நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 11 முதல் 16 வரை

 • குழந்தைகள் தினத்தையொட்டி, குழந்தை திருமணத்தை தடுத்தல், குழந்தைகளை பிச்சையெடுத்தலில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளித்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக (Terre Des Homes Core Trust) என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் செழியன் அவர்களுக்கு ராஜீவ் காந்தி மானவ் சேவா விருது வழங்கப்பட்டுள்ளது.
 • மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே அறியக் கூடிய சிறிய கருவியை புதியதாக கண்டுபிடித்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த செல்வன் ஆகாஷ் மனோஜ் அவர்களுக்கு மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் சிறந்த சாதனை புரிந்த குழந்தைக்களுக்கான தேசிய விருது வழங்கினார்.
 • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. 1,455 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி தமிழத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
 • பிலிப்பின்சின் தலைநகர் மணிலாவில் 3 நாட்கள் நடந்த ‘ஆசியான்31 வது நடைபெற்ற உச்சிமாநாட்டில், கிழக்காசியக் கூட்டமமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை நிறைவு செய்து தில்லி திரும்பினார்.

கூடுதல் தகவல்கள்

 • மணிலாவில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் ஒரு ஆய்வுக்கூடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 • மணிலாவில் தான் ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமையிடம் அமைந்துள்ளது.

ஆசியான்  (ASEAN)  தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு

 • இவ்வமைப்பு 1967 ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளால் இனைந்து உருவாக்கப்பட்டது.இதன் தலைமையகம் இந்தோனேசிய தலைனகர் ஜகார்த்தாவில் உள்ளது.
 • இந்தியா இவ்வமைப்பில் உறுப்பினராக இல்லை ஏனெனில் இந்தியா தெற்கு ஆசியாவில் அமைந்துள்ளது.
 • ஆசியான் அமைப்பில் 10 உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ளன.

கிழக்காசியக் கூட்டமைப்பு

 • கடந்த 2005-இல் உருவாக்கப்பட்டது முதல், கிழக்காசியாவில் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் இந்த அமைப்பு முக்கியப் பங்காற்றி வருகிறது.
 • இந்தியா, ஜப்பான், சீனா, கொரியக் குடியரசு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளும் சேர்ந்து கிழக்காசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. 
 • சர்வதேச நீதிமன்ற நீதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக ஐ.நா.வில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்தியாவின் சார்பில் போட்டிடும் தல்வீர் பண்டாரியை ஐ.நா. பொதுச் சபை தேர்ந்தெடுத்தாலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் குறைந்த வாக்குகளை அளித்ததால் அவர் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் செயல்பட்டு வரும் ஐ.நா.வின் நீதித்துறைப் பிரிவான சர்வதேச நீதிமன்றத்தில் 15 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உள்ளது. 6 ஆண்டு பதவிக் காலம் உடைய அந்த நீதிபதிகள், ஐந்தைந்து பேராக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐ.நா. பொதுச் சபை மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 • புகழ்பெற்ற இனிப்பு வகையான ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீட்டை மேற்குவங்கம் பெற்றுள்ளது
 • ராஜஸ்தான் மானிலத்தின் கங்கா குமாரி எனும் திருநங்கை காவல்துறையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட முதல் திருனங்கை ஆவார்.
 • பாரத் 22 பரிமாற்ற வணிக நிதி எனும் புதிய புதிய நிதியத்தை தோற்றுவித்துள்ளது. பங்கு விலக்கல் மூலம் 8000 கோடியை இந்த நிதியத்தில் செர்க்க திட்டமிட்டுள்ளது.
 • அலையின் சக்தியைக் கொண்டு மிதக்கும் மிதவையை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
 • இந்தியா-பிலிப்பின்ஸ் இடையே பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, வர்த்தகம், வேளாண்மை, சிறு, குறு தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின
 • யுனெஸ்கோ அமைப்பின் தலைமை இயக்குநராக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆட்ரி அஸுலே நியமனம் செய்யப்பட்டுள்ளார். யுனெஸ்கோ அமைப்பில் தலைமை பொறுப்பை வகிக்கும் இரண்டாவது பெண் இவர் .
 • ஜிம்பாப்வேயில் அரசு நிர்வாகத்தை ராணுவம் தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. எனினும், இது ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல எனவும், அதிபர் ராபர்ட் முகாபேக்கு நெருக்கமான ‘குற்றவாளிகளை’ குறிவைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்துள்ளர்
 • 4வது நிலைத்த சர்வதேச குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மானாடு அர்ஜெண்டினாவில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி பங்கேற்றார்.

error: Content is protected !!