15வது நிதிக்குழு அமைக்கப்பட்டது

15வது நிதிக்குழுவின் தலைவராக என்.கே சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதன் உறுப்பினர்களாக சக்தி காந்த தாஸ், அசோக் லகிரி , ரமேஷ் சந்த் மற்றும் அனுப் சிங் ஆகியோர் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டு குடியரசுத்தலைவரால் நியமணம் செய்யப்பட்டுள்ளனர். இக்குழு 2020 ஏப்ரல் 1 முதல் 2025 மார்ச் 31 வரை மத்திய மானில அரசுகள் எவ்வாறு நிதியை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை பரிந்துரையாக மத்திய அரசுக்கு வழங்கும்.

நிதிக்குழு என்றால் என்ன?

அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 280ன் படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையோ அல்லது குடியரசுத்தலைவர் விரும்புப்போதோ இக்குழு அமைக்கமைப்படும். மத்திய அரசிடம் உள்ள நிதி வருவாயிலிருந்து மானிலங்களுக்கு எவ்வாறு நிதி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை பரிந்துரை செய்யும் அமைப்பு.

நிதிக்குழுவின் பணிகள் 

 • மத்திய அரசு மானில அரசுக்கு வரி வருவாயிலிருந்து எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை பரிந்துரை செய்வது
 • மாநிலங்களுக்கு மத்திய அரசு எவ்வாறு நிதி மானியங்கள் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்வது
 • குடியரசுத்தலைவர் நிதி தொடர்பாக சில குறிப்பிட்ட பணிகளை செய்ய கேட்டுக்கொண்டால் செய்வது

இவைதான் முக்கிய பணிகள் ஆகும். இதன் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளாததும் பாரளமன்றத்தின் விருப்பம் ஆகும்.

ஒருவரித்தகவல் 

 • முதல் நிதிக்குழு 1952 ஆம் ஆண்டு கே.சி நியோகி தலைமையில் அமைக்கப்பட்டது
 • நான்காவது நிதிக்குழுவின் தலைவர் பி.வி ராஜமன்னார்
 • 12வது நிதிக்குழுவின் தலைவர் ரங்கராஜன்
 • 13 வது  நிதிக்குழுவின் தலைவர விஜய் கெல்கர்
 • 14வது நிதிக்குழுவின் தலைவர் பி.வி ரெட்டி ( 2015-2020)
 • 15வது நிதிக்குழுவின் தலைவர் என்.கே சிங்
 • 15வது நிதிக்குழுவில் பாண்டிச்சேரி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
error: Content is protected !!
 • Sign up
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.