நடப்பு நிகழ்வுகள் நவம்பர் -1
- சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் அகழாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் தமிழர்களின் பண்பாட்டையும், தொன்மையையும் எடுத்துக் காட்டுவதாக தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்தார்.
- எளிதில் வர்த்தகம் செய்வதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா 100-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த அறிக்கையை ஆண்டுதோறும் உலக வங்கி வெளியிடுவது குறிப்ப்டத்தக்கது.
- கர்நாடகத்தின் முதல் பெண் டி.ஜி.பி.யாக நீலமணி என்.ராஜு பதவியேற்றார்.
- இந்திரா காந்தி தேசிய அமைதி விருது 2017 ஆம் ஆண்டிற்கு இசைக்கலைஞ்ர் . டி எ.ம் கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டது.
கூடுதல் தகவல்கள்
- காங்கிரஸ் கட்சியால் இவ்விருது வழங்கப்படுகிறது
- தேசிய ஒருங்கிணைப்பு , கலாச்சரம் ,பண்பாடு , கல்வி , சமூகம், சமூகசேவை, பத்திரிக்கை போன்ற துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இவ்விருது வழங்கப்படும்
- 5 லட்ச ரூபாய் மற்றும் சான்றிதழ் இந்திரா காந்தி இறந்த தினமான அக்டோபர் 31 ஆம் தேதி வழங்கப்படும்
- 1985 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது
- இந்திய விமானப்படை வீரர்கள் நீலக்கொடி -2017 இராணுவ ஒத்திகையில் பங்கேற்க இஸ்ரேல் சென்றுள்ளனர்.இவ்வொத்திகை ஆண்டுதோறும் இஸ்ரேல் விமானப்படையால் நடத்தப்படுகிறது. இந்தியா கலந்துகொள்வது இதுவே முதல்முறை.
- 7வது ஆசிய ஆற்றல் வட்டமேசை மானாட்டில் கலந்து கொள்ள தாய்லாந்து தலைனகர் பேங்காங் சென்றார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
- நாட்டிலேயே முதன்முறையாக பெங்களூரு பிரிகேட் சாலையில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பெண்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
- பூட்டானிய அரசர் ஜிக்மி கேசர் நாம்கெயல் வாங்சக், அரசி ஜெட்சன் பேமா வாங்சக், இளவரசர் ஜிக்மி நாம்கெயல் வாங்சக் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர்.
பூட்டான் பற்றிய அடிப்படைத் தகவல்கள்
- தெற்காசியாவில் முழுவதும் நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ள நாடு
- தெற்காசியாவில் மாலத்தீவுக்கு அடுத்தபடியாக குறைந்த அளவு மக்கள் தொகையை கொண்டுள்ளது
- பூட்டான் தலைனகரம் ; திம்பு , இதன் பாரளமன்றம் ஷொட்கு (Tshogdu) என அழைக்கப்படுகிறது.
- காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கப் பதக்கம் வென்றார்.
- டி 20 பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
- மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்.