நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 5,6,7| தமிழ்நாடு வனக்கொள்கை 2016

 • தினத்தந்தி நாளிதழின் 75-வது ஆண்டு பவள விழாவில் பத்திரிகை சுதந்திரத்தை சரியாகக் கையாள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

கூடுதல் தகவல்கள்

 • தினதந்தி நாளிதழ் 1942 ஆம் ஆண்டு சிபா ஆதித்தனரால் மதுரையில் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.
 • சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதை எழுத்தாளர் இறையன்பு, மூத்த தமிழறிஞர் விருதினை ஈரோடு தமிழன்பன், சாதனையாளர் விருதை வி.ஜி.சந்தோஷம் ஆகியோருக்கு வழங்கினார். 
 • பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் கடந்த 2013 -ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
 • வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ளவர்கள் தொடர்பாக ‘ஆப்பிள்பை’ என்ற சட்ட நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் 714 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்களைக் கொண்டு விசாரணை நடத்த இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) முடிவு செய்துள்ளது. இப்பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 714 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களும் காணப்படுகின்றன. கருப்புப் பணம் பதுக்கியவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் இப்பட்டியலில் இந்தியா 19-ஆவது இடத்தில் உள்ளது.
 • ஆந்திரத்தின் முக்கிய அடையாளமாகத் திகழும் பங்கனபள்ளி மாம்பழம் உள்ளிட்ட மேலும் ஆறு பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மேற்கு வங்கத்தின் துலபஞ்சி அரிசி, கோவிந்தபோக் அரிசி, தெலங்கானாவின் போச்சம்பள்ளி சேலைகள், ஆந்திரத்தின் துர்கி கற்சிற்பங்கள், எட்டிகோப்பக்கா பொம்மைகள், நாகாலாந்தின் சக்சேசாங் சால்வைகள் ஆகியவையும் நடப்பு ஆண்டில் புவிசார் குறியீட்டை பெற்றுள்ளன.

புவிசார் குறியீடு என்றால் என்ன?

புவிசார் குறியீடு என்பது குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரத்தையும், தனித்துவத்தையும் உலக அரங்கில் கொண்டு சேர்க்கிறது. புவியியல் ரீதியில் ஒரு பகுதியில் இயற்கையாக விளையும் சிறந்த வேளாண் பொருட்களுக்கு இந்திய காப்புரிமை அலுவலகம் புவிசார் குறியீடு வழங்கி வருகிறது.

பொருள்களுக்கான புவிசார் குறியீடுகள் சட்டம் ( பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999) 1999 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது.

பயன்கள்

 • முதலில் இதற்கு சட்டபூர்வ பாதுகாப்பு கிடைக்கிறது.
 • புவிசார் குறியீடு வாங்கப்பட்ட பொருட்களை தவறான வழிகளில் விற்பனை செய்வது தடுக்கப்படுகிறது.
 • ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிப் பதும் உற்பத்தியாளர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கிறது.
 • சர்வதேச அளவிலான சுதந்திர வர்த்தகத்தில் புவிசார் குறியீடுகள் நமக்கான சட்ட பாதுகாப்பினை உறுதி செய்கிறது.

தமிழகத்தில் இருந்து புவி சார் குறியீடு பெற்ற பொருட்கள்

மதுரை மல்லி, பத்தமடை பாய், நாச்சியார் கோயில் விளக்கு, தஞ்சாவூர் வீணை, செட்டி நாடு கொட்டான் மற்றும் தோடர்களின் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் ஆக உள்ளிட்ட  தமிழகத்தை சேர்ந்த 6 உற்பத்தி பொருட்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

 • ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு திங்கள்கிழமை முதல் குளிர்காலத் தலைநகரான ஜம்முவில் இருந்து செயல்படத் தொடங்கியது.

கூடுதல் தகவல்கள்

 • 1872-ஆம் ஆண்டு மகாராஜா குலாப் சிங் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ‘தர்பார் மாற்றம்’ நடைமுறை இப்போது வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும், அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மதிக்க வேண்டும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் மெஹபூபா முஃப்தி கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 35-ஏ பிரிவின்கீழ், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளும், உரிமைகளும் அளிக்கப்பட்டுள்ளது. பிற மாநில மக்களுக்கு அதுபோல் சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்படவில்லை.
 • ஐக்கிய நாடுகளின் பருவ நிலை மாற்றம் தொடர்பான 23 வது மானாடு ஜெர்மனியின் போன் நகரில் நடைபெற்று வருகிறது.
 • உலக பொருளாதர பேரவையினால் வெளியிடப்பட்ட பாலின மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியா 108வது இடத்தில் உள்ளது.
 • டிரம்ப் அதிபர் பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆசிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது 12 நாள் பயணத்தில் ஜப்பான், தென் கொரியா, சீனா, வியத்நாம், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளுக்கு அவர் செல்கிறார். அவரது மனைவி மெலானியா உடன் செல்கிறார்.
 • ‘டியான்குன் ஹாவோ’ ஆசியாவின் மிகப் பெரிய தூர்வாரும் கப்பலை சீனா உருவாக்கியதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன
 • வியத்நாமை ‘டாம்ரே’ புயல் தாக்கியது.
 • ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ‘ஷூட் அவுட்’ முறையில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

தமிழ்நாடு வனக்கொள்கை 2016 வரைவு அறிக்கை  (The Hindu Novemer 5)

 

தமிழ்நாடு அரசு, 2014-ஆம் ஆண்டில், உட்கட்டமைப்பு வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கான உத்தி சார்ந்த திட்டத்துடன் கூடிய தமிழ்நாடு 2025ஆம் ஆண்டு தொலைநோக்குத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது. “பாரம்பரியச் சிறப்பினை பேணி வளர்ப்பதும்’ “உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாப்பதும்” தொலைநோக்குத் திட்டத்தின் முக்கிய .கருப்பொருள்களில் ஒன்றாகும். இதனை  நோக்கமாக வைத்து  வைத்து மாநிலத்தின் வனப்பரப்பளைவை 2025 ஆம் ஆண்டுக்குள் 30 % சதவிதமாக அதிகரிக்க 16 முக்கிய அம்சங்களைக் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நன்செய் நிலங்கள் மற்றும் ஏனைய நீர் நிலைகளைப் பாதுகாப்பது, கடலோர மண்டலங்கள் மற்றும் எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய உயிரின  வாழ்க்கைச் சூழலைப் பாதுகாப்பது மற்றும் மாநிலத்தின் விலங்கியல் மற்றும் தாவரவியல் இனங்களின் பல்வேறு வகைப்பாட்டுத் தொகுதியைப் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

முக்கிய அம்சங்கள்

 • மாநிலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் உயிரின வாழ்க்கைச் சூழலின் நிலைத் தன்மையை உறுதி செய்தல்.
 • பல்வகை உயிரினதாவரத் தொகுதி,வனவிலங்கு மற்றும் மரபியல் வளத்தைப் பாதுகாத்தல்.
 • அழிந்துவிட்ட காடுகளுக்கு புத்துயிர் அளித்து மீண்டும் வளர்த்தல்.
 • கடலோரப் பகுதிகளின் உயிரின வாழ்க்கைச் சூழலின் அமைப்பு முறையைப் பாதுகாத்து நிருவகித்தல்.
 • வன ஆதார நிருவாகம் மற்றும் பெருக்கத்திற்கான வனப்பகுதிகளைப் பாதுகாத்தல்.
 • நீடித்த நிலையான வன மேலாண்மை.
 • வாழ்வாதாரப் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, வனப்பகுதிகளுக்கு வெளியே உள்ள
 • நிலப்பரப்புகளிலும் மரம் வளர்க்கும் பரப்பளவை அதிகரித்தல்.
 • வனப்பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த நீர்வரத்து மேலாண்மை வாயிலாக, நீர் வளத்தைப் பெருக்குதல்.
 • வனப்பகுதிகளைச் சார்ந்திருக்கும் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் மற்றும்
 • வன மேலாண்மையில் குறிப்பிடத்தக்க வகையில் அவர்கள் பங்கேற்க வாய்ப்பளிப்பதை உறுதி செய்தல்.
 • பொருளாதார வளத்தையும், உயிரின வாழ்க்கைச் சூழலின் நிலைத் தன்மையையும், உறுதி
 • செய்வதன் வாயிலாக பழங்குடியினர் நலனை மேம்படுத்துதல்.
 • அறிவியல் சார்ந்த வன மேலாண்மைக்கு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்ப ஆதரவு அளித்தல்.
 • வனவிலங்கு மேலாண்மைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மரம் வளர்க்கும் பரப்பளவை
 • அதிகரிப்பதற்காக வனப்பகுதிகளின் பரப்பளவை விரிவுபடுத்துதல் மற்றும் வனப்பகுதியை பற்றி அறிவுறுத்துதல்.
 • ஊரக எரிசக்தி பாதுகாப்பிற்குரிய மரங்களை வளர்த்தல்.
 • வனப்பாதுகாப்பிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் உயிரின வாழ்க்கைச் சூழல் சுற்றுலா
 • மேற்கொள்ளுதல்.
 • வன மேலாண்மைக்குரிய மனித வளத்தை மேம்படுத்துதல்.
 • பருவநிலை மாற்றங்களைத் தணித்தல்

தமிழ்நாடு வனம் பற்றிய தகவல்கள்

 • மாநில பரப்பளவில் 17.59 % நிலப்பகுதியும் , இந்திய பரப்பளவில் 2.99% காடுகளை தமிழ் நாடு கொண்டுள்ளது.
 • மாவட்ட அளவில் அதிக அளவு பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டமாக தர்ம்புரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

 

error: Content is protected !!