேர் என அழைக்கப்படும். இவற்றில் ஸ்பைவேர், வார்ம்ஸ் (Worms), ட்ரோஜன் வைரஸ், ரான்சம்வேர், பாட்ஸ் (Bots) எனப் பல வகைகள் உண்டு. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலையைச் செய்யும். ஆனால் ரான்சம்வேர் கொஞ்சம் அபாயகரமானது. இது கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை மறைத்துவைத்துக் கொள்ளும்.

இது எவ்வாறு கனினியைத் தாக்குகிறது

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மேம்படுத்தாத மென்பொருள் மூலம் வைரஸ் பரவியதாகத் தெரிகிறது. “வான்னாகிரை’ என்று அறியப்படும் அந்த இணைய வைரஸ், மின்னஞ்சல் மூலமாகப் பரவுகிறது. இந்த வைரஸ் ஓர் அமைப்பின் கணினியைத் தாக்கினால், பணம் அளித்து மட்டுமே அதன் வலைதளத்தை விடுவித்துக் கொள்ள முடியும். வின்டோஸ் இயங்குத்தளத்தை பயன்படுத்தி இயங்குகிற கணினிகளை மட்டுமே வான்னாகிரை வைரஸ் தாக்கியுள்ளது. மீண்டும் நாம் நமது பைல்களை இயக்க வேண்டுமானால் அவர்கள் கேட்கும் குறிப்பிட்ட அளவு பணத்தினை நாம் பிட் காயினாக செலுத்த வேண்டும் அப்போதுதான் நாம் நமது பைல்களை பயன்படுத்த முடியும்

பிட் காயின்

ஒவ்வொரு நாட்டிலும், லீகல் டெண்டர் என்று சொல்லப்படும் தனிப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அவற்றின் புழக்கம், அந்தந்த நாடுகள் சார்ந்த பொருளாதார விதிகளுக்கு உள்பட்டவை. அம்மாதிரி விதிகளை பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் முறைப்படுத்தி, நாணய புழக்க செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகின்றன. மேலும், அச்சடிக்கப்படும் நாணய மதிப்பை தங்கம் போன்ற அரசாங்க சொத்துகள், தாங்கி நிற்க வேண்டும். நாணயங்கள், எல்லை தாண்டுவதற்கு பலவிதமான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

இம்மாதிரி, பாரம்பரிய விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் உடைத்து எறிந்து, சுதந்திரமான சர்வதேச புழக்கத்திற்காக பிறந்ததுதான் பிட் காயின் என்ற நாணய மாற்று முறை. 1998இல் வீடே என்பவரின் கற்பனையில் உதித்த யோசனைக்கு, 2009இல், சதோஷி நகமோட்டோ என்பவர் செயல் வடிவம் கொடுத்து, அதற்கான மென்பொருளை அறிமுகப்படுத்தி, பிட்காயின் டிஜிட்டல் கஜானாவை திறந்து வைத்தார். இந்தத் திட்டத்தில் சேருபவர்களுக்கு தனி கடவு சொல்லும், சங்கேத வார்த்தையும் வழங்கப்படுகின்றன.

அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் நாணயங்களை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தி, அங்கத்தினர்கள் பிட்காயின்களை வாங்கலாம். அவ்வாறு வாங்கப்பட்ட தொகை, ப்ளாக் செயின் என்ற இணைய கணக்குப் புத்தகத்தில் அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, இருப்பிற்கு ஏற்ப, அங்கத்தினர்கள் செலவு செய்து கொள்ளலாம். ஆகவே, இதை ஒரு டிஜிட்டல் நாணயம் என்று சொல்லலாம்

பிட்காயின் எவ்வாறு செயல்படுகிறது

மறையீட்டுச் செலாவணி (CryptoCurrency) என்பது எண்ணியல் செலாவணியில் ஒரு நவீன வகை. நேரடியாக அல்லாமல் மறையீடுகளின் (Cryptography) அடிப்படையில் எண்ணியல் செலாவணியைப் பயன்படுத்துகிறது இது. I LOVE YOU என்பதை 143 என்கிறார்களே, அதுவே ஒரு மறையீடு தான். இதைப்போலவே தான் பிட்காயினும் நடந்த பரிமாற்றம் Block Chain என்ற பகிரப்பட்ட பொது கணக்கேட்டில் பதியப்படும். இந்தக் கணக்கேட்டின் பிரதி பயனர் மென்பொருள் வைத்திருக்கும் அனைவரிடமும் இருக்கும். எந்தவொரு பரிமாற்றமும் நடந்த 10 நிமிடங்களுக்குள் உலகம் முழுக்க இருக்கும் பயனர்களின் கணக்கேட்டில் அது பதியப்பட்டு விடும்.

இந்த பிட் காயின் ஒரு சாதாரண பயனீட்டாளர் பார்வையில் ஒரு மொபைல் அப்ளிகேசன். ஒரு சொடக்கிட்டு பணம் அனுப்பி விடலாம் ஆனால், இந்த கம்ப்யூட்டர் புரோகிராம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிட் காயினின் வாலெட் (wallet) ஏற்படுத்துகிறது. இதன் மூலம் நாம் பிட் காயின் வாங்கலாம், விற்கலாம், கொடுக்கலாம். இப்படி பணம் பெற அல்லது அனுப்ப உப்யோகப்படுத்த வேண்டியது டிஜிட்டல் கையெழுத்து. இப்படி உபயோகப்படுத்தும்போது சில specialized hardware  உபயோகப்படுத்தினால் அதற்கு வெகுமதியாக சில பிட் காயின்ஸ் கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு கொடுப்பதற்கு mining என்று பெயர்.

கூடுதல் தகவல்

இந்தியாவில் பிட்காயின் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Indian Computer Emergency Response Team (CERT-In) இந்தியக் கணினி அவசரகால முன்னெச்சரிக்கை அமைப்பு (சிஇஆர்டி-இன்)

Download as PDF

error: Content is protected !!
  • Sign up
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.