நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 1 மற்றும் 2
- நான்காவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் 16.11.2017 முதல் 19.11.2017 வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன் அவர்கள் தமிழக அரசின் சார்பில் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
- கிருஷ்ணகிரி கே.இர்.பி. அணையின் பிரதான மதகில்முதல் கதவு புதன்கிழமை ஊடைந்தது. இதனால், ஆந்த வழியாக 4 இயிரம் கன ஆடி தண்ணீர் வெளியேறியது.
- இந்தியாவிலேயே முதல் முறையாக பசுமை பல்கலைக்கழகம் அமைக்க மேற்கு வங்க அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.
- நாகலாந்தில் கொம்புத்திருவிழாவை குடியரசுத் தலைவர் துவங்கி வைத்தார். நாகலாந்து உருவானதை ஒட்டி ஆண்டுதோறும் இம்மானில மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
- தேசிய ஊட்டச்சத்து இயக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் குறிப்பாக 0-6 வயது குழந்தைகள் , பாலூட்டும் தாய்மார்கள் , வளரிளம் பெண்கள் ஆகியோரை கருத்தில் கொண்டு அவர்களுடைய ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
- திரைப்படச் சர்ச்சை தொடர்பாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தலைவர் பிரசூன் ஜோசி மக்களவை குழுவின் ஆஜரானர்.
- ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சி மா நாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா சென்றார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.
கூடுதல் தகவல்கள்
- ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புவிசார் அரசியல் இயக்கம்
- இந்த ஆண்டில் 2017 இந்தியா மற்றும் பாகிஸ்தான் இதன் உறுப்பு நாடுகளாக இனைந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரீ ரூபா முகர்ஜி காலமடைந்தார்.
- டிசம்பர் 1 சர்வ்தேச எய்ட்ஸ் தினம். சுகாதாரத்துறை இனை அமைச்சர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர்களை காப்பதற்காக சம்பார்க் 2017- 24 என்ற தேசிய திட்டத்தினை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவின் அனஹைம் நகரில் நடைபெறும் உலக பளுதூக்கும் போட்டியில் இந்தியாவைச் சார்ந்த மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.