நவம்பர் -2 நடப்பு நிகழ்வுகள்
- திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலுக்கு யுனெஸ்கோவின் மிகப்பெரிய விருதான ஆசியா பசிபிக் பாரம்பரிய விருது வழங்கப்படவுள்ளது.
- புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ரகுபதி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் காலம் அக். 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, விசாரணை ஆணையத்தின் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து பொதுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கூடுதல் தகவல்கள்
- 2011-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி ஒரு நபர் விசாரணை ஆணையத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைத்தார்.
- முதலில் இந்த விசாரணை ஆணையத்தின் நீதிபதியாக தங்கராஜ் செயல்பட்டு வந்தார். அவர் ராஜிநாமா செய்யவே, நீதிபதி ரகுபதி புதிய விசாரணை ஆணையராக நியமிக்கப்பட்டார்
- தமிழகத்தின் 2 -ஆவது தேசிய வேளாண் விற்பனைச் சந்தை திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தொடக்கி வைக்கப்பட்டது. தமிழகத்தின் முதல் வேளாண்மை விற்பனைச் சந்தை வேலூர் மாவட்டம், அம்மூரில் செயல்பட்டு வருகிறது.
- தமிழ்நாடு மானில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக ஒய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்தரஞ்சன் தாஸ் மற்றும் ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதல் தகவல்கள்
- தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 17, 1997 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
- மானில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை , முதல்வர், சட்டமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய குழு பரிந்துரை செய்வதின் பெயரில் ஆளுனர் நியமனம் செய்வார்.
- இவர்கள் 70 வயது வரை இப்பதவிகளை வகிக்கலாம்.
- தேசிய ஒய்வூதியத்திட்டத்தில் தனியார் பணிசெய்பவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வயது வரம்பு 60 லிருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
- ஜம்மு-காஷ்மீர் மாநில பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு பிரதிநிதி தினேஷ்வர் சர்மாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- அண்மையில் நடைபெற்ற ஜப்பான் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற லிபரல் டெமோக்ராடிக் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான ஷின்ஸோ அபே-வை அந்த நாட்டு நாடாளுமன்றம் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுத்தது.
ஜப்பான் பற்றிய தகவல்கள்
- தலை நகரம் : டோக்கியா நாணயம் : யெண் , பாரளமன்றத்தின் பெயர் : டயட்
- ஜப்பான் முதலில் நிப்பான் என அழைக்கப்பட்டது
- சூரியன் உதிக்கும் நாடு எனவும் அழைக்கப்படுகிறது
- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அரசு முறை பயணமாக ஈரான் தலைநகர் தெஹ்ரான் சென்றார். அங்கு அந்த நாட்டு அதிபர் ஹசன் ரவுகானியை சந்தித்துப் பேசினார்.
- காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஷாஸார் ரிஸ்வி, பூஜா கட்கர் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.