IYACHAMY CURRENT AFFAIRS- குருப் 4 தேர்விற்கான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு

IYACHAMY CURRENT AFFAIRS- குருப் 4 தேர்விற்கான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு

CLICK DOWNLOAD CCSE IV CURRENT AFFAIRS IN TAMIL

DOWNLOAD CCSE IV EXPECTED CURRENT AFFAIRS

DOWNLOAD MOCK TEST GENERAL TAMIL – 2

DOWNLOAD MOCK TEST GENERAL KNOWLWDGE

நடப்புச் சுவடுகள் -2018

மே 2017 முதல் ஜனவரி 15 2018 வரை

பொருளடக்கம்

1 முக்கிய அமைப்புகளின் தலைவர்கள்
2 சர்வதேச அமைப்புகளின் தலைமை மற்றும் ஆண்டு
3 உலக  நாடுகளின் தலைவர்கள் , சில தகவல்கள்
4 முக்கிய மாநாடுகள்
5 முக்கிய குறீயீடுகள்
6 தமிழ்நாடு அமைப்புகள் தலைவர்கள்
7 தமிழக அரசின் விருதுகள்
8 முக்கிய கமிட்டிகள் சமீபத்தில் அமைக்கப்பட்டவை
10 புத்தகங்கள் மற்றும் ஆசிரியகள் ( சமீபத்தியவை)
11 செயலிகள் ( சமீபத்தியவை)
12 முக்கிய விருதுகள் 2017 -18 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டவை
13 மாதவாரியான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு மே 2017 முதல் ஜனவரி 15 2018 வரை
14 முக்கிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள்
15 காங்கிரஸ் மாநாடுகள் , தலைவர்கள்
16 சர்வதேச முக்கிய ஆண்டுகள்
17 இந்தியா மற்றும் உலக அளவில் முதன்மைகள்
19 ஐந்தாண்டுத்திட்டங்கள்
21 மக்கள் தொகை
22 விருதுகளும் அவை,சார்ந்த தகவல்களும்
23 மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள்
24 குருப் 1 மற்றும் 2 முதன்மைத் தேர்வு மாதிரி விடைகள்
25  குருப் 4 மாதிரி வினாத்தாள் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு

 

”எறும்பூரக் கல்லும் தேயும்”

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் எல்லோரும் தேர்வு நாளை சிலர் சிறு அச்சத்துடனும் சிலர் உற்சாகத்துடனும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பீர்கள் அந்த காத்திருக்குப்பு இடையில் நடப்பு நிகழ்வுகள் தொகுப்பினை இந்த முறை புத்தகமாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் இதற்கு காரணம் நீங்கள்  நமது இனையதளத்தில் கொடுத்த ஆதரவுதான் எனக்கூறி  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் நடப்புச் சுவடுகள் என்ற பெயர் தாங்கி மாத இதழாகவோ அல்லது குறு இதழாகவோ வெளியிட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது அது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கும் குடிமைப்பணித்தேர்வுக்கும் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு தாய்த் தமிழில் எளிமையான முறையில் கட்டுரைகள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

“எறும்பூரக் கல்லும் தேயும்” என்பது வெறும் பழமொழியல்ல ஒரு செயலின்  விடாமுயற்சியின்  தன்மையினை மிக எளிமையாக விளக்கும் ஒரு தொடர். கனவு கை கூடுதல் என்பது நிமிடப் பொழுதில் நடக்கும் நிகழ்வல்ல அது இடைவிடாத தொடர்முயற்சியின் விளைவாகத்தான் இருக்கும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குருப் 4 & வீஏஓ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையினைப் பார்த்தால் போட்டி பலமாக இருப்பது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுவது இயல்புதான். இப்போட்டி எவ்வாறானது எனில் நாம் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலே நெடுந்தூர ஓட்டப்போட்டியை பார்த்திருப்பீர்கள் பந்தயத்தின் துவக்கத்தில் கூட்டமாய் இருக்கும் தூரம் செல்ல செல்ல தொடர்ந்து ஒடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். போட்டியின் இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நெருங்கும்போது வெகு சிலரே தொடர்ந்து ஓடிக்கொண்டே வெற்றி பெறுவார்கள். எனவே தேர்வுக்கு விண்னப்பித்தவர்களின் எண்ணிக்கையை வைத்து கவலை கொள்ள தேவையில்லை.

1992 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெரக் ரெமாண்ட் என்ற தடகளவீரர் ஆனால் அரை இறுதிப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையோடு ஓடிக்கொண்டிருந்த  டெரக் எதிர்பாரத விதமாக வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு தொடர்ந்து ஓடமுடியாமல் கடுமையான வலியால் துடித்தார். மற்ற வீரர்கள் எல்லாம் வெற்றி இலக்கை நோக்கி ஒடிக்கொண்டிருந்தனர். போட்டியை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்தாலும்,தசைப்பிடிப்பு ஏற்பட்ட காலைத் தரையில் ஊன்ற முடியாமல் நொண்டிக் கொண்டே அவர் தொடர்ந்து ஓடினார்.வலியோடு அவர் தொடர்ந்து ஓட முயற்சிப்பதைக் கண்ட அனைவரும் திகைத்து நின்றனர், அவரை நிறுத்த மருத்துவர் மற்றும் மகன் முயற்சித்தும் டெரக் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்.அதற்குள் போட்டி முடிந்துவிட்டது இருந்தாலும் தொடர்ந்து ஓடியே தீருவேன் என்ற ரெட்மாண்டின் மன உறுதியை பார்த்து வியந்த ரசிகர்கள் அனைவரும் அந்த பந்தயத்தில் பரிசு வென்றவர்களுக்கு உட்கார்ந்தபடியே கரவொலி செலுத்திய ரசிகர்கள் டெரக் ரெட்மாண்டிற்கு எழுந்து நின்று கைதட்டினார்கள்.”தொடர்ந்து ஓடுங்கள் போட்டியின் துவக்கப் புள்ளிதான் நிரம்பி வழிகிறது நிறைவுப்புள்ளி காலியாகத்தான் இருக்கிறது”.

இந்த தொகுப்பானது நடப்பு நிகழ்வுகள் மட்டுமல்லாமல் பொது அறிவுப் பகுதியில் எதிர்பார்க்கப்படும் சில பகுதிகளும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துக்களுடன்

ஐயாச்சாமி முருகன்,

சென்னை.

9952521550.

[embedyt] https://www.youtube.com/watch?v=D4mxzJnWoBE[/embedyt]

LAST MINUTE TIPS

[embedyt] https://www.youtube.com/watch?v=ilhGgwxBfkk[/embedyt]

( குருப் 1 மற்றும் 2 முதல் நிலை முதன்மை தேர்வுக்கான வகுப்புகள் பிப்ரவரி 18 முதல் துவங்குகிறது, அஞ்சல் மற்றும் இணையவழிப் பயிற்சி வகுப்புகளும் உண்டு)

https://iyachamy.com/downloads/iyachamy-current-affairs-current-affairs-compilation-for-ccse-iv-in-english/

One Response

Add a Comment

You must be logged in to post a comment

Shopping Basket
error: Content is protected !!