இந்தியாவும் சூறாவளியும்
download India and Cyclone – Iyachamy Academy
இந்தியா இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கபடக்குடிய நாடாகும் ,குறிப்பாக , புயல்,வெள்ளம், நில நடுக்கம் நிலச்சரிவு, வறட்சி போன்றவை அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது அந்த வகையில் இந்தியாவில் மே மற்றும் ஜீன் , நவம்பர் , டிசம்பர் ஆகிய காலகட்டங்களில் புயல் அதிகமாக உருவாகின்றது. ஆனால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் ஏற்படும் சூறாவளிகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக வங்கக்கடலில் உருவாகின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை 13 மானிலங்கள் கடற்கரையைக் கொண்டுள்ளது அவற்றில் குறிப்பாக , ஆந்திரம் , ஒரிசா, தமிழ் நாடு, மேற்குவங்கம் ஆகிய மானிலம் புயலால் அதிக பாதிப்பிற்குள்ளாகிறது.
சூறாவளிகள் ( Cyclones)
சூறாவளிகளை நடைமுறை வழக்கில் புயல் என்பர். வானிலை வரைபடத்தில் குறாவளி நெருங்கிய சம அழுத்தக் கோடு களால் காண்பிக்கப்படும். சூறாவளி என்பது, ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாகும். வளிமண்டலத்தில் பகுதியான இதன் மையத்தில் அழுத்தம் மிகக் குறைவாக இருக்கும். எனவே, காற்று பல்வேறு திசைகளிலிருந்து இதன் மையத்தை நோக்கிக் குவிகின்றது. பெரல்ஸ் விதிப்படி காற்று நேராக வீசாமல் விலகி வீசுகிறது. இது சுழற்சியான காற்றுகளை உண்டாக்குவதால் சூறாவளி எனப் பெயர் பெற்றது.
வட அர்த்த கோளத்தில் சூறாவளியில் காற்று வலப் புறமாக விலகி வீசுகிறது. எனவே அக்காற்றுகள் எதிர்ச் சூறாவளித் திசையில் வீசுகின்றன. அதே சமயத்தில் தென் அர்த்த கோளத்தில் காற்றுக் கடிகாரக் காற்றுத் திசையில் வீசு கின்றன. ஏனெனில் காற்று இங்கு இடப் புறமாக விலக்கப் படுகிறது.
வெப்ப மண்டலத்தில் உண்டாகும் சூறாவளிகளை வெப்ப மண்டலச் சூறாவளிகள்’ என்றும், வெப்ப மண்டலத்திற்கு வெளியே தோன்றும் சூறாவளிகளை வேப்ப மண்டலத்திற்கு அப்பாற்பட்ட சூறாவளிகள் அல்லது “மிதவெப்ப மண்டலச் சூறாவளிகள் என்பர்
வெப்ப மண்டலச் சூறாவளிகள் ( Tropical Cyclone )
வெப்பமண்டல சூறாவளிகள் அடிக்கடி பேராழிகளில் 60° முதல் 120 வரையுள்ள அட்சங்களில் தோன்றுகின்றன. அவை சாதாரணமாக மேற்காக நகர்ந்து மேற்குக் கோடியில் துருவத்தை நோக்கி வீசுகின்றன.
வெப்ப மண்டலச் சூறாவளிகள் வழக்கமாக உருவத்தில் சிறியவை. அவற்றின் இடை விட்டம் சில கி. மீ. களிலிருந்து பல நூறு கி மீ.கள் வரை பரவியுள்ளது. பூமத்தியரேகைப் பகுதிகளில் இதன் விட்டம் துருவப் பகுதி விட்டத்தைக் காட்டிலும் குறைந்து காணப்படுகிறது. இதற்குக் காரணம் கொரியாவிஸ் விசை மத்தியரேகையில் குறைவாக இருப்பதே யாகும். வெப்ப மண்டலச் சூறாவளிகளை வானிலை வரை படத்தில் நெருங்கிய சம அழுத்தக் கோடுகளால் குறிக்கப்படும். எனவேதான் சுழற்காற்றுகளும் பெருமழையும் காணப்படுகின்றன. ஆனால் சூறாவளியின் மையம்’ அல்லது ‘கண்’ எந்தவித மாறுதலும் இல்லாமல் காணப்படுகிறது. மையப்பகுதி அமைதியாகவும் லேசான மற்றும் மாறுபட்ட காற்றுகளுடனும் காணப்படுகிறது.வெப்ப மண்டல சூறாவளி மணிக்கு 15 முதல் 30 கி.மீ. வேகம்வரை நகர்கிறது. சிலசமயங்களில் இது வீசும் வேகம் 200 கி மீ. க்குமேல் இருப்பதும் உண்டு.
வெப்பமண்டல சூறாவளிகள் தோன்றக் காரணம்
வெப்ப நிலையில் காணப்படும் நிலையில்லாத் தன்மையாகும். கொரியாலிஸ் விசை பூமத்தியரேகையில் குறைவாக உள்ளதால் பூமத்தியரேகை அமைதி மண்டலம் (Doldrums) பூமத்திய ரேகையை விட்டுத் தூரத்தில் இருக்கும் போது அதிகமான சூறாவளிகள் தோன்றுகின்றன. இவை பெரும்பாலும் கோடைகாலத்தின் பின்பகுதியிலும் மற்றும் முன் இலையுதிர்காலத்திலும் அதிக அளவு தோன்றுகின்றன.
- மிகப்பெரிய கடல்பரப்பு வெப்ப நிலை 270 செல்சியஸ்க்கு அதிகமாக இருக்கும்போது
- கொரியாலிஸ் விசை செயல்பாட்டில் இருக்கும்போது
- செங்குத்தாக வீசும் காற்றில் சிறிய அளவில் மாறுபாடு இருக்கும்போது
- காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும்போது
வெப்ப மண்டலச் சூறாவளிகளைப் பல்வேறு இடங்களில் பல் வேறு பெயர்களால் குறிக்கின்றனர். இந்தியாவில் சூறாவளி என்றும், மேற்கு இந்தியத் தீவுகளில் (பெரும் புயல்) ஹரிக் கேன் என்றும், கிழக்கு ஆசியாவில் டைப்பூன் என்றும், மற்றும் ஆஸ்திரேலியாவில் வில்லி-வில்லீஸ் என்றும் குறிப்பிடு கின்றனர்.
இந்தியாவில் புயல் பாதிப்புக்குள்ளாகும் இடங்கள்
மித வெப்ப மண்டலச் சூறாவளிகள் ( Extra tropical Cyclone )
வெப்ப மண்டலமல்லாத சூறாவளிகளை மத்திய அட்ச ரேகைச் சூறாவளிகள் என்பர், வெப்ப மண்டலச் சூறாவளிகளைப் போல் அல்லாமல் இவை மிகப்பெரிய வழியுடையதாகும். இச் சூறாவளிகளின் விட்டம் பல ஆயிரம் கி. மீ.கள் உடைய தாகவும் சில சமயங்களில் பல மில்லியன் கி.மீட்டர் வழியுடைய தாகவும் இருக்கும். இவை நீள்வட்ட வடிவமுடையவை; நீளம் அதிகமாக அதிகமாகக் குறைந்த செறிவுடையதாக இருக்கும்.
இச்சூறாவளிகள் வளி முகங்களினளவாகத் தோன்றுகின்றன. மத்திய அட்ச ரேகைப் பகுதிகள் குளிர் வளிப்பகுதிகளும் வெப்ப வளிப்பகுதிகளும் கூடும் இடமாகையால் இவை இங்கு அதிகம் காணப்படுகின்றன. காற்று இங்குக் குவிந்து வளிமுகத்தின் வழியாக மேலெழும்புவதாலும் குறைந்த அழுத்தமுடையதாலும் அவை சூறாவளிகள் தோன்ற இடமாகின்றன. சூறாவளி வளர்கின்றபோது அழுத்தச் சரிவு மையத்தை நோக்கி இழுக்கும். அப்போது கொரியாலிஸ் விசையின் காரணமாகக் காற்றுகள் சுழன்று வீசுகின்றன.
வெப்ப மண்டலமில்லாத சூறாவளிகள் வளிமுக மண்டலத்தில் மேற்கிலிருந்து கிழக்காக வீசுகின்றன. அவற்றின் சராசரி வேகம் மணிக்கு 30 கி.மீ. -லிருந்து 50 கி. மீ. வரை மாறுபடுகிறது. இவற்றின் வேக அளவு கோடைக் காலத்தைக் காட்டிலும் குளிர்காலத்தில் அதிகமாக இருக்கும்.
எதிர்ச் சூறாவாளிகள் ( Anti Cyclone)
எதிர்ச்சூறாவளிகள் சூறாவளிக்கு மாறுபட்ட நிலைமையினை உடையவை என்பதைக் குறிக்கும். எதிர்ச் சூறவாளிகள் குவிகின்ற மற்றும் விரிந்து வீசுகின்ற பண்புகளைக் கொண்ட காற்றைக் கொண்டவை. இங்கு அதிக அழுத்தம் மையத்திலுள்ளது; வெளியே செல்லச் செல்ல அழுத்தம் குறைகிறது. கொரியாலிஸ் விசை காரணமாகக் காற்றுச் சுற்றோட்டம் வட அரைக் கோளத்தில் கடிகார திசையிலும், தென் அரைக்கோளத்தில் எதிர்க்கடிகார திசையிலும் காற்று சுழலும்.
அரபிக்கடலைக் காட்டிலும் ஏன் வங்காள விரிகுடாவில் அதிகப் புயல்கள் உருவாகின்றது?
வங்காள விரிகுடா அரபிக்கடலைக் காட்டிலும் அதிக வெப்பமாக இருப்பதால் இங்கு காற்றின் அழுத்தம் குறைந்து கானப்படுகிறது . இது புயல் உருவாக உகந்த சூழ்நிலையாக இருக்கிறது.
புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை
ஏன் புயலுக்கு பேர்கள் வைக்கப்படுகின்றன?
ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நட வடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.
பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.
புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம். பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
இந்தியப் பெருங்கடல்
வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.