TNPSC CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 26 & 27 PDF

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 26 மற்றும் 27 / எரிமலைகள் பற்றிய அறிமுகம்.

  • சூரிய ஒளியில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்காக தமிழக அரசு நான்கு நிறுவனங்களுடன் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கூடுதல் தகவல்கள்

  • ஒப்பந்தத்தில் அதிகப்படியாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திடம் (என்.எல்.சி.) இருந்து 709 மெகாவாட் மின்சாரம் பெறப்படும்.
  • திட்டத்துக்கு ஒரு மெகாவாட்டுக்கு ரூ.6 கோடி வீதம் 1,500 மெகாவாட்டுக்கு மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும்.
  • திட்டத்தின் முதல் கட்டமாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது என்.எல்.சி. இந்தியா, ராசி கிரீன் எர்த் எனர்ஜி, நர்பேராம் விஸ்ராம், என்வீஆர் எனர்ஜி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தொடர்பான கூடுதல் தகவல்கள்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy)

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவிவெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் ஆகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பமானது சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீர்மின்சாரம், உயிர்த்திரள் ஆற்றல், உயிரெரிபொருட்கள் என்பவற்றை உள்ளடக்கி உள்ளது

சூரிய சக்தி

சூரிய ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து நேரடியாக பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் (solar energy) எனப்படுகிறது. சூரிய ஆற்றல் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் மற்ற மீள உருவாக்கக்கூடிய ஆற்றல்களான, காற்றாற்றல், நீர்மின்னியல், மற்றும் உயிர்த்திரள் (biomass) ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு பெருமளவில் துணை புரிகிறது. பூமியில் விழும் சூரிய ஆற்றலில் மிகவும் சிறிய பகுதியே ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது.

சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகிறது. சூரிய ஓளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Photovoltaic).
சூரிய வெப்பத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Solar Thermal). சூரிய ஆற்றலை பெற்று, மின்சாரமாக மாற்றி, சேமித்து பயன்படுத்த ஏதுவாக்கும் கருவி ஒருங்கமைப்பை சூரிய ஆற்றல் ஒருங்கியம் எனலாம். அது பின்வரும் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.

  1. பல சூரியக்கலங்கள் (solar cells) சேர்ந்த சோலார் தகடுகள்(solar panels)
  2. ஒருங்கிய கட்டுப்படுத்தி (Controller)
  3. மின்கலம் (battery) (மின்னாற்றலைத் தேக்கிவைக்க
  4. நேர்மாற்றி (Inverter) (தகடுகள் உற்பத்தி செய்யும் நேர் மின்சாரத்தை மாறுதிசை மின்சாரமாக மாற்ற)

தமிழ் நாடு சூரிய மின்சக்தி கொள்கை 2012

தமிழகத்தை பொறுத்தவரை, ஆண்டுக்கு 300 நாட்கள், தெளிவான சூரிய ஒளி கிடைத்து வருகிறது. சூரிய ஒளி மின்சாரத்தை உருவாக்க, தென் தமிழக பகுதிகள், நாட்டிலேயே மிகப் பொருத்தமான பகுதிகளாக விளங்குகின்றன. இதை கருத்தில் கொண்டும், தற்போது நிலவும் மின் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாகவும், சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்க, தமிழக அரசு, “தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை – 2012’யை உருவாக்கியுள்ளது. சூரிய சக்தி மூலம் அடுத்த மூன்றாண்டுகளில், ஆண்டுக்கு 1,000 மெகாவாட் வீதம், 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், சூரிய சக்தி மின்சாரத்தை உருவாக்கும் முக்கிய பகுதியாக தமிழகத்தை உருவாக்குதல், உள்நாட்டிலேயே சூரிய சக்தி சாதனங்களை உருவாக்கும் வசதி, சூரிய சக்தி மின்சாரம் தொடர்பான, ஆய்வு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை இதன் முக்கிய நோக்கம்.

சூர்யஒளி நகரங்கள் ( Solar Cities)

மத்திய புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சகம்,  சோலார் நகரங்களை உருவாக்குவதில் முனைப்புடன் இயங்குகிறது. இதன் படி 10% மின்தேவையை சூர்யசக்தியின் மூலம்  தீர்க்க முடிவு செய்துள்ளது. இவ்வழியில் தமிழ்நாட்டில் கோயமுத்தூர் உள்ளிட்ட நாடு முழுதும் 31 நகரங்களை தேர்ந்தெடுத்து, அவைகளுக்கு 50 லட்சம் வரை நிதி அளித்துள்ளது.

 

  • நிகழாண்டு சாஸ்த்ரா – ராமானுஜன் விருதுக்கு சுவிஸ் நாட்டு கணிதவியல் அறிஞர் மரினா வியாசோவ்ஸ்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

எதற்காக தேர்வு செய்யப்பட்டார்?

 

கணிதவியலில் மிகச் சிறந்த திறன் படைத்தவர். எண் கோட்பாடுகளில் பல தீர்வுகளை ஏற்படுத்தியவர். இப்போது, எண் கோட்பாட்டில் புதிய சாதனை படைத்துள்ள அவருக்கு சாஸ்த்ரா ராமானுஜன் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

சாஸ்திரா விருது பின்புலம்

 

ஆண்டுதோறும் கணிதவியலில் சாதனை படைக்கும் இளம் கணிதவியலாளர்களுக்கு சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சாஸ்த்ரா ராமானுஜன் விருது வழங்கப்படுகிறது. கணித மேதை ராமானுஜன் தனது 32 ஆண்டுகால வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளைப் படைத்ததைக் கருத்தில் கொண்டு சாதனைப் படைக்கும் 32 வயதுக்குள்பட்ட கணிதவியலாளர்களுக்கு 2005 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.

 

  • தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத மாநிலமாக உருவாக்கும் இலக்கில் செயல்பட்டு வருவதாக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு மாநாட்டில் மாநில அரசு தெரிவித்தது.

கூடுதல் தகவல்கள்

  • தேசிய குழந்தைத் தொழிலாளர் நலத் திட்டம் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது
  • மாவட்டந்தோறும் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கடந்த 2007, நவம்பர் 11-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. உணவகங்கள், தொழிற்சாலைகள், வீட்டு வேலை ஆகியவற்றில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனரா என்பது குறித்து இக்குழு அவ்வப்போது ஆய்வு செய்து அறிக்கை அளித்து வருகிறது.
  • ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் மாநில அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

குழந்தைத் தொழிலாளர் தொடர்பான பிற செய்திகள்

  • குழந்தைத் தொழிலாளர் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
  • அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் இருந்து குழந்தைத் தொழிலாளர் முறையை முழுவதும் ஒழிப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
  • இந்தியாவை 2022ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர் இல்லாத நாடாக உருவாக்குதல்

பென்சில் தளம் ( PENCIL PORTAL)

குழந்தைத் தொழிலாளர்கள் தொடர்பான ஆய்வுக்கு உதவும் ‘பென்சில்’ எனும் இணையதளம், கருத்தரங்கில் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆபரேஷன் ஸ்மைல்

காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சகத்தால் 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆபரேஷன் ஸ்மைல் எனும் பெயரில் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், இதுவரையிலும் நாடு முழுவதும் காணாமல் போன 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன

  • சர்வதேச அளவில் தொழில் துறையில் சிறந்து விளங்கும் பெண்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இந்திரா நூயி, சந்தா கோச்சார், ஷிகா சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

கூடுதல் தகவல்

  • அமெரிக்காவில் தொழில்துறையில் சிறந்து விளங்கும் பெண்கள் பட்டியலில் பெப்ஸிகோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) இந்திரா நூயி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • அமெரிக்காவுக்கு வெளியே தொழில் துறையில் தலை சிறந்த பெண்கள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார் 5-ஆவது இடமும்,
  • ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் ஷிகா சர்மா 21-ஆவது இடமும் பெற்றுள்ளனர்.
  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டும் சக்திகள் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் , ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன்
  • நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆய்வு நடத்த விவேக் தேவ்ராய் தலைமையில் 5 நபர் அடங்கிய குழுவை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார்.
  • ‘ஆப்கானிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தை அனுப்பும் திட்டமில்லை; அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானில் வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து தனது பங்களிப்பை அளிக்கும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வந்தார். தில்லியில் அவர், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார்.
  • காண்ட்லா துறைமுகத்தின் பெயர் தீனதயாள் உபாத்யா என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
  • அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) 75 ஆவது ஆண்டு விழா குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பங்கேற்றார்.

கூடுதல் தகவல்

  • இவ்வமைப்பு 1942 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அமைப்பாகும்

குடியரசுத்தலைவரின் கவலை

இந்தியாவில் உள்ள அறிவியல் ஆய்வாளர்களில் பெண்களின் எண்ணிக்கை 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. ஐஐடி-யில் 10 சதவீதம் அளவுக்கு மட்டுமே பெண்கள் கல்வி பயிலுகின்றனர். அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது கவலையளிக்கிறது. இந்த பாலினப் பாகுபாட்டுடன் நாம் எவ்வித சாதனையைப் படைத்தாலும் அது முழுமையானதாக இருக்காது.

பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும் போதுதான் வளர்ச்சி குறித்த நாட்டின் இலக்குகள் முழுமையடையும். பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது இப்போது வரை தீர்க்கப்படாத பிரச்னையாகவே உள்ளது.
இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகளில் 3 முதல் 4 சதவீதம் பேர் மட்டுமே, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சிலில் உள்ளனர். எனினும், இந்திய அறிவியல் துறையில் அவர்களின் பங்களிப்பு 10 சதவீதம் அளவுக்கு உள்ளது. தேச வளர்ச்சியில் இந்த ஆய்வு மையத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

  • கோர்க்காலாந்து தனி மாநிலம் கோரி டார்ஜீலிங்கில் கடந்த நூறு நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்தக் கோர்க்காலாந்து போராட்டத்தை ஜிஜேஎம் கட்சியினர் திரும்பப் பெற்றுள்ளனர்.

கூடுதல் தகவல்கள்

  • மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜீலிங் மலைப்பிரதேசப் பகுதிகளை உள்ளடக்கிய கோர்க்காலாந்து பிராந்தியத்தை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரும் கோரிக்கை அங்கு நீண்டகாலமாக இருந்து வருகிறது. கடந்த 1907-ஆம் ஆண்டு முதல் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அங்கு வெவ்வேறு காலக்கட்டங்களில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    ஏன் தனிமாநில கோரிக்கை?

டார்ஜீலிங் மலைவாழ் மக்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாப்பதற்காகவே இந்தத் தனி மாநிலக் கோரிக்கையை அப்பகுதியினர் முன்வைத்து வருகின்றனர்.

  • மும்பை மாஸாகான் கப்பல் கட்டும் தளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இந்தியக் கடற்படையில் 27/9/17 இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் தராஸா அதிவிரைவு தாக்குதல் கப்பல்.

கூடுதல் தகவல்

  • இந்தியக் கடற்படையில் நீண்ட காலம் பணியாற்றிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு ஓய்வு அளிக்கப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து, ‘திட்டம்-75’ என்ற பெயரில் புதிய நீர்மூழ்கிகளை இந்தியாவிலேயே தயாரிக்க கடந்த 2005-ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது
  • இந்தியாவில் வரும் 2020-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களுக்கான 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதலுக்காக தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருண் சுந்தர்ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

செளபாக்யா திட்டம்

நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மின்சார வசதி கிடைக்க வழி செய்யும் ரூ.16,320 கோடி மதிப்பிலான ‘செளபாக்யா’ திட்டத்தை பிரதமர் மோடி தில்லியில் திங்கள்கிழமை 25/09//2017 தொடங்கி வைத்தார்/

முக்கிய அம்சங்கள்

  • இந்த திட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் ரூ.500 செலுத்தி மின் இணைப்பை பெறலாம்; 10 மாத தவணையில் தொகையை செலுத்தும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • மண்ணெண்ணெய்க்கு மாற்று
  • கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்டவைகளை ஒருங்கிணைத்து ஒரே திட்டமாக செளபாக்கியா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும்.
  • 2011 சமுக பொருளாதார கணக்கெடுப்பின் படி பயனாளர்கள் கணக்கிடப்படுவார்கள். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரிகள் உரியவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற வேண்டும். மொத்த செலவினத்தில் 60% மத்திய அரசும், 10% மாநில அரசும் 30% கடனாகவும் கொடுக்கப்படும்.

இது தொடர்பான முந்தைய திட்டங்கள்

தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா

ஃபீடர்களை பிரிப்பது, துணை மின்கடத்தல், விநியோக வசதிகளை பலப்படுத்துவது, நுகர்வோர் இணைப்புகளில் மட்டுமின்றி, விநியோக டிரான்ஸ்பார்மர்கள், ஃபீடர்களிலும் மின்சாரத்தை அளவிடுவது, கிராமப்புறங்களை மின்மயமாக்குவது,குறு மின் கட்டமைப்பு, பகுதி மின் கட்டமைப்பு விநியோக இணைப்புகளை வழங்குவது ஆகியவை இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளாகும்.

ராஜிவ் காந்தி கிராமின் வித்யுத்திகரன் யோஜனா 2005

இத்திட்டத்தின் படி ஊரகப்பகுதியில் உள்ள  அனைத்து  கிராமங்களுக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை மின்சார வசதியளித்தல் என்பது நோக்கமாகும்.

  • காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் உள்ள வூலர் ஏரியினனை தூய்மைப்படுத்தி குப்பை பொறுக்கும் சிறுவன் பிலால் ஒருவன் தனி ஆளாக வருடத்திற்கு 12 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்பொழுது பிலால் ஸ்ரீநகர் நகராட்சி ஆணையத்தின் விளமபரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளான்.
  • இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள அகுங் எரிமலை சீறத் தொடங்கியதையடுத்து பாதுகாப்பு கருதி அதனை சுற்றியுள்ள 57,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

 

எரிமலைகள்

புவிப்பரப்பில் உள்ள சிறு துவாரம் அல்லது பிளவின் வழியாகப் புவியின் கீழ் அடுக்குகளிலிருந்து மேக்மா முதலிய பொருள்கள் வெளிப்படுவதை எரிமலை எனலாம். மேக்மா வெளிப்படும்போது அதன் வெப்ப =நிலை அதிகமாப் இருப்பதாலும் அதிலுள்ள வாயுக்கள் எரிவதாலும், இப்பொருள்கள் ஓரிடத்தில் குவிந்து மலைபோல் தோற்றமளிப்பதாலும் இவற்றை எரிமலை என்கிறார்கள். எரிமலைகளில் சில பலத்த சத்தத்துடன் வெடிக்கும் தன்மைடையவை. சிலவற்றில் சத்தம் ஏதும் இல்லாமல் மேக்மா முதலிய பொருள்கள் வெளிப்படுகின்றன.

எரிமலைகளை அவை செயல்படும் விதத்தை வைத்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் 1. செயல்படும் எரிமலை (Active valcano), 2. தூங்கும் எரிமலை (Dormant valcano), 3. செயலிழந்த எரிமலை  (Extinct valcano)

செயல்படும் எரிமலைகள்

இவைகள் எப்போதாவது மேக்மாவை கக்கி இருக்கலாம்  இது மீண்டும் மேக்மாவை வெளியிடலாம் எனக் கருதும் எரிமலைகள் செயல்படும் எரிமலைகள்.

தூங்கும் எரிமலைகள்

இவைகள் மேக்மாவை வைத்துக்கொண்டிருக்கின்றன ஆனால் எப்போது வேண்டுமானலும் மேக்மாவை வெளியிடும் என எதிர்ப்பாக்கப்படுவை தூங்கும் எரிமைலைகள் என அழைக்கப்படுகிறது.

செயலிழந்த எரிமலை

இவைகள் எல்லா மேக்மாவையும் வெளியிட்டு விட்டது  எதிர்காலத்தில் மேக்மாவை வெளியிடாது எனக்கருதும் எரிமலைகள் ஆகும்.

வடிவம் மற்றும் அளவின் அடிப்படையில்

ஒவ்வொரு எரிமலையின் வரலாறும் தனிசிறப்பு வாய்ந்தது. எரிமலைகள், அதன் வடிவம் மற்றும் அளவு போன்றவற்றில் வேறுபடுகின்றன. எனினும் எரிமலைகள் காட்டுகிற வெடித்தல் முறை ஒரளவிற்கு ஒத்திருப்பினின், அதன் அடிப்படையில் எரிமலைகளை வகைப்படுத்தலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். எரிமலைகள் வெடிக்கிற தன்மைகள் மற்றும் அவற்றின் வடிவ பண்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எரிமலைகளை மூன்று விதமாக வகைப்படுத்தலாம். அவையாவன:

(1) கேடய எரிமலைகள்,  (2) கரி சிட்டக்கூம்புகள் மற்றும் (3) பல சிட்டக்கூம்புகள்.

கேடய எரிமலைகள் (Shield  Volcanoes): எரிமலையின் மத்தியிலுள்ள முகட்டு வாய் ஒன்றிலிருந்து லாவா பெருமளவில் வழிந்து, விரிந்து பரவுகிறபொழுது, அந்த எரிமலை கும்மட்ட ( DomeDome) வடிவத்தையொத்தத் தோற்றத்தைப் பெறுகிறது. இவ்வகை எரிமலைகள் கேடயளரிமலைகள் அழைக்கப்படுகின்றன. கேடயளரிமலைகள் பசால்டிக்  லாவாவினால் கட்டப்படுகிறது.

கரி சிட்டக்கூம்புகள்Cinder Cinder Cones): கரிச்சிட்டக் கூம்புகள் உருவத்தில் மிகச் சிறியவை. சுமார் 100 முதல் 400 மீட்டர் வரை உயரத்தைக் கொண்டிருப்பவை. மத்திய முகட்டுவாய் ஒன்றிலிருந்து பெருத்த ஒசையுடன் அதிவேமாக வெடித்துச் சிதறுகிற பாறை துண்டுகளால் ஆனவை. மேலே எழுகிற மாக்மாவினுள் வாயுக்கள் பெரும் அளவில் திரளுகிற பொழுது, கரி சிட்டக் கூம்புகள் உருவாகின்றன. இவை பசால்டிலிருந்து அதற்கு இடைப்பட்ட கூட்டுப்பொருள் வரையிலான மாக்மாக்களால் வளர்ச்சிப் பெறுகின்றன. இவ்வகை எரிமலைகள் அடுத்தடுத்துக் கூட்டமாக காணப்படும்.

பல்சிட்டக்கூம்பு  (Composite Cones): புவியின் பரப்பில் காணப்படுகிற எரிமலைகளுள், ஒவியம் போன்று கண்ணைக்கவருகிற தோற்றத்தைக் கொண்ட எரிமலைகளை, “பல்சிட்டக்கூம்புகள் என அழைக்கிறோம் இவை நிலத்தின் மேல்வழிகிற லாவாவினாலும் பெரும் ஒசையுடன் வெடித்துச் சிதறுகிற பாறைகளினாலும் மாறிமாறி அமைக்கப் பட்ட அடுக்குகளால் ஆனவை. இவற்றின் உயரம் 100 மீ-3500 மீட்டர் வரை காணப்படும். பல்சிட்டகூம்புகளின் மாக்மா, பசால்ட் முதல் கிரானைட் வரையிலான மாறுபட்ட வேதியல் பண்புகளை கொண்டிருக்கிறது.

மேக்மா

புவிக்கடியில் 50-800 கி. மீட்டர் ஆழத்தில் போதுமான அளவுக்கு அழுத்தம் குறைந்தாலும் அல்லது போதுமான” அளவு வெப்பம் அதிகரித்தாலும் பாறைகள் உருகுகின்றன. இவ்வாறு புவிக்கடியில் உருகிய நிலையிலுள்ள பாறைகளை மேக்மா என்பர். மேக்மாவோடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகன் மற்றும் அசைவுகளை எரிமலை எழுச்சிக் கோட்பாடு என்பர்.

உருகிய நிலையிலுள்ள பாறை எந்தத் திசையில் அழுத்தல் மிகக் குறைந்து காணப்படுகிறதோ அத்திசையில் வழக்கமாக மேல் நோக்கிச் செல்கிறது. இவ்வாறாகக் கொதி திலையிலுள்ள திரவம் ஆங்காங்கே பாறை அடுக்குகளுக்கு இடையே உள்ள கீறல்கள் மற்றும் வெற்றிடங்களில் பாய்ந்து புவிக்கடியிலேயே திடநிலையை அடைகிறது. சில நேரங்களில் இஃது அடைப்பற்ற எரிமலையின் வாயிலாகவோ அல்லது புவிக்கடியில் உள்ள பாறை களிலுள்ள வெடிப்புகள் வழியாகவோ புவியின் மேற்புறத்தை அடைகிறது. சில நேரங்களில் இப்பாறைக் குழம்பு புவிக்கடியில் வெகு ஆழத்தில் உறைந்து போகிறது. இவ்வாறு உறைந்த மேக்மாவை அக்னிப்பாறைகள் (தீப்பாறைகள் நெருப்பு- Igneous Rocks) என்பர். இவ்வாறு மேக்மா பல்வேறு ஆழங்களில் பல்வேறு நிலைகளில் உறைவதற்கேற்ப பல பெயர்கள் கொடுக்கப்பட் டுள்ளன. புவிக்கடியில் குளிர்ந்து இறுகித் தோன்றிய அக்னிப் பாறைகளைத் தலையீட்டு (intrusive ) அக்னிப் பாறைகள் என்றும், மற்றும் புவிக்குமேல் வந்து குளிர்ந்து தோன்றிய பாறைகளைத் தள்ளல் பாறைகள் (extrusive  rocks) என்றும் கூறுவர். பாத்தோலித், லாக்கோலித், கிடைப்பாறை (sill Si) மற்றும் செங்குத்து அல்லது டைக்குப் (Dyke ) பாறைகள் ஆகியவை தலையீட்டு அக்னிப்பாறையின் சில வடிவங்கள் ஆகும்.

எரிமலையின் அமைப்பு

பாத்தோலித் ( batholithsBatholith) என்பது குமிழ் வடிவமான பாறைத் திரள் தலையீட்டு அக்னிப்பாறை பெரும்பாலும் கிரானைட்டால் ஆனது. இது லாக்கோலித்தைக் காட்டிலும் மிகப் பெரியதும் பல நூறு சதுரக் கிலோமீட்டர் பரந்தும் காணப்படும். அவை அடிப்புறத்தில் காணப்படுவதோடு வெகு ஆழம் வரை தொடர்ந்து காணப்படுகின்றன. லாக்கோலித் தலையீட்டு மேக்மாவால் ஆனதும் புவியோட்டிற்கு அடியில் படிவதும் பூமியின் மேற்பரப்பிற்கு வராததும், மேல்பரப்பு வளைந்தும் காணப் படுவதுமாகும். மேக்மா இரண்டு பாறை அடுக்குகளுக்கு இடையே போய் உறைந்து காணப்படும் அமைப்பைச் சில் (s ill ) என்கிறோம். அதனுடைய கனம் சில அங்குலம் முதல் பல நூறு அடிவரை உள்ளது. ஆனால் அதனுடைய இடை நீளம் அதன் கனத்தைப் போல் பன்மடங்காக உள்ளது. மேக்மா துளை வழியாக உந்தி வரும்போது உண்டாகும் சில் ( sill si) சில நேரங்களில் டைக்காக (dykedyke) மாறுகிறது. ஏனெனில் டைக், சில் போல் கிடையாக இல்லாமல் செங்குத்தாக உள்ளது.

பூமிக்கடியில் உள்ள மேக்மா மிக மெதுவாகக் குளிர்ச்சி அடைகிறது. அவ்வாறு மிக மெதுவாகக் குளிர்ச்சி அடையும்

எரிமலைச் செயல்பாடு

போது பல்வகைப்பட்ட மூலகங்கள் படிகங்க்ளாகின்றன. புவிக் கடியில் வெகு ஆழத்தில் சென்று உறைகின்ற பாறைகள் முழுவதும் படிக வடிவம் கொண்டனவாக உள்ளன. அவ்வகையான படிக வடிவ அக்கினிப் பாறைகளைப் பாதாளத்திலமைந்த பாறைகள் ( Plutonic Plutonic) என்பர். கிரானைட் ( Granite granite) இதற்குச் சிறந்த உதாரணமாகும். உருகிய நிலையிலுள்ள பாறைப் பொருள்கள் பூமியின் மேற்பரப்பில் மிக வேகமாக உறைவதால், அவை முழுவதும் படிக வடிவம் பெற்று இருப்பதில்லை. எனவே அவை பளபளப்பான இழைத்தன்மையுடையனவாய் உள்ளன.

எரிமலைச் செயல்கள்  (Volcanic Activities)

பூமிக்கடியில் உருகிய நிலையிலுள்ள பாறைக் குழம்பு தப்பி புவியின் மேற்பரப்பிற்கு வருவதால் எரிமலைகள் உண்டகின்றன. இதற்குப் புவியின் உள்மையத்திலுள்ள உருகிய பாறைக் குழம்பு புவியின் மேற்பரப்பிற்குத் தப்பி வரப் பாதை வேண்டும். இப்படிப்பட்ட வழிகள் சற்றேறக்குறைய வட்ட வடிவமான பள்ளங்களோ அல்லது நீண்ட வெடிப்புகளோ ஆகும். இவ்விரண்டு வகையான வழிகளும் உலகில் எரிமலை வெடிப்புகளை உண்டாக்குகின்றன.

எரிமலை ஒரு சாதாரணமான கூம்பு வடிவுடைய குன்று ஆகும். இக் கூம்பின் மேற்பரப்பில் வட்டவடிவமாக உள்ளி பள்ளத்தை எரிமலைவாய் (  CraterCrater) என்று கூறுவர். இந்த எரிமலைவாயின் நடுவில் வழக்கமாக ஒரு பள்ளம் இருக்கும். இது உருகிய பாறைக் குழம்பை வெளியேற்றுவதற்கான வழியாகப் பயன்படுகிறது. இவ்வாறு உருகிய நிலையில் வெளியேறிய பாறைக் குழம்பை லாவா  ( LavaLawa) என்பர். ஓர் எரிமலை வெடிப்பு என்பது, எப்போதும் சாதாரணமாக உருகிய பாறைக் குழம்பை வெளிக் கக்குவதோடு மட்டுமல்லாமல் அதிபயங்கரமாக வெடிச் சப்தங்களையும் அடிக்கடி ஏற்படுத்துவதுண்டு. பெரியதும் மற்றும் சிறியதுமான பாறைத் துணுக்குகள் சில நேரங்களில் மிக உயரத்தில் தூக்கி எறியப்படுவதுண்டு. எரிமலைவாய் வழியாகப் பெருமளவு நீராவியும் மற்றும் வாயுக்களும் வெளிவருவதுண்டு. இவ்வாறு எறியப்பட்ட பெரிய பாறைத் துணுக்குகளை பரல்பாறை (breccias ) என்றும், சிறு துணுக்குகளைக் கரிசிட்டம் ( Cinder cinder) அல்லது சாம்பல் ” என்பர். மிக நுண்ணிய பொருள்களே எரிமலைத் தூசி ஆகும். உதாரணமாக, இம்மாதிரியான எரிமலை வெடிப்பில் நீராவியையும் மற்றும் தூசியையும் தாங்கிய கருமை நிறமுடைய பெரும் முகில்கள் வானளவு உயர்ந்து செல்வதோடு, பெரும் கன அளவுடைய, வெப்பநிலை மிக மிக அதிகமுள்ள நீராவி மற்றும் விஷ வாயுக்கள் வெடிப்பிற்கு முன் தோன்றுகின்றன. இம் முகில்கள் காற்றடிக்கும் திசையில் வெகு தூரத்திற்குப் பரவி இருக்கும். நீராவி மற்றும் மேல் எழும்பும் காற்று நீரோட்டங்கள் குளிர்ந்து மின்னல் இடியுடன் கூடிய பெருமழையாகப் பெய்யும்.

எரிமலை வெடிப்புக்குப் பின் எரிமலை கக்குதல் சாதாரணமாக மெதுவாக நடந்து கொண்டு இருக்கும். கூம்பு வடிவுடைய எரிமலையானது எரிமலை வெடித்துக் கக்கும்போதோ அல்லது அதன் பிறகோ திடப்பொருள்கள் மற்றும் திரவப் பொருள்கள் எரிமலை வாயைச் சுற்றி வட்டவடிவமாகப் படிவதால் இவ்வாய் வளர்ந்துகொண்டே போகிறது.

உலகில் உள்ள பல பழைய எரிமலைகளில் கக்குதல் தோன்றுவதில்லை. இவ்வெரிமலைகளை இறந்த எரிமலைகள் என்பர். தூங்குகின்ற எரிமலைகள் பல ஆண்டுகளாக நெருப்பைக் கக்குவது இல்லை. ஆனால், இஃது எந்த நேரத்திலும் கக்கக்கூடும். சுறுசுறுப்பான எரிமலையில் கக்குதல் எப்போதும் நடந்துகொண்டு இருக்கிறது.

எரிமலை வாயிலாக வெளிவந்த பாறைகள் சிதைவடைந்து செழிப்புள்ள மண்ணாக மாறுகிறது. தக்காணப் பீடபூமியின் வடமேற்குப் பகுதியில் பெரும்பகுதி கருமையான களிமண்ணால் மூடப்பட்டுள்ளது. எரிமலை விளைவால் தோன்றியவையே உருகிய பசால்ட் பாறை பெருமளவில் வெடிப்புகளின் வ்ழியாக வெளிவந்து இந்தப் பகுதியில் படிந்து உள்ளது. காலப் போக்கில் தக்காணப் பீடபூமியில் உள்ள பசால்ட்டிக் பாறை. சிதைவடைந்து கருமண்ணாக மாறியது.

செயல்படுகின்ற எரிமலை வட்டாரங்கள் (Regions of Volcanic Activity)

உலகில் எரிமலைகள் ஓர் ஒழுங்கற்ற தன்மையில் அமைந்துள்ளன. பசிபிக் பேராழியில் சில செயல்படும் எரிமலைகள் உள்ளன. ஜப்பான், பிலிப்பைன்ச் தீவுகள் மற்றும் கிழக்கு இந்தியத் தீவுகள் ஆகிய பிரதேசங்களில் செயல்படும் எரிமலைகள் உள்ளன. தென் அமெரிக்கா, மற்றும் வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில், அதாவது ஆண்டிஸ் மற்றும் கார்டிலிரா மலைத் தொடர்களில் பல செயல்படும் எரிமலைகள் உள்ளன. இமயமலையில் எரிமலைகள் இல்லை. மத்தியதரைக்கடல் பிரதேசத்தில் மிகப்பெரிய எரிமலைகளில் சிலவான வெசுவியஸ் (Vesuvius ) இத்தாலியிலும் எட்னா மலை சிசிலித் தீவிலும் உள்ளன.

எரிமலைகளின் பரவல் குறிப்பிடும்படியான புவியதிர்ச்சி தோன்றுகின்ற பிரதேசங்களில்தான் உள்ளது. இவை அண்மைக்காலத்து மலை அமையும் பிரதேசங்களில் காணப்படுகின்றன. புகழ் பெற்ற பசிபிக் மண்டலம் (Pacific  Belt) என்று சொல்லப்படும் பண்டலம் பசிபிக் பேராழியில் உள்ள கொப்பறையின் ஓரத்தில் அமைந்துள்ளது. இது தென் அமெரிக்காவிலிருந்து அலாஸ்கா வரையும், அலாஸ்காவிலிருந்து ஜப்பான் வரையிலும், ஜப்பானி லிருந்து பிலிப்பைன்ஸ் வரையிலும் பரந்துள்ளது. மத்திய தரைக்கடல் வட்டாரம், கிழக்கு மேற்காக மத்திய அமெரிக்கா விலிருந்து மேற்கிந்திய தீவுகள் வழியாக அசோர்ஸ் கேனரி தீவுகள் மற்றும் மத்தியதரைக்கடல், மத்தியதரைக் கடலிலிருந்து துருக்கி, ஈரான் மற்றும் இராக்கிலிருந்து கிழக்கிந்திய தீவுகள் செல்லுகையில், அது பசிபிக் மண்டலத்தின் குறுக்காகச் செல்கிறது. இஃது இவை இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் காட்டுகிறது. இளம் மலைகள் அதிகமான மடிப்புகளாலும் பிளவுகளாலும் தோன்றுகின்றன. அவ்வாறு படிப்புகள் தோன்றுகையில் பல பிளவுகள் தோன்றுகின்றன. புவியோட்டில் தோன்றிய இவ்வகையான பிளவுகளின் வழியாக மேக்மா மேலேறி எரிமலைக் கக்குதலும் மற்றும் தலையீட்டுதல் மற்றும் தள்ளல்களைத் தோற்றுவிக்கின்றன. எனவே, குறிப்பிடத் தக்க எரிமலைகளின் செயல்கள் ஒட்டு உரு அழிவதோடு தொடர்புள்ளதுபோலவும் தோன்றுகிறது.

பசுபிக் பெருங்கடல்  நெருப்பு வளையங்கள்

Admission Open for

  1. TNPSC Group I
  2. TNPSC GroupII ( Preliminary)
  3. VAO & Group 4

Classes Starts from October First Week

 

DOWNLOAD CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 26 & 27