TAMILNADU POLICE RECRUITMENT – 2017 18 – DETAILED NOTIFICATION , SYLLABUS , BOOK LIST

தமிழ்நாடு காவல்துறை- இரண்டாம்  நிலைக்காவலர் மற்றும் தீயனைப்போர்  பதவிக்கான போட்டித்தேர்வு- 2017 -18 – பாடத்திட்டம் மற்றும் படிக்க வேண்டிய புத்தகங்கள்

DOWNLOAD DETAILED POLICE NOTIFICATION SYLLABUS BOOK LIST

கல்வித்தகுதி- 10 ஆம் வகுப்பு

விண்ணப்பிக்க இறுதி நாள் ; 27/1/2018

கட்டணம்; 130 ரூபாய்

இனையதள முகவரி : https://reg.tnusrbonline.org:8680/TNU/LoginAction_input.action

வயதுவரம்பு  – 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்

  1. பொதுப்பிரிவினர்(OC)- 24 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும் 01/07/1993க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும் ( BC, MBC,SC,ST, SCA,SCM) அல்லாதோர்;
  2. பிற்படுத்தப்பட்டோர்-மிக 26 வயதுக்கு  உட்பட்டவர், 01/07//1991 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும் ( BC,MBC, DNC)  ஆகியோர் இதில் அடங்குவர்.
  3. ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் – 29 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ( SC,ST,SCA) , 01/07/1988 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒபிசி( OBC)  என்பது கிடையாது எனவே ஓபிசி யை குழப்பிக்கொள்ளாதீர்கள்

மேற்சொன்ன மூன்றும் பொதுவாக அனைத்து தரப்பினரக்குமானது

  1. முன்னாள் இராணுவத்தினர் 45 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். 01/07/1972க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.
  2. ஆதரவற்ற விதவைகள் அனைத்துப் பிரிவினருக்கும் உச்சபச்ச வயது வரம்பு 35 ஆகும் . 01/07/1982க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

அடிப்படை தகுதிகள்

உடல் தகுதி ஆண்கள்

உயரம்

பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர்.

( OC,BC,MBC,DNC,BCM)

குறைந்தபட்ச அளவு 170 செ.மீ
ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் ( SC,ST,SCA) குறைந்தபட்ச அளவு , 167 செ.மீ

 மார்பளவு

சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ.மீ
மூச்சடக்கிய விரிவாக்கம் ( மூச்சடக்கிய விரிவாக்க நிலையில் 86 செ.மீ) குறைந்த அளவு விரிவாக்கம் 5 செ.மீ ( அதாவது உங்கள் மார்பளவு 81 செ.மீ இருந்து 5 செ.மீ  மூச்சடக்கிய நிலையில் 86 செ.மீ ஆக இருக்க வேண்டும் என்பது.

பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள்

உயரம்

பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர்.

( OC,BC,MBC,DNC,BCM)

159 செ.மீ
ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் ( SC,ST,SCA) 157 செ.மீ

எழுத்துத் தேர்வு விவரங்கள்

  1. பொது அறிவு ( 50 வினாக்கள்)
  2. உளவியல் ( 30 வினாக்கள்)

கொள்குறிவகையில் தேர்வு வடிவில் வினாக்கள் இருக்கும்

உடல்தேர்வு விவரங்கள்

  1. உடல் திறன் போட்டி – 15 மதிப்பெண்கள்
  2. சிறப்பு செயல்பாடுகள் ( NSS , NCC, விளையாட்டு போன்றவை சான்றிதழ்கள் -5 மதிப்பெண்கள்

குறிப்பு : இத்தேர்விற்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்காக 20 சதவிதம் முன்னுரிமை தரப்பட்டுள்ளது . அதற்கான சான்றிதழ் வாங்கி விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். இவை பின்னர் ஏற்றுக்கொள்ளப்படாது.

பாடத்திட்டம் மற்றும் படிக்க வேண்டியவை

எழுத்துத்தேர்வு 10-ம் வகுப்பு வரைக்கான பாடத்திட்ட தரத்தில் இருக்கும்.

  • தமிழ் செய்யுள்நூல் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள், செய்யுள்நூல் விவரங்கள், தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின் பெயர்கள் மற்றும் இலக்கண குறிப்புகள்

படிக்கவேண்டிய நூல்கள்

6 லிருந்து 10 வரையுள்ள தமிழ் பாடப்புத்தகங்கள் மற்றும்  TNPSC  நடத்திய பொதுத் தமிழுக்கான பழைய கேள்வித்தாள்கள்.

  • ஆங்கிலம் : ஆங்கிலகவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர்கள் பெயர்கள், ஆங்கில இலக்கண குறிப்புகள்

படிக்கவேண்டிய நூல்கள்

TNPSC  நடத்திய பொதுத் தமிழுக்கான பழைய கேள்வித்தாள்களை விடைகளுடன் படியுங்கள்

  • கணிதம் சிறிய கணக்குகள் ( பழைய TNPSC வினாத்தாளில் உள்ள கணக்குகளை பயிற்சி செய்தாலே போதுமானது ) கூடுதலாக கணியன் கனிதப் புத்தகம் படிக்கலாம்
  • பொது அறிவியல்:

              நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளில் அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளும் திறன், உணரும் திறன் உள்ள நல்ல கல்வித் திறன் பெற்றவர்கள் இப்பதவிக்கு எதிர்பார்க்கப்படுகிறது. வினாக்கள் இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவிகளிலிருந்து கேட்கப்படும். அறிவியல் விதிகள், அறிவியல் உபகரணங்கள், கண்டுபிடிப்புகள், அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள், மனிதனின் உடற்செயலியல், நோய்கள், அதன்விளைவுகள், நோய்களை சரிசெய்யும் முறை, அதை தடுக்கும்முறை, தேவையான உணவு உட்கொள்ளுதலின் மூலம் உடலின் சமநிலைகாத்தல், மரபியல், விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள், சுற்றுப்புறம், மற்றும் சூழ்நிலையியல், சேர்மம் மற்றும் கலவைகள், அமிலம், காரம், உப்பு மற்றும் அதன் கலவைகள், இயக்கம், நியூட்டனின் இயக்க விதிகள், பொருட்களின் பண்புகள், மின்சாரம், தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட பகுதிகள் இவை அனைத்தின் இயற்கை பண்புகள்

படிக்கவேண்டிய நூல்கள்

  • 6 லிருந்து 10 வரையுள்ள அறிவியல் பாடப்புத்தகம் மற்றும் பழைய TNPSC வினாத்தாள்களை விடைகளுடன் படியுங்கள்.
  • இந்திய வரலாறு:

சிந்துசமவெளி நாகரிகம், வேதகாலம் ஆரிய மற்றும் சங்ககாலம் மற்றும் மெளரியவம்சம், புத்த மற்றும் ஜைன மதம் குப்தர்கள் மற்றும் வர்த்தமானர்கள், பல்லவர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் சுல்தான்கள் மற்றும் முகமதியர்கள் காலத்திய முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் குறிப்பாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது ஆட்சிமுறை தற்போதைய நவீன இந்திய நிர்வாகம்.

படிக்கவேண்டிய நூல்கள்

  • 6,7,8 சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள வரலாறு பகுதி மட்டும் ( பழைய வினாத்தாள்கள் விடைகளுடன்)
  • புவியியல்

 புவி, புவியின் இயக்கம், வட்டப்பாதையில் சுற்றுதல் தன்னைத்தானே சுற்றுதல் மற்றும் அதன் விளைவுகள், புவியின் அமைப்பு, இந்தியா அமைந்துள்ள இடம், காலநிலை, பருவகால மாற்றங்கள் மற்றும் வானிலை, மழை பொழிவு, இயற்கை சீற்றங்கள் அல்லது அழிவுகள், பயிர்கள் பயிரிடும்முறை, இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்கள், மலைப்பிரதேசங்கள், தேசிய பூங்காக்கள், முக்கிய துறைமுகங்கள், பயிர்கள் மற்றும் தாதுக்கள், முக்கிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள், காடு மற்றும் காடுசார்ந்த வாழ்க்கைகள், மக்கள் தொகை பரவல் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள்.

  படிக்கவேண்டிய நூல்கள்

  • 6 லிருந்து 10 வரை உள்ள புவியியல் பாடப்பகுதி
  • இந்திய தேசிய இயக்கம் :

இந்திய தேசிய விடுதலை இயக்கம் மற்றும் விடுதலை அடைதல். விடுதலை போராட்டத்தில் பாலகங்காதர திலகள், கோபாலகிருஷ்ண கோகலே, தாதாபாய் நெளரோஜி, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் பலர், இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு, மகாகவி பாரதியார், வ.உசிதம்பரம், சுப்ரமணியசிவா, இராஜாஜி மற்றும் மற்றவர்களின் பங்களிப்பு.

படிக்கவேண்டிய நூல்கள்

  • 10ஆம் வகுப்பு வரலாற்றுப் பகுதியில் 1857 ஆம் ஆண்டு பெருங்கலகம் பாடத்திலிருந்து தமிழ் நாட்டில் சமூக மாற்றங்கள் வரை படியுங்கள். தலைவர்களைப் பற்றி படிப்பதற்கு  மனோரமா பொது அறிவுப்புத்தகம் அல்லது விகடன் பொது அறிவுப் புத்தகத்தை படிக்கலாம்.
  • நடப்பு நிகழ்வுகள்

 சமீபத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ச்சிகள், இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிகள், புதியதொழில் வளர்ச்சி, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, வரலாற்று நிகழ்வுகள். இந்திய நுண்கலைகள், நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம், முக்கிய இலக்கியம் சம்மந்தப்பட்ட வேலைகள், விளையாட்டுகள், தேசிய பன்னாட்டு விருதுகள், தேசிய பன்னாட்டு நிறுவனங்கள், ஆங்கில சுருக்கப்பட்ட எழுத்துகளின் விரிவாக்கம், புத்தகம் மற்றும் அதன் எழுத்தாளர்கள், பிரபலங்களின் புனைப்பெயர்கள், பொது தொழில்நுட்பம், இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும், இன்றைய தினத்தைய இந்திய மற்றும் அதன் தொடர்புடைய விவரங்கள், கலை, இலக்கியம், இந்தியப்பண்பாடு மற்றும் தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்.

படிக்கவேண்டிய நூல்கள்

  • தினமனி அல்லது தமிழ் இந்து செய்தித்தாள்
  • மனானா நடப்பு நிகழ்வுகள் புத்தகம்
  • iya.competitiveexam.in
  • உளவியல் (Psychology)

அறிவாற்றலால் புரிந்து கொள்ளும் திறன்: இப்பகுதியில் உள்ள வினாக்கள், போட்டியாளர்கள் வினாக்களை புரிந்துகொண்டு அவரவர் புத்திக்கூர்மையை பயன்படுத்தி அதன் காரணமாக உண்மைகளை கண்டுபிடித்து பதிலளிக்கும் வண்ணம் இருக்கும். மேலும் இப்பகுதியில், பள்ளியில் உள்ள அடிப்படை மற்றும் எளிமையான கணித வினாக்களை கொண்டதாகவும் இருக்கும்.

படிக்கவேண்டிய நூல்கள்

  • சக்தி அல்லது ஈகிள் ஐ புத்தகம் வெளியிடும் புத்தத்தை வாங்கிக்கொள்ளுங்கள். மற்றும் பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள கணக்குகள்
  • எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் எனப்படும் இதழில் வரும் ரயில்வே மற்றும் SSC தேர்வின் வினாக்களை படித்து கொள்ளுங்கள்.

இவை அனைத்துடன். போலிஸ் தேர்வுக்கென்று சக்தி அல்லது ஈகிள் ஐ போன்ற பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகம் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் காவலர் தேர்வுக்கான அனைத்து பழைய வினாக்களும் தொகுத்து கொடுக்கப்பட்டிருக்கும்.

 வாழ்த்துக்களுடன்

ஐயாச்சாமி முருகன்

திருநெல்வேலி

சந்தேகம் இருந்தால் m.iyachamy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

Add a Comment

You must be logged in to post a comment

Shopping Basket
error: Content is protected !!