TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – டிசம்பர் 3,4 நடப்பு நிகழ்வுகள் – மாநில தகவல் ஆணையம் – மாற்றுத்திறனாளிகள் தினம்

நடப்பு நிகழ்வுகள்  டிசம்பர் 3 மற்றும் 4

கோயம்புத்தூர் பற்றிய தகவல்

  • தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக ‘வெரைட்டி ஹால்’ என்னும் பெயரில் திரையரங்கம் கட்டப்பட்டது கோயம்புத்தூரில்தான். அந்தத் திரையரங்கம் இப்போது ‘டிலைட் திரையரங்கம்’ என்று அழைக்கப்படுகின்றது. இதனை 1900 ஆம் ஆண்டு கட்டிய சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர்தான் திரைப்படங்களை முதன்முதலில் ஊர் ஊராகச் சென்று திரையில் காட்டியவர் ஆவார்.
  • தமிழ்நாடு மானில தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி திருமதி சாந்த சீலா பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் தகவல்

  • தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது . இதன்படி மானில அளவில் ஒரு தகவல் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என சட்டம் கூறுகிறது
  • மானில தகவல் ஆணையரை முதலமைச்சர் , முதலமைச்சரால் நியமிக்கப்படும் அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்யும். இந்தக் குழுவின் பரிந்துரைப்படி ஆளுனர் நியமிப்பார்.
  • தகவல் ஆணையரின் பதவிக்காலம் 65 வயது வரை
  • மானில தகவல் ஆணையம் ஒரு தலைமைத் தகவல் ஆணையரையும் கூடுதலாக 10 தகவல் ஆணையர்களையும் கொண்டிருக்கும்.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார். கடலோர பாதுகாப்பு படை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
  • தமிழகத்தில் முதல்முறையாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோவையில் முழு உருவ வெண்கலச் சிலை ஞாயிற்றுக்கிழமை நிறுவப்பட்டுள்ளது
  • முல்லைப்பெரியாறு அணையில் பருவமழை காலங்களில் அணையின் நிலவரம், பராமரிப்பு உள்ளிட்டவைகளை கண்காணிக்க மூவர் குழு, இவர்களுக்கு உதவியாக ஐவர் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. ஐவர் குழுவின் தலைவராக மத்திய நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ராஜேஷ் உள்ளார்.
  • சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. Divyangjan என்பது மாற்றுத்திறனாளிகள் துறையை குறிப்பது. 1992 ஆம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள்

இந்திய மக்கட்தொகையில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 2001&-2011 காலக் கட்டத்தில் 22.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2001ல் 2.19 கோடியாக இருந்த மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 2011ல் 2.68 கோடியாக உயர்ந்தது. அதில் 1.5 கோடி ஆண்களும், 1.18 கோடி பெண்களும் இருந் தனர். மாற்றுத் திறனாளிகளின் வளர்ச்சி விகிதம் நகர்ப்புறங்களிலும், நகர்ப்புறத்திலுள்ள பெண்கள் இடையேயும் அதிகமாக காணப்- பட்டது. பத்தாண்டுகளில் நகர்ப்புற பகுதிகளில் இவர்களின் வளர்ச்சி விகிதம் 48.2 சதவிகிதமாகவும் நகர்ப்புற பெண்களின் வளர்ச்சி விகிதம் 55 சதவிகிதமாகவும் இருந்தது. ஷெட்யூல்டு வகுப்பினர் இடையே இது 2.45. சதவிகிதமாக இருந்தது.

1995ல் இந்தியாவில் மாற்றுத் திறனாளிகள்(சம வாய்ப்புக்கள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்காற்றல்) சட்டம் இயற்றப்பட்டது. தமிழக அரசு இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை மூன்றிலிருந்து 4 ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

இஞ்சியோன் செயல்திட்டம்

இஞ்சியோன் செயல்திட்டம் என்பது அடுத்த 10 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக தடையற்ற சமுதாயத்தை உருவாக்குதல், அவர்களின் உரிமைகளை உறுதி செய்தல் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான ஆசிய & பசுபிக் பிராந்தியம் மற்றும் அகில உலகத்துக்கான செயல்திட்டமாகும். இந்த செயல்திட்டத்தில் மாற்றுத்திறனை உள்ளடக்கிய சில வளர்ச்சி இலக்குகள் உள்ளன. இந்த இலக்குகள் உலக வரலாற்றில் முதன்முறையாக பிராந்திய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இஞ்சியோன் செயல்திட்டத்தின் 10 லட்சியங்கள்

  • வறுமை ஒழிப்பு, பணி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல்,
  • அரசியல் நடைமுறைகள் மற்றும் முடிவெடுக்கும் நடைமுறைகளில் பங்கேற்பதை ஊக்குவித்தல்,
  • இயல் சூழல், பொதுப்போக்குவரத்து,அறிவு, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளை அணுகுவதற்கான சூழலை அதிகரித்தல்,
  • சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்,
  • மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவத்தை முன்கூட்டியே தொடங்குவதற்கான வாய்ப்புகளை விரிவாக்குதல்,
  • பாலின சமத்துவம் மற்றும் மகளிருக்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்தல்,
  • மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த பேரிடர் பாதிப்பு குறைப்பு மற்றும் மேலாண்மையை உறுதி செய்தல்,
  • மாற்றுத்திறனாளிகள் தொடர்பான புள்ளி விவரங்களின் நம்பகத்தன்மை மற்றும் ஒப்பீட்டுத் தன்மையை மேம்படுத்துதல்
  • மாற்றுத்திறன் கொண்டவர்களின் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து செயல்படுத்துவதையும்,அதனடிப்படையில் தேசிய அளவில் சட்டங்கள் இயற்றப்படுவதையும் உறுதி செய்தல்,
  • மண்டல, உள்மண்டலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவை
  • உலகத் தொழில்முனைவோர் மாநாடு: மோடிக்கு டிரம்ப் பாராட்டு தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்ற 3 நாள் உலகத் தொழில்முனைவோர் மாநாட்டில், அமெரிக்கா சார்பில் பங்கேற்ற குழுவுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகளும், அவரது முதுநிலை ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் தலைமை வகித்தது நினைவுகூரத்தக்கது.
  • லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச கடல்சார் அமைப்பின் கவுன்சில் (ஐஎம்ஓ) தேர்தலில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்த அமைப்பில், இந்தியா கடந்த 1959-ஆம் ஆண்டில் இருந்து உறுப்பினராக உள்ளது.
  • இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடித்தார் கோலி. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 இரட்டைச் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை அவர் அடைந்துள்ளார்.
  • பதினேழு வயதுக்கு உள்பட்ட (யு-17) மகளிருக்கான ரக்பி போட்டியில் இந்தியா 4-ஆவது இடம் பிடித்தது.

 

Add a Comment

You must be logged in to post a comment

Shopping Basket
error: Content is protected !!