நடப்பு நிகழ்வுகள் 24,பிப்ரவரி-2016 – மேகாலாயா தகவல்கள்
- v முடக்கம் வேண்டாம், விவாதம் வேண்டும்: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை.நாட்டில் புதிய தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்வாகத் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- விவசாய நலன்: விவசாயிகள் தங்கள் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்கு உதவியாக தேசிய அளவில் இணையவழி வேளாண் சந்தையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயிகள் நலமாக இருந்தால்தான் இந்தியா வளர்ச்சியடைய முடியும்.
பொருளாதார சக்தி: இந்தியப் பொருளாதாரம் இப்போது மிகவும் உறுதியாக உள்ளது. அன்னிய முதலீடு வரத்து 39 சதவீதம் அதிகரித்துள்ளது. தொழில் தொடங்குவதற்கு மிகவும் வசதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 9 இடங்கள் முன்னேறியுள்ளது. தேசத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது.
மின்பற்றாக்குறை குறைந்தது: நிதிப்பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை குறைந்துள்ளது. பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நமது நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.
முன்பு நாட்டின் மின்சாரத் தேவையில் 4 சதவீதம் பற்றாக்குறை இருந்தது. புதிய அரசு பதவியேற்ற பிறகு, மின்சாரப் பற்றாக்குறை 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு மே மாதத்துக்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு அளிக்கப்பட்டு விடும்.
முனைப்புடன் செயல்படுகிறது: பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டத்தின்கீழ் 21 கோடி பேருக்கு புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.32,000 கோடி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் வெற்றிகரமான மக்கள் நலத்திட்டமாகும்.
- v மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கடந்த 48 நாள்களாக நடைபெற்று வந்த யானைகள் நலவாழ்வு முகாம்செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததை அடுத்து, முகாமில் இருந்து அனைத்து யானைகளும் பிரியாவிடை பெற்றுச் சென்றன
- v முல்லைப் பெரியாறு அணையில் நான்கு பேர் கொண்ட மத்திய நீர்வள ஆணைய குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 152 அடிக்கு உயர்த்துவது தொடர்பாக மத்திய நீர்வள ஆணையத் தலைவர் எல்.ஏ.வி.நாதன் தலமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- v தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்ஹெச்ஆர்சி) புதிய தலைவராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்துவை(65) நியமிக்கலாம் என்று குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மனித உரிமை ஆணையத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு, பிரதமர் தலைமையில், உள்துறை அமைச்சர்,மக்களவை மற்றும் மாநிலங்கவை எதிர்க்கட்சித் தலைவர், மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துனைத் துலைவர் ஆகியோர் அடங்கிய குழு பரிந்துரை செய்யும். மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் தலைவர், ரங்கனாத் மிஸ்ரா. 1993 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
- v உலக அளவில் வாழ்வதற்கு உகந்த இடங்களின் பட்டியலில், இந்தியாவில் ஹைதராபாத் நகரம்முதலிடம் பிடித்துள்ளது.
பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமான மெர்ஜர் வெளியிட்டுள்ள பட்டியலில், இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உலக அளவில் வாழ்வதற்கு உகந்த இடங்களில், வியன்னா (ஆஸ்திரியா) முதலிடத்தில் உள்ளது. ஜூரிச் (ஸ்விட்சர்லாந்து), ஆக்லாந்து (நியூசிலாந்து), மூனிச் (ஜெர்மனி), வான்கோவர் (கனடா) ஆகிய நகரங்கள் முறையே 2 முதல் 5ஆவது இடங்களைப் பிடித்துள்ளன. லண்டன் 39ஆவது இடத்தையும், பாரீஸ் 37ஆவது இடத்தையும், நியூயார்க் 44ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.
இந்தியாவில் ஹைதராபாத் நகரம் முதலாவதாக இருக்கிறது. அந்நகரம் உலக அளவில் 139ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கடுத்து, புணே (144), பெங்களூரு (145), சென்னை (150), மும்பை (152), கொல்கத்தா (160) ஆகிய நகரங்கள் உள்ளன. - v அஸ்ஸாம் மாநில தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சமூக–பொருளாதார முன்னேற்றத்துக்காக ரூ.5,568 கோடி சிறப்பு நிதியுதவி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் தருண் கோகோய் வலியுறுத்தியுள்ளார்.
- v இந்தியாவில் முதல் முறையாக தங்கம் மற்றும் இரும்பு தாது சுரங்கங்களின் ஏலங்கள் நடத்தப்படவுள்ளன. அதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 26-ஆம் தேதி தங்கச் சுரங்க ஏலமும், ஒடிஸா மாநிலத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 2-ஆம் தேதி இரும்புத் தாது சுரங்கம் ஏலமும் நடத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
- v தொழில் புரட்சியால் புவியின் வெப்பம் அதிகரித்ததன் காரணமாக, கடந்த 27 நூற்றாண்டுகளில் இல்லாத வகையில் கடந்த நூற்றாண்டில் கடலின்நீர்மட்டம் 14 செ.மீ. அதிகரித்ததாகஅமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
v உலகளாவிய அளவில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. சுவீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம்சார்பில் உலகில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் குறித்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த மையம் கடந்த 2015-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இதில், சவுதி அரேபியா முதலிடத்திலும்இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
மேகாலாயா மேகங்களின் நாடு
புதிய கற்காலத்திலிருந்தே மனிதர்கள் இங்கே வசித்துள்ளனர். காசி, காரோ மலைகளில் அதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூர்வகுடி மக்களான காசி, ஜெய்ன்தியாஸ் மற்றும் காரோ பழங்குடியினரின் சுயாட்சிப் பகுதிகளாக இவை இருந்தன. பின்னர் 19-வது நூற்றாண்டில்தான் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. ஆங்கிலேயர் அசாமுடன் மேகாலயாவை 1835-ல் இணைத்தனர்.
மாநில அந்தஸ்து
நாடு விடுதலை அடைந்தபோது இன்றைய மேகாலயா அசாமுக்கு உள்ளேயே இரண்டு மாவட்டங்களாக இணைந்து இருந்தது. தனியாக ‘மலை மாநிலம்’ அமைக்கக் கோரி 1960-ல் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து அசாம் மறுசீரமைப்பு (மேகாலயா) சட்டம் 1969-ல் கொண்டுவரப்பட்டது. அசாமில் இருந்து பிரிந்து தன்னாட்சி பெற்ற பிரதேசமாக மேகாலயா 1970 ஏப்.2-ல் உதயமானது.
வடகிழக்கு மாநிலங்களின் மறுசீரமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் 1971-ல் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் மேகாலயா தனி மாநில அந்தஸ்தை 1972 ஜனவரி 21-ல் பெற்றது.
வடகிழக்கின் 7 சகோதரிகள் என வர்ணிக்கப்படுகிற ஏழு மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்றானது.தெற்கிலும் மேற்கிலும் வங்கதேச நாடும் மற்ற பகுதிகளில் அசாம் மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன. வங்கதேசத்துக்கும் மேகாலயாவுக்கும் இடையே 440 கி.மீ. தூரத்துக்கு எல்லை அமைந்துள்ளது. மேகாலயாவின் மொத்த நிலப்பரப்பில் 70 சதவீதம் காடுகள்தான்.
கிறிஸ்தவர்கள்
மக்கள் தொகை 29.64 லட்சம். எழுத்தறிவு 75.48 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் மூன்று மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. இங்குள்ள மக்களில் 70.25 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். இந்து மதத்தை 13.27 சதவீதம் பேரும் இஸ்லாமை 4.27 சதவீதம் பேரும் மற்ற மதங்களை 11.90 சதவீதம் பேரும் பின்பற்றுகின்றனர்.
மொழிகள்
ஆங்கிலம் அலுவல் மொழியாகவும் பரவலாகப் பேசப்படும் மொழியாகவும் உள்ளது. மக்களால் பேசப்படும் மொழிகளில் முக்கியமானவை காசி, காரோ. காசி மொழியில் பயன்படுத்தப்படும் அனேக வார்த்தைகள் இந்தோ – ஆரிய, நேபாள, வங்க, அசாமிய மொழிகளில் இருந்து தருவிக்கப்பட்டவை. காரோ மொழி கோச், போடோ மொழியின் நெருக்கமான வடிவமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தவிர, பினார், பியாட், நேபாளி மொழிகளும் புழக்கத்தில் உள்ளன.
தாய் வழி சமூகம்
மேகாலாயாவின் மண்ணின் மைந்தர்களாக, காசிஸ், ஜெய்ன் தியாஸ், காரோ இன மக்கள் உள்ளனர். இவர்களின் பண்பாடு தனித்துவமானது. பண்டைக்காலச் சமூக முறையான தாய்வழிச் சமூகத்தை இவர்கள் பின்பற்றுகிறார்கள். இந்த இனக் குழுக்களை டேவிட் ராய் என்பவர் ஆய்வு செய்துள்ளார். ‘‘இந்தச் சமூகத்தில் பெண்ணைச் சார்ந்தே ஆண் இருக்கிறான். குடும்பத்தினரின் நம்பிக்கைக்குப் பாத்திர மாகப் பெண் இருக்கிறார்’’ என்கிறார் அவர்.
சொத்துகளைப் பெண்களே நிர்வகிக்க வேண்டும். அவர்களே வயதான பெற்றோர்களையும் மணமுடிக்காதவர் களையும் பாதுகாக்க வேண்டும். பெண் பிள்ளைகள் பிறக்காத வீடுகளில் தத்து எடுப்பதும் அல்லது மருமகளாக வரும் பெண்களிடத்தில் குடும்பத்தின் பொறுப்புகளை ஒப்படைப்பதும் இவர்களின் சமூகக் கட்டமைப்பாக உள்ளது. தாய்வழிச் சமூகக் கட்டமைப்பு மேகாலயாவில் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது.
வேளாண்மை
வேளாண்மையில் 80 சதவீத மக்கள் ஈடுபடுகின்றனர். நெல், சோளம் முதன்மை பயிர்களாக உள்ளன. உருளை, இஞ்சி, மிளகு, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, கொய்யா, வாழை, பிளம்ஸ் உள்ளிட்ட பழங்கள், தேயிலை, முந்திரி, எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், தக்காளி, கோதுமை, காளான் ஆகியவை மேகாலயாவின் முக்கியமான பயிர்கள்.
மேகாலயாவில் அதிக எண்ணிக்கையிலான ஆறுகள் உள்ளன. நிலக்கரி, சுண்ணாம்பு, கிரானைட், களிமண் உள்ளிட்ட தாதுக்கள் நிரம்பிய பூமியாக மேகாலயா உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் வளம்பெற உதவுகிறது. இங்கே விளையும் மஞ்சள் உலகில் தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது.
பண்டிகைகள்
நடனங்களால் தங்களைத் தனித்துவ மிக்கவர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் காசி இன மக்கள். பாம் கானா, சா சக், மைன்சியம், செங்குத், ஸ்நெம் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர்.
ஜெய்ன்தியாஸ் இன மக்கள்
மனிதன் – கலாச்சாரம் – இயற்கை ஆகியவற்றின் சமநிலையைப் பராமரிக்கும் வகையிலான விழாக்களையே கொண்டாடு
கின்றனர். இதில் சமூக இணக்கமும் ஒற்றுமையை வலியுறுத்தும்படியான அம்சங்களும் மேலோங்கி இருக்கும். புலித்திருவிழா, பாம் பலார், பாம் தோ, ராங் பிலிகான், துர்கா பூஜைஉள்ளிட்ட பண்டிகைகள் இவர்களுக்கானவை.
காரோ மக்களின் முக்கியமான பண்டிகை டென் பிளஸ்ஸியா, வாங்கலா, ரோங்குச்சு கலா, ஜமங் சாய் உள்ளிட்ட 15 வகைத் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றனர்.
இவர்களின் பழங்குடிப் பண்பாட்டின்மீது கிறிஸ்துவம் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை மூன்று இன மக்களும் பொதுவானதாகக் கொண்டாடுகின்றர்.
சுற்றுலா தேசம்
சுருள் சுருளாய் மேகக் கூட்டங்கள் தவழும் பள்ளத்தாக்குகள், எங்கும் பசுமை, முடிவுறா மலைத்தொடர்கள், நீர் வீழ்ச்சி, அடர்த்தியான காடுகள் என்று உலகைக் கவரும் சுற்றுலா வளத்தைக் கொண்டது மேகாலயா. நோகாளிகை அருவி, ஸ்வீட் அருவி, வேர்ட்ஸ் வேக், லேடி ஹைதரி பூங்கா, இயற்கையாகவே அமைந்த சுண்ணாம்புப் பாறை, மண் குகைகள் உள்ளிட்டவை பார்க்கப் பார்க்கத் திகட்டாதவை.
மேகாலயா என்றால் மேகங்களின் தாயகம் என்கிறது சமஸ்கிருதம். மேகங்களைப் போர்த்தியபடி படர்ந்து கிடக்கும் இந்தப் பசுமைப் பிரதேசம் இயற்கை வாசம் செய்யும் தேசம்.
நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி என்பது நம்பிக்கை உடையோரிடம் மட்டுமே வரும்!!!!!