நடப்பு நிகழ்வுகள் மார்ச்-11 ,2016
v முல்லைப் பெரியாறு அணையில் கேரள அதிகாரிகள், வியாழக்கிழமை திடீர் அளவீடு செய்து, வெப் கேமரா பொருத்தப்போவதாகத் தெரிவித்தனர்.
v மகா சிவராத்திரியையொட்டி, சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவின் 4-ஆம் நாள் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றன.
v நாகையை அடுத்த நாகூரில் உள்ளது பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்கா. உலகப் புகழ்ப் பெற்ற இந்த தர்காவின் 459-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறவுள்ளது. சந்தனக் கூடு ஊர்வலம், சந்தனம் பூசும் விழா ஆகியன கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாகக் கொண்டாடப்படும்.
v ஜப்பான் விஞ்ஞானிகள் பிளாஸ்டிக் பாட்டில்களை அழிக்கும் புதிய வகை பாக்டிரியம் இடோனல்லா சகைனெசிஸ் 201- F6, ( Ideonella sakaiensis 201-F6) , இது இரண்டு நொதிகளைச் சுரந்து பிளாஸ்டிக் பாட்டில்களை அழிக்கிறது.
v வேற்று கிரகங்களில் விண்கலத்தை பத்திரமாக தரையிறக்கும் வெப்ப தடுப்பு கவச தொழில்நுட்பத்தை நாசா வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது. பாராசூட் போல செயல்படும் வகையில் வட்ட வடியில் (டோநட் போல) ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு டாரஸ் என்று பெயரிட்டுள்ள னர். ஹைபர்சோனிக் இன்பிளாட பிள் ஏரோடைனமிக் டிசெலரேட்டர் (எச்ஐஏடி) என்ற இந்த தொழில் நுட்பத்தின் மூலம் டாரஸ் கருவி பாராசூட் போல விண்கலத்தை மெதுவாக வேற்று கிரகத்தில் தரை யிறக்கும். அத்துடன் வேற்று கிரகத் தின் கடும் வெப்பத்தில் இருந்து விண்கலத்தை பாதுகாக்கும் கவசமாகவும் செயல்படும்.
v இந்தியாவின் பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி. சி32 ராக்கெட் மூலம் வியாழக்கிழமை விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் உடன் சேர்த்து தற்போது 6 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன. திட்ட இயக்குநர் பி.ஜெயகுமார் .
v இலங்கைத் தமிழ் அரசியலில் பெரும்பங்காற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் காலமானார்.
v ரூ. 3,550 கோடிக்கான 6 மாதங்கள் செலவினத்துக்கு புதுச்சேரி சட்டப் பேரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. புதுச்சேரி யூனியன் பிரதேச 13-ஆவது சட்டப் பேரவையின் கடைசிக் கூட்டம் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கூடியது. கூட்டத்துக்கு சட்டப் பேரவைத் தலைவர் வ.சபாபதி தலைமை வகித்தார்.
v புதிய ராணுவத் தளவாடக் கொள்முதல் கொள்கை குறித்து பாதுகாப்புத் துறையின் உயரதிகாரிகள் தில்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளனர்.
v தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை அமைப்பது தொடர்பான பரிந்துரை மீதான விவாதம் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மத்திய பணியாளர் நலன், மக்கள் குறைத்தீர்வு, சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். பணியாளர் நலன், மக்கள் குறைத்தீர்வு, சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு 2004-05 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றக் கிளையை நாட்டின் நான்கு மண்டலங்களில் அமைப்பது தொடர்பான தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்தது. 2005-06 ஆம் ஆண்டில் நிலைக்குழு தமிழகம், கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை அமைக்கலாம் என மீண்டும் பரிந்துரைத்தது.
v பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதில் இருந்து விலகிக்கொள்வதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி வி.கோபால கெளடா வியாழக்கிழமை அறிவித்தார்.
v நாடாளுமன்ற பட்ஜெட்டில் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜ்னா அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக, கிராமப்புறங்களில் சமையலுக்காக விறகுகளையும், வறட்டிகளையும் வைத்து சிரமப்படும் ஏழைப் பெண்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
v மியான்மர் பொதுத் தேர்தலில் வெற்றியடைந்துள்ள அந்த நாட்டின் தேசிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகி, அந்த நாட்டுக்கான அடுத்த அதிபர் பதவிக்குத் தனது கார் ஓட்டுநரும், நெருங்கிய உதவியாளருமான ஹிடின் கியாவின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார்.
v துபாயில் வரலாறு காணாத கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
v உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்திய வீராங்கனை ஷாமினி 45 இடங்கள் முன்னேறி 183-ஆவது இடத்தையும், மணிகா பத்ரா 25 இடங்கள் முன்னேறி 134-ஆவது இடத்தையும், மெளமா தாஸ் 15 இடங்கள் முன்னேறி 151-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் ஹர்மீத் தேசாய் 14 இடங்கள் முன்னேறி 116-ஆவது இடத்தையும், அஜந்தா சரத் கமல் 10 இடங்கள் முன்னேறி 59-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். செளம்யஜித் கோஷ் 6 இடங்கள் முன்னேறி 83-ஆவது இடத்தையும், சத்தியன் 7 இடங்கள் முன்னேறி 153-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
vஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், முன்னாள் முதல் நிலை வீரரான மலேசியாவின் லீ சாங் வெய்க்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.