TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 1 முதல் 3 வரை 2018| அசாம் ஒப்பந்தம் | சத்தியேந்திர நாத் போஸ்| தமிழ்நாடு மின்னாளுகை கொள்கை

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 1 முதல் 3 வரை 2018| அசாம் ஒப்பந்தம் | சத்தியேந்திர நாத் போஸ்| தமிழ்நாடு மின்னாளுகை கொள்கை

 • அதிக அளவில் நிலுவையாக உள்ள ஆவணங்களைத் தீர்வு செய்யும் நோக்குடன், பொது மக்களும் தங்களது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை விரைவாகத் திரும்பப் பெறவும், இத்தகைய ஆவணங்களில் முடங்கியுள்ள அரசு வருவாயை வசூலிக்கவும் ஏதுவாக, பதிவுத் துறையில் 3.1.2018 முதல் சமாதானத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

 • முதலமைச்சர் பழனிச்சாமி மின்னாளுமைக் கொள்கை 2017 (e-Governance Policy 2017 ) வெளியிட, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

சிறப்பு அம்சங்கள்

 • மின்னாளுமைக் கொள்கை, 2023-ஆம் ஆண்டுக்குள் அரசின் சேவைகள் அனைத்தையும் இணையத்தின் வாயிலாக வழங்குதல்

 • பொது சேவை மையங்கள் மற்றும் கைபேசி செயலிகள் மூலம் அரசின் சேவைகளை பொதுமக்கள் பெற வழிவகை செய்தல்

 • அரசின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை அதிகரித்தல் ஆகியவற்றை தொலைநோக்குப் பார்வையாகக் கொண்டுள்ளது.

 • அரசுத் துறைகளின் மின்னாளுமை சிறப்பு முயற்சிகளுக்கென ((e-Governance Initiatives) தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள விரிவான தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பினை (Comprehensive IT Infrastructure) சீரான முறையில் பயன்படுத்திட வழிகாட்டுதலையும் வழங்கும்.

 • இதன் மூலம் அரசுத் துறைகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான அரசின் சேவைகள் தங்குதடையின்றி மின்னணு முறையில் வழங்கிட இயலும்.

 • மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள தர நிலைகள் மற்றும் கொள்கைகளை (National Standards and Policies) உள்ளீடாகக் கொண்டுள்ள இம்மின்னாளுமைக் கொள்கை, மின்னாளுமையில் மீத்தரவுகளுக்கான (Metadata) தரநிலைகள், திறந்தநிலை மென்பொருள்கள் (Open Source Software) பயன்பாடு மற்றும் தமிழ்க் கணினிப் பயன்பாட்டுத் தரநிலைகள் (Tamil Computing Standards), கணினி-மென்பொருள்-தரவு ஆகியவற்றிற்கு இடையேயான பொதுவான கட்டமைப்பு (Framework), தரநிலைகள் (Standards), பெயர்வுத்திறன் (Portability), இயங்குதன்மை (Inter-operability) ஆகியவற்றை உறுதிசெய்யும்.

 • சித்திரவீனா ரவிச்சந்திரன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான சங்கீத கலா நிதி விருதினை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கினார்கள்

 • தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு ஆணையத்தின் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பி.ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 • இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலாளராக விஜய் கோகலேவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் இவர் பதவியேற்பார்

 • நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கூரைமேல் சூரிய மின்சக்தி நிலையத்தை கெயில் நிறுவனம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.

 • அசாம் தேசிய மக்கள் பதிவேட்டின் முதல் வரைவை இந்திய ரிஜிஸ்டர் வெளியிட்டுள்ளார். இதன்படி 1971, மார்ச், 24 க்கு முன்னர் பங்களாதேஸிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்

கூடுதல் தகவல்கள்

அசாம் ஒப்பந்தம்

1980 களில் அசாம் மானிலத்தில் அசாம் அனைத்து மானவர்கள் இயக்கம் மற்றும் பிற இயக்கங்கள் பங்களாதேசிலிருந்து குடிபெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்க கூடாது என பல்வேறு தீவிரவாத போராட்டங்கள் நடைபெற்றது . இதனை முன்னிட்டு 1985 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் அசாம் அனைத்து மாணவர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி  1971-க்குப் பிறகு இடம்பெயர்ந்த எவருக்கும் குடியுரிமை வழங்கக் கூடாது என்கிறது அசாம் ஒப்பந்தம்.

2016 ஆம் ஆண்டு அசாமில் இருக்கும் இடம் பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்பில் புதிதாக சரத்து 6A என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 திருத்தப்பட்டுள்ளது.

தற்போது ஏன் செய்தியில் ?

இந்த ஒப்பந்தம் 2005 ஆம் ஆண்டு வரையில் ஏதும் செய்யப்படவில்லை ஆனால் 2005இல் அப்போதைய மத்திய அரசிற்கும் அசாம் மானில் அரசிற்கும் இடையே அசாம் தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் படி குடியுரிமை வழங்கபடவும் கணக்கெடுப்பு நடைபெற்றது ஆயினும் பாதியிலே இது நின்று விட்டது இதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு அசாமில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனம் இதனை முறையாக செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது. இதன்படி இப்போது அசாம் தேசிய மக்கள் தொகை பதிவேடு வெளியிடப்பட்டிருக்கிறது.

 • கூகுளின் புதிய செயற்கை நுண்ணறிவின் மூலம் வாய்மொழியினை எழுத்தாக்கும் “Tacotron 2 , எனும் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 • இயற்பியல் விஞ்ஞாணி சத்யேந்திர நாஸ் போஸின் 125 ஆவது பிறந்த நாளை இந்த ஆண்டுமுழுவதும் கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி துவக்கிவைத்தார்.

சத்தியேந்திர நாத் போஸ்

 • கொல்கத்தாவில் பிறந்த இயற்பியல் விஞ்ஞானி சத்தியேந்திர நாத் போஸ் துகள் இயந்திரவியல் துறையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் இனைந்து பணியாற்றினார்

 • போஸ் ஐன்ஸ்டீனின் நிலை  எனப்படுவது என்னவெனில் அதிக குளீருட்டப்பட்ட பருப்பொருளின் ஐந்தாவது நிலையை குறிப்பதாகும்.

 • 2012 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஹிக்ஸ் – போஸான் அல்லது கடவுள் துகள் என அழைக்கப்பட்ட அந்த பெயரின் இறுதியில் போஸான் என்ற பெயர் சத்தியேந்திர நாத் போஸ் குவாண்டம் கொள்கையில் அவரது ஆராய்ச்சிகள் இத்துகள் கண்டுபிடிப்புக்கு உதவியதற்காக போஸான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முன்னாள் உள்ள ஹிக்ஸ் என்பது மற்றொரு அறிவியலாளரின் பெயர் ஆகும்.

 

Add a Comment

You must be logged in to post a comment

Shopping Basket
error: Content is protected !!