நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 8 – 1 | டெல்லி காற்று மாசுபாடு

 • தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறுவில் கட்டப்படவுள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
 • சிறந்த படைப்பாக்க நகரங்களின் யுனெஸ்கோ பட்டியலில் சென்னை இணைக்கப்பட்டது. ஜெய்ப்பூர் , வாராணசிக்கு அடுத்து இந்தியாவிலிருந்து மூன்றாவதாக இடம் பிடித்தது.
 • 68 தொகுதிகளை கொண்ட ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு வாக்குபதிவு முடிவடைந்தது.

இந்தியாவின் மூத்த வாக்காளர்

 • ஷியாம் சரண் நேகி 1951 ஆம் ஆண்டு முதல் இத்தேர்தல் வரை தனது வாக்கினை பதிந்து வருகிறார். வயது 101. இவரை தேர்தல் ஆணைய தூதராக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 • நவம்பர் – 8 கருப்பு பண ஒழிப்பு தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது உயர் மதிப்புள்ள பணத்தை பண மதிப்பிழக்கம் செய்த நவம்பர் 8 ஆம் தேதியை குறிப்பிடுகிறது
 • மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம், மாநிலங்களவை எம்.பி.யாக, இராஜஸ்தான் மானிலத்தில் இருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • இந்தியா-வங்கதேசம் இடையே புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவுக்கும்-வங்கதேசத்தின் 3-ஆவது பெரிய நகரமான குல்னாவுக்கும் இடையே இருவழியிலும் வியாழக்கிழமை தோறும் இந்த ரயில் இனி இயக்கப்படும். அனைத்துப் பெட்டிகளுக்கும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள இந்த ரயிலுக்கு ‘பந்தன் எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 • பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் நோக்கத்தோடு SHe-Box எனும் இனையதளத்தை மத்திய அமைச்சர் மேனகா காந்தி துவங்கி வைத்தார்.
 • உலக ஆர்கானிக் காங்கிரஸ் மானாடு நொய்டாவில் நடைபெற்றது. மத்திய வேளாந்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் துவக்கி வைத்தார்.
 • ‘ஆன் தி டிரையல் ஆஃப் பிளாக்: டிராக்கிங் கரப்ஷன்’ – எழுதியவர்கள்- கிஷோர் அருண் தேசாய் மற்றும் விவேக் தேப்ராய்.
 • தெற்காசியாவில் பயங்கரவாதத்தை ஒடுக்கவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின்போது உறுதிபூண்டனர்.
 • விதிகளுக்குப் புறம்பாக இஸ்ரேல் தலைவர்களையும், அதிகாரிகளையும் சந்தித்ததால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் அமைச்சர் பிரீதி படேல் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
 • ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் இறுதிச்சுற்றில் 57 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சோனியா லேதர் வெள்ளிப்பதக்கம் வென்றார்

டெல்லியின் காற்று மாசு

டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் காற்று மாசு காணப்படுகிறது. காற்று தரக் குறியீடு  474 என்ற அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக டெல்லியில் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி காற்றில் நுண் துகள் ( Particulate matter) 2.5 அதிகமாக இருந்தால் மனிதருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஆகும்.

டெல்லியின் காற்று மாசிற்கான காரணம்

டெல்லியின் காற்று மாசிற்கு , மக்கள் தொகைப் பெருக்கம் , விரைவான வாகனப் பெருக்கம் , அண்டை மானிலங்கள் என அனைத்தும் காரணமாக இருக்கின்றன. ட்

டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கான முக்கிய காரணம்

 • பஞ்சாப் , இராஜஸ்தான் மானிலங்களில் எரிக்கப்படும் எஞ்சிய பயிர்க் கழிவுகள், எ.கா வைக்கோல்
 • வாகனங்கள் வெளியிடும் புகை
 • தொழில் நிறுவனங்கள்
 • கட்டட செயல்பாடுகள்
 • மேலும் இதனோடு சேர்ந்து டெல்லியின் குளிர்ந்த சூழ்நிலையும் இனைந்து விடுமானால் அதன் அளவு அதிகமடைகிறது
 • வெப்பம் மற்றும் மின் உற்பத்தி வசதிகள்
 • தொழிற்சாலை இயக்கமுறை
 • வாகன தயாரிப்பு
 • உரங்களின் தொகுதி
 • கட்டிடத் தகர்ப்பு
 • திடக் கழிவு மாசுபாடு
 • திரவத்தின் நீராவி
 • எரி பொருள் உற்பத்தி

காற்று மாசுபட காரணமான வாயுக்கள்

 • சல்பர் – டை – ஆக்ஸைடு (SO2)
 • நைட்ரஜனின் ஆக்ஸைடுகள் (NOX = NO + NO2)
 • ஓசோன் (O3)

சல்பர் – டை – ஆக்ஸைடு மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு போன்றவை முதன்மை நிலை காற்று மாசுபடுத்திகளாகும். ஓசோன் இரண்டாம் நிலை காற்று மாசுபடுத்திகளாகும்.
நைட்ரஜன் – டை – ஆக்ஸைடு, முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மாசுபடுத்தியாகும்.

கார்பன் மோனாக்ஸைடு (CO)

 • கார்பன் சம்பந்தப்பட்ட எரிபொருட்களை எரிப்பதால் கார்பன்- டை – ஆக்ஸைடு (CO2) உற்பத்தியாகிறது
 • ஆனால் அனைத்து முழுமையாக எரிக்கப்படுதில்லை. அந்த தருணத்தில் கார்பன் மோனாக்ஸைடு (CO) உற்பத்தியாகிறது
 • மனிதர்களின் பயன்பாடான மோட்டர் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவை கார்பன் மோனாக்ஸைடு வெளியேற்றத்திற்கு ஆதாரமாகும்

விளைவுகள்

பனிப்புகை உருவாக்கம் ( SMOG)

பனிப்புகை என்பது, ஏற்கனவே உள்ள மாசுபட்ட காற்று துகளுடன் , குளிர்ந்த கால நிலை மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு , சல்பர் டை ஆக்ஸைடு இதனுடன் சூரிய ஒளியும் இனையும் போது பனிப்புகை உருவாகிறது.
காற்று வளி மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவு

 • இந்த மாசுபாட்டினால் மனிதர்களில் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும், நடத்தையிலும் சீர்குலைவு ஏற்படுகிறது
 • நுரையீரல் செயல்பாட்டை குறைத்தல்
 • கண்கள், மூக்கு, வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல்
 • ஆஸ்த்மா (அ) மூச்சிரைப்பு நோய் வருதல்
 • இருமல் மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறிகள்
 • சுவாச மண்டலத்தின் நோயான மார்பு சளியை அதிகரித்தல்
 • செயற்திறனின் அளவினை குறைத்தல்
 • தலைவலி மற்றும் தலைச்சுற்றல்
 • அகச்சுரப்பித் தொகுதி, இனப்பெருக்கத்தொகுதி மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை பாதித்தல்
 • நரம்பு நடத்தையில் பாதிப்பு
 • இரத்த நாடியில் பாதிப்பு
 • புற்றுநோய்
 • முதிர்ச்சியற்ற இறப்பு

காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள்

 • தேசிய காற்று தரக்குறியீட்டை அறிமுகப்படுத்துதல்
 • சுற்றுச்சூழல் தொடர்பான கொள்கைகளை மேம்படுத்துதல்
 • தூய்மையான எரிபொருள் பயன்படுத்துதலை அதிகரித்தல் , பெட்ரோலுடன் எத்தனால் கலந்து வாகனங்களில் பயன்படுத்துவது, திரவ எரிவாயு பயன்படுத்துதல்
 • பாரத் ஸ்டேஸ் அறிமுகப்படுத்தியது
 • அதிக மாசுபடுத்தக்கூடிய வாகனங்களுக்கு அதிக வரிவிதித்தல்
 • பல்வேறு கழிவு மேலாண்மை விதிகளை மாற்றி அமைத்தல்
 • கட்டிட இடிபாடுகள் மற்றும் மேலாண்மை விதிகளை தீவிரமாக செயல்படுத்தல்
 • ஈ.ரிக்‌ஷா அறிமுகம்
 • தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகையின் அளவைக் கட்டுக்குள் வைத்தல்

 

error: Content is protected !!
 • Sign up
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.