குருப் 2 முதனிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு பாடத்திட்டம் மற்றும் படிக்க வேண்டிய புத்தகங்கள்

குருப் 2 முதனிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு  பாடத்திட்டம் மற்றும்

படிக்க வேண்டிய புத்தகங்கள்

CLICK TO DOWNLOAD TNPSC GROUP II PRELIMS & MAINS SYLLABUS IN TAMIL 2018 IYACHAMY ACADEMY

பொதுவாக  நீங்கள் தமிழில் 90 வினாக்களுக்கு மேலாக விடையளிக்க முயற்சி செய்யவும் . பொது அறிவுப் பகுதியைப் பொறுத்தவரை 70 வினாக்களுக்கு மேலாக விடையளிக்க வேண்டும் அப்போதுதான் உங்களால் வெற்றியடையமுடியும் . ஆயினும் ஒவ்வொருவரும் 180 வினாக்களுக்கு மேல் எடுக்க கடுமையாக முயற்சி செய்யுங்கள் .

பொதுவான  அறிவுரைகள்.

  1. முதலில் பள்ளிப்பாடப்புத்தகங்களை படிக்கவும்திருப்புதலுக்காக மட்டுமே அல்லது ஏதேனும் கூடுதல் தகவலுக்காக வேறு நிறுவனத்தின் பாடக்குறிப்புகளை படிக்கவும்

  2. ஒரு நாளைக்கு 5- 7 மணி நேரம் படித்தால் போது உங்களால் வெற்றிபெற முடியும். சிலர் கூறுவது போல் 10 மணி நேரம் படிப்பதென்பது சிறந்ததாக இருக்காது. நாம் எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதை விட எப்படி படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். மேலும் அனைத்து நாட்களிலும் உங்களால் ஒரே போல் படிக்க இயலாது சில நாட்கள் அதிக நேரம் படிக்கலாம், சில நாட்கள் குறைவான நேரம் படிக்கலாம் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. அனைவரும் இது மாதிரி பிரச்சனையை எதிர்கொள்வர்.

  3. பாடத்திட்டத்தை மையமாக வைத்தே படியுங்கள் அது உங்கள் தயாரிப்பினை நெறிப்படுத்தும். முடிந்தால் நீங்கள் படிக்கும் இடத்தில் பாடத்திட்டத்தினை நீங்கள் பார்க்கும் படி வைத்தால் சிறப்பாக இருக்கும்.

  4. சிலர் பல்வேறு பயிற்சி மையங்களின் பாடக்குறிப்புகள் ( மெட்டீரியல்ஸ்) சேகரிப்பர் ஆனால் அவற்றை படிக்க மாட்டார்கள். எனவே நீங்கள் ஏதாவது ஒரு பயிற்சி மையத்தின் பாடக்குறிப்பினை பயன்படுத்துங்கள்.

  5. பொதுவாக மொழிப்பாடம் தமிழ்/ஆங்கிலம்/ மற்றும் அறிவுக்கூர்மை மற்றும் நடப்பு நிகழ்வுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் உங்களால் சரியாக 125 கேள்விகளுக்கு இந்த மூன்று பகுதிகளில் இருந்து விடையளிக்க இயலும். இதை கவனத்தில் கொள்ளுங்கள்.

  6. கூடுமானவரை பழைய வினாத்தாள்களை அடிப்படையாக வைத்து உங்கள் தயாரிப்பினை மேம்படுத்துங்கள்.

  7. பாடப்புத்தகம் தவிர்த்து,மனோரமா பொது அறிவுப் புத்தகம், அல்லது விகடன் பொது அறிவுப் புத்தகம் , ஆங்கிலத்தில் அரிஹந்த் அல்லது லூசெண்ட் பொது அறிவு புத்தகத்தில் ஏதாவது ஒன்றை நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டும். நீங்கள் இப்புத்தகத்தினை படித்தால் அதிகபட்சம் சராசரியை விட கூடுதலாக உங்களால் 15 வினாக்களுக்கு சரியான விடையளிக்க வேண்டும். டாக்டர் சங்கர சரவணின் பொது அறிவுக் களஞ்சியம் என்ற புத்தகத்தையும் வாசிக்க வேண்டும்

  8. நாம் எவ்வளவுதான் படித்தாலும் தேர்வு நாளன்று நாம் 3 மணி நேரத்தில் எவ்வாறு விடையளிக்கப்போகிறோம் என்பதில் தான் இருக்கிறது அங்கு நாம் பண்ணுகின்ற தவறு என்னவென்றால் கேள்வியை தவறாக புரிந்து கொண்டு விடையளிப்பது இதை தவிர்ப்பதற்காக ஏதேனும் ஒரு வினாத்தாள் ( சக்தி அல்லது சுரா )தொகுப்பினை வைத்து ஒவ்வொரு வாரமும்பயிற்சி செய்யுங்கள் .

  9. உங்களுக்குதேவையான ,பாடக்குறிப்புகள்  (iya.competitiveexam.in) இனையதளத்தில் பதிவேற்றப்படும்.

[embedyt] https://www.youtube.com/watch?v=MPUNq_mxst0[/embedyt]

[embedyt] https://www.youtube.com/watch?v=R3SMqsNQnq0[/embedyt]

[embedyt] https://www.youtube.com/watch?v=Ty-vaD7whAE[/embedyt]

[embedyt] https://www.youtube.com/watch?v=dqNVQyr3IB8[/embedyt]

https://iyachamy.com/downloads/tnpsc-group-2-syllabus-prelims-mains-2018/