இராமானுசர் (1017-1137)

மத்திய அரசு இராமனுசருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பபித்துள்ளது.

சென்னைக்கு அடுத்த ஸ்ரீபெரும்பூதூரில் பிறந்தார். தங்தை ஆகுரிகேசவப் பெருமாள், தாய் காந்திமதி. குழந்தையைப் பார்க்க வந்த தாய்மாமன் திருமலைநம்பி குழந்தையின் இலட்சணங்களைப் பார்த்ததும் இலட்சுமணன்போல் இருப்பதால் இராமானுசர் என்று பெயரிடும்படி கூறினர். இவர் 16 வயதுவரை வேகங்கள் கற்றர். மணமும் நடந்தது. அதன்பின் வேதாந்தம் கற்பதற்குக் காஞ்சிபுரத்தில் இருந்த யாதவப் பிரகாசரிடம் சென்றார், அப்போது பூச்சங்கக்கிலிருந்த ஆளவந்தார் என்னும் யாமுனுசாரியார் இராமானுசருடைய திறமையைக் கேள்வியுற்று, அவரைப் பார்ப்பதற்காகக் காஞ்சிபுரம் வந்தார். அவரைக் கண்டவுடன் அவரே தமக்குப் பின்னர் வைணவ ஆசாரியராக இருக்கவேண்டுமென்று ஸ்ரீவரதராசரிடம் வேண்டிக்கொண்டு பூரீரங்கம் போய்ச்சேர்ந்தார். யாதவர் வேதாந்த சுலோகங்களுக்குக் கூறிய வியாக்கியானங்கள் இராமானுசருக்குப் பிடிக்காதுபோகவே இராமானுசரும் அவரிடமிருந்து விலகிக்கொண்டார். ஆளவந்தார் நோயுறவே, இராமானுசரை அழைத்து வரும்படி தம் சீடராகிய பெரிய நம்பியைக்  காஞ்சிக்கு அனுப்பினர். இராமானுசர் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தபோது ஆளவந்தார் காலம் அடைந்துவிட்டிருந்தார். அப்போது அவருடைய கையில் மூன்று விரல்கள் மூடியிருந்தன. அதற்குக் காரணம் அவருக்கு மூன்று விருப்பங்கள் இருந்தமையே என்று அறிந்தார். அவைகளே நிறைவேற்றுவதாக இராமானுசர் சொன்னதும் விரல்கள் விரிந்தன என்பர். சிறிதுகாலம் சென்றபின் இராமானுசர் துறவறம் பூண்டு, எதிராசர் என்ற பெயருடன் பூரீரங்கத்தில் வசித்து வந்தார். அப்போது அவர் திருமந்திரத்தின் பொருளே அறிந்துகொள்வதற்காகத் திருக்கோட்டியூர் நம்பியிடம் சென்று உபதேசம் பெற்ருர், குரு அதை யாருக்கும் கூறக்கூடாது என்று ஆணையிட்டிருந்தார். ஆனல் இராமானுசர் எல்லோரும் உய்யவேண்டு மென்று கருதி, மக்களைக் கூட்டுவித்து எல்லோருக்கும் விளக்கிக் கூறினர். குரு கோபம் கொண்டார். இராமானுசர் தாம் நரகம் அடைந்தாலும் பிறர் நன்மையடையவேண்டுமென்று கருதியே வெளியிடுவதாகச் சொன்னர், அதைக் கேட்டுக் குரு மகிழ்ச்சியடைந்து, அவருக்கு உடையவர் என்ற பெயரை அளித்தார். அதன்பின் இராமானுசர் பிரம சூத்திரங்களுக்குப் பாஷ்யம் எழுதி முடித்தார். திருக்குருகைப் பிள்ளானேக்கொண்டு திருவாய்மொழிக்கு ஆருயிரப்படி என்ற பாஷ்யத்தை எழுதச் செய்தார். தம் சீடரான பராசர பட்டரைக்கொண்டு சகஸ்ரநாம பாஷ்யத்தை வெளியிடச் செய்தார். இவ்வாறு ஆளவந்தாருடைய விருப்பங்களே நிறைவேற்றினர். அதன்பின் மைசூர் முதலிய பிரதேசங்களில் 12 ஆண்டு வைஷ்ணவ மதப் பிரசாரம் செய்து வந்தார். மைசூர் பிரதேசத்திலிருந்தபோது தாழ்த்தப்பட்டோர்கள் சாதியார்கள் அவருக்கு அதிக உதவியாக இருந்தார்கள். அதனால் அவர்களுக்குத் திருக்குலத்தார் என்னும் பெயரை அளித்து, அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட காலங்களில் கோவிலுக்குள் போகவும், குளங்களில் குளிக்கவும் அனுமதி அளித்தார். வேதங்களைக் கற்கவும் பஞ்ச சம்ஸ்காரம் பெறவும் அனுமதியளித்தார். அது இன்றுவரை நடைபெற்று வருகிறது. பிறகு ஸ்ரீங்கம் வந்து ஆசாரியராக இருந்து வந்தார். தம்முடைய இறுதிக்காலம் நெருங்கியதை அறிந்ததும் அடியார்களேக் கூட்டுவித்துத் தம்முடைய குறைகளைக் குறித்து மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டார். அற நெறி வழுவாமல் நடந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். 1137ஆம் ஆண்டு எம்பெருமான் அடி சேர்ந்தார். இராமானுசர் உபய வேதாந்தத்தை வெளிப்படுத்தினவர். வடமொழியிலுள்ள உபநிஷதம், பிரமகுக்திரம், கீதை என்பவைகளின் முடிபுகளேயும், தமிழ் வேதமாகிய ஆழ்வார் பிரபந்தங்களின் போதனைகளே =யும் சமரசப்படுத்தி ரிஷிகளும் ஆழ்வார்களும் ஒரே உண்மையைப் போத
ித்தவர்கள் என்பதை அவர் நிலைநாட்டினர். அவரிடத்துத் தத்துவமும் அனுபவமும் ஒன்றாக இணைந்து நின்றன. இராமானுசர் தமது நூற்றுண்டிலேயே பாரதநாடு முழுவதும் சென்று, மூன்றுவிதப் பிரமாணங்களால் பேதம், அபேதம் முதலிய சுருதிகளைச் சமரசப்படுத்தி, ஞானம், பக்தி இரண்டும் ஒன்றே என்று வற்புறுத்தி வைணவ மதத்தை எங்கும் நிலைநாட்டினர். விசிஷ்டாத்துவைதம் என்பதை அறிமுகப்படுத்தினார்.

விசிஷ்டாத்துவைதம் என்றால் என்ன?

விசிஷ்ட + அத்வைதம் = விசிஷ்டாத்வைதம். அத்வைதம் இரண்டற்ற ஒன்றாக உள்ளது. விசிஷ்டம் – விசேஷம். விசிஷ்டாத்வைதமானது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து.பிரம்மம் ஒருவரே. அவர் சித்து என்றும் பிரம்மம் என்றும் ஈஸ்வரன் என்றும் விஷ்ணு என்றும் பெயர் பெறுகிறார்.

அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர் சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை. ஆசாரிய அன்பு சுருதி, ஸ்மிருதி – நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுதல், தரும சிந்தனை, வேத பாராயணம், சாது சங்கமச் சேர்க்கை முதலானவற்றால் கர்மபந்தத்தை விட்டு முக்தி பெறலாம்.

error: Content is protected !!
  • Sign up
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.