நடப்பு நிகழ்வுகள் மார்ச்-17,18-2016-குருப் 2 மெயின் வினா.
v அரசியல், பொது வாழ்வில் நேர்மைக்கான 2016-ஆம் ஆண்டின் காயிதே மில்லத் விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.
v கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,350 கோடிக்கு சணல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சணல் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தின் கழிமுக சமவெளிப்பகுதியில் சணல் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சணல் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சணல் பொருள்கள் அமெரிக்கா,பிரேசில் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதோடு, சணல் உற்பத்தியில் 84 ஆலைகள் செயல்படுகின்றன. இதன்மூலம், ஆண்டுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகின்றன.
v காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் பாபு, தமிழக அரசின் சிறந்த நெசவாளர் விருதைப் பெற்றுள்ளார்.
v பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, பாகிஸ்தானின் 6 பேர் அடங்கிய கூட்டு விசாரணைக் குழு, வரும் 27ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். பாகிஸ்தானில் வரும் நவம்பர் மாதம் 9,10 ஆம் தேதிகளில், சார்க் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்து, அதற்கான அழைப்பிதழை சர்தாஜ் அஜீஸ், சுஷ்மா ஸ்வராஜிடம் வியாழக்கிழமை நேரில் அளித்தார்.
v இணையத்தில் செல்வாக்கு மிக்க 30 உலகத் தலைவர்களின் பட்டியலை அமெரிக்காவின் “டைம்‘ இதழ் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
v டெல்லியில் முதல் உலக சூஃபி மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
v உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு டென்மார்க் என 158 நாடுகளின் தர வரிசை பட்டியலில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட இந்தியா பின்தங்கி 118-வது இடத்தை பிடித்துள்ளது.
ü தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன.
ü இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பது டென்மார்க் ஆகும். கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஸ்சுவிட்சர்லாந்து தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ü ஐஸ்லாந்து 3-வது இடத்திலும், நார்வே 4-வது இடத்திலும், பின்லாந்து 5-வது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா(9), இஸ்ரேல்(11), அமெரிக்கா(13) இடங்களை பிடித்துள்ளன.
ü உலகிலேயே மகிழ்ச்சி குறைந்த 5 நாடுகள் பட்டியலில் டோகோ, புரூண்டி, சிரியா, பெனின், ருவாண்டா இடம் பெற்றிருக்கின்றன.
ü இக்குறியீட்டை ஐ. நா வின் நிலையான வளர்ச்சி தீர்வுக் குழு )Sustainable Development Solutions Network (SDSN) ஆண்டு தோறும் வெளியிடுகிறது.
ü மொத்த மகிழ்ச்சிக் குறியீடு என்ற குறீயிட்டை 1972 ஆம் ஆண்டு பூட்டான் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுங் அறிமுகப்படுத்தினார்,
v 21 வது சட்ட ஆணையத்தின் தலைவராக நீதிபதி பால்பீர் சிங் செளகான் நியமனம் செய்யப் பட்டுள்ளார்
கூடுதல் தகவல்கள்
ü சட்ட ஆணையம் மத்திய அரசால் அமைக்கப் படுகிறது.
ü மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படும்
ü இதுவரை 20 சட்ட ஆணையங்கள் அமைக்கப் பட்டுள்ளன, முதலாவது சட்ட ஆணையம் 1955 ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது.
ü இது வரை சட்ட ஆணையம் 262 பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது, இவ்ற்றுள் நீதித்துறை சீர்சிருத்தம், மரண தண்டனை கூடாது, குடும்ப நல நீதி மன்றங்கள் அமைத்தல், பல்வேறு சட்டப் பிரிவுகளை மறு ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துறை செய்துள்ளது.
ü முதல் சட்ட ஆணையத்தின் தலைவராக எம்.சி சேட்வலாட் என்பர் நியமிக்கப்பட்டார், இவரே மத்திய அரசின் முதல் தலைமை வழக்கறிஞர் ஆவார்.
v இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக 17 பிரத்யேக வாக்குச்சாவடிகள் அமைக்கப்படு வதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
v பிரபல ஷெனாய் இசைக் கலைஞர் உஸ்தாத் அலி அகமது ஹுஸேன் கான் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 77. இந்துஸ்தானி இசைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி கடந்த 2009-ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் மேற்கு வங்க அரசும் கடந்த 2012-ம் ஆண்டு இவருக்கு ‘பங்கபூஷண்’ விருது வழங்கி கவுரவித்தது.
v இஸ்ரேல் நாட்டில் வசித்து வருபவர் இஸ்ரேல் கிறிஸ்டல், போலந்து நாட்டில் 1903-ம் ஆண்டு, செப்டம்பர் 15-ம் தேதி பிறந்தவர். 2 உலகப் போர்களை கண்டிருக்கிறார். அவரது வயது 112 வருடங்கள் 178 நாட்கள். இதனால் உலகிலேயே அதிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்தார். இதற்கு முன் ஜப்பானை சேர்ந்த யாசுதரோ கொய்டே (112 வயது, 312 நாட்கள்) என்பவர்தான், உலகின் மிக வயதான மனிதராக இருந்தார். அவர் சமீபத்தில் மரணமடையவே, உலகின் வயதான மனிதர் என்ற சாதனையை கிறிஸ்டல் பெறுகிறார் சில குறிப்பிட்ட கலப்புகளை கொண்ட மருந்துகளை தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட உத்தரவுக்கு, தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து ‘விக்ஸ் ஆக்ஷன் 500′ உள்ளிட்ட பிரபலமான மாத்திரைகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன.
v மேடம் துஸாட் அருங்காட்சியகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகுச் சிலைகள் அடுத்த மாதம் (ஏப்ரல்) அமைக்கப்படவுள்ளன. மேடம் துஸாட் அருங்காட்சியகங்கள் லண்டன், சிங்கப்பூர், ஹாங்காங், பாங்காக் ஆகிய நகரங்களில் உள்ளன. உலகம் முழுவதும் புகழ்பெற்ற மனிதர்களின் மெழுகுச் சிலைகள் இந்த அருங்காட்சியகங்களில் வைக்கப்படுவதே இதன் சிறப்பம்சம் ஆகும்.
v அமெரிக்க உச்ச நீதிமன்றப் பதவிக்கு நீதிபதி மெரிக் கார்லண்டை (63) உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒபாமா செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தார்.
v ஆண்ட்ரூ வில்ஸ் என்னும் கணித பேராசிரியக்கு ஏபேல் பரிசானது வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.4.7 கோடி. இந்த பரிசு சிறந்த கணிதவியலாளருக்கு வழங்கப்படும் உயரிய கவுரவமாக கருதப்படுகிறது.
v 1637ம் ஆண்டு பிரெஞ்சு கணிதவியலாளர் பெய்ரி டி ஃபெர்மட் உருவாக்கிய சமன்பாட்டுக்கு தீர்வு கண்டுபிடிக்க ஏராளமானோர் முயற்சித்தனர்.
v கடந்த மூன்று நூற்றாண்டுகளாக கணிதவியலாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வந்த இந்த சமன்பாட்டிற்கு 62 வயதாகும் ஆண்ட்ரூ வில்ஸ் என்னும் கணித பேராசிரியர் தீர்வை கண்டுபிடித்துள்ளார்.
v பெண்கள் வாகனம் ஓட்டுவதே குற்றமாகக் கருதப்படும் சவூதி அரேபியாவுக்கு, ராயல் ப்ரூனே ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று, முழுக்க முழுக்க பெண் விமானிகளைக் கொண்டு இயக்கப்பட்டு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இது வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஷரிபா க்ஸரினா, ப்ரூனே நாட்டின் முதல் பெண் விமானியாக பதவியேற்று 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
v மாஸ்கோவில் நடைபெற்று வரும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடனான ஆட்டத்தை டிரா செய்தார் ஆனந்த்.
இன்று முதல் குருப் 2 மெயின் தேர்விற்கு தினமும் ஒரு கேள்வி கொடுக்கப் படும், விடைகளை எழுதி அதனை புகைப்படம் எடுத்தோ அல்லது தட்டச்சு செய்தோ , 9952521550 என்ற எண்ணிற்கு whatsapp மற்றும் Telegram messenger or iyyasamy5@gmail.com அனுப்பவேண்டும்.
From today every day one question will be given for group 2 main writing practice For those who writing their answers should be send as image or typing to following whatsapp and telegram, 9952521550, and this mail, iyyasamy5@gmail.com.
Today Question – கட்டுரை
1. Discuss the contribution of A P J Abdul Kalam to indigeniousation and development of new technology in India.?
டாக்டர் ஆ.பெ.ஜெ அப்துல்கலாம் அவர்களின் புதிய தொழில்னுட்ப கண்டுபிடிப்புகளைப் பற்றி விவாதி?