MARCH CURRENT AFFAIRS| மார்ச் மாத நடப்பு நிகழ்வுகள் 2018

CLICK TO DOWNLOAD PDF IYACHAMY CURRENT AFFAIRS MARCH 2018

எனதன்பு நண்பர்களுக்கு வணக்கம்  , நடப்பு நிகழ்வுகள் தொகுப்பின் வழியே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. குருப் 4 தேர்வுகள் முடிந்துவிட்டது ஆனால் அத்தேர்வின் வினாக்கள் , கட் ஆப் ஆகியவற்றை நாம் தொடர்ச்சியாக விவாதித்து வருகிறோம். சிலர் அந்த நிகழ்விலிருந்து மீழவே இல்லை ஆனால் அதற்குள் வாட்சப் பு(எ)லிகள் , பேஸ்புக் (அ)சிங்கங்கள் அடுத்த தாக்குதலை ஆரம்பித்து விட்டார்கள் குருப் 2 தேர்வில் மாற்றங்கள் கொண்டு வரப்போவதாகவும் அதனால் கடினமாக தேர்வு இருக்குமென ஆரம்பித்துவிட்டார்கள். குருப் 2 தேர்வுகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டால் அரசுப்பணியாளர் தேர்வாணையம் முறையாக செய்தி வெளியிடும் அதனைப் பற்றி அச்சப்பட ஒன்றுமில்லை. அடுத்த பூதமாக பள்ளிப்புத்தகங்கள் மாற இருக்கிறது எனவே அனைவரும் புதிய புத்தகம் படிக்க வேண்டும் எனவும் அப்போது தான் தேர்ச்சியடைய இயலும் எனவும் ஆரம்பித்துவிட்டார்கள். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பாடத்திட்டமானது பள்ளிப்பாடத்தை மட்டும் அடிப்படையாக கொண்டதல்ல அது பொதுவான பாடத்திட்டத்தினை கொண்டதாகும் பள்ளிப் பாடப்புத்தகம் மாற்றப்பட்டாலும் அதில் உள்ள பொருளடக்கங்கள் பெரும்பாலும் மாறாது உதாரணமாக சிந்து சமவெளி நாகரிகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் சிந்து சமவெளியின் பரப்பு , கண்டுபிடித்தோர் , கலை தொடர்பான எந்த செய்திகளும் எந்தக் காலத்திலும் மாற்றமடையாது. புதிய புத்தகம் வந்தால் அதில் சிந்து சமவெளிப் பரப்பினை வங்கதேசத்தில் இருப்பதாக கூறமுடியுமா என்ன? . இன்னொரு உதாரணம் அறிவியலில் செல்லின் அமைப்பை பற்றி சமச்சீர் கல்வியில் என்ன இருக்கப்போகிறதோ அதேதான் புதிய புத்தகத்திலும் இருக்கப்போகிறது எனவே இந்த புரளியையும் அச்சத்தையும் தவிர்த்திடுங்கள்.இனி என்ன செய்ய வேண்டும்? கடந்த தேர்வுகளில் என்ன பிழைகள் செய்தீர்களோ அதே பிழையை மீண்டும் செய்யாதவாறு தயாரிப்பை மேம்படுத்துங்கள். கூடுதலான உழைப்பைக்கொடுங்கள் உங்களால் கட்டாயம் வெற்றியடைய இயலும்.

குருப் 4 தேர்வின் வினாத்தாள் வடிவமைப்பு முந்தைய தேர்வுகளிலிருந்து மாறுபட்டிருந்தது உண்மையே . மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் மாறிக்கொள்வதன் மூலம் தான் வெற்றியடையமுடியும். பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப விலங்குகள் தங்களை தகவமைத்துக் கொண்டதால் தான் அவற்றால் தொடர்ந்து வாழ முடிந்தது எனவே  நாமும் நம்பிக்கையுடன் செயல்படுவோம் வெற்றியடைவோம். தோல்வியில்லா வெற்றியில்லை!

நமது பயிற்சி மையம் இனையவழியாகவும் நேரடி வகுப்புகளின்  மூலமாகவும் வகுப்புகளை வழங்கிவருகிறது. விருப்பமுடையோர் சேர்ந்து கொள்ளலாம்.

வாழ்த்துக்களுடன்

ஐயாச்சாமி முருகன்

ஐயாச்சாமி அகாதெமி, சென்னை

[email protected]

044-48601550 ( whatsapp)

 

பொருளடக்கம்

1தமிழ்நாடு பட்ஜெட்
2மார்ச் மாத நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
3சிந்து சமவெளி நாகரிகம்
4தமிழ்நாடு நிர்வாகம் – மத்திய அரசு நிர்வாகம்
5கருணைக்கொலை சிறப்புக் கட்டுரை

 

ADMISSION OPEN

  1. Group 1 & 2 Prelims ( Weekend Batch ) Direct Class|Online Class
  2. Group 1 & 2 Mains ( Weekend Batch ) Direct Class|Online Class
  3. Group 1 & 2 Prelims Test Batch ( Fresh Batch Starts From April 3rd Week)
  4. Group I & 2 Mains Test Batch ( Notes Will Be Provided)

இனையவழி வகுப்பில் சேர்வது எவ்வாறு?

நீங்கள் எங்களிடம் வகுப்பில் சேர்வதற்கான கட்டணத்தை நேரிலோ அல்லது இணையவழியாகவோ செலுத்திய பின் உங்களுக்காக தனியே பயனாளர் எண் மற்றும் குறியீடு கொடுக்கப்படும் அதனைப் பயனபடுத்தி நீங்கள் இனையதளத்தில் எப்போது வேண்டுமானாலும் வகுப்புகளை பார்க்கலாம் மேலும் லைவ் வகுப்புகளையும் பார்க்க இயலும். குறிப்புகள் வகுப்புகளைப் பொறுத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். முதன்மைத் தேர்வுக்கு குறிப்புகள் அஞ்சல் வழியிலே அனுப்பப்படும்.

தொடர்புக்கு: 9952521550, 044-48601550

error: Content is protected !!
  • Sign up
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.