july 30222

IYACHAMY CURRENT AFFAIRS|JULY3|TAMIL & ENGLISH

நடப்பு நிகழ்வுகள் ஜீலை 3

DOWNLOAD CURRENT AFFAIRS AS PDF

  • The newly-formed Cauvery Water Management Authority (CWMA) has ordered Karnataka to release 31.24 tmcft Cauvery water to Tamil Nadu in July.

  • காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜீலை மாதத்திற்கு கர்னாடக அரசு 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டுள்ளது.

  • PM Modi spells out 4-point agenda to double farmers’ incomes. reducing cultivation costs, ensuring profitable prices, processing farm waste and creating non-farm sources of income

  • விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு 4 அம்சத் திட்டத்தை மத்திய அரசு பின்பற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பயிரிடுவதற்கு ஆகும் செலவை குறைத்தல், விவசாயிகளுக்கு அவர்களது பயிர்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்தல், அறுவடைக்கு பிறகு ஏற்படும் இழப்பை குறைத்தல், விவசாய பொருள்களை விற்பதற்கு கூடுதல் மையங்களை உருவாக்குதல் ஆகியவையே அந்த 4 அம்சத் திட்டமாகும்

  • Supreme Court seeks time-frame for appointing Lokpal in 10 days. Under the Lokpal and Lokayukta Act of 2013, the high-level selection committee for appointments to Lokpal comprises the Prime Minister, Lok Sabha Speaker, the LoP, the Chief Justice of India and an eminent jurist chosen by them. The 16th Lok Sabha does not have an LoP as the Congress party failed to get the required 10 per cent membership.

  • லோக்பால் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 10 நாள் அவகாசம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கான லோக்பால் சட்டம், நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

    லோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான குழுவில், பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று அந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததால், லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்களை நியமிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

  • Sunil Mehta committee on bad loans resolution has recommended a five-pronged strategy — Project ‘Sashakt’ — to deal with Non-performing Assets in the country’s banking system

  • வங்கிகளின் செயல்படாத கடன்களை மீட்டெடுப்பதற்கு 5 அம்ச முறைகளை பின்பற்றுமாறு சுனில் மேத்தா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

  • The results of 4thRound of negotiations under the Asia Pacific Trade Agreement (APTA) (formerly Bangkok Agreement) among six countries, namely, Bangladesh, China, India, Lao PDR, Republic of Korea, and Sri Lanka, have been implemented with effect from 1stJuly, 2018

  • ஆசிய பசுபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் நான்காவது பேச்சுவார்த்தை முடிவுகள் ஜீலை 1,2018 முதல் அமலுக்கு வந்துள்ளன.இவ்வொப்பந்தத்தின் முன்னாள் பெயர் பாங்காக் ஒப்பந்தம் ஆகும். மொத்தம் ஆறு நாடுகள் உள்ளன. வங்கதேசம், இந்தியா, லாவோ,கொரியா,இலங்கை,சீனா ஆகியவை

  • Chief Minister launched (2/7/18) UMANG , a state and central government services app. A user can sign up on the app for services of State and Central Government. The UMANG app has 162 services from 33 state and central government departments and states. (Unified Mobile Application for New-age Governance)

  • முதலமைச்சர் உமாங் செயலியை 2/7/18 அன்று தொடங்கி வைத்தார்.தேசிய மின் ஆளுமை திட்டத்தின் மூலம் புதுயுக ஆளுகைக்கான பொது அலைபேசிய் செயலி (Unified Mobile Application for New-age Governance) தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு , மானில அரசு மற்றும் உள்ளாட்சித்துறைகளால் வழங்கப்படும் சேவைகள் இதில் கிடைக்கும்.

குருப் 1 முதன்மைத் தேர்வு வினா

  1. What are the Steps Taken by Tamilnadu Government to Promote E-Governance.

தமிழக் அரசு மின்னாளுகையை மேம்படுத்துவதற்கா எடுத்த நடவடிக்கைகள் என்ன?

TNPSC GROUP I & II PRELIMS &  MAINS ADMISSION OPEN

  1. TEST BATCH / ONLINE POSTAL

  2. CLASSES / CLASSROOM COACHING  / ONLINE COACHING

TO JOIN CONTACT 9952521550

To get Daily Current Affairs Whatsapp with your name and District to 7418521550

For Group I & II Mains Answer writing practice send your details with languages to 044-48601550 via whatsapp.