IYACHAMY TNPSC GROUP 1 CURRENT AFFAIRS IN TAMIL

பொருளடக்கம்

1 முக்கிய அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள்
2 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள்
3 சர்வதேச நாடுகளின் தலைவர்கள்
4 முக்கிய குறியீடுகள் ( சர்வதேசம் மற்றும் இந்தியா)
5 முக்கிய சர்வதேச மாநாடுகள்
6 தமிழக அரசின் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள்
7 முக்கியப் புத்தகங்கள்
8 முக்கிய விருதுகள்
9 முக்கியப் புயல்கள்
10 முக்கிய வழக்குகள்
11 ஆதார் மற்றும் காவேரி சிறப்பு தகவல்கள்
12 நடப்பு நிகழ்வுகள் ஜனவரி முதல் அக்டோபர் 15 வரை
13 முக்கிய அரசியலமைப்பு திருத்தங்கள்
14 முக்கிய காங்கிரஸ் மாநாடுகள்
15 மாநிலங்கள் உருவாக்கம்
16 தேசிய சின்னம் தொடர்பான தகவல்கள்
17 முக்கிய திட்டங்கள் இந்தியா மற்றும் தமிழ்நாடு
18 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011
19 ஐந்தாண்டு திட்டங்கள் ஒரு பார்வை

இந்த நடப்பு நிகழ்வுகளைப் பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொள்ள m.iyachamy@gmail.com

எப்போதும் முயற்சியைக் கைவிடாதே!

சுறா மீன் ஒன்றை வைத்து கடல் உயிரியலாளார் ஆராய்ச்சி ஒன்றினை மேற்கொண்டார்.மிகப்பெரிய தொட்டியில் சுறாவினை விட்டார் அத்துடன் சிறிய தூண்டில் மீன்களையும் விட்டார். எதிர்பார்த்த படியே  சிறிய தூண்டில் மீன்களை சுறா தொட்டி முழுவதும் நீந்தி  விழுங்கியது

உயிரியலாளர் இப்போது பலமான  வெளிப்படையான கண்ணாடி ஒன்றை தொட்டியின் நடுவே வைத்து இரு புறமாக பிரித்தார். அதில் ஒரு புறம் சுறாவினையும் , மற்றொரு புறம் சிறிய தூண்டில் மீனையும் நீந்த விட்டார்.

மீண்டும் சுறா தாக்கியது ஆனால் இந்த முறை இடையே கண்ணாடி கொண்டு பிரிக்கப்பட்டிருந்ததால் கண்ணாடியில் அடித்தது, தடையை விடாமல் தொடர்ச்சியாக  தாக்கிக் கொண்டிருந்தது, இதே நேரத்தில் சிறிய தூண்டில் மீனாது கண்ணாடி கொண்டு பிரிக்கப்பட்டிருந்த தொட்டியின் மறு புறம் நீந்திக் கொண்டே இருந்தது, அரை மணி நேரத்தில் சுறா முயற்சியினைக் கைவிட்டது.

இச்சோதனை தொடர்ச்சியாக பல வாரங்கள் நடந்தது, ஒவ்வொரு முறையும் சுறா வலிமை குறைவாகக் கொண்டே அந்த தூண்டில் மீனை தாக்க முயற்சித்துக்கொண்டே இருந்தது, அடுத்தடுத்து  இடைப்பட்ட கண்ணாடியை தாக்க முயற்சித்து கடைசியில் சோர்வடைந்து கண்ணாடித் தடையை தாக்கும் முயற்சியை நிறுத்தியது.

கடல் உயிரியலாளர் இப்போது தடைக் கண்ணாடியை நீக்கிவிட்டார் ஆனால் சுறா  அந்த தூண்டில் மீனை தாக்க முயற்சிக்கவே இல்லை, சுறாவானது இப்போதும் இடையில் தடை இருப்பதாகவே கருது வந்தது, இதனால் சிறிய தூண்டில் மீன்  விரும்பும் இடமெல்லாம் நீந்திக்க் கொண்டிருக்கிறது

சுறாவினைப் போலவே நாமும் பல முயற்சிகளில் தோல்வியை எதிர் கொண்டதால் உணர்வுப் பூர்வமாக முயற்சியை நிறுத்தி விடுகிறோம், நாமே எளிதாக ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம் நமது முயற்சி வேலை செய்யப்போவதில்லை , கடந்த காலத்தில் நம்  முயற்சிகள் எவ்வாறு தோல்வியுற்றதோ அதே போல் இப்போதும் என நினைத்துக்கொண்டிருக்கிறோம், தடையானது நம்மிடத்திலே உள்ளது என. உண்மையான தடை நீக்கப்பட்டுவிட்ட போதும் நாம் தடை இருப்பதாகவே கருதிக் கொண்டு நாம் விரும்பும் முயற்சிகள் எடுக்காமலிருப்பது. தடைகளைத் தகர்த்து , தலையை உயர்த்து,

வாழ்த்துக்களுடன்

ஐயாச்சாமி முருகன்

சென்னை.