பிட்காயின் மற்றும் ப்ளாக் செயின் தொழில் நுட்பம் Bitcoin & Block Chain Technology

பிட்காயின் மற்றும் ப்ளாக் செயின் தொழில் நுட்பம்

Bitcoin & Block Chain Technology

DOWNLOAD AS PDF பிட்காயின் மற்றும் ப்ளாக் செயின் தொழில் நுட்பம்

பணத்திற்கு பல பரிமானங்கள் உண்டு – ஒன்று, அது எந்த நாட்டைச் சேர்ந்தது; இரண்டு, அந்த நாட்டு அரசால் அல்லது மத்திய வங்கியால் உருவாக்கப்பட்டது என்பதாகும். ஆனால் எந்தவொரு நாட்டையும் சேராமல், எந்தவொரு நிறுவனத்தையும் சேராமல் கணினி மூலம் அடையாளம் தெரியாத சிலரால் உருவாக்கப்படுது பிட்காயின்.

பிட்காயின் என்றால் என்ன?

பிட்காயின் (Bitcoin) என்பது சட்கோஷி நகமொட்டாவால் உருவாக்கப்பட்ட ஒரு (Cryptocurrency) எண்ணிம நாணயமுறை ஆகும். இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மெண்பொருளும்  இதே பெயராலேயே அழைக்கப்படுகிறது. மூன்றாம் நிறுவனத்தின் துணை இல்லாமல் இரு நபர்கள், தங்களிடையே பணப் பரிவர்த்தனை செய்வதையும், அந்தப் பரிவர்த்தனையை உறுதி செய்து, அதே நேரத்தில் இருவரின் அடையாளங்களைப் பாதுகாத்து வைக்கவும் ஒரு கனித கனினி முறையை பயன்படுத்தி செயல்படுகிறது

பெரும்பாலான நாணயமுறைகளைப் போலன்றி பிட்காயின் நாணயத்தைக் கட்டுப்படுத்தும் நடுவண் அமைப்பு ஏதும் இல்லை. இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவது மூலம் இதில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன மோசடிகளை தவிர்க்க ஒரு பிட்காயினை அதன் உரிமையாளர் ஒரு முறை மட்டுமெ செலவளிக்க  முடியும் . ஒரே பிட்காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.

ப்ளாக் செயின் தொழில் நுட்பம்

ப்ளாக் செயின் தொழில் நுட்பம் என்பது ஒரு திறந்த வெளி மின்  பேரேடு( electronic open Ledger)  யார் வேண்டுமானாலும் இந்த மின்னனு பேரேட்டில் மாற்றம் செய்ய இயலும் ஆனால் இதில் மாற்றம் செய்வதற்கு பரிவர்த்தனையில் உள்ள இருவரும் இனைந்து கனித குறியீடுகளை அடிப்படையாக வைத்து மட்டுமே  மாற்றம் செய்ய இயலும். எடுத்துக்காட்டாக விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் முன்னர் கொடுக்கப்ப்பட்ட தகவல்களை மாற்றிக்கொள்ள இயலும் ஆனால் விக்கிபீடியாவை பொறுத்தவரையில் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மையம் ஒன்று இருக்கும் அதன்மூலமும் தகவல்களை கட்டுப்படுத்த இயலும்.

ஆனால் ப்ளாக் செயின் தொழில் நுட்பத்தில் மூன்றாம் நபர் இல்லாமல் அதில் ஈடுபட்டிருக்கும் இருவரும் ஒப்புதலுடன் தான் மாற்றம் செய்ய முடியும், அதே போல் திறந்த வெளி மின் பேரேட்டை அனைத்து பயனாளர்களும் பார்க்கும் வண்ணம் இருக்கும். எனவே யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக பிட்காயின் பரிவர்த்தனை நடைபெற இயலாது. சில குறுப்பிட்ட கால அளவில் நடைபெறும் பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும், ஒரு ப்ளாக் (Block) என்ற அளவில் ஒன்று சேர்க்கப்படும். பிறகு அந்த ப்ளாக் ஏற்கனவே உள்ள ஒரு ப்ளாக் செயினில் சேர்க்கப்படும். பிட்காயின் சமூகத்தில் உள்ளவர்கள் இந்த ஓப்பன் லெட்ஜர் மற்றும் ப்ளாக் செயின் உருவாக்கத்தில் ஈடுபடுகின்றனர்.

கவனத்தில் கொள்ளக்கூடியவை

  • இங்கே பிட்காயினைப் பொறுத்தவரை எந்த ஒரு மூன்றாம் நபரும் கண்கானிக்க முடியாது. உதாராணமாக வங்கியில் இனையப்பரிவர்த்தனை மூலம் நாம் இன்னொருவருக்கு பணம் அனுப்பினால் அது பணம் அனுப்பிய நமக்கு , பணம் பெற்றவர் மற்றும் ஆகிய மூவரும் அறிய இயலும் ஆனால் ப்ளாக் செயின் தொழில் நுட்பத்தில் பிட்காயின் இயங்குவதால் பணம் அனுப்பியவருக்கும் பணத்தை பெற்றவருக்கும் மட்டுமே பரிவர்த்தனை பற்றிய விவரங்கள் தெரிய வரும்.

  • மேலும் இது அரசாலோ பிற மத்திய வங்கியாலோ அனுமதிக்கப்பட்ட கட்டளைப் பணம் (Fiat money) கிடையாது .

  • இந்தியாவில் இப்பணம் சட்டவிரோத பணமாக கருதப்படும்

Add a Comment

You must be logged in to post a comment

Shopping Basket
error: Content is protected !!