IYACHAMY CURRENT AFFAIRS JULY 9-14|TAMIL|ENGLSIH|LOK AYUKTA|ONE NATION ONE POLL

நடப்பு நிகழ்வுகள் ஜீலை 8 முதல் 14 வரை

தமிழ்நாடு லோக் ஆயுக்தா/ ஒரே நாடு ஒரே தேர்தல் சிறப்புக் கட்டுரை

Download as PDF JULY 9-14 IYACHAMY CURRENT AFFAIRS

  • Human Resource Development Minister Shri Prakash Javadekar will inaugurate the 17thWorld Sanskrit Conference to be held at Vancouver, Canada from 9thJuly to 13th July, 2018.
  • மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 17வது உலக சமஸ்கிருத மானாட்டினை கனடாவில் உள்ள வான்கூவர் நகரத்தில் துவங்கி வைத்தார்
  • 51 lakh houses approved under Pradhan Mantri Awas Yojana (Urban) in 3 years of its implementation. The Government of India is committed to provide “Housing for All” by the end of the Mission period-2022.
  • பிரதம மந்திரி அவாஸ் திட்டம் ( நகர்புற) வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 51 லட்சம் வீடுகளுக்கும் மூன்றாண்டுகளில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசு 2022 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்க உறுதிபூண்டுள்ளது.
  • Government declares 6 educational ‘Institutions of Eminence’ ; 3 Institutions from Public Sector and 3 from Private Sector shortlisted. In order to select the Institutions as IoEs, an Empowered Expert Committee (EEC) comprising of Shri N. Gopalaswami (Chairman),
  • இந்தியாவின் 3 அரசு பல்கலைக்கழகங்களுக்கும், 3 தனியார் பல்கலைக்கழகங்களும் உலகத்தர பல்கலைக்கழகங்கள் தகுதியை மத்திய அரசு வழங்கியுள்ளது இந்த பல்கலைக் கழகங்களைத் தெரிவு செய்வதற்கு அதிகாரமிக்க குழுவொன்றை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலஸ்வாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.

Public Sector: (i) Indian Institute of Science, Bangalore, Karnataka; (ii) Indian Institute of Technology, Bombay, Maharashtra; and (iii) Indian Institute of Technology, Delhi.

பொதுக் கல்வி நிறுவனங்கள்: இந்திய அறிவியல்  நிறுவனம் பெங்களூரு,இந்திய தொழில்னுட்ப நிறுவனம் பாம்பே,இந்திய தொழில் நுட்ப நிறுவனம் டெல்லி.

Private Sector: (i) Jio Institute (Reliance Foundation), Pune under Green Field Category; (ii) Birla Institute of Technology & Sciences, Pilani, Rajasthan; and (iii) Manipal Academy of Higher Education, Manipal, Karnataka.

தனியார் பல்கலைக் கழகங்கள்: ஜியோ நிறுவனம், பிர்லா அறிவியல் மற்றும் தொழில்னுட்ப கல்வியகம் மற்றும் மனிப்பால் உயர்கல்வி அகாதேமி ஆகும்.

  • India and South Korea signed five MoUs in the field of Science & Technology.
  • இந்தியா மற்றும் தென்கொரியா இடையே அறிவியல் தொழில்னுட்பம் தொடர்பாக ஐந்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
  • The Prime Minister, Shri Narendra Modi, and the President of the Republic of Korea, Mr. Moon Jae-in, y jointly 9/7/18 a large mobile manufacturing facility of Samsung India Electronics Pvt. Ltd, at Noida.
  • பிரதமர் மோடி மற்றும் கொரிய அதிபர் மூன் ஜே இன் இனைந்து உலகிலேயே மிகப்பெரிய செல்போன் தொழிற்சலை சாம்சங் நிறுவனத்தை நொய்டாவில் துவங்கி வைத்தனர்.
  • Niti Aayog has proposed a 15-point formula to combat air pollution. Titled, Breathe India
  • நிதி ஆயோக் காற்று மாசுபடுதலை எதிர்கொள்ளும் பொருட்டு சுவாசிப்போம் இந்தியா என்ற தலைப்பில் 15 அம்சக் கொள்கையை முன்மொழிந்துள்ளது
  • The Global Innovation Index (GII) has ranked India as the 57th most innovative nation in the world.
  • உலக புத்தாக்கப் பட்டியலில் இந்தியா 57வது இடம் பெற்றுள்ளது
  • India has become the world’s sixth-biggest economy, pushing France into seventh place, according to updated World Bank report for the year 2017
  • இந்தியா உலகின் ஆறாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. பிரான்சினை ஏழாவது இடத்திற்கு தள்ளியுள்ளது
  • Shri Venkaiah Naidu, , become the first Chairman of Rajya Sabha to sign such an agreement when he inked an MOU with the visiting President of the Senate of the Republic of Rwanda
  • வெளினாட்டுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட முதல் ராஜ்ய சபா தலைவர் வெங்கையா நாயுடு ஆவார். ரூவாண்டாவுடன் இந்திய அரசின் சார்பில் ரூவாண்டாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
  • The Gujarat governmenthas granted religious minority status to the Jewishcommunity in the state.
  • குஜராத் அரசு அம்மானிலத்தில் வசிக்கும் யூதர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கியுள்ளது.
  • The Andhra Pradesh government launched the much-awaited Anna Canteensto offer food at subsidised rates.
  • ஆந்திர பிரதேச அரசு மலிவு விலையில் உணவு வழங்கும் பொருட்டு அண்ணா உணவகத்தினை துவக்கியுள்ளது
  • Fish samples in Chennai test positive for formalin
  • சென்னையில் மீன் மாதிரிகளின் பார்மாலின் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டது சோதனையில் தெரிய வந்துள்ளது
  • The Tamilnadu Assembly on 9/7/18 passed a bill to set up Lokayukta, a body to probe corruption among public servants.தமிழ் நாடு அரசு 9/7/2018 அன்று லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்றியது இதன்படி பொது ஊழியர் மீதான ஊழல் குற்றசாட்டை விசாரிப்பதற்கு லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்படும்
  • GnanaSundarm Appointed as Vice chairman of Chemmozhi Thamilaivu Research Institute
  • செம்மொழி தமிழாய்வு ஆராய்ச்சி நிறுவனத்தின் துனை தலைவராக த.ஞாணசுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • Satyarup Siddhanta has become the second Indian mountaineer after Malli Mastan Babz to climb Mt Ojos del Salado, the highest volcano in the world
  • உலகின் மிக உயர்ந்த எரிமலையான ஒஜோஸ் டெல் சலதோ எரிமலை உச்சியை அடைந்த இரண்டாவது இந்தியர் சத்யரூப் சித்தாந்தா. முதலாவதாக அடைந்த இந்தியர் மஸ்தான் பாப்ஸ்
  • India’s premier gymnast Dipa Karmakartoday clinched the gold medal in the vault event of FIG Artistic Gymnastics World Challenge Cup at Mersin, Turkey
  • துருக்கியில் நடந்த உலகக் கோப்பை சாலெஞ்சர்ஸ் ஜிம்னாஸ்டிக் தொடரில் ஜிம்னாஸ்டிக்கில் தங்கம் வென்றுதீபா கர்மாகர்.
  • Assam — 18-year-old Hima Das has created athletics history. he got India its first ever track gold at a global event by winning the 400 metre in 51.46 seconds final at the World U20 Championships in Tampere, Finland.
  • அசாமைச் சேர்ந்த 18 வயது ஹிமாதாஸ் தடகளப் போட்டியில் வரலாறு படைத்தார். இதன் மூலம் ஐஏஏஎப் ஜூனியர் சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை 18 வயதாகும் ஹிமா தாஸ் பெற்றுள்ளார். ஹிமா தாஸ் பந்தய இலக்கை 51.46 விநாடிகளில் அடைந்துள்ளார்.

Tamilnadu Lokayukta

The Tamil Nadu Legislative Assembly passed the Lokayukta bill through voice vote on 9/7/18. The act would be known as the Tamil Nadu Lokayukta Act 2018.

தமிழ் நாடு சட்டபை லோக் ஆயுக்தா மசோதாவினை ஜீலை 9 அன்று நிறைவேற்றியது.இச்சட்டம் தமிழ்னாடு லோல் ஆயுக்தா சட்டம் என அறியப்படும்.

Objective

Lokayukta will now act like an ombudsman for anti-corruption in the state level. The Lokayukta Act was enacted to probe corruption charges against elected representatives.

நோக்கம்

லோக் ஆயுக்தா மாநில அளவில் ஊழலுக்கு எதிரான குறைதீர்ப்பாளராக செயல்படும். லோக் ஆயுக்தா சட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்  மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கும் அமைப்பாகச் செயல்படும்

Features of the TN Lokayukta Act, 2018/ லோக் ஆயுக்தா 2018ன் சிறப்பம்சங்கள்

  • The Lokayukta will consist of a chairman and four members. The chairman and two of the four members will be persons experienced in the legal system of India.
  • லோக் ஆயுக்தா அமைப்பு ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களை கொண்டிருக்கும்.தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் இந்தியாவின் சட்ட நடவடிக்கைகளில் அனுபமுடையவார்களாக இருப்பர்
  • Chairman will be current or former judge of high court or had served at least 25 years in any of fields of anti-corruption, public administration, awareness, finance or law
  • ஊழல் தடுப்புக் கொள்கை, பொது நிர்வாகம், விழிப்புணர்வு, நிதி மற்றும் சட்டத் துறையில் 25 ஆண்டுகள் முன் அனுபவத்தைப் பெற்றுள்ள நபர்கூட தலைவராக இருக்கலாம். அதாவது, தலைவராக நியமிக்கப்படுபவர் அரசியல்வாதியாகவோ அல்லது அரசு அதிகாரியாகவோ இருக்கலாம்
  • As per the act passed by the Tamil Nadu Assembly, the chairman and the members of the Lokayukta
  • should not be an elected Member of Parliament (MP) or a Member of Legislative Assembly (MLA)
  • பாளாமன்றம் அல்லது சட்டப்பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருக்கக்கூடாது
  • should not have been convicted by a court of law
  • நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்க கூடாது
  • should not be less than 45 years of age
  • 45 வயதிற்கு குறைவானவராக இருக்கக் கூடாது
  • should not be a member of the local administration or corporation
  • உள்ளாட்சி அமைப்பிலோ அல்லது நகராட்சியிலோ உறுப்பினராக இருக்ககூடாது
  • should not have been removed from a state or central government service
  • மத்திய மற்றும் மானில அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்டிருக்ககூடாது
  • should not hold an office of profit and should not have any relationship with political parties
  • ஏதேனும் ஆதாயம் தரும் பதவிகளில் இருக்கக்கூடாது அதே சமயம் ஏதேனும் அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருக்ககூடாது
  • The appointments shall be made by the Governor based on the recommendations by a select committee consisting of the Chief Minister, the leader of the Assembly and the leader of the opposition in the Assembly.
  • முதலமைச்சர் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் எதிர்க்ட்சித் தலைவரைக் கொண்ட தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் ஆளுனரால் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்
  • As per this Act, people who are found to have filed false complaints can be punished with a penalty of Rs 1 lakh and an imprisonment of upto one year.
  • இந்தச் சட்டத்தி படி தவறான தகவல் அளிப்போருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத்தண்டனை கிடைக்க செய்ய முடியும்
  • The Chief Minister and cabinet comes under the purview of the Act, but local administration and government contracts do not.
  • இந்தச் சட்டத்தின் மூலம் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வரம்பிற்குள் வருவர் அதே வேலை உள்ளாட்சி நிறுவனத்தின் ஒப்பந்தம் வரம்பிற்குள் வராது
  • The Retirement age is 5 years or 70 year at the time of Appointment and whichever is earlier
  • சேர்ந்த நாளில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது 70 வயது அடையும் வரை, அல்லது எது முதலில் வருகிறதோ அதுவைர பதவி வகிக்கலாம்

Evolution of Lokpal / லோக்பால் சட்டத்தின் வளர்ச்சி

The basic idea of the Lok Pal is borrowed from the office of ombudsman in Scandinavian (Sweden, Denmark, Finland, Norway) countries. The office of the ombudsman originated in Sweden in 1809 A.D. Ombudsman is a Swedish word and refers to an official whose job is to investigate complaints from the public against government officers.

லோக்பால் அமைப்பு தொடர்பான அடிப்படை சிந்தனயை ஸ்காண்டி நோவியன் நாடுகளில்(ஸ்வேடன்,டென்மார்க், நார்வே, பின்லாந்து) (மக்கள் குறை தீர்ப்பாளர்,Ombudsman) இருந்து பெறப்பட்டது. இந்த அமைப்பு முதன்முதலாக ஸ்வீடனில் 1809ல் தோன்றியது. இந்த அமைப்பு பொதுமக்களிடம் இருந்து புகார்களைப் பெற்று அரசு அதிகாரிகளை விசாரிப்பதாக இருந்தது.

  • 1963: The idea of an ombudsman first came up in parliament during a discussion on budget allocation for the Law Ministry. L.M Singhvi Termed Lokpal
  • 1963 ஆம் ஆண்டு பாரளமன்ற விவாதத்தின் போது லோக்பால் என்ற வார்த்தையை எல் எம் சிங்வி முன்மொழிந்தார்
  • 1966: The First Administrative Reforms Commission recommended the setting up of two independent authorities- at the central and state level, to look into complaints against public functionaries, including MPs.
  • 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் நிர்வாக சீர்திருத்த குழுவான சுதந்திரமான இரண்டு அமைப்புகளை உருவாக்க வேண்டுமெனவும் அதில் ஒன்று மத்திய அளவிலும் மற்றொன்று மானில அளவிலும் பொதுவாழ்வில் செயல்படும் ஊழியர்களுக்கெதிரான புகார்களை விசாரனை செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்தது.
  • 1968: The Lokpal Bill was introduced in parliament but was not passed. Eight attempts were made till 2011 to pass the Bill, but in vain.
  • 1968 ஆம் ஆண்டு முதன்முறையாக பாரளமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ஆனால் வீண் முயற்சியாகிப் போனது
  • Subsequently, Lokpal bills were introduced in 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2005 and most recently in 2008. However, the Bill lapsed each time except in 1985 when it was withdrawn
  • இந்த மசோதாவின் பல்வேறு பதிப்புகள் 1969,1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2005, 2008 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படாமல் தள்ளிப்போடப்பட்டு வந்தன. ஆனால் 1985ல் இந்த மசோதா திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத் தக்கது
  • The Lokpal and Lokayuktas Bill, 2011, stands as the base for the Lokpal Act in the present form. A Group of Ministers chaired by Pranab Mukherjee proposed this Bill, to which the Standing Committee made substantial modifications. The modified Bill, called as Lokpal and Lokayuktas Bill, 2013, was passed by the Parliament with the support of all major political parties, making it the Lokpal Act of 2013.
  • தற்போதைய லோக்பால் மற்றும் லோக்பால் மசோதா 2011 ஆம் ஆண்டு சில பிரணாப் முகர்ஜியை தலைமையாகக் கொண்டு இந்த மசோதா முன்மொழியப்பட்டது ஆனால் சில மாறுதல்களை பாரளாமன்ற நிலைக்குழு மாற்றம் செய்தது. மாறுதல் செய்யப்பட்ட மசோதாவானது 2013 ஆம் ஆண்டு பாரளமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

Maharashtra was the first state to introduce the institution of Lokayukta through The Lokayukta and Upa-Lokayuktas Act in 1971. So far 19 states have been passed lok ayukta Act.

மானிலங்களில் முதலாவதாக மகாராஷ்ட்ரா லோக் ஆயுக்தா எனும் அமைப்பினை 1971ல் ஏற்படுத்தியது. இந்தியாவில் இதுவரை 19 மானிலங்கள் லோக் ஆயுக்தா சட்டத்தினை நிறைவேற்றியுள்ளன.

One Nation One Poll/ஒரே நாடு ஒரே தேர்தல்

Political parties were divided on the issue of holding Lok Sabha and assembly polls simultaneously

ஒரே நேரத்தில் சட்டப்பேரவை மற்றும் பாரளமன்றத் தேர்தல்கள் நடத்துவதில் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லை

Why it’s in News ? / ஏன் இப்போது செய்திகளில்

The Law Commission’s invited to all seven national and fifty-nine recognised state parties to hold consultations on 7-8 July in New Delhi has met with a tepid response.

சட்டக் குழு இந்தியாவின் 7 தேசியக் கட்சிகள் மற்றும் 59 பதிவு செய்யப்பட்ட மானிலக் கட்சிகளை அழைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி கருத்து கேட்டது

Conducting Election in India/ இந்தியாவில் தேர்தல் நடத்துதல்

In democratic polity, election is held at regular interval to choose legislators/rulers for a fixed tenure. In our country the task of holding free and fair election at regular interval is assigned to Election Commission of India (ECI) and State Election Commissions under Articles 324 and 243K of the Constitution, respectively.

ஜன நாய அரசியலமைப்பை கொண்ட நாட்டில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சட்டமியற்றுபவர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்தப்படுகிறது. நமது நாட்டில் சுதந்திரமான வெளிப்படையான தேர்தலை நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் அரசியலைமைப்புச் சட்டவிதி 324 மற்றும் 243கே முறையே வழங்கியுள்ளது.

Simultaneous Elections  Cycle / ஒரே தேர்தல் சுழற்சி

First General Elections to House of People (Lok Sabha) and all State Legislative Assemblies were held simultaneously in 1951-52. That practice continued in three subsequent General Elections held in the years- 1957, 1962 and 1967. However, due to the premature dissolution of some Legislative Assemblies in 1968 and 1969 , the cycle got disrupted. In 1970, the Lok Sabha was itself dissolved prematurely and fresh elections were held in 1971.. As a result of premature dissolutions and extension of terms of both the Lok Sabha and various State Legislative Assemblies, for the last forty eight years there have been separate elections to Lok Sabha and States Legislative Assemblies and the cycle of simultaneous elections has been disturbed.

மக்களவைக்கும் மானிலங்களவைக்கும் ஒரே வேளையாக 1952 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நடைமுறை அதனைத் தொடர்ந்து வந்த மூன்று பொதுத்தேர்தல்கள்,1957,1962மற்றும் 1967 வரை தொடர்ந்தது அதன்பின்பு சில சட்டப்பேரவைகள் 1968 மற்றும் 1969 ஆம் ஆண்டு ஆயுட்காலம் நிறைவடையும் முன்னரே கலைந்தது எனவே இந்த தொடர்ச்சி பாதிக்கப்பட்டது.1970லும் மக்களவையானது அதனுடைய முழு ஆயுள் காலத்தை நிறைவு செய்யும் முன்னரே கலைக்கப்பட்டது. அதன்பின்னர் பல்வேறு வேளைகளில் ஒரே நேரத்தில் மானில சட்டப்பேரவைகளுக்கும் ,பாரளமன்றத்திற்கு தேர்தல் நடத்த இயலாத சூழ்னிலை ஏற்பட்டது.

Need for Holding Simultaneous Elections/ ஒரே தேர்தல் நடத்துவதற்கான தேவை

B.P. Jeevan Reddy in its One Hundred Seventieth Report on Reform of Electoral Laws (1999) has suggested simultaneous elections to Lok Sabha and State Legislative Assemblies for the sake of stability in governance

சட்ட ஆணையத்தலைவர் பி.பி ஜீவன் ரெட்டி 117வது அறிக்கையில் ஆளுகையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் பொருட்டு ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என பரிந்துரை செய்திருந்தார்

  • Elections are held in multiple phases and the country incurred huge expenditure for conducting those elections. Apart from these, several bye-elections were also held. This also imposes a huge burden on the exchequer.
  • தேர்தல்கள் பல்வேறு நிலைகளில் நாடு முழுவதும் நடைபெறுவதால் மிகப்பெரிய செலவு அரசுக்கு ஏற்படுகிறது. இதைத் தவிர்த்து பல்வேறு இடைத்தேர்தல்கள் நடைபெறுவதாலும் அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமையாகிறது
  • Firstly, it would reduce the massive expenditure incurred for conduct of separate elections every year. Presently, the cost of holding elections for Lok Sabha and Legislative Assemblies of States and UTs has been pegged at `4500 crore by the ECI
  • முதலாவதாக ஆண்டு முழுவதும் பல்வேறு காலங்களில் தேர்தல் நடத்தப்படுவதால் நடைபெறும் செலவினத்தை குறைக்கும். தற்போது மக்களவைக்கும் மானில சட்டபேரவைகளுக்கும் தேர்தல் நடத்துவதிற்கு ரூ 4500 கோடியை தேர்தல் ஆணையம் செலவளிக்கிறது
  • Secondly, elections lead to imposition of Model Code of Conduct (MCC) in the poll bound State/ area. The imposition of MCC puts on hold the entire development programme and activities of the Union and State Governments in the poll bound State. It even affects the normal governance. Frequent elections lead to imposition of MCC over prolonged periods of time. This often leads to policy paralysis and governance deficit.
  • இரண்டாவதாக தேர்தல் மாதிரி நடத்தைகள் ஒரு தொகுதியிலோ அல்லது மானிலத்திலோ நடைமுறைக்கு வந்தால் மத்திய மற்றும் மானில அரசினால் செயல்படுத்தப்படும் மேம்பாட்டுத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றா சூழ் நிலை ஏற்படுகிறது. இது சாதாரமாணக செயல்படக்கூடிய அரசு நிர்வாகத்தை பாதிக்கிறது. அடிக்கடி நடைபெறும் தேர்தலால் நீண்ட காலம் தேர்த மாதிரி நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அரசின் பற்றாக்குறையை அதிகரிக்கிறது
  • Thirdly, frequent elections lead to disruption of normal public life and impact the functioning of essential services. Holding of political rallies disrupts road traffic and also leads to noise pollution. If simultaneous elections are held, this period of disruption would be limited to a certain pre-determined period of time
  • மூன்றாவதாக அடிக்கடி நடைபெறும் தேர்தல்கள் பொது வாழ்க்கையும் அதேவேலை அடிப்ப்டை வசதிகள் பெறுவதில் சில தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் நடத்தும் மானாடு , பேரணி போன்றவற்றல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது அதே வேளை ஒலி மாசும் ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டால் இந்த பாதிப்புகள் மிக குறைந்த அளவு இருக்கும்
  • Lastly, it would free the crucial manpower which is often deployed for prolonged periods on election duties. For example, the 2014 Lok Sabha elections which were held along with State Assembly Elections in Odisha, Andhra Pradesh, Sikkim and Arunachal Pradesh was spread over nine phases
  • இறுதியாக அதிக அளவில் செலவளிக்கப்படும் மனித உழைப்பு வீனாகாது. உதாரணமாக 2014 மக்களவைத் தேர்தலுடன் ஆறு மானிலங்களுக்கான தேர்தல் ஒன்பது நிலைகளாக நடைபெற்றது இதன்மூலம் மனித வளம் மிகவும் வீனாக செலவளிக்கப்பட்டது.

Advantages of simultaneous Election/ ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதின் நன்மைகள்

  • Preparing and conducting elections costs the public exchequer hundreds of crore each time. The money is mostly spent on arrangements, salaries and security. Holding simultaneous polls will lead to significant savings of public funds that can be better utilised elsewhere.
  • ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பொதுப்பணம் வீணாக ஒவ்வொரு முறையும் செலவளிக்கப்படுகிறது. இத்தொகை முழுவதும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ,ஊதியம் மற்றும் பாதுகாப்புக்காக செல்வழிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் இத்தொகை சேமிக்கப்பட்டு வேறு நல் வழிகளில் பயன்படுத்த முடியும்
  • With elections taking place at various schedules, political parties and ministers are always in election mode. This disrupts and distorts agendas with parties deferring reforms or make decisions with short-term views, thereby depriving citizens of clear policies. Holding simultaneous elections will ensure that the ministers can dedicate a good four years towards implementing policies and doing constructive work for their constituencies.
  • பல்வேறு இடங்களில் மற்றும் காலங்களில் தேர்தல் நடைபெறும் போது , அரசியல் கட்சிகள் மற்றும் அமைச்சர்கள் எப்போது தேர்தல் மன நிலையிலையிலே இருப்பர். இது அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் தேர்தலுக்காக குறுகிய நோக்கத்தில் செயல்பட வாய்ப்பளிக்கும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் அமைச்சர்கள் நான்காண்டுகள் அவர்களுடைய பணிகளில் முழுமையாக ஈடுபட இயலும் அதே நேரம் தொகுதியின் மேம்பாட்டிற்காக செயல்படவும் வாய்ப்பளிக்கும்
  • All political parties spend large sums of money in ensuring that no stone is left unturned during campaigning. One election every five years across all levels will lower the cost of elections to parties, and thus reduce their need for ‘donations’.
  • அனைத்து அரசியல் கட்சிகளும் அதிக அளவிலான பணத்தினை தேவையற்ற வழிகளில் தேர்தல் பிரச்சாரத்தின் போது செலவளிக்கின்றனர். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவு குறையும் அவர்கள் பிறரிடம் இருந்து நன்கொடை பெறும் அளவும் குறையும்
  • Other than money, the other significant resource needed in abundance is the deployment of security forces. Holding simultaneous elections to the Lok Sabha and the state legislatures it will free up security forces, who are diverted from their core duties for each election.
  • பணத்தினை தவிர பிற முக்கியமான வளங்கள் பாதுகாப்பு படையினரை நிலை நிறுத்த தேவைப்படுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் நடத்தப்பட்டல் பாதுகாப்பு படைகளின் தேவையை குறைக்க இயலும்.
  • With elections being announced the MCC comes into force.This prevents the government from announcing any new schemes, make any new appointments, transfers or postings without the approval of the election commission.

தேர்தல்கள் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடுவதால் அரசாங்கம் புதிய திட்டங்கள் அறிவிப்பதை தடுக்கின்றது. மேலும் புதிய நியமனங்கள் மற்றும் பணியிட மாறுதல்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற வேண்டி  இருக்கிறது.

Disadvantages of the idea / குறைபாடுகள்

  • One fallout of implementing this is that a bigger ‘centralised’ agenda would overshadow the states and their regional issues. The current diffused system allows each state to push their individual agenda during state elections something that would be difficult to do in collective polls.
  • ஒரே தேர்தலை நடத்தும் போது மிகப்பெரிய மையப்படுத்தப்பட்ட தீர்மானங்கள் கொள்கைகள் மானிலங்கள் மற்றும் பிராந்திய பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளிவிடும். தற்போதைய நடைமுறை ஒவ்வொரு மானிலம் அதனுடைய தனிப்பட்ட தீர்மான ஆகியவற்றை தேர்தலின் போது வெளிப்படுத்த இயலும் ஆனால் கூட்டாக தேர்தல் நடத்தப்பட்டால் மானிலப் பிரச்சனைகள் கொள்கைகள் பின்னுக்கு தள்ளப்படும்
  • Separate state elections allow regional parties to attract voters in the gap between central polls since one would be voting separately for the Union and the state. Combining state and national polls gives an undue advantage to national parties (who can appeal on a pan-Indian scale) over state-level parties.
  • தனித்தனியே தேர்தல் நடத்தும் போது பிராந்தியக் கட்சிகள் வாக்காளர்களை சட்டப்பேரவை தேர்தலுக்கும் மக்களவைத் தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் கவர இயலும்ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால் இது தேசியக் கட்சிகளுக்கு சாதகமாக அமையக்கூடும்
  • While the theory of a unified election sounds elegant and straightforward, the framework still does not satisfactorily address what happens in situations necessitating fresh elections before the five-year term lapses like a hung assembly, or if the assembly is dissolved due to a no-confidence motion etc. This is almost inevitable and will break the system all over again.
  • ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிறப்பாக புலப்பட்டாலும் சில கேள்விகளுக்கு முழுமையாக விடையளிக்க இயலாததாக இருக்கிறது. இம்முறையில் ஏதேனும் சூழ் நிலையில் தேர்தல் புதிதாக நடத்த வாய்ப்பு ஏற்படுமானால் அதாவது சட்டப்பேரவையோ அல்லது மக்களவையோ ஐந்தாண்டு காலத்திற்கு முன்பே பெரும்பான்மையை இழந்தாலோ அல்லது நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்டாலோ பாதிக்கபடும்.இது மீண்டும் சீரான தேர்தல் நடைபெறுவதை தடுக்கும்
  • Of course, this reform is still far off since there are many gaps, which need to be addressed.
  • இந்தச் சீர்திருத்தம் பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்காமலே, பல்வேறு இடைவெளிகளுடனே இருக்கிறது இது தீர்க்க்கபட வேண்டும்

Steps Needs to be Taken

  • Strengthening of Election Commission Infrastructure
  • தேர்தல் ஆணைய உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்
  • Proper amendment in Voters and Electors rights
  • வாக்காளர், வேட்பாளர்களின் உரிமைகளில் உரிய திருத்தம் கொண்டு வருதல்.
  • Provide additional Power to Election Commission
  • தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பை நீட்டித்தல்
  • Extending more power to police
  • காவல்படையினருக்கான அதிகாரங்களை விரிவுபடுத்துதல்
  • To make amendment in Two Constituencies Nomination in Assembly as well as Lok sabha
  • ஒரே தருணத் தேர்தலில், ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிடல் என்பதில், நாடாளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி என்பது குறித்த சட்டத்திருத்தம் கொண்டுவருதல்
  • Proper Amendment in Anti defection law relating to Pre Post election defection of Candidates
  • கட்சித் தாவல் தடைச்சட்டம், அரசியல் கட்சிகளின் தேர்தலுக்கு முந்தையய மற்றும் தேர்தலுக்குப் பிந்திய கூட்டணி என்பன குறித்த திருத்தங்கள் கொண்டு வருதல்.
  • To find practical solution on Model code of Conduct, announcing  new schemes and  manifesto
  • தேர்தல் அறிவிக்கை, நலத்திடங்கள் அறிவித்தல், பிரசாரங்கள் குறித்த நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க வழிகாணுதல்

Conclusion

It to be feasible, we need a political consensus, which is not easy to achieve. There has to be a political willingness to discuss this issue before we talk of a consensus. It is good that Prime Minister Narendra Modi is talking about a consensus instead of forcibly pushing this plan through. His reasons for advocating simultaneous elections are exorbitant expenditure and the repeated dislocation of administrative machinery on election duty throughout the year. One, elections have unfortunately become the root cause of corruption. When we are in constant election mode, we are also in permanent corruption mode. When crores are spent in elections, crores have to be collected by hook or by crook.Communal riots and caste disturbances are deliberately created around election time to ensure polarisation of communities for electoral gains.

முடிவுரை

ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமானது தான் அதற்கு முன் அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும் ஆனால் அது அவ்வளது சுலபமானது அல்ல. அதே வேளையில் கருத்தொற்றுமை பற்றி பேசுவதற்கு முன்பே ஒரு அரசியல் உறுதித்தன்மை வேண்டும். பிரதமர் இதைப்பற்றி பேசுவது நன்றாக இருக்கிறது அதே வேளையில் இதைப்பற்றி கருத்தொற்றுமை ஏற்படுத்த முயலுகிறார் ஆனால் வலுக்கட்டாயமாக திணிக்க இயலவில்லை. ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவதை ஆதரிப்பதற்கு  அவர் சொல்வது அரசு நிர்வாகம் அடிக்கடி நடைபெறும் தேர்தலால் ஆண்டு முழுவதும் பாதிக்கப்படுகிறது.மேலும் தேர்தல்கள் ஊழலுக்கு அடிப்படையாகவும் அமைகிறது. எப்போது நாம் எப்போதும் தேர்தல் நிலையிலேயே இருப்பதால் கோடிகள் செலவழிக்கப்படுவதால் மீண்டும் அதனை பலவழிகளில் திரும்பபெறவே முயலுகின்றனர், இதுவும் ஊழலுக்கு வழிவகுக்கிறது. தேர்தலை மையமாக வைத்தே மதக்கலவரங்களும் மக்களை பிளவு படுத்துதலும் தேர்தல் ஆதாயத்திற்காவும் நடைபெறுகிறது.

India and South Korea agreements

India and South Korea signed 11 agreements, including in the areas of trade, cultural and scientific and technological cooperation

இந்தியாவிற்கும் தென்கொரியாவிற்கும் வர்த்தகம், கலாச்சாரம்,அறிவியல் தொழில் நுட்ப ஒப்பந்தம் என 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது

  • To facilitate ongoing negotiations on upgrading the India-RoK CEPA by identifying key areas for trade liberalization (including Shrimp, Molluscs and Processed Fish).
  • வர்த்தக தாராளமயமாக்கலுக்கான முக்கிய (இறால், சிற்பிகள், பதனிடப்பட்ட மீன் உள்ளிட்ட ) பகுதிகளை கண்டறிவதன் மூலம் இந்தியா, கொரிய குடியரசுக்கு இடையேயான சிஇபிஏ-யை மேம்படுத்துவது குறித்த தற்போது நடைபெற்று வரும் பேச்சுக்களுக்கு வசதி செய்து கொடுத்தல்
  • For cooperation in the area of trade remedies viz. anti-dumping, subsidy, countervailing and safeguard measures through consultations and exchange of information through establishment of a Cooperation Committee comprising government officials and domain experts.
  • வர்த்தக குறை தீர்ப்பு துறைகளில் ஒத்துழைப்புக்கானது. அதாவது ஆலோசனைகள், தகவல் பரிவர்த்தனை மற்றும் அரசு அதிகாரிகள், நிபுணர்கள் கொண்ட கூட்டுறவுக் குழுக்களை அமைப்பது ஆகியவற்றின் மூலமான பொருள் குவிப்பு எதிர்ப்பு, மானியங்கள், எதிர் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்.
  • For cooperation in development of cutting edge technologies for commercialization to reap benefits of the 4th Industrial revolution. Thrust areas include Internet of Things (IOT), Artificial Intelligence (AI), Big Data, Smart Factory, 3D Printing, Electric Vehicle, Advance Materials and affordable healthcare for the elderly and disabled.
  • 4-வது தொழில் புரட்சி பலன்களை பயன்படுத்தி முன்னோடித் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வர்த்தகப் படுத்துவதில் ஒத்துழைப்பு. இண்டர்நெட் ஆப் திங்ஸ், செயற்கை அறிவு, பிக் டேட்டா, ஸ்மார்ட் தொழிற்சாலைகள், 3டி பிரிண்டிங், மின்சார வாகனங்கள், வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோருக்கு குறைந்த விலை மருத்துவ பராமரிப்பு மற்றும் உயர்ரகப் பொருட்கள் வழங்குதல் ஆகியவை இதன் முன்னுரிமை விஷயங்களாகும்.
  • To deepen cultural and people-to-people relations by providing for institutionalized cooperation in fields of Music and Dance, Theatre, Art Exhibitions, Archives, Anthropology, Mass Media Programmes and Museum Exhibits.
  • பண்பாடு, இருநாட்டு மக்களிடையேயான தொடர்பு ஆகியவற்றை வலுப்படுத்துதல். இசை, நாட்டியம், நாடகம், கலை கண்காட்சிகள், ஆவணக் காப்பகங்கள், மனிதக்கூர் வரலாற்றியல், பொதுமக்கள் ஊடகத் திட்டங்கள், அருங்காட்சியக கண்காட்சிகள் ஆகியத் துறைகளில் நிறுவன ஒத்துழைப்புகளுக்கு வழிவகை செய்வதன் மூலம் இதனை நடைமுறைப்படுத்துதல்
  • For cooperation in scientific & technological research, including in areas of affordable water purification technologies, intelligent transport systems, new/ alternative materials, traditional and oriental medicines and technology packaging and commercialization.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு. குறைந்த விலை தண்ணீர் தூய்மைப்படுத்தும் தொழில்நுட்பங்கள், அறிவுசார் போக்குவரத்து அமைப்புகள், புதிய/ மாற்றுப் பொருட்கள், பாரம்பரிய மற்றும் கிழக்கத்திய மருந்துகள், தொழில்நுட்ப தொகுப்புகள் மற்றும் வர்த்தக மயமாக்குதல் உள்ளிட்ட துறைகளில் அறிவியல் ஆராய்ச்சி ஒத்துழைப்பு
  • For cooperation in railway research, exchange of railway related experience and development of railway industries. Both sides will explore planning and execution of joint research projects, including setting-up an advanced Railways R&D facility in India.
  • ரயில் ஆராய்ச்சி, ரயில்வே தொடர்பான அனுபவங்கள் பரிவர்த்தனை, ரயில்வே தொழிற்சாலைகள் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பு. இந்தியாவில் உயர்நிலை ரயில்வே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதியை அமைத்தல் உள்ளிட்ட கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்துவது குறித்து சாத்தியக்கூறுகளை இருதரப்பினரும் ஆராய்வார்கள்.
  • For cooperation in adoption of biotechnology and Bio Big-Data in health, medicine, Agro fishery products, digital healthcare, precision medicine, brain research, and next generation-medical equipment.
  • உயிரி தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம், மருத்துவம், வேளாண் மீன் வளப் பொருட்கள், டிஜிட்டல் சுகாதார சேவை, நுட்பமான மருந்து, மூளை ஆராய்ச்சி மற்றும் அடுத்த தலைமுறைக்கான மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றுக்கான உயிரி – பெரும் புள்ளி விவரத்தை பயன்படுத்த ஒத்துழைப்பு
  • For cooperation in development, modernization and expansion of state-of-the-art Telecommunication/ICT services and next generation Wireless Communication Networks such as 5G, Cloud Computing, Big Data, IOT, AI and their applications in services, disaster management, emergency response, and cyber security.
  • அதி நவீன தொலைத் தொடர்பு/ தகவல் தொடர்பு தொழில் நுட்ப சேவைகள் மற்றும் 5ஜி, கிளவுட் கம்ப்யூட்டிங், பெரும் புள்ளி விவரம்,  ஐ.ஓ.டி, ஏ.ஐ. போன்ற அடுத்த தலைமுறை கம்பியில்லா தொலைத் தொடர்பு சேவைகள் மற்றும் அவற்றின் பயன்பாடு, பேரிடர் மேலாண்மை, அவசர கால மீட்புப் பணி மற்றும் இணைய பாதுகாப்புத் துறைகளில் நவீன மயம், மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கான ஒத்துழைப்பு
  • For cooperation in the development of Micro, Small and Medium Enterprises in both countries and in improving their competitiveness in global markets. The two sides will also explore the possibility of establishing an India-RoK technology exchange centre.
  • இருநாடுகளிலும் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச சந்தையில் போட்டித் தன்மையை மேம்படுத்துதல். இந்தியா-கொரிய குடியரசில், தொழில்நுட்ப பரிமாற்ற மையத்தை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை இருதரப்பிலும் ஆய்வு செய்தல்.
  • To enhance industrial and investment relations between South Korean companies and the State of Gujarat through cooperation in areas of urban infrastructure, food processing, agriculture related industries, startup ecosystem, skill training and development and new & renewable energy. KOTRA shall open an office in Ahmedabad and will become one of the partner organizations for the Vibrant Gujarat Global Summit 2019.
  • நகர்ப்புற கட்டமைப்பு, உணவுப் பதப்படுத்துதல், வேளாண் சார்ந்த தொழில்கள், சுற்றுச் சூழலியல், திறன் பயிற்சி மற்றும் வளர்ச்சி மற்றும் புதிய& புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் குஜராத் அரசு, தென் கொரிய நிறுவனங்களிடையேயான தொழில் மற்றும் முதலீட்டு உறவுகளை அதிகரிப்பதில் ஒத்துழைப்பு. கோத்ரா நிறுவனம் அகமதாபாத்தில் ஒரு அலுவலகத்தை அமைப்பதன் மூலம், வலிமையான குஜராத் சர்வதேச மாநாடு 2019-ல் ஒரு பங்குதாரர் அமைப்பாக மாறுதல்.
  • To facilitate upgradation and expansion of the existing monument commemorating Princess Suriratna (Queen Hur Hwang-ok), a legendary Princess of Ayodhya, who went to Korea in AD 48 and married King Kim-Suro. A large number of Koreans trace their ancestry to this legendary princess. The new monument will be a tribute to the shared cultural heritage and long-lasting friendship between India and RoK.
  • கி.பி. 48 ஆம் ஆண்டில் கொரிய சென்று, அந்நாட்டு மன்னர் கிம் சூரோவை திருமணம் செய்து கொண்ட (ஹர் ஹ்வாங் – ஓக் அரசி)  அயோத்தியா இளவரசி சூரிரத்னா நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை மேம்படுத்தி விரிவுப்படுத்துவதில் ஒத்துழைத்தல்.  பழம்பெரும் இளவரசியின் மூதாதையர்களை ஏராளமான கொரிய மக்கள் தேடி வருகின்றனர்.  இந்தியா-கொரியா குடியரசு இடையிலான கலாச்சார பாரம்பரியம் மற்றும் நீண்டகால நட்புறவின் அடையாளச் சின்னமாக புதிய நினைவுச் சின்னம் அமையும்.

 

TNPSC GROUP I & II PRELIMS &  MAINS ADMISSION OPEN

  1. TEST BATCH / ONLINE POSTAL
  2. CLASSES / CLASSROOM COACHING  / ONLINE COACHING

TO JOIN CONTACT 9952521550

To get Daily Current Affairs Whatsapp with your name and District to 7418521550

For Group I & II Mains Answer writing practice send your details with languages to 044-48601550 via whatsapp.

 

Add a Comment

You must be logged in to post a comment

Shopping Basket
error: Content is protected !!