விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி*
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டுமென்பதல்ல செய்யும் முயற்சியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான்.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குருப் 2 நேர்காணல் தேர்வில் வெற்றிபெற்ற பல நண்பர்கள் என்னை நேரில் சந்தித்தும்,தொலைபேசி வாயிலாகவும், வாட்சப் வாயிலாகவும் தங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர் அப்போது நான் நெகிழ்ந்து போனேன் ஏனென்றால் 2015 ஆம் ஆண்டு குருப் 1 முதன்மைத் தேர்வு எழுதி முடித்தவுடன் பின்னர் நடைபெற்ற குருப் 2 நேர்காணல் தேர்வின் முதல் நிலைத் தேர்வுக்குப் பின் குருப் 2 முதன்மைத் தேர்வானது குருப் 1 முதன்மைத் தேர்வின் மூன்றாவது தாளினை ஒத்திருக்கும் வாய்ப்பிருப்பதாக என்னி வீடியோவாக பதிவிட்டேன்.முதன்மைத் தேர்வு முடிவுகள் வந்த பின்பும் வீடியோ மற்றும் நேர்காணலுக்கான குறிப்புகள் வெளியிட்டேன் இதன் விளைவாக 200க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களின் நன்றி மற்றும் மகிழ்ச்சிப் பகிர்வு என்னை நெகிழ வைத்தது அந்த ஊக்கமே என்னை இப்போது தொடர்ந்து போட்டித்தேர்வுகளுக்காக தயார் செய்து வரும் நண்பர்களுக்கு வழிகாட்ட தொடராக இதை எழுது இருக்கிறேன்.
இன்றைய சூழ்நிலையில் தனியார் வேலைவாய்ப்புகளும் குறைந்து விட்ட நிலையில் அரசுப்பணி ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு தயாராகிவரும் சூழ் நிலையில் எல்லோராலும் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க இயலாதவர்களுக்கு இந்தத் தொடர் உதவிபுரியும் என்று நம்புகிறேன்.
[gview file=”https://iyachamy.com/wp-content/uploads/2018/07/விடாமுயற்சி-விஸ்வரூப-வெற்றி-1-Iyachamy-academy.pdf”]