பட்டிக்காட்டிலிருந்து பாரளமன்றம் – 1

பட்டிக்காட்டிலிருந்து பாரளமன்றம் – 1

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்
இது என்ன ”பட்டிக்காட்டிலிருந்து பாரளமன்றம்” தலைப்பைப் பார்த்தால் ஏதோ ஒரு கதையின் தலைப்பு மாதிரி இருக்கிறதே என்று சிந்தித்திருக்க கூடும் , இத்தலைப்பு இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள கிராமங்கள் என அழைக்கப்ப்டும் பட்டிக் காட்டின் ஆட்சியர் போல செயல்படும் கிராம நிர்வாக அலுவலர் பணிமுதல் பாரளமன்றத்திற்கு பாரளமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆணையர் ,ஏன் ? குடியரசுத் தலைவர் தேர்தலையே நடத்தும் லோக் சபா மற்றும் ராஜ்ய சபா செயலாளர் வரையிலான இந்திய ஆட்சிப் பணி வரை எவ்வாறு தயாராவது என்ற  இலக்கை அடிப்படையாக வைத்து இத்தொடரை எழுதத் துவங்கியிருக்கிறேன்.   இத்தேர்வுக்கு தயாராவது எவ்வாறு என்பது பற்றி ஏற்கனவே உயர்பணியில் உள்ள அதிகாரிகள் எழுதியுள்ளனர் இருப்பினும் 
நான் எழுதுவது எவ்வாறு வேறுபடும் என்று சந்தேகம் எழக்கூடும், சிறு வேறுபாடுதான் உள்ளது அவர்கள் இத்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் நான் வெற்றி பெறுவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் உங்களில் ஒருவன். 

இத்தொடரானது நாம் தயாராகிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் என்னென்ன நிகழ்வுகளை எதிர்கொள்கிறோம் என்பது முதல் அது எவ்வாறு நமது தேர்வுப் பயனத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது,குறிப்பாக சொல்லப் போனால் நமது வினாத்தாளின் துவக்கத்தில்  சொல்லப்பட்டுள்ள வழிமுறைகள் செய்யக் கூடியவை எவை செய்யக் கூடாதது எவை என்பது பற்றித்தான் எழுதப் போகிறேன்.

நாம் ஒரு விவசாயியை உதராணமாக வைத்து துவங்குவோம், ஒரு நிலத்தில் பயிரிடத் துவங்கும் முன் அவர் நிலத்தினை சீர் செய்வார் பின்பு தண்ணீரை எவ்வாறு கொண்டுவருவது பின் எம்மாதிரியான பயிரினைப் பயிரிட வேண்டும், இப்பயிரினைப் பயிரிடுவதால் பின்பு வேறு ஒரு பயிர் செய்ய ஏதுவாக இருக்குமா?, எடுத்துக் காட்டாக சில நேரங்களில் நெல் பயிரிடுவதற்கு முன்பு சிலவகையான பயிரைப் பயிரிடுவார் பின்பு நெல் பயிரிடும் போது அப்பயிரை அப்படியே சேர்த்து உழுதிடுவர். சரியான காலத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், பயிர் பயிரிட்டபின்பு களை பறித்தல் , இடைக்காலத்தில் நோய்த் தாக்குதலில் இருந்து பயிரினைப் பாதுகாக்க மருந்து தெளித்தல் , அதிக விளைச்சலுக்கு உரமிடுதல் , விளைச்சலுக்குப் பின் பயிரினைப் பாதுகாத்தல் , சந்தைக்கு கொண்டு செல்லுதல் என அவரின் பணியானது தொடர்ந்து கொண்டே இருக்கும் . இவ்விடைப் பட்ட காலத்தில், இயற்கைச் சீற்றம் , விலங்குகள் பயிரினைச் சேதப்படுத்துவது போன்றவை ஏற்படும் அதனையும் அவர் எதிர்கொள்வார்.
இதனைப் போல்தான் நாம் இத்தேர்வுக்கு தயாராகும் போது விவசாயி செய்கின்ற பணியினைச் செய்ய வேண்டும், முதலில் திட்டமிட வேண்டும், குடிமைப் பணித் தேர்வுக்கு தயாராகும் போது பிற தேர்வுகளுக்கும் எவ்வாறு தயார் செய்வது?. இக்கால கட்டத்தில் பயிருக்கு தண்ணீர் , உரமிடுதல் போன்ற பணிகளை செய்வது போல் நாமும் நமது தேர்வு தயாரிப்பு வளர்ச்சிக்கு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அதாவது சிறந்த வழிமுறைகளை நாம் கையாள வேண்டும். கடைசியாக அவர் சந்தைக்கு விளை பொருளைக் கொண்டு சேர்ர்பது வரை செய்யும் முயற்சியை நாம் நமது லட்சியப் பணியை தொய்வில்லாமல் தொடர்ந்து செய்து வரவேண்டும்.
இத்தொடரில் எனக்கு தெரிந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இது உங்களுக்கு எந்த் வகையில் பயனளித்திருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!. நீங்கள் எப்படித் தேர்வுக்கு தயார் செய்தாலும் வெற்றி பெறவேண்டும் என்பதே என் விருப்பம்
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
விவேகானந்தர்
 நன்றி
வாழ்த்துக்களுடன்
ஐயாச்சாமி முருகன்
திருநெல்வேலி

குறிப்பு உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன 
15 நாள் இடைவெளியில் தொடராக பதிவிடப் படும்.

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-30முதல் 31 வரை -2016- சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-30முதல் 31 வரை -2016-சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்

v உசென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 6 நீதிபதிகளை நியமிப்பதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60-லிருந்து 75-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், உயர் நீதிமன்றம்-உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றில் 34 நீதிபதிகளே உள்ளனர். 41 பணியிடங்கள் காலியாக உள்ளன.
v திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம்.
v ஜப்பான் மொழியில் திருக்குறள் வெளிவரக் காரணமாக இருந்த சேலம் ஓமலூரைச் சேர்ந்த சொ.மு.முத்து (96) உடல் நலக் குறைவு காரணமாக மார்ச் 29ஆம் தேதி மாலை அவரது இல்லத்தில் காலமானார். சொ.மு. முத்துவின் உதவியால் சூசோ மாசூங்கா ஜப்பானிய மொழியில் திருக்குறளை எழுதி முடித்தார். 
v உலகெங்கிலும் அரிய வனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இணைத்து வருகிறது. அதனடிப்படையில், தமிழகக்ததில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் மலையை உலகின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இந்த மாதம் 19-ஆம் தேதி முதல் இணைத்துக் கொண்டது.

   கூடுதல் தகவல்கள்
ü கடந்த ஆண்டு யுனெஸ்கோ பட்டியலில் கனடா நாட்டின் பீவர் மலைப் பகுதியும், இந்தோனேசியாவின் பாம்பங்கன் வனப் பகுதியும் இணைந்தன.
ü தமிழகத்தில் ஏற்கெனவே நீலகிரி மலைப் பகுதி 2000 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் இணைக்கப்பட்டது.
ü நீலகிரித் தொடர் மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகள் 1986ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் உயிர்கோள இருப்பிடமாக” (Biosphere Reserve) ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தின் (UNESCO) “மனிதனும் உயிர்க்கோளமும்” (Man and Biosphere – MAB) திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது. 
ü 2001 ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாப் பகுதியும் யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பெற்றது. 
ü இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 10 பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில், தமிழகம் மூன்று வனப் பகுதிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
ü அகஸ்தியர்மலை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர்மலை தமிழக- கேரள மாநில எல்லைகளையொட்டி 3500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அகஸ்தியர் மலை வனப் பகுதியில் 2,250 தாவர வகைகளும், 337 பறவை இனங்களும், 79 பாலூட்டிகளும், 88 வகையான ஊர்வனங்களும், 46 வகை மீன்களும், 45 நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய சிறிய உயிரினங்களும் உள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
ü மிகப் பழைமையானது: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் இமயமலையைவிடப் மிகப் பழைமையானவை எனக் கண்டறியப்பட்டு, அவற்றை உலகின் பாரம்பரியமிக்க இடமாக யுனெஸ்கோ 2012-இல் அறிவித்தது. 8 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் உருவான புவியியல் அமைப்பே மேற்குத் தொடர்ச்சி மலைகள் என்பது புவியியல் வல்லுநர்களின் ஆய்வு முடிவாகும்.
v இந்தியாவில் இருந்து நேரடியாக வங்கதேசம் செல்லும் முதல் சரக்குக் கப்பல் ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட கிருஷ்ணப்பட்டினத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
v விபத்துகளில் காயமடைவோரை காப்பாற்றும் ஈர நெஞ்சங்களை போலீஸார், விசாரணை அமைப்பினர் தேவையில்லாமல் அலைக்கழிப்பதை தவிர்க்க மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ü சாலைப் பாதுகாப்பு, விபத்தில் உதவுபவர்களுக்கு பிரச்னைகள் ஏற்படாமல் தடுப்பது குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து கடந்த   2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ü இந்தக் குழு அளித்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் 12 முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அதனை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை அளித்தது.
v இணையவழி சில்லறை வர்த்தகத்தில் (இ-காமர்ஸ்) 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
v இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையான இஸ்ரோவரும் மே மாதம் பிஎஸ்எல்வி சி34 ராக்கெட் மூலம் இந்தியாவின் கார்டோசாட் 2சி என்ற செயற்கைக்கோளை விண் ணில் செலுத்தவுள்ளது. அப்போது அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் 21 செயற்கைக்கோள் களையும் அந்த ராக்கெட்டுடன் இணைத்து விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.
v உத்தரப் பிரதேச மாநில பள்ளி களில் தினசரி தேசிய கீதம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
v 4வது அனு உச்சிமாநாடு வாஷிங்டன்னில் நேற்று தொடங்கியது
ü 2012 – சியோல் , தென் கொரியா
ü 2014- த ஹேக் நெதர்லாந்து
ü 2010- வாஷிங்டன் – அமெரிக்கா
vமருத்துவ ஆய்வக சோதனைக்கான விதிமுறைகள் எளிமையாக்கப்ட்டுள்ளன . 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் மருத்துவ ஆய்வக சோதனையை தடை செய்திருந்தது  குறிப்பிடத்தக்கது, ரஞ்சித் ராய் கமிட்டி அளித்த பரிந்துரையின்படி இவ்விதிகள் எளிமையாக்கப் பட்டுள்ளன.
v பயங்கரவாதம் எனும் பொதுவான சவாலை எதிர்கொள்வதற்கு, பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை இந்தியாவும், பெல்ஜியமும் மீண்டும் தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
v கர்நாடகாவில் இன்று (புதன் கிழமை) முதல் தோல் வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வித் துறைக்கான அமைச்சர் ஷரண் பிரகாஷ் பட்டீல் விக்டோரியா மருத்துவமனையில் கர்நாடக மாநிலத்தின் முதல் தோல் வங்கியைத் திறந்து வைத்தார்.
v எகிப்தில் உள்ள புகழ்பெற்ற அயின் ஷாம்ஸ் பல்கலைக்கழகத்தில், இந்தியா தனது ஆய்வு மையத்தை நிறுவ உள்ளது. எகிப்து மட்டுமன்றி அரபு நாடுகளிலேயே ஏற்படுத்தப்படும் முதலாவது இந்திய ஆய்வு மையம் இதுவாகும்.
v இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டுக் கடற்படை வீரரை விடுவிக்குமாறு அந்நாட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று சர்வதேச நிரந்தர சமரச தீர்ப்பாயத்தில் இத்தாலி முறையிட்டுள்ளது.
v மியான்மரின் புதிய அதிபராக ஹிடின் கியா புதன்கிழமை பதவியேற்றார்.50 ஆண்டுகளுக்குப் பிறகு, ராணுவப் பின்னணியைச் சாராத ஒருவர் அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
v பொலிவியாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில், அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி தனது 50-வது சர்வதேச கோலை அடித்து சாதனைப் படைத்தார். அர்ஜென்டினா அணி சார்பில், காஃபிரியேல் பாட்டிஸ்டூடா 56 சர்வதேச கோல்கள் அடித்து  முதலிடத்தில் உள்ளார்.
v டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்
வ.எண்
சரணாலயத்தின் பெயர்
மாவட்டத்தின் பெயர்
1.
முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா
நீலகிரி
2.
கலக்காடு – முண்டந்துரை புலிகள் சரணாலயம்
திருநெல்வேலி
3.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
காஞ்சிபுரம்
4.
பாயிண்ட் கேளிமர் வனவிலங்கு சரணாலயம்
நாகப்பட்டிணம்
5.
கிண்டி தேசிய பூங்கா
சென்னை
6.
இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா
கோவை
7.
கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம்
கன்னியாகுமரி
8.
வேட்டன்குடி பறவைகள் சரணாலயம்
சிவகங்கை
9.
முக்குரித்தி தேசிய பூங்கா
நீலகிரி
10.
பூலிகட் லேக் பறவைகள் சரணாலயம்
திருவள்ளூர்
11.
கிரிஸ்சல்ட் ஜெயிண்ட் அணில்கள் சரணாலயம், ‚வில்லிப்புத்தூர்
விருதுநகர்
12.
கரிகிளி பறவைகள் சரணாலயம்
காஞ்சிபுரம்
13.
கஞ்சிரன்குளம் பறவைகள் சரணாலயம்
இராமநாதபுரம்
14.
வல்லநாடு கருப்பு மான் (பிளாக்பக்) சரணாலயம்
தூத்துக்குடி
15.
மன்னார் வளைகுடா கடல் சார்ந்த தேசிய பூங்கா மற்றும் உயிர்கோள சரணாலயம்
மன்னார் வளைகுடா, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம்
16.
உதயமத்தண்டபுரம் பறவைகள் சரணாலயம்
திருவாரூர்
17.
அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா
சென்னை
18.
கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
பெரம்பலூர்
19.
வுடுவூர் பறவைகள் சரணாலயம்
திருவாரூர்
20.
சித்ரநுடி பறவைகள் சரணாலயம்
இராமநாதபுரம்
21.
குந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
திருநெல்வேலி
22.
வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
ஈரோடு
23.
மேல் செலவனூர் கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம்
இராமநாதபுரம்
24.
திருப்படைமருதூர் பாதுகாப்புச் சரணாலயம்
திருநெல்வேலி

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 01 2016-குருப் 2 மெயின் வினா

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 01 2016-குருப் 2 மெயின் வினா
v தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா, சரஸ்வதி நர்சரி பள்ளிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்குவது குறித்த விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கட்ராமன் ஆணையம் தாக்கல் செய்தது. இந்தப் பள்ளிகளில் 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், 93 குழந்தைகள் உயிரிழந்தனர். 16 குழந்தைகள் தீ காயம் அடைந்தனர். முன்னாள் நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் 2014-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
v பிஹாரில் பகுதி அளவிலான மதுவிலக்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
v பயங்கரவாதத்தை தடுப்பதில் ஐ.நா.சபை தோல்வியடைந்து வருகிறது என்று விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்தை ஒடுக்க துரித நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஐ.நா. தனது முக்கியத்துவத்தை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். பெல்ஜியம் பயணத்தை முடித்து கொண்டு, அணுசக்தி பாதுகாப்பு குறித்த உச்சி நாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வியாழக்கிழமை சென்றடைந்தார். அதைத்தொடர்ந்து, ஈர்ப்பலைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வசதியாக, இந்தியாவில் ஈர்ப்பலைகள் கூராய்வு மையத்தை (லிகோ) நிறுவுவது தொடர்பாக, அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் மோடி மற்றும் “லிகோவிஞ்ஞானிகள் முன்னிலையில், வாஷிங்டனில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய அணுசக்தித் துறையின் செயலர் சேகர் பாசு, அமெரிக்க தேசிய அறிவியல் அமைப்பைச் சேர்ந்த பிரான்ஸ் கோர்டுவா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வரும் 2023ஆம் ஆண்டில், இந்த ஆய்வு மையம் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பெல்ஜியம் உதவியுடன் இந்தியாவின் ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கி உத்தரகாண்ட் மாநிலம், நைனிடால் அருகே நிறுவப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை (Aryabhatta Research Institute of Observational Sciences (ARIES) பிரதமர் மோடியும், பெல்ஜியம் பிரதமர் மிச்சேலும் இணைந்து ரிமோட்மூலம் இயக்கி தொடங்கி வைத்தனர்.

v யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான இயந்திரங்கள் 17 தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட உள்ளன.அண்ணாநகர் ,வேலூர் கிருஷ்ணகிரி, சேலம்-வடக்கு, ஈரோடு-மேற்கு , திருப்பூர்-வடக்கு , கோவை-வடக்கு, திண்டுக்கல் , திருச்சி- மேற்கு , கடலூர் , தஞ்சாவூர் , காஞ்சீபுரம் , விழுப்புரம் , மதுரை கிழக்கு , தூத்துக்குடி , நெல்லை , கன்னியாகுமரி  வாக்குச் சாவடிகள் என மொத்தம் 17 தொகுதிகளில் உள்ள 4,795 வாக்குச்சாவடிகளில், 5,994 இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளன.
v சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் பணியில் இருந்து வியாழக்கிழமை ஓய்வு பெற்றார்.
v ஆயுஷ் சுகாதார திட்டத்திற்கு ஆந்திர பிரதேசம், குஜராஜ் உள்ளிட்ட 6 மாநிலங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளதாக மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் யஸ்சோ நாயக் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்தவை. ஆயுர்வேதா, யுனானி, சித்தா இந்த எல்லாவற்றின் சிகிச்சை முறையிலும் யோகா பொதுவாக சேர்ந்தவைதான்.
v வர்த்தகப் பயன்பாடு கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.
v மியான்மரில் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்காக சிறப்பு “ஆலோசகர்பதவியை உருவாக்குவற்கான முயற்சிகளை அந்தக் கட்சி எம்.பி.க்கள் தொடங்கியுள்ளனர். அவரது அறவழிப் போராட்டத்துக்காக, 1991-ஆம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
v வியட்நாம் நாடாளுமன்றத்துக்கு முதல் பெண் சபாநாயகராக நூயென் தி கிம் நான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
v ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய குத்துச்சண்டை வீரர் சிவ தாபா தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

WRITE THE APPLICATIONS OF NANO TECHNOLOGY IN MEDICINCE?-8 மார்க்நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2, 3

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2, 3  
v கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என்றார் கூடங்குளம் அணு மின்திட்ட வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர்.
v தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த நிதியாண்டில் 36.85 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது.  அதிக அளவு நிலக்கரி, உரம், தாமிரத் தாது, சரக்குப் பெட்டகங்கள், சுண்ணாம்புக் கல், திரவ அம்மோனியா, பெட்ரோலிய பொருள்களான நாப்தா, சமையல் எரிவாயு, இரும்புப் பொருள்கள், உப்பு, பருப்பு வகைகள், கோதுமை, மக்காசோளம் போன்ற சரக்குகளை அதிக அளவில் இறக்குமதி செய்ததால் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
 மேலும், கட்டுமானப் பொருள்கள், சரக்குப் பெட்டக சரக்குகள், திரவ காஸ்டிக் சோடா, இயந்திரங்கள், இரும்புப் பொருள்கள், சாம்பல், இலுமனைட் மணல், கார்னெட் மணல், ஜிப்சம் மற்றும் சிமென்ட் போன்ற பொருள்களை மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்ததாலும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
v தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து 7 போர்க் கப்பல்கள் திடீரென வருகை புரிந்தன. ஐ.என்.எஸ். சக்தி, ஐ.என்.எஸ். சத்புரா, ஐ.என்.எஸ். ஷயாத்ரி, ஐ.என்.எஸ். கோரா, ஐ.என்.எஸ். குதார், ஐ.என்.எஸ். கட்மட் மற்றும் ஐ.என்.எஸ். கான்ஜார் ஐ.என்.எஸ்.

v பொருளாதார சிக்கனத்தை கருத்தில்கொண்டு, ஒரு கிலோ எடையில் “பிக்கோசெயற்கை கோள்களை உருவாக்குவதற்கு பொறியியல் துறை மாணவர்களை இஸ்ரோ ஊக்குவித்து வருவதாக விஞ்ஞானி ஜி. ஸ்ரீவித்யா தெரிவித்தார்.2019இல் சந்திராயன்-2 செயற்கைகோளை செலுத்துவதற்கு விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. காங்கோசேட்-3 என்ற செயற்கைகோள் 2018 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பூமியிலிருந்து 450 கி.மீ. உயரத்தில் நிலை நிறுத்தப்படும் இந்த செயற்கைகோள் மூலம், 25 செ.மீட்டர் அளவில் உள்ள பொருள்களையும் தெளிவாகப் படம் பிடிக்க முடியும். மண் வளம், வேளாண்மை, நீர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளுக்கு, இந்த செயற்கைகோள் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.
v தேசிய பஞ்சாயத்து தினத்தை வரும் 24ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
v மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் கோயில்களுக்குள் செல்வது பெண்களின் அடிப்படை உரிமை என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
vசண்டீகர் நகரில் மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்வது வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டது. இதனால், மண்ணெண்ணெய் பயன்பாடில்லாத முதல் நகரமாக சண்டீகர் அறிவிக்கப்பட்டுள்ளது.
v உத்தரகண்ட் மாநிலத்தின் நிகழ் நிதியாண்டுக்கான செலவினங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
v இந்திய ரயில் போக்குவரத்து வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில், முதல் முறையாக நாட்டிலேயே அதிக வேகத்தில் செல்லும் “கதிமான்ரயிலின் சேவை வரும் 5ஆம் தேதி தொடங்கப்படுகிறது.
v வியத்நாம் அதிபராக அந்த நாட்டின் சர்ச்சைக்குரிய காவல்துறைத் தலைவரான டிரான் டை குவாங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
v அரசியல் ஸ்திரத் தன்மையே இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணம்என்று சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் வாழும் இந்திய சமுதாயத்தினரிடையே பேசியபோது, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, ரியாத் ஆளுநரான இளவரசர் ஃபைசல் பின் பந்தர் பின் அப்துல்லஜீஸýம், அந்நாட்டு உயர் அதிகாரிகளும் வரவேற்றனர்.

v நைஜீரியா நாட்டு அதிபரை தேர்வு செய்ய கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் முன்னாள் அதிபரான மஹமடோ ஐசோபோ மீண்டும் வெற்றி பெற்றார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கான அந்நாட்டின் அதிபராக நேற்று அவர் பதவி ஏற்றார்.


*

நடப்பு நிகழ்வுகள் 26-29,பிப்ரவரி-2016 – பொருளாதார ஆய்வறிக்கை

நடப்பு நிகழ்வுகள்  26-29,பிப்ரவரி-2016 பொருளாதார ஆய்வறிக்கை
Ø ஆரோவில் சர்வதேச நகரம் உருவான தின விழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொண்டாடப்பட்டது.
 
புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரம், மகான் அரவிந்தரின் முக்கிய சீடரான ஸ்ரீ அன்னை என்று அனைவராலும் அழைக்கப்படும், மீரா அல்போன்சாவின் கனவு நகரமாக 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
Ø முன்னாள் குடியரசு தலைவர் .பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், இன்று அப்துல் கலாம் இலட்சிய இந்திய கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார்.
Ø உலகளவில் தொழிற்சாலை தொடங்குவதற்கான எளிய நடைமுறைகள் தன்மையில் இந்தியா 142-ஆவது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் தொழிற்சாலை தொடங்குவதற்கான இலகுத்தன்மையில், தமிழ்நாடு 12- ஆவது இடத்திலேயே உள்ளது.
Ø தமிழகத்தில் சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அம்மா கைபேசிகளை வழங்கும் (27.2.2016) திட்டத்தினை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் 92 லட்சம் உறுப்பினர்களைக்கொண்டு 6 லட்சத்து 8 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இதில் ஊரகப்பகுதிகளில் சுமார் 4 லட்சத்து 23 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அம்மா கைபேசி திட்டத்தின் கீழ் சமுதாய பயிற்றுனர்களுக்கு கைபேசியுடன் சிம் சேவையும் இலவசமாக வழங்கப்படும். சிம் கார்டு பயன்பாட்டிற்கான மாதாந்திர கட்டணத்தை தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.
Ø மத்திய தோல் ஆராய்ச்சி மையத்துக்கு புதிய இயக்குநராக பி. சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். கண்ணம்மாள் நினைவு விருது, சுலாப் சர்வதேச விருது உள்பட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ø புகழ்பெற்ற நடன கலைஞர் ருக்மிணி தேவி அருண்டேலின் பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.1956 ஆம் ஆண்டு பதம் பூஷன் விருது பெற்றுள்ளார். 1962 ஆம் ஆண்டு விலங்குகள் நல வாரியம் இவருடைய தலமையில் துவங்கப்பட்டது.
Ø பொதுத்துறை வங்கிகளின் உயர்நிலை அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கவும், வங்கிகள் தொடர்பான பிரச்னைகளைக் களையவும் அமைக்கப்பட்டுள்ள வங்கிகள் வாரியத்தின் முதல் தலைவராக, முன்னாள் சிஏஜி வினோத் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.
Ø வைல்டு டிரைல்ஸ் (wildtrails) எனும் செயலி அருகில் உள்ள வனவிலங்குகளைப் பற்றி அறிவதற்காக பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் உருவாக்கியுள்ளார்.
Ø நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படைகளான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஆகியவற்றின் புதிய தலைவர்கள் தில்லியில் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர். தெலங்கானா பிரிவைச் சேர்ந்த, 1982-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வு பெற்ற கே. துர்கா பிரசாத், சிஆர்பிஎஃப் படையின் தலைவராகப்பொறுப்பேற்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான கே.கே.சர்மா, பிஎஸ்எஃப் படையின் தலைவராக பதவியேற்க இருக்கிறார். 
Ø ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் போட்டியின்றி தொடர்ந்து 7வது முறையாக பிஜு ஜனதாதளம் (பிஜேடி) கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Ø ஆசியக் கண்டத்தில் சுற்றுலாப் பயணிகளால் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் 10 சிறந்த கடற்கரைகளில் 3 இந்தியாவில் உள்ளதாக தனியார் இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோவா மாநிலத்தில் உள்ள அகோந்தா, பாலோலேம் ஆகிய 2 கடற்கரைகளும், அந்தமான் தீவில் உள்ள ராதாநகர் கடற்கரையும் சிறந்த கடற்கரைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
Ø சூரிய மின்சக்தி சாதன உற்பத்தித் துறையில், பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டை மீறும் வகையில் அமைந்துள்ள உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்ற இந்தியாவின் முடிவை கிரீன்பீஸ் தன்னார்வ அமைப்பு ஆதரித்துள்ளது.
Ø கடலோரக் காவல் படையின் புதிய தலைமை இயக்குநராக, மூத்த அதிகாரி ராஜேந்திர சிங், சனிக்கிழமை பொறுப்பேற்றார்.
Ø கேரளா தான் நாட்டின் முதல் டிஜிட்டல் மாநிலம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெருமை பொங்க அறிவித்தார். மேலும் இந்தியாவிலேயே முதல் பாலின பூங்காவைத் திறந்துவைத்தார்.
Ø இந்தியாவில் இண்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துவதில் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது இடம் பெற்றுள்ளது என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. முதல் இடத்தை மகாராஷ்டிரா மாநிலம் இடம் பெற்றுள்ளது.
Ø ஈர்ப்பு அலைகளை ஆராய உலகிலேயே 3-வதாக இந்தியாவில் லிகோ மையம்
பொருளாதார ஆய்வறிக்கை 2015-2016
*    நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வரும் நிதியாண்டில் (2016-17) 7 முதல் 7.75 சதவீதம் வரை இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாட்டில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளும், மானியக் குறைப்பும் தொடர வேண்டும் என்றும் ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

*    உலக அள்வில் இந்தியா பொருளாதர வளர்ச்சியில் முதலிடத்தை வகிக்கிறது.
*    உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்: 2015-16-ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.1 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.  ஆனால் அது 7.6 சதவீதமாக குறைந்தது. எனினும் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 முதல் 10 சதவீதமாக இருக்கும்.
*    ரிசர்வ் வங்கியின் இலக்குக்கு ஏற்ப 2016-17-ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 4.5 முதல் 5 சதவீதமாகக் குறையும். 
*    1989ஆம் ஆண்டில் இருந்து 2010-ஆம் ஆண்டு வரை, 1.05 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில், முறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 37 லட்சம் மட்டுமே.
*    மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 10-ஆகக் குறைக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதுகள்
*    ஆண்டுக்கான 88–வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் உள்ள ஹாலிவுட்டில் நடைபெற்றது
*    88–வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தி ரெவளன்ட் படத்தில் நடித்த நாயகன் டிகாப்ரியோவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
*    , சிறந்த இயக்குநருக்கான விருது  தி ரெவளன்ட் படத்தை இயக்கிய அலிஜன்ட்ரோ  ஜி இனாரிட்டுக்கு வழங்கப்பட்டது. இவர் நான்காவது முறையாக ஆஸ்கார் விருதினை பெறுகிறார்.

*    சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவு, நடிகருக்கான விருது என 3 ஆஸ்கார் விருதுகளை தி ரெவளன்ட் படம் தட்டிச் சென்றுள்ளது.
*    சிறந்த திரைப்படமாக ஸ்பாட் லைட் என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
*    சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதினை ரூம் படத்தில் நடித்த நடிகை பிரீ லார்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Ø கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லா சுவாரெஸ் நவர் சாம்பியன் பட்டம் வென்றார்.
Ø மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மகளிர் நடுவர்கள் பணியாற்றவிருப்பது இதுவே முதல்முறையாகும். அவர்களில் ஒருவர் கேத்தி கிராஸ், மற்றொருவர் கிளேர் போலோசாக்.
Ø சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) புதிய தலைவராக ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஜியானி இன்ஃபான்டினோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Ø புதுச்சேரி அடுத்த ஆரோவிலில் சர்வதேச குதிரையேற்றப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-9 ,2016 – IRNSS – இந்தியாவின் புவியிடங்காட்டி PDF

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-9 ,2016 –IRNSS – இந்தியாவின் புவியிடங்காட்டி
Þ சென்னை தியாகராய நகர் தலைமை தபால் அலுவலகத்தில் முதல் பெண் முதுநிலை அதிகாரியாக ஜே.வாசுகி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். சர்வதேச மகளிர் தினத்தில் இவர் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Þ   உடல்நலக் குறைவால் அவதிப்படும் 2 யானைகளை வனத் துறையிடம் ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் உள்ள மதுரவள்ளி என்ற யானையும், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் உள்ள கோமதி என்ற யானையும் வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
Þ   சூரிய கிரகணம் நடைபெறும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் பார்வையிடுவதற்கு பிர்லா கோளரங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
கூடுதல் தகவல்
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படும். இந்த நிகழ்வு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. முழு சூரிய கிரகணத்தின்போது, சந்திரன், சூரியனை முழுவதுமாக மறைத்து ஒரு வளையம் போல் தெரியும். சூரிய கிரகணம் அமாவாசை தினத்தில்தான் நிகழும். பொதுவாக, ஓராண்டில் 2 முதல் அதிகபட்சம் 5 சூரிய கிரகணங்கள் ஏற்படலாம்.
Þஎல்லைப் பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்) முதல் பெண் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனுஸ்ரீ பரீக், சர்வதேச மகளிர் தினமான செவ்வாய்க்கிழமை, பயிற்சி அகாதெமியில் இணைந்தார்.
Þதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 60 சதவீதத் தொகைக்கு (இபிஎஃப்) வரி விதிக்கப் போவதாக மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது.
Þமகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை, மத்திய அரசு சட்டமாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேறியது. ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக “181′ என்ற இலவச அழைப்பு எண் தொடங்கப்படும். பெண்களின் பாதுகாப்புக்காக “அபயம்என்ற பெயரிலான செல்லிடப்பேசி செயலி விரைவில் தொடங்கப்படும். 
Þபிஹார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 72 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 1.6 கோடி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், மதிய உணவில் வாரத்துக்கு ஒரு முறை வெஜிடபிள் பிரியாணி வழங்கப்படும் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
Þ உடல் பருமனான மக்கள் அதிகம் வாழும் மாநிலங்கள் பட்டியலில் பஞ்சாப் முதலிடத்தில் உள்ளது. உடல் மெலிதான ஆண்கள் அதிகம் வாழும் மாநிலங்கள் பட்டியலில் திரிபுராவும் உடல் மெலிதான பெண்கள் பட்டியலில் மேகாலயாவும் முதலிடத்தில் உள்ளன.
Þஎதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்றவர்களின் சொத்துகளை நிர்வாகம் செய்வதற்காக எதிரி சொத்து சட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக 1965-ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போருக்குப் பிறகு 1968-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. சுமார் 48 ஆண்டுகள் பழைமையான இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
Þ இந்திய விமானப் படையின் போர்ப் பிரிவில் முதல் முறையாக பெண் விமானிகள் ஜூன் 18-ஆம் தேதி முதல் பணியில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதி அரூப் ராஹா, இந்தத் தகவலை தில்லியில் தெரிவித்தார். இந்திய விமானப் படையில் பெண் விமானிகள் முதல் முறையாக கடந்த 1991-ஆம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால், இதுவரையிலும் ஹெலிகாப்டர் மற்றும் போக்குவரத்து விமானங்களை மட்டுமே பெண்கள் இயக்கி வருகின்றனர்.
Þநேபாள காங்கிரஸ் கட்சியின் 8-ஆவது தலைவராக, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தேவ்பா (69) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Þ   வங்கதேச விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சி மூத்த தலைவர் மிர் குவாஸம் அலிக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
Þபோர்ஸ்( Force 18) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராணுவக் கூட்டுப்பயிற்சி சமீபத்தில் முடிவடைந்த்து. ஆசியான் அமைப்பைச் சேர்ந்த நாடுகளும் பிற நாடுகளும் கலந்து கொண்டன.
Þசமீபத்தில் நடந்துமுடிந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மார்ச் 12-ம் தேதி வரை டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளார்.
Þ   இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஏஞ்செலோ மேத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வியாழக்கிழமை (மார்ச் 10) மாலை 4 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி.சி. 32 ராக்கெட்.  இந்த ராக்கெட் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 எஃப் என்ற வழிகாட்டி செயற்கைக்கோளை சுமந்துச் செல்ல உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) செயற்கைக்கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. தொடர்ந்து கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கெனவே 5 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். ஒரு பார்வை:
ü 2013-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1ஏ செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி22 ராக்கெட்டிலும்,
ü கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1பி செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி24 ராக்கெட்டிலும்,
ü கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1சி,
ü கடந்த ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1டி செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.
ü கடைசியாக ஜனவரி 21-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1ஈ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பயன்பாடுகள்
ü ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்கள் கடல்வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறது.
ü இயற்கைப் பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கும் இந்த செயற்கைக்கோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ü மேலும் 1,500 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும்,
ü வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும். 
ü  இந்த செயற்கைக்கோள் கார்கள், சரக்கு வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் இருப்பதை துல்லியமாக தெரிவிப்பதுடன், பயணநேரம் குறித்துச் சரியான தகவல்களை அளிக்கும்.
ü மேலும் பேரிடர் மேலாண்மை, செல்போன்கள் ஒருங்கிணைப்பு, புவியியல் வரைப்படங்களைக் கண்காணித்தல், கார், கனரக வாகன (“டிரக்ஸ்‘) ஓட்டுநர்களுக்கு குரல்வழி மூலம் முறையாக இயக்கச் சொல்லி வாகனங்களை இயக்கச் செய்ய முடியும்.
ü இது இந்தியாவுக்கான பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோள். அமெரிக்காவின் ஜிபிஎஸ் போல இந்தியாவுக்கான எஸ்பிஎஸ் வழிக்காட்டியாக இந்தச் செயற்கைக்கோள்கள் அமையும்.
GPS – ஏன், எதற்கு, எப்படி!
ஆதிகாலத்தில் இருந்தே மனிதன் ஆபிரிக்க வெளிகளிலும், ஐரோப்பிய மலை மேடுகளிலும், ஆசியக்காடுகளிலும் அலைந்து திரிந்திருக்கிறான். காலம், காலமாகவே அவனுக்கு தேடல் இருந்திருக்கிறது. ஆனால் புதிய இடங்களைச் சேரும் போதும், அங்கே தனது தேடல்களை மேற்கொள்ளும் போதும், மிகப்பெரிய பிரச்சினை எங்கே இருக்கிறோம் என்பதும், தொலைந்துவிடாமல் மீண்டும் அவனது குழுவிடம் மீண்டும் வரவேண்டுமே என்பதும் ஆகும்.
பழக்கப்பட்ட இடங்களில் இந்த பிரச்சினை இல்லை, ஆனால் புது இடங்களில்? ஏன் நானே இதுவரை சிறுவயதில் மூன்று முறை தொலைந்திருக்கிறேன்! இன்றும் புதிய இடங்களுக்கு போகும் போது, செல்லும் பாதையை ஒரே தடவையில் ஞாபகம் வைத்துக் கொள்வதென்பது  முடியாத காரியமாக தான் இருக்கிறது, என்ன செய்ய ??!!
ஆதிகாலத்தில் பல்வேறு இயற்க்கை அமைப்புக்களை வைத்து அவன் இருக்கும் இடங்களை அடையாளப் படுத்திய மனிதன், பிற்காலத்தில் திசைகாட்டியை கண்டறிந்து பயன்படுத்தினான். தொடர்ந்து வந்த தொழில்நுட்ப வளர்ச்சியால், இன்று செயற்கைக் கோள்களின் உதவியுடன் GPS என்ற ஒன்றை உருவாக்கிவிட்டான். வானத்தில் இருந்து பார்க்கும் ஆபத்பண்டவர் போல 24 செய்மதிகள் (satellites) பூமியை சுற்றி வந்துகொண்டே இருக்கிறது, அது எந்த நேரமும் நாம் இருக்கும் இடத்தை எமக்கு மிகத் துல்லியமாக தெரிவித்துவிடும்.
இந்த GPS / புவியிடங்காட்டி பற்றிதான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம். அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றியும், அது வேலை செய்ய தேவையான கருவிகளைப் பற்றியும் பார்ப்போம். மேலதிகமாக அதைவிடவும் வேறு என்ன தொழில்நுட்பங்கள் இடத்தை அறிவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் பார்ப்போம்.
இன்று நாம் வாழும் உலகம் தொழில்நுட்ப மயமாகிவிட்டது. அதிகளவான தொழில்நுட்ப வளர்ச்சி, நாம் என்னென்ன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம் என்பதை தெரியாமலே பயன்படுத்த வழிவகுத்துவிட்டது. இன்று சர்வசாதாரணமாக நம் எல்லோரது கையிலும் ஐபோன், ஆண்ட்ராய்டு போன்ற செல்பேசிகள் உண்டு. ஸ்மார்ட்போன் என அழைக்கப்படும் இவ்வகை செல்பேசிகள் தனக்குள்ளே தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதற்கு தேவையான கருவிகளை விடவும், மேலும் சில பல கருவிகளை உள்ளடக்கியுள்ளது.
நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி முகப்புத்தகத்தில் சட் (chat) செய்யும் போது உங்களது தகவலுக்கு கீழே, நீங்கள் எங்கிருந்து இந்த சட் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று உங்கள் ஊரின் பெயரும் தெரியும். எப்போதாவது இது எப்படி சாத்தியம் என்று சிந்தித்தது உண்டா? இது என்ன பெரிய விஷயம், நான் எங்கே இருக்கிறேன் என்பது இலகுவாக கண்டுபிடித்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், மேற்கொண்டு வாசியுங்கள். இந்த தொழில்நுட்பம் வேலை செய்யும் முறை உங்களை ஆச்சரியப் படவைக்கும் அது மட்டுமல்ல, அது நீங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதும் அவ்வளவு இலகுவான காரியமில்லை! ஆனால் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி அதை சாத்தியப்படுத்தியுள்ளது. பார்ப்போம் எவ்வாறு என்று!
உங்கள் ஸ்மார்ட்போன்களில் உலக இடைநிலை உணர்வி / GPS – Global Positioning System
நாம் முதலில் GPS பற்றிப் பார்க்கலாம், மிகத்துல்லியமாக (3.5 மீட்டருக்குள்) நாம் இருக்கும் இடத்தை GPS ஐ வைத்து அறிந்துவிடலாம். உங்கள் ஸ்மார்ட்போன்கள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் GPS வாங்கி (GPS Receiver) இருக்கும். இதனால் தான் உங்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி கூகிள் மாப்ஸ் மூலம் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பார்பதற்கும், மற்றும் வீதி வழிச்செல்லுவதற்கான வழிகாட்டியாகவும் அது பயன்படுகிறது.
GPS ஐ நாம் எல்லோரும் எல்லா நாடுகளிலும் பயன்படுத்துவதால் அது உலகநாடுகளுக்கு சொந்தமான ஒன்று இல்லை. GPS அமெரிக்க வான்படைக்கு சொந்தமான ஒரு தொழில்நுட்பம். அதை உருவாக்கி, பராமரிப்பது அமெரிக்க இராணுவமே. ஆனால், GPS வாங்கி வைத்திருக்கும் யார் வேண்டும் என்றாலும் அதை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
மத்திம புவிச் சுற்றுப் பாதையில் (medium earth orbit), அதாவது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 20,200 கிலோமீட்டர்கள் உயரத்தில் 24 செய்மதிகள் பூமியை தினமும் இரண்டு முறை சுற்றி வருகின்றன. இந்த செய்மதிகளே GPS இன் அடிப்படைக் கட்டமைப்பாகும்.
இந்த 24 செய்மதிகளும், சம இடைவெளி கொண்ட ஆறு அச்சுக்களில், ஒவ்வொன்றிலும் 4 செய்மதிகள் வீதம் பூமியை சுற்றுகின்றன. இந்த 24 செய்மதிகள் சுற்றும் இடங்கள்/ அச்சுக்கள், அடிப்படை அச்சுக்கள் (baseline slots) என்று அழைக்கப்படும். இந்த செய்மதிகளின் சுற்றுப் பாதை எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்றால், பூமியில் எந்தவொரு இடத்தில் இருந்து அவதானித்தாலும், குறைந்தது 4 GPS செய்மதிகள் தெரியும்.

எப்படி GPS வேலை செய்கிறது?

1இந்த GPS செய்மதிகள் தொடர்ந்து ரேடியோ சமிக்ஞைகளை பூமியைநோக்கி பரப்பிக்கொண்டே இருக்கிறது. இந்த சமிக்ஞைகளில் அந்த குறிப்பிட்ட செய்மதியின் தற்போதைய இடம், அதன் நிலை மற்றும் துல்லியமான நேரம் என்பன அடங்கும்.
ஒவ்வொரு GPS செய்மதியும் அணுககடிகாரங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.
2.   இந்த ரேடியோ சமிக்ஞைகள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்.
3.   நம்மிடம் இருக்கும் GPS வாங்கி (GPS receiver) இந்த சமிக்ஞைகளை பெற்றுக்கொள்ளும். இப்படி பெற்றுக்கொள்ளும்போது அந்த சமிக்ஞைகள் வந்தடைந்த மிகத்துல்லியமான நேரத்தையும் குறித்துக்கொள்ளும்.
4.இப்படி குறைந்தது 4 செய்மதிகளில் இருந்து சமிக்ஞைகளை பெற்றுக்கொண்டால் டிரைலேடரஷன் என்னும் கணிதவியல் முறையைப் பயன்படுத்தி அந்த GPS வாங்கி இருக்கும் இடத்தை அதனால் கணிக்கமுடியும்.
இந்த டிரைலேடரஷன் மூலம் எப்படி இடத்தை கண்டு பிடிக்கலாம் என்று சுருக்கமாக பார்ப்போம். நீங்கள் ஒரு இடத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது நீங்கள் இருக்கும் இடம் என்ன என்று உங்களுக்கு தெரியாது, ஆனால் உங்கள் நண்பர்கள் சிலரிடம் சில தகவல்கள் உண்டு அதுமட்டுமலாது உங்கள் நண்பர்கள் இருக்கும் இடமும் உங்களுக்கு தெரியும். நண்பர் A இற்கு அவரிடம் இருந்து நீங்கள் 10km தூரத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். அதே போல நண்பர் B, நீங்கள் அவரிடம் இருந்து 15km தூரத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். நண்பர் C யும் நீங்கள் அவரிடம் இருந்து 12km தூரத்தில் இருப்பதாக கூறினால், இப்போது இந்த டிரைலேடரஷன் முறையைப் பயன்படுத்தி மிகத்துல்லியமாக உங்களால் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கண்டுபிடித்துவிடலாம்.
இந்த நண்பர்கள் போலதான் GPS செய்மதிகளும் செயல்படுகின்றன. உங்கள் GPS வாங்கி இந்த செய்மதிகளிடம் இருந்து வரும் சமிக்ஞைகள் மூலம் ஒவ்வொரு செய்மதியும் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்று கணக்கிடுகிறது. இதேபோல மூன்று செய்மதிகளின் தகவல் கிடைத்தவுடன் அது நீங்கள் இருக்கும் இடத்தை கணித்துவிடும். நான்காவது செய்மதி இந்த இடம் சார்ந்த தகவலின் துல்லியத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.
இந்த செய்மதிகள் எவ்வாறு எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று அறிவது? நமது உதாரணத்தின் படி, நண்பர்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்று நமக்கு சொன்னார்கள் ஆனால் இந்த செய்மதிகள்? எப்படி அது சாத்தியம்?
தூரம் = வேகம் x நேரம்
இந்த எளிய சமன்பாடுதான் இங்கு பயன்படுகிறது. இங்கு GPS இன் சமிக்ஞைகள் ரேடியோ அலைகள் என்பதனால் அதன் வேகம் செக்கனுக்கு 299,792,458 மீற்றர்கள். நேரம் இங்கு இந்த நேரக்கணிப்பு தான் மிக முக்கியமானது. இதற்குதான் இந்த GPS செய்மதிகள் மிகத்துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்ட அணுக்கடிகாரங்களை பயன்படுத்துகின்றன. செய்மதிகளில் இருந்து சமிக்ஞைகள் எவ்வளவு நேரத்தில் வந்தடைகின்றன என்பதை இந்த கடிகார நேரத்தை வைத்துக் கணக்கிடமுடியும், அதன் பின் தெரிந்த வேகம், நேரத்தை வைத்து ஒவ்வொரு செய்மதியும் இருக்கும் தூரம் கணக்கிடப்படும். இவ்வாறு மூன்று செய்மதிகளின் தூரம் கணக்கிடப்பட்டால், GPS வாங்கியின் இருப்பிடம் துல்லியமாக அறியப்பட்டுவிடும்.
GPS இலும் ஐன்ஸ்டீன்
பூமியில் இருந்து கிட்டத்தட்ட 20000 கிலோமேடர்கள் உயரத்தில் இந்த GPS செய்மதிகள் சுற்றுவதாலும், மணிக்கு 14000 கிலோமீட்டர்கள் வேகத்தில் அவை பூமியை சுற்றி வருவதாலும், பூமியில் இருந்து நோக்கும் போது இந்தசெய்மதிகளில் நேரம் சிறிது வேகம் குறைவாகவே துடிக்கிறது. GPS மிகத்துல்லியமாக் வேலை செய்ய நேரமானது 20 இல் இருந்து 30 நானோசெக்கனுக்குள் துல்லியமாக அளக்கப்படவேண்டும்.
ஐன்ஸ்டினின் சிறப்புச் சார்புக் கோட்பாட்டின் படி, இந்த GPS செய்மதிகளின் நேரம் ஒரு நாளுக்கு 7 மைக்ரோசெக்கன்கள் வீதம் பூமியை விட குறைவாகவே இருக்கும் (அவை பூமியில் இருப்பவரோடு ஒப்பிடும் போது மிகவேகமாக பயணிப்பதால்). அப்படி என்றால் இந்த செய்மதிகளில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு நாளைவிட 7 மைக்ரோசெக்கன்கள் குறைவு. நிற்க இன்னும் இருக்கிறது.
அனால் ஐன்ஸ்டினின் பொதுச் சார்புக் கோட்பாடு இன்னுமொரு குண்டைத் தூக்கிப் போடுகிறது. அதாவது ஈர்ப்புவிசையால் நேரத்தின் வேகத்தை மாற்றமுடியும். திணிவு அதிகமாக இருக்கும் பொருளுக்கு அருகில் நேரம் துடிப்பதை விட தூரத்தில் நேரம் வேகமாக துடிக்கும், ஆக பூமியில் உள்ள கடிகாரத்தைவிட இந்த செய்மதிகளில் கடிகாரம் சற்று வேகமாக துடிக்கும். பொ.சா.கோ இந்த செய்மதிகளில் உள்ள கடிகாரம் பூமியில் உள்ளதை விட 45 மைக்ரோசெக்கன்கள் வேகமாக துடிக்கும்! அப்படியென்றால் இந்த செய்மதிகளில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு நாள் என்பதைவிட 45 மைக்ரோசெக்கன்கள் அதிகம்.
ஆக சி.சா.கோ மற்றும் போ.சா.கோ ஆகியவற்றை சேர்த்துக் கருதினால் பூமியில் இருந்து பார்க்கும் போது இந்த செய்மதிகளில் நேரமானது 38 மைக்ரோசெக்கன்கள் (38000 நானோசெக்கன்கள்) வேகமாக துடிக்கிறது (45-7=38). இந்த நேர வித்தியாசத்தை கணக்கில் எடுக்காவிடில் வெறும் இரண்டு நிமிடங்களிலேயே GPS மூலம் பெறப்படும் இருப்பிடம் பிழையாகிவிடும். ஒரே நாளில் GPS மூலம் பெறப்படும் இருப்பிடத்தின் தகவலும் உண்மையான இருப்பிடத்தின் தகவலுக்கும் இடையில் 10km இடைவெளி வந்துவிடும். ஆக நாட்கள் செல்லச் செல்ல இந்த பிழையின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும் அதோடு இந்த GPS பயனற்ற ஒரு விடயமாகிவிடும்.
இதற்காக இந்த GPS செய்மதிகளை உருவாக்கிய அறிவியலாளர்கள், இதில் உள்ள அணுக்கடிகாரம் வேகம் குறைவாக துடிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், பூமியைச் சுற்றும் இந்த GPS செய்மதிகளில் உள்ள கடிகாரங்கள் பூமியில் உள்ள கடிகாரங்களைப் போலவே இயங்கும் இதனால் இந்த சார்புக் கோட்பாடுகளால் உருவான நேர வேகமாற்றம் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்தது!  மாபெரும் இயற்பியலாளர் ஐன்ஸ்டீன் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது!
சரி பிறகு?!
இப்படித்தான் GPS வேலைசெய்கிறது என்று இப்போது உங்களுக்கும் தெரிந்திருக்கும், புரிந்திருக்கும். இன்று இந்த GPS தொழில்நுட்பம் பல்வேறு பட்ட துறைகளில் பயன்படுகிறது. மற்றும் நம் வாழ்விலும் ஒரு முக்கிய அம்சமாக திகழ்கிறது உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ அது வேறு விடயம்!
GPS அமெரிக்க தொழில்நுட்பம் என்று முன்னரே கூறினேன். இது இலவசமாக பயன்படுத்தக்கூடியதாக இருந்தாலும் முழு கட்டுப்பாடும் அமெரிக்க இராணுவத்திடமே இருக்கிறது. இதனால் வேறு சில நாடுகளும் தங்களுக்கென்றே தனித் தனியான அமைப்புக்களை உருவாகியுள்ளன.
GLONASS – ரஸ்சியாவின் முழு உலகிற்குமான புவியிடங்காட்டி
Galileo – ஐரோப்பிய ஒன்றியத்தின் புவியிடங்காட்டி – 2014 இல் தொழில்பட தொடங்கியது, 2019 இல் பூரணப்படுத்தப்படும்.
Beidou – சீனாவின் புவியிடங்காட்டி ஆசியாவுக்கும் மேற்கு பசுபிக் நாடுகளுக்கும் மட்டும்.
IRNSS – இந்தியாவின் புவியிடங்காட்டி இந்தியா மற்றும் வடக்கு இந்து சமுத்திரப் பரப்புக்கு மட்டும்.
THANKS TO SRI SARAVANA FOR GPS
தொகுப்பு
ஐயாச்சாமி முருகன்

 நெல்லை 

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-11 ,2016 , Current Affairrs March 11, PDF

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-11 ,2016
v முல்லைப் பெரியாறு அணையில் கேரள அதிகாரிகள், வியாழக்கிழமை திடீர் அளவீடு செய்து, வெப் கேமரா பொருத்தப்போவதாகத் தெரிவித்தனர்.
v மகா சிவராத்திரியையொட்டி, சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவின் 4-ஆம் நாள் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றன.
v நாகையை அடுத்த நாகூரில் உள்ளது பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்கா. உலகப் புகழ்ப் பெற்ற இந்த தர்காவின் 459-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறவுள்ளது. சந்தனக் கூடு ஊர்வலம், சந்தனம் பூசும் விழா ஆகியன கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாகக் கொண்டாடப்படும்.
v ஜப்பான் விஞ்ஞானிகள் பிளாஸ்டிக் பாட்டில்களை அழிக்கும்  புதிய வகை பாக்டிரியம் இடோனல்லா சகைனெசிஸ் 201- F6, ( Ideonella sakaiensis 201-F6) , இது இரண்டு நொதிகளைச் சுரந்து பிளாஸ்டிக் பாட்டில்களை அழிக்கிறது.
v வேற்று கிரகங்களில் விண்கலத்தை பத்திரமாக தரையிறக்கும் வெப்ப தடுப்பு கவச தொழில்நுட்பத்தை நாசா வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது. பாராசூட் போல செயல்படும் வகையில் வட்ட வடியில் (டோநட் போல) ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு டாரஸ் என்று பெயரிட்டுள்ள னர். ஹைபர்சோனிக் இன்பிளாட பிள் ஏரோடைனமிக் டிசெலரேட்டர் (எச்ஐஏடி) என்ற இந்த தொழில் நுட்பத்தின் மூலம் டாரஸ் கருவி பாராசூட் போல விண்கலத்தை மெதுவாக வேற்று கிரகத்தில் தரை யிறக்கும். அத்துடன் வேற்று கிரகத் தின் கடும் வெப்பத்தில் இருந்து விண்கலத்தை பாதுகாக்கும் கவசமாகவும் செயல்படும்.
v இந்தியாவின் பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி. சி32 ராக்கெட் மூலம் வியாழக்கிழமை விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் உடன் சேர்த்து தற்போது 6 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன. திட்ட இயக்குநர் பி.ஜெயகுமார் .
v இலங்கைத் தமிழ் அரசியலில் பெரும்பங்காற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் காலமானார்.
v ரூ. 3,550 கோடிக்கான 6 மாதங்கள் செலவினத்துக்கு புதுச்சேரி சட்டப் பேரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. புதுச்சேரி யூனியன் பிரதேச 13-ஆவது சட்டப் பேரவையின் கடைசிக் கூட்டம் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கூடியது. கூட்டத்துக்கு சட்டப் பேரவைத் தலைவர் வ.சபாபதி தலைமை வகித்தார்.
v புதிய ராணுவத் தளவாடக் கொள்முதல் கொள்கை குறித்து பாதுகாப்புத் துறையின் உயரதிகாரிகள் தில்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளனர்.
v தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை அமைப்பது தொடர்பான பரிந்துரை மீதான விவாதம் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மத்திய பணியாளர் நலன், மக்கள் குறைத்தீர்வு, சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். பணியாளர் நலன், மக்கள் குறைத்தீர்வு, சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு 2004-05 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றக் கிளையை நாட்டின் நான்கு மண்டலங்களில் அமைப்பது தொடர்பான தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்தது. 2005-06 ஆம் ஆண்டில் நிலைக்குழு தமிழகம், கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை அமைக்கலாம் என மீண்டும் பரிந்துரைத்தது.
v பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதில் இருந்து விலகிக்கொள்வதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி வி.கோபால கெளடா வியாழக்கிழமை அறிவித்தார்.
v நாடாளுமன்ற பட்ஜெட்டில் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜ்னா அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக, கிராமப்புறங்களில் சமையலுக்காக விறகுகளையும், வறட்டிகளையும் வைத்து சிரமப்படும் ஏழைப் பெண்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
v மியான்மர் பொதுத் தேர்தலில் வெற்றியடைந்துள்ள அந்த நாட்டின் தேசிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகி, அந்த நாட்டுக்கான அடுத்த அதிபர் பதவிக்குத் தனது கார் ஓட்டுநரும், நெருங்கிய உதவியாளருமான ஹிடின் கியாவின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார்.
v துபாயில் வரலாறு காணாத கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
v உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்திய வீராங்கனை ஷாமினி 45 இடங்கள் முன்னேறி 183-ஆவது இடத்தையும், மணிகா பத்ரா 25 இடங்கள் முன்னேறி 134-ஆவது இடத்தையும், மெளமா தாஸ் 15 இடங்கள் முன்னேறி 151-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் ஹர்மீத் தேசாய் 14 இடங்கள் முன்னேறி 116-ஆவது இடத்தையும், அஜந்தா சரத் கமல் 10 இடங்கள் முன்னேறி 59-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். செளம்யஜித் கோஷ் 6 இடங்கள் முன்னேறி 83-ஆவது இடத்தையும், சத்தியன் 7 இடங்கள் முன்னேறி 153-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

vஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், முன்னாள் முதல் நிலை வீரரான மலேசியாவின் லீ சாங் வெய்க்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-11-14 ,2016 ஆதார் திட்டம் PDF

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-11-14 ,2016 ஆதார் திட்டம்
v அரசியலில் பெண்கள் அதிகாரமுள்ளவர்களாக பரிணமிக்க வேண்டும் என்று தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் தெரிவித்தார்.
v பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடப் பரப்பளவு குறித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. முன்னாள் துணைவேந்தர் சிட்டிபாபு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்று, தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகளை வகுத்து 2004-ஆம் ஆண்டு ஜூலை 21-இல் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதில், மாநகராட்சி, மாவட்ட தலைநகரம், நகராட்சி, பேரூராட்சி, கிராமம் என 5 வகைகளாகப் பிரித்து, அதற்கு உள்பட்ட இடங்களில் இயங்கும் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இட பரப்பளவு விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
v தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்ட மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலம் முறையீட்டாளர்களுக்கு, சுமார் ரூ.138.94 கோடி தீர்வுத் தொகை பெற்றுத் தரப்பட்டது.
v விடுதலைப் போராட்ட வரலாற்றிலும், திருநெல்வேலி வரலாற்றிலும் முக்கிய இடம் பிடித்த “திருநெல்வேலி கலகம்பிறந்த நாள் (மார்ச் 13), அரசு விழாவாக அங்கீகாரம் கிடைக்கப் பெறாமலேயே ஆண்டுகளைக் கடந்த வண்ணம் உள்ளது
விடுதலைப் போராட்ட வரலாற்றில் திருநெல்வேலி மாவட்டம் குறிப்பிடும்படியான பங்களிப்பை அளித்துள்ளது. பூலித்தேவன், கட்டபொம்மன், சுந்தரலிங்கம், பாரதியார், வ.உ.சி, வாஞ்சிநாதன் ஆகியோர் வித்திட்ட நாட்டுப்பற்று உணர்வால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு, எழுச்சி ஏற்பட்டது. 1906-இல் தூத்துக்குடி, கொழும்பு துறைமுகங்களுக்கு இடையே வாடகைக் கப்பல்களை இயக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கப்பட்டது. இந்த கம்பெனிக்கு நிதி திரட்ட வ.உ.சி உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தனர். 1908-இல் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் பங்கேற்ற சுதேசி இயக்க பிரசாரக் கூட்டங்கள் திருநெல்வேலி, தூத்துக்குடியில் நடைபெற்றன. அன்னிய நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆங்கிலேயர்களை எதிர்த்து சிறை சென்ற விபின் சந்திரபால் விடுதலை பெற்ற நாளான 1908-ஆம் ஆண்டு, மார்ச் 8-ஆம் தேதியை, சுயராஜ்ய நாளாக விடுதலைப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர். இதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாமிரவருணி ஆற்றின் தைப்பூச மண்டபத்தில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோர் எழுச்சி உரையாற்றினர். தூத்துக்குடியில் விபின் சந்திரபால் விடுதலை விழாவைக் கொண்டாடிவிட்டு திருநெல்வேலிக்கு திரும்பிய வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் 1908-ஆம் ஆண்டு, மார்ச் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு “திருநெல்வேலி கலகம்எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்த வழக்கில் வ.உ.சி.க்கு 40 ஆண்டுகளும், சுப்பிரமணிய சிவாவுக்கு 10 ஆண்டுகளும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
v நாட்டின் முதல் நிலநடுக்க எச்சரிக்கை, பாதுகாப்பு சாதனம் சென்னையில் அண்மையில் பரிசோதிக்கப்பட்டது. ஹரியானா மாநில அரசின் வழிகாட்டுதலின்படி “டெரா டெக்காம் பி.லிட்‘. நிறுவனம், ஜெர்மனியின் “செக்டி எலக்ட்ரானிக்ஸ் ஜி.எம்.பி.ஹெச்நிறுவனத்துடன் இணைந்து அவசரகால நிலநடுக்க எச்சரிக்கை, பாதுகாப்பு சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக, இந்த நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பு, சண்டிகரில் உள்ள, ஹரியானா அரசின் துணைத் தலைமை செயலகத்தில், மார்ச் 14-இல் நிர்மாணிக்கப்படவுள்ளது. உலக அளவில் நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கை செய்வதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளையும், வேகத்தையும் முடுக்கத்தையும் சாதனம் கணிக்கும். 25 நாடுகளில் பொருத்தப்பட்டுள்ள இந்தச் சாதனம், நிலநடுக்கத்தின் ஆரம்ப கட்ட அலைகளை மிகத் துல்லியமாகக் கணித்து எச்சரிக்கை கொடுக்கும்.
v தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக சிறைக் கைதிகளும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்காணி கூறினார்.
v உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் 150-ஆவது ஆண்டு விழாவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பேசினார்.
v மருந்துகளின் பாதுகாப்பையும், அவற்றின் பலனையும் உறுதிசெய்யும் வகையில் அளவுக் கட்டுப்பாடு செய்யப்பட்ட கூட்டு மருந்துகளான (எஃப்டிசி – ஃபிக்ஸ்டு டிரக் காம்பினேஷன்) பென்ஸிடில், கோரஸ் உள்ளிட்ட 350 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அரசு தடைவித்துள்ளது.
v மத்திய, மாநில அமைச்சர்களும் தகவல் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின்படி பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள் என்று மத்திய தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
v நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு திங்கள்கிழமை ஆலோசனை நடத்துகிறது. அனைத்துக் கட்சிகளிடமும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் வகையில், பாஜக எம்.பி. எஸ்.எஸ்.அலுவாலியா தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது
v நக்ஸலைட் தீவிரவாதிகள் நடத்தி வரும் நீதிமன்றங்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 53 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் ஜன் அதாலத் என்ற பெயரில் நக்ஸலைட்டுகள் நடத்தி வரும் நீதிமன்றங்கள் மூலம் 18 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில், இதுபோன்று 15 பேருக்கும், கடந்த 2013ஆம் ஆண்டில் 20 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
v தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தனது  31வது ஆண்டு துவக்க விழாவைக் கொண்டாடியது, வாகன் சம்ன்வய ‘Vahan Samanvaya’ என்ற செயலியையும் அறிமுகப் படுத்தியது, தேசிய குற்றவியல் ஆவன காப்பகம் 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
v உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 22 ஆவது இடம் பெற்றுள்ளது. இதில் மொத்தம் 60 நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டது.
v தில்லியில் இந்தியா மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) சார்பில், “முன்னேறுகிறது ஆசியாஎன்ற தலைப்பிலான மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. உலக அளவில் இந்தியா வேகமாக பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடாக உள்ளது. முதலீட்டுக்கு உகந்த இடங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சர்வதேச செலாவணி நிதியத்தின் மேலாண்மை இயக்குநர் கிறிஸ்டின் லார்கேட் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
ü சர்வதேச செலாவணி நிதியத்தில் இந்தியாவின் பங்கு 2.44 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ü வாக்குரிமைப் பங்கும்2.34  சதவீதத்தில் இருந்து  2.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ü  பிரிக் அமைப்பில் இருக்கும் பிரேசில், சீனா, இந்தியா, ரஷியா ஆகிய 4 நாடுகளும், சர்வதேச செலாவணி நிதியத்தின் முதல் 10 நாடுகள் வரிசையில் முதல்முறையாக இடம்பிடித்துள்ளன.
ü சர்வதேச நிதியம் 1945 ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது.
ஆதார் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது
கூடுதல் தகவல்கள்
ஆதார் அட்டை
இந்தியாவில் ஆதார் அட்டை வழங்கப்படுவதன் நோக்கமே இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தனித்தனி அடையாள எண் வழங்கி அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைப்பதை உறுதி செய்வதிற்காகத் தான்.மக்களுக்கு பல்வேறு சலுகைகள் எளிதாக கிடைக்கும் வகையிலும் அதற்கான திட்டங்களை அரசு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தும் வகையில்தான் இத்திட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது, எ.கா சமையல் எரிவாவுக்கான மானியம் வழங்குதல், போன்றவை
இத்திட்ட்த்தை செயல்படுத்துவதற்காக ஆதார் ஆணையம் 28,ஜனவரி 2009 ல் அமைக்கப்பட்டது. இவ்வாணையத்தின் முதல் தலைவராக திரு நந்தன் நில்கேனி நியமிக்கப் பட்டார். இவ்வாணையம் திட்டக் குழுவால் அமைக்கப் பட்டது.60 கோடிப்பேருக்கு ஆதார் அட்டை வழங்கும் பணியை செய்கிற்து.

ü மீதி 60 கோடி மக்களுக்கு தேசிய மக்கள் தொகை ஆணையம் இப்பணியை மெற்கொள்கிறது.
ü ஆகஸ்ட் 2009 ஆம் ஆண்டு மஹாரஸ்ட்ரா மாநிலம் தெம்ளி என்ற கிராமத்தில் முதன் முறையாக ஆதார் அட்டை வழங்கப் பட்டது
ü ஆதார் அட்டை வாங்குவது கட்டாயமல்ல விருப்பத்தின் பேரில் வாங்கலாம்.
ü கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அரசின் பயன்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமல்ல என்று கூறியது.
சிறப்பம்சங்க்ள்
v இது 12 தனித்துவ எண்ணைக் கொண்டது
v பயனாளிகளின் கருவிழி மற்றும் கை ரேகைகளை பதிவு செய்கிறது.
v முகவரி போன்ற அடிப்படை தகவல்களை பதிவு செய்ய்படுகிறது
   பயன்பாடுகள்
ü திட்டத்திற்கான பயனாளிகளை அடையாளம் கானுதல்
ü சமூக நலத்திட்ட்த்திற்கு தகவல்களை பயன்படுத்துதல்
ü விரைவான சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல்
ü கணக்கெடுப்பு போன்ற வகைகளுக்கு பயன்படுத்துதல்
ü போலியான பயனாளிகளைக் கண்டறிதல்
ü இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையாக இருக்கும்.
ü ஆதார் அட்டை என்பது ,இந்தியாவில் வசிக்கிறார் என்பதற்கான சான்று மட்டுமே ஆகும், இது குடியிரிமைக்கான அட்டை ஆகாது
ü கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஜாம் ( JAM , JanDan, Adhar,Mobile)  என்ற திட்டம் கொண்டுவரப்பட்டு பயனாளிகளை முறையாக அடையாளம் கானத் துவங்கினர்.
ü இதன்மூலம் சமீபத்தில் நடந்த சென்னை வெள்ளப் பெருக்கின் போது நிவாரணம்  உடனடியாக வழங்குவதற்கு உதவியது.
v ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் “வாழும் கலைஅமைப்பு சார்பில், தில்லியில் யமுனை நதியோரச் சமவெளியில் “உலகக் கலாசாரத் திருவிழாவெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
v நீதிமன்றங்களுக்கு சட்டமியற்றும் அதிகாரமோ அல்லது சட்டமியற்றும்படி ஆட்சியிலிருப்போருக்கு உத்தரவிடும் அதிகாரமோ கிடையாதுஎன்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
v குஜராத் மாநிலம் காக்ரபார் அணுமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை திடீரென கனநீர் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அணுமின் நிலையத்தில் ஒரு அணு உலையில் மட்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
v இந்தியாவுக்கும், பிரான்ஸுக்கும் இடையிலான கலாசார உறவை மேம்படுத்த பாடுபட்டதற்காக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஓவியர் சக்தி பர்மனுக்கு “நைட் ஆஃப் தி லீஜியன்என்ற, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
v மகளிருக்கான தேனா ஸ்திரி சக்தி என்ற சிறப்பு சேமிப்புக் கணக்கை தேனா வங்கி அறிமுகப் படுத்தியுள்ளது.
v உலகின் அதிவேக ரிட்லி சைக்கிள் சென்னையில் அறிமுகப் படுத்தப் பட்டது.
v இந்தியாவில் எய்ஸ்ட் எனப்படும் எச்ஐவி கிருமி பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் என்றும், உலக அளவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளதாகவும் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எய்ஸ்ட் எனப்படும் எச்ஐவி கிருமி பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் என்றும், உலக அளவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளதாகவும் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
v உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள தடங்கல்களை நீக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவுக்கு, நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சட்டத்திருத்த மசோதாவில், நீதிபதிகள் விடுப்பு நடைமுறைகள், 10 ஆண்டுகளுக்கு மேல் வழக்குரைஞர்களாகப் பணியாற்றுபவர்களை உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்துவது ஆகியவை தொடர்பான விதிமுறைகளும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
v இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இருக்கும் சீக்கியர்கள் எண்ணிக்கையைவிட தனது அமைச்சரவையில் சீக்கியர்கள் அதிகம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.
vஐ.நா. தடையையும் மீறி, ஈரான் ஏவுகணைப் பரிசோதனைகளை நடத்தியது குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்துக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
v அரபு லீக் அமைப்பின் புதிய பொதுச் செயலராக, எகிப்து நாட்டைச் சேர்ந்த அகமது அபுல் கெய்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் தகவல்கள்
ü அரபு கூட்டமைப்பு 1945 ஆம் ஆண்டு எகிப்து தலைநகர் கெய்ரோவில் உருவாக்கப் பட்டது
ü தற்போது 22 உறுப்பினர்கள் இக்கூட்டமைப்பில் உள்ளனர்.
v செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகியவை கூட்டாக இணைந்து புதிய டிஜிஓ என்ற விண்கலத்தை அந்த கிரகத்துக்கு அனுப்புகின்றன. டிஜிஓ என்ற விண்கலத்தை உருவாக்கியுள்ளன. இந்த விண்கலம் கஜகஸ்தானின் பைகானூரில் உள்ள ரஷ்ய ஏவுதளத்தில் இருந்து வரும் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. யாபரேலி என்ற வட்டவடிவிலான ஆய்வு கலம் டிஜிஓவிண்கலத்தில் இருந்து பிரிந்து செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யும். இந்த முயற்சி வெற்றி பெற்றால் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
v தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் இந்தியாவின் விஜேந்தர் சிங்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இங்கிலாந்தின் லிவர்பூலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் மூன்றே சுற்றுகளில் ஹங்கேரியின் அலெக்சாண்டர் ஹார்வத்தை தோற்கடித்தார் விஜேந்தர் சிங்.
v ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்த ஆறரை வயது சிறுமி கே. தர்ஷினி இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார். கோவை பந்தயசாலையில் கால் ஸ்கேட்டிங் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் நிர்வாக ஆசிரியர் மன்மோகன் தொடங்கி வைத்தார்.

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-15-2016- சன்சத் கிராம ஆதர்ஷ் யோஜனா-அக்னி தகவல்கள் pdf

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-15-2016- சன்சத் கிராம ஆதர்ஷ் யோஜனா-அக்னி தகவல்கள்
v தேர்தல் நடவடிக்கைகள் முடிவடையும் வரை செயல்படும் வகையில், தமிழகம் முழுவதும் 363 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
v இலங்கைச் சிறையிலுள்ள 96 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இறையாண்மைக்குள்பட்ட கச்சத்தீவை மீண்டும் பெறுவது என்ற நிலைப்பாடே இந்தச் சிக்கலான பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண ஒரேவழி என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியா-இலங்கை இடையேயான சர்வதேச கடல் எல்லை என்பது உச்ச நீதிமன்றத்தின் விசாரணையின்கீழ் நிலுவையில் உள்ளது. 1974, 1976-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உடன்பாடுகளின் அரசியல் சாசன செல்லத்தக்கத் தன்மையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. என்று கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
v அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வியில் சமூக அடிப்படையிலும், ஜாதி ரீதியிலும் வழங்கப்படும் தற்போதைய இட ஒதுக்கீடு முறை தொடரும்; அந்த இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்யும் கேள்விக்கே இடமில்லைஎன்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
v திருமலையில் ஆயிரங்கால் மண்டபம் கட்ட ஹைதராபாத் உயர் நீதிமன்றம் மீண்டும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயில் எதிரில் 14-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் இருந்தது. இங்கு தேவஸ்தானத்தின் அருங்காட்சியகம் செயல்பட்டு வந்தது.   2003-ஆம் ஆண்டு தேவஸ்தானம், திருமலை வளர்ச்சிப் பணி திட்டத்தின் கீழ் இந்த ஆயிரங்கால் மண்டபத்தை அகற்றியது. 
v கல்லூரிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக, ‘know your college’ என்ற பெயரில் இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தில், குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, கல்லூரிகளில் வசதிகள் இல்லையெனில், அந்த இணையதளம் வாயிலாகப் புகார் கொடுக்கலாம் என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
v ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சர்மா, மாநிலங்களவை உறுப்பினராக திங்கள்கிழமை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 
v நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதிரி கிராமம் திட்டத்துக்கு (சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜ்னா) நிதி எங்கிருந்து, எப்படி வரும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.
கூடுதல் தகவல்
ü திட்டம் அக்டோபர் 11-2014 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
ü காத்மா காந்தியின் இந்த விரிவான மற்றும் இயல்பான தொலைநோக்கு பார்வை. தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில்கொண்டு, உண்மையானதாக மாற்றுவதே சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா (SAGY)-ன் குறிக்கோளாகும்.
ü மக்களவை உறுப்பினர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்தும், மாநிலங்களவை உறுப்பினர்கள் அவர்கள் தேர்வு செய்யப்பட்ட மாநிலத்தில் விரும்பிய மாவட்டத்தில் உள்ள கிராமத்தைப்க் தேர்வு செய்து திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
ü இதில் முதல் கட்டமாக, ஒரு மாதிரி கிராமத்தை 2016-ஆம் ஆண்டுக்குள்ளும், இரண்டாம் கட்டமாக இரு மாதிரி கிராமங்களை 2019-ஆம் ஆண்டுக்குள்ளும் உருவாக்க வேண்டும். இதன் பிறகு 2024-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஒரு மாதிரி கிராமம் திட்டத்தை எம்.பி.க்கள் செயல்படுத்த வேண்டும்
ü இதன்படி மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தலா ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அங்கே அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் பெண்கள், முதியோர், குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்ட திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். மக்கள் பங்கேற்பை அதன் முடிவாக ஏற்றுக்கொள்ளுதல் கிராம வாழ்க்கை தொடர்பான முடிவு எடுத்தலில் சமூகத்தின் அனைத்து பிரிவனரும் ஈடுபடுவதை உறுதி செய்தல்.
ü அண்டியோத்யா பின்பற்றுதல் கிராமத்தில் உள்ள மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் நலிந்த நபர்நல்வாழ்டைவதற்கு உதவி செய்தல்.
ü பாலீன சமத்துவத்தை உறுதிசெய்தல் மற்றும் பெண்களுக்கு மரியாதை தருதலை உறுதி செய்தல்.
ü சமூகநிதிக்கு உத்தரவாதமளித்தல்
ü தொழில் கண்ணியம் மற்றும் சமுதாய உணர்வு மற்றும் தன்னார்வத் தொண்டு குறித்து புகட்டுதல்.
ü சுத்தமாக இருக்கும் பண்பாட்டை வளர்த்தல்.
ü வளர்ச்சி மற்றும் சூழலியலுக்கு இடையே சமச்சீர் நிலையை உறுதிசெய்து இயற்கையோடு இணைந்து வாழ்க்கை நடத்துதல்.
ü உள்ளுர் பண்பாட்டு பாரம்பரியத்தை பாதுகாத்து வளர்த்தல்
ü பரஸ்பர ஒத்துழைப்பு சுய உதவி மற்றும் தற்சார்பு குறித்து புகட்டுதல்
ü கிராம சமுதாயத்திடையே அமைதி மற்றும் நல்லிணக்கம் வளர்த்தல்.
ü பொது வாழ்க்கையில் ஒளிமறைவற்ற வெளிப்படைத்தன்மை, கடமைப் பொறுப்பு மற்றும் நேர்மையை கொண்டு வருதல்.
ü சுய உள்ளாட்சியை வளர்த்தல்
ü இந்திய அரசியலைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படைக் கடமைகளில் வகைசெய்ய மதிப்பீடுகளை பின்பற்றுதல்
v இடைக்கால இந்தியாவில் ஆட்சி செய்த, பாதாமி சாளுக்கியர்கள்,தேவகிரியை ஆட்சி செய்த யாதவர்கள், ஆரவீடு வம்சத்தைச் சேர்ந்த ஆட்சிக் காலத்தைச் சார்ந்த செம்புத் தகடுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
ü சித்தரிக்கும் பன்றி- சாளுக்கியர்கள்
ü கழுகு வடிவம்-யாதவர்கள்
v அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று, 700 கி.மீ. –1,250 கி.மீ.க்கு இடைப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறன்கொண்ட அக்னி-1 ஏவுகணை சோதனை, ஒடிஸா கடற்கரைப் பகுதியான பாலாசோரில் திங்கள்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணை ஏற்கெனவே, பலமுறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட பின்னர், கடந்த 2004ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. 12,000 கிலோ எடையும், 15 மீட்டர் நீளமும் கொண்ட இந்த ஏவுகணை, 1,000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று, எதிரிகளின் இலக்கை துல்லியமாகத் தாக்கவல்லது. 
கூடுதல் தக்வல்

ü அக்னி -1 –முதன்முறையாக 1989ல் பரிசோனை செய்யப்பட்டது, 700-கி.மீ இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
ü அக்னி -2 – முதன்முறையாக 1999ல் சோதனை செய்யப் பட்டது. 2000-கி.மீ இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது
ü அக்னி- 3 – முதன்முறையாக 2006 ல் சோதனை செய்யப் பட்டது. 2500க்கு மேல்-கி.மீ இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது
ü அக்னி-4 – 4000-கி.மீ இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது
ü அக்னி-5 – 5000 கி.மீ இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது
ü அக்னி ஏவுகனைத் திட்ட்த்தை பாதுகாப்பு மேம்பாட்டு ஆய்வு நிறுவனம்  (DRDO) செயல்படுத்துகிறது.
v இந்தியா மற்றும் இந்தோனேசியா இனைந்து நடத்தும் கருடா சக்தி, ராணுவ ஒத்திகை மேகலாங், இந்தேனேசியாவில் நடைபெற்றது
v இஷ்ரத் ஜஹான் வழக்கில், மாயமான ஆவணங்களைக் கண்டுபிடிப்பதற்காக, கூடுதல் செயலர் பி.கே.பிரசாத் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
v கோவாவில் வரும் 28ஆம் தேதி தொடங்கவுள்ள, சர்வதேச ராணுவத் தளவாடங்கள் கண்காட்சியில் (டிஃப்எக்ஸ்போ இந்தியா 2016) பங்கேற்க அமெரிக்கா, ரஷியா, கொரியா உள்ளிட்ட 46 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன. 2014ஆம் ஆண்டு பிப்ரவரியில், தில்லியில் நடைபெற்றது.
v இந்தியத் தர நிர்ணய ஆணையச் சட்ட மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கூடுதல் தகவல்
ü இந்திய தர நிர்ணய ஆணையம் 1986, நவம்பர் 26 ஆம் தேதி பாரளமன்றத்தால் சட்டம் இயற்றப் பட்டு நடைமுறைக்கு வந்த்து.
ü இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தர நிர்ணயம் , சான்றிதழ் வழங்குவது இதன் பணி.
v சென்னை மௌலிவாக்கம் கட்டட விபத்தையடுத்து, அருகில் இருந்த இரண்டாவது கட்டடத்தை இடிக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மார்ச் 18-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இக்கட்டட விபத்து பற்றி விசாரணை செய்வதற்கு ஒய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது
v சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை, ஜெனீவாவில் திங்கள்கிழமை தொடங்கியது என சிரியா விவகாரங்களுக்கான ஐ.நா. தூதர் ஸ்டெஃபான் மிஸ்துரா திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
v தெற்காசிய நாடுகளை உறுப்பினராகக் கொண்டுள்ள சார்க் கூட்டமைப்பு நேபாளத்தில்  நேற்று தொடங்கியது.
கூடுதல் தகவல்கள்
ü தெற்காசிய நாடுகளிடையேயான ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் 1940-களிலேயே தொடங்கிவிட்டது. ஏப்ரல் 1947-ல், டெல்லியில் நடந்த ஆசிய நாடுகளுக்கிடையேயான உறவு தொடர்பான மாநாடு, 1950-ல் பிலிப்பைன்ஸில் நடந்த பாகியோ மாநாடு, 1954-ல் இலங்கையில் நடந்த கொழும்பு அதிகாரங்கள் மாநாடு ஆகிய மாநாடுகளில் இதற்கான யோசனைகள் விவாதிக்கப்பட்டன.
ü 1970-களின் இறுதியில் ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள், தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதின் அவசியத்தை வலியுறுத்தின. பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் கூட்டாகச் செயல்படுவது உள்ளிட்ட யோசனைகளை அந்த நாடுகள் முன்வைத்தன. 1981-ல் இலங்கையில் நடைபெற்ற கூட்டத்தில் வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட 6 நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு இதுபற்றி விவாதித்தார்கள்.
ü 1983-ல் டெல்லியில் இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாட்டில், சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த இறுதிமுடிவு எடுக்கப்பட்டது. 1985 டிசம்பர் 8-ல் டாக்காவில் சார்க் அமைப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். தெற்காசியாவின் 8 நாடுகள் இவ்வமைப்பில் முழுமையான அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இவ்வமைப்பு  இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2007 இல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14வது உச்சி மாநாட்டில்ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.
ü தலைமையகம் –  நேபாள், தலை நகர் , காட்மாண்டு
ü முதல் மாநாடு வங்காளதேச தலைனகர் டாக்காவில் நடைபெற்றது
ü இதனை உருவாக்குவதற்கு முஜிபுர் ரஹ்மான் முயற்சி மேற்கொண்டார்.
ü இதனுடைய இரண்டாவது மாநாடு, 1986 பெங்களூரில் நடைபெற்றது.
ü 1995 புது தில்லியில் 8வது மாநாடு நடைபெற்றது.
ü 2007ல் புது தில்லியில் 14வது மாநாடு நடைபெற்றது.
ü 1999 சார்க் பல்லுரியின ஆண்டு
ü 2006 -2015ல் வறுமை ஒழிப்புக்கான பத்தாண்டு.
ü சார்க் பேரிடர் மேலாண்மை மையம் புது தில்லியில் அமைந்துள்ளது.
v இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா தொடர்ந்து 3-ஆவது ஆண்டாக ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ விருதைப் பெற்றுள்ளார்.
நுகர்வோர் தினம்
v ன்று உலக நுகர்வோர் உரிமை தினமாக அனுஷ்டிக்கப் படுகிறது. ஒவ்வோரு வருஷமும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமை தினமாகும்.

1960 ஆம் ஆண்டில் லண்டனை மையமாகக் கொண்டு சர்வதேச
 நுகர்வோர் Consumers International (CI)எனும் அமைப்பு  ஆரம்பிக்கப் பட்டது. இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்ற நாடுகள் இணைந்து நுகர்வோர் உரிமைக்கு வலுவான அடித்தளமிட்டன.  1962 ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி, அமெரிக்க காங்கிரஸில் (நம் நாடாளுமன்றம் போன்றது) நுகர்வோர் உரிமை பற்றிப் பேசினார். அவர்தாம் நுகர்வோர் உரிமைகளுக்கு வழி வகுத்த முனோடியவார்.நுகர்வோர் பாதுகாப்புக்காக ஐக்கியநாடுகள் சபை வழிகாட்டுச் சட்டங்களை U N Guide lines for Consume Protection (UNGCP) வகுத்துள்ளது. 1985 ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையால் இது ஏற்றுக்கொள்ளப் பட்டது. அதன் பிறகு உலகில் ஏற்பட்ட டெக்னாலஜி முன்னேற்றங்களையும் கருத்தில் கொண்டு 1999 ஆம் ஆண்டு, மேம்படுத்தப் பட்ட புதிய சட்ட விதிகள் உருவாக்கப் பட்டன.
ü  நுகர்வோர் இயக்கத்தின் தந்தை ரால்ப் ராடார்.
ü நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்டது
ü தேசிய நுகர்வோர் தினம் டிசம்பர் 24 கொண்டாடப் படுகிறது.

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-17,18-2016-குருப் 2 மெயின் வினா.

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-17,18-2016-குருப் 2 மெயின் வினா.
v அரசியல், பொது வாழ்வில் நேர்மைக்கான 2016-ஆம் ஆண்டின் காயிதே மில்லத் விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.
v கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,350 கோடிக்கு சணல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சணல் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தின் கழிமுக சமவெளிப்பகுதியில் சணல் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சணல் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சணல் பொருள்கள் அமெரிக்கா,பிரேசில் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதோடு, சணல் உற்பத்தியில் 84 ஆலைகள் செயல்படுகின்றன. இதன்மூலம், ஆண்டுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகின்றன.
v காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் பாபு, தமிழக அரசின் சிறந்த நெசவாளர் விருதைப் பெற்றுள்ளார்.
v பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, பாகிஸ்தானின் 6 பேர் அடங்கிய கூட்டு விசாரணைக் குழு, வரும் 27ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். பாகிஸ்தானில் வரும் நவம்பர் மாதம் 9,10 ஆம் தேதிகளில், சார்க் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்து, அதற்கான அழைப்பிதழை சர்தாஜ் அஜீஸ், சுஷ்மா ஸ்வராஜிடம் வியாழக்கிழமை நேரில் அளித்தார்.
v இணையத்தில் செல்வாக்கு மிக்க 30 உலகத் தலைவர்களின் பட்டியலை அமெரிக்காவின் “டைம்இதழ் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
v டெல்லியில் முதல் உலக சூஃபி மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
v உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு டென்மார்க் என 158 நாடுகளின் தர வரிசை பட்டியலில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட இந்தியா பின்தங்கி 118-வது இடத்தை பிடித்துள்ளது.


ü தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன.
ü இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பது டென்மார்க் ஆகும். கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஸ்சுவிட்சர்லாந்து தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 
ü ஐஸ்லாந்து 3-வது இடத்திலும், நார்வே 4-வது இடத்திலும், பின்லாந்து 5-வது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா(9), இஸ்ரேல்(11), அமெரிக்கா(13) இடங்களை பிடித்துள்ளன. 
ü உலகிலேயே மகிழ்ச்சி குறைந்த 5 நாடுகள் பட்டியலில் டோகோ, புரூண்டி, சிரியா, பெனின், ருவாண்டா இடம் பெற்றிருக்கின்றன.
ü இக்குறியீட்டை ஐ. நா வின் நிலையான வளர்ச்சி தீர்வுக் குழு )Sustainable Development Solutions Network (SDSN) ஆண்டு தோறும் வெளியிடுகிறது.
ü மொத்த மகிழ்ச்சிக் குறியீடு என்ற குறீயிட்டை 1972 ஆம் ஆண்டு பூட்டான் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுங் அறிமுகப்படுத்தினார்,
v 21 வது சட்ட ஆணையத்தின் தலைவராக நீதிபதி பால்பீர் சிங் செளகான் நியமனம் செய்யப் பட்டுள்ளார்
கூடுதல் தகவல்கள்
ü சட்ட ஆணையம் மத்திய அரசால் அமைக்கப் படுகிறது.
ü மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படும்
ü இதுவரை 20 சட்ட ஆணையங்கள் அமைக்கப் பட்டுள்ளன, முதலாவது சட்ட ஆணையம் 1955 ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது.
ü இது வரை சட்ட ஆணையம் 262 பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது, இவ்ற்றுள் நீதித்துறை சீர்சிருத்தம், மரண தண்டனை கூடாது, குடும்ப நல நீதி மன்றங்கள் அமைத்தல், பல்வேறு சட்டப் பிரிவுகளை மறு ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துறை செய்துள்ளது.
ü முதல் சட்ட ஆணையத்தின் தலைவராக எம்.சி சேட்வலாட் என்பர் நியமிக்கப்பட்டார், இவரே மத்திய அரசின் முதல் தலைமை வழக்கறிஞர் ஆவார்.
v  இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக 17 பிரத்யேக வாக்குச்சாவடிகள் அமைக்கப்படு வதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
v பிரபல ஷெனாய் இசைக் கலைஞர் உஸ்தாத் அலி அகமது ஹுஸேன் கான் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 77. இந்துஸ்தானி இசைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி கடந்த 2009-ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் மேற்கு வங்க அரசும் கடந்த 2012-ம் ஆண்டு இவருக்கு பங்கபூஷண்விருது வழங்கி கவுரவித்தது.
v இஸ்ரேல் நாட்டில் வசித்து வருபவர் இஸ்ரேல் கிறிஸ்டல், போலந்து நாட்டில் 1903-ம் ஆண்டு, செப்டம்பர் 15-ம் தேதி பிறந்தவர். 2 உலகப் போர்களை கண்டிருக்கிறார். அவரது வயது 112 வருடங்கள் 178 நாட்கள். இதனால் உலகிலேயே அதிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்தார். இதற்கு முன் ஜப்பானை சேர்ந்த யாசுதரோ கொய்டே (112 வயது, 312 நாட்கள்) என்பவர்தான், உலகின் மிக வயதான மனிதராக இருந்தார். அவர் சமீபத்தில் மரணமடையவே, உலகின் வயதான மனிதர் என்ற சாதனையை கிறிஸ்டல் பெறுகிறார் சில குறிப்பிட்ட கலப்புகளை கொண்ட மருந்துகளை தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட உத்தரவுக்கு, தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து விக்ஸ் ஆக்ஷன் 500′ உள்ளிட்ட பிரபலமான மாத்திரைகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன.
v மேடம் துஸாட் அருங்காட்சியகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகுச் சிலைகள் அடுத்த மாதம் (ஏப்ரல்) அமைக்கப்படவுள்ளன. மேடம் துஸாட் அருங்காட்சியகங்கள் லண்டன், சிங்கப்பூர், ஹாங்காங், பாங்காக் ஆகிய நகரங்களில் உள்ளன. உலகம் முழுவதும் புகழ்பெற்ற மனிதர்களின் மெழுகுச் சிலைகள் இந்த அருங்காட்சியகங்களில் வைக்கப்படுவதே இதன் சிறப்பம்சம் ஆகும்.
v அமெரிக்க உச்ச நீதிமன்றப் பதவிக்கு நீதிபதி மெரிக் கார்லண்டை (63) உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒபாமா செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தார்.
v ஆண்ட்ரூ வில்ஸ் என்னும் கணித பேராசிரியக்கு ஏபேல் பரிசானது வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.4.7 கோடி. இந்த பரிசு சிறந்த கணிதவியலாளருக்கு வழங்கப்படும் உயரிய கவுரவமாக கருதப்படுகிறது.
v 1637ம் ஆண்டு பிரெஞ்சு கணிதவியலாளர் பெய்ரி டி ஃபெர்மட் உருவாக்கிய சமன்பாட்டுக்கு தீர்வு கண்டுபிடிக்க ஏராளமானோர் முயற்சித்தனர்.
v கடந்த மூன்று நூற்றாண்டுகளாக கணிதவியலாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வந்த இந்த சமன்பாட்டிற்கு 62 வயதாகும் ஆண்ட்ரூ வில்ஸ் என்னும் கணித பேராசிரியர் தீர்வை கண்டுபிடித்துள்ளார்.
v பெண்கள் வாகனம் ஓட்டுவதே குற்றமாகக் கருதப்படும் சவூதி அரேபியாவுக்கு, ராயல் ப்ரூனே ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று, முழுக்க முழுக்க பெண் விமானிகளைக் கொண்டு இயக்கப்பட்டு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இது வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஷரிபா க்ஸரினா, ப்ரூனே நாட்டின் முதல் பெண் விமானியாக பதவியேற்று 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
v மாஸ்கோவில் நடைபெற்று வரும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடனான ஆட்டத்தை டிரா செய்தார் ஆனந்த்.
இன்று முதல் குருப் 2 மெயின் தேர்விற்கு தினமும் ஒரு கேள்வி கொடுக்கப் படும், விடைகளை எழுதி அதனை புகைப்படம் எடுத்தோ அல்லது தட்டச்சு செய்தோ , 9952521550 என்ற எண்ணிற்கு whatsapp மற்றும்  Telegram messenger or iyyasamy5@gmail.com அனுப்பவேண்டும்.
From today every day one question will be given for group 2 main writing practice For those who writing their answers should be  send as image or typing to following whatsapp and telegram, 9952521550, and this mail, iyyasamy5@gmail.com.
Today Question –  கட்டுரை
1.          Discuss the contribution of A P J Abdul Kalam to indigeniousation and development of new technology in India.?
டாக்டர் ஆ.பெ.ஜெ அப்துல்கலாம் அவர்களின் புதிய தொழில்னுட்ப    கண்டுபிடிப்புகளைப் பற்றி விவாதி?