நடப்பு நிகழ்வுகள் மார்ச்-15-2016- சன்சத் கிராம ஆதர்ஷ் யோஜனா-அக்னி தகவல்கள் pdf

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-15-2016- சன்சத் கிராம ஆதர்ஷ் யோஜனா-அக்னி தகவல்கள்
v தேர்தல் நடவடிக்கைகள் முடிவடையும் வரை செயல்படும் வகையில், தமிழகம் முழுவதும் 363 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
v இலங்கைச் சிறையிலுள்ள 96 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இறையாண்மைக்குள்பட்ட கச்சத்தீவை மீண்டும் பெறுவது என்ற நிலைப்பாடே இந்தச் சிக்கலான பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண ஒரேவழி என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியா-இலங்கை இடையேயான சர்வதேச கடல் எல்லை என்பது உச்ச நீதிமன்றத்தின் விசாரணையின்கீழ் நிலுவையில் உள்ளது. 1974, 1976-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உடன்பாடுகளின் அரசியல் சாசன செல்லத்தக்கத் தன்மையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. என்று கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
v அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வியில் சமூக அடிப்படையிலும், ஜாதி ரீதியிலும் வழங்கப்படும் தற்போதைய இட ஒதுக்கீடு முறை தொடரும்; அந்த இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்யும் கேள்விக்கே இடமில்லைஎன்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
v திருமலையில் ஆயிரங்கால் மண்டபம் கட்ட ஹைதராபாத் உயர் நீதிமன்றம் மீண்டும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயில் எதிரில் 14-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் இருந்தது. இங்கு தேவஸ்தானத்தின் அருங்காட்சியகம் செயல்பட்டு வந்தது.   2003-ஆம் ஆண்டு தேவஸ்தானம், திருமலை வளர்ச்சிப் பணி திட்டத்தின் கீழ் இந்த ஆயிரங்கால் மண்டபத்தை அகற்றியது. 
v கல்லூரிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக, ‘know your college’ என்ற பெயரில் இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தில், குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, கல்லூரிகளில் வசதிகள் இல்லையெனில், அந்த இணையதளம் வாயிலாகப் புகார் கொடுக்கலாம் என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
v ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சர்மா, மாநிலங்களவை உறுப்பினராக திங்கள்கிழமை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 
v நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதிரி கிராமம் திட்டத்துக்கு (சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜ்னா) நிதி எங்கிருந்து, எப்படி வரும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.
கூடுதல் தகவல்
ü திட்டம் அக்டோபர் 11-2014 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
ü காத்மா காந்தியின் இந்த விரிவான மற்றும் இயல்பான தொலைநோக்கு பார்வை. தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில்கொண்டு, உண்மையானதாக மாற்றுவதே சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா (SAGY)-ன் குறிக்கோளாகும்.
ü மக்களவை உறுப்பினர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்தும், மாநிலங்களவை உறுப்பினர்கள் அவர்கள் தேர்வு செய்யப்பட்ட மாநிலத்தில் விரும்பிய மாவட்டத்தில் உள்ள கிராமத்தைப்க் தேர்வு செய்து திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
ü இதில் முதல் கட்டமாக, ஒரு மாதிரி கிராமத்தை 2016-ஆம் ஆண்டுக்குள்ளும், இரண்டாம் கட்டமாக இரு மாதிரி கிராமங்களை 2019-ஆம் ஆண்டுக்குள்ளும் உருவாக்க வேண்டும். இதன் பிறகு 2024-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஒரு மாதிரி கிராமம் திட்டத்தை எம்.பி.க்கள் செயல்படுத்த வேண்டும்
ü இதன்படி மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தலா ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அங்கே அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் பெண்கள், முதியோர், குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்ட திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். மக்கள் பங்கேற்பை அதன் முடிவாக ஏற்றுக்கொள்ளுதல் கிராம வாழ்க்கை தொடர்பான முடிவு எடுத்தலில் சமூகத்தின் அனைத்து பிரிவனரும் ஈடுபடுவதை உறுதி செய்தல்.
ü அண்டியோத்யா பின்பற்றுதல் கிராமத்தில் உள்ள மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் நலிந்த நபர்நல்வாழ்டைவதற்கு உதவி செய்தல்.
ü பாலீன சமத்துவத்தை உறுதிசெய்தல் மற்றும் பெண்களுக்கு மரியாதை தருதலை உறுதி செய்தல்.
ü சமூகநிதிக்கு உத்தரவாதமளித்தல்
ü தொழில் கண்ணியம் மற்றும் சமுதாய உணர்வு மற்றும் தன்னார்வத் தொண்டு குறித்து புகட்டுதல்.
ü சுத்தமாக இருக்கும் பண்பாட்டை வளர்த்தல்.
ü வளர்ச்சி மற்றும் சூழலியலுக்கு இடையே சமச்சீர் நிலையை உறுதிசெய்து இயற்கையோடு இணைந்து வாழ்க்கை நடத்துதல்.
ü உள்ளுர் பண்பாட்டு பாரம்பரியத்தை பாதுகாத்து வளர்த்தல்
ü பரஸ்பர ஒத்துழைப்பு சுய உதவி மற்றும் தற்சார்பு குறித்து புகட்டுதல்
ü கிராம சமுதாயத்திடையே அமைதி மற்றும் நல்லிணக்கம் வளர்த்தல்.
ü பொது வாழ்க்கையில் ஒளிமறைவற்ற வெளிப்படைத்தன்மை, கடமைப் பொறுப்பு மற்றும் நேர்மையை கொண்டு வருதல்.
ü சுய உள்ளாட்சியை வளர்த்தல்
ü இந்திய அரசியலைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படைக் கடமைகளில் வகைசெய்ய மதிப்பீடுகளை பின்பற்றுதல்
v இடைக்கால இந்தியாவில் ஆட்சி செய்த, பாதாமி சாளுக்கியர்கள்,தேவகிரியை ஆட்சி செய்த யாதவர்கள், ஆரவீடு வம்சத்தைச் சேர்ந்த ஆட்சிக் காலத்தைச் சார்ந்த செம்புத் தகடுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
ü சித்தரிக்கும் பன்றி- சாளுக்கியர்கள்
ü கழுகு வடிவம்-யாதவர்கள்
v அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று, 700 கி.மீ. –1,250 கி.மீ.க்கு இடைப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறன்கொண்ட அக்னி-1 ஏவுகணை சோதனை, ஒடிஸா கடற்கரைப் பகுதியான பாலாசோரில் திங்கள்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணை ஏற்கெனவே, பலமுறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட பின்னர், கடந்த 2004ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. 12,000 கிலோ எடையும், 15 மீட்டர் நீளமும் கொண்ட இந்த ஏவுகணை, 1,000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று, எதிரிகளின் இலக்கை துல்லியமாகத் தாக்கவல்லது. 
கூடுதல் தக்வல்

ü அக்னி -1 –முதன்முறையாக 1989ல் பரிசோனை செய்யப்பட்டது, 700-கி.மீ இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
ü அக்னி -2 – முதன்முறையாக 1999ல் சோதனை செய்யப் பட்டது. 2000-கி.மீ இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது
ü அக்னி- 3 – முதன்முறையாக 2006 ல் சோதனை செய்யப் பட்டது. 2500க்கு மேல்-கி.மீ இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது
ü அக்னி-4 – 4000-கி.மீ இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது
ü அக்னி-5 – 5000 கி.மீ இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது
ü அக்னி ஏவுகனைத் திட்ட்த்தை பாதுகாப்பு மேம்பாட்டு ஆய்வு நிறுவனம்  (DRDO) செயல்படுத்துகிறது.
v இந்தியா மற்றும் இந்தோனேசியா இனைந்து நடத்தும் கருடா சக்தி, ராணுவ ஒத்திகை மேகலாங், இந்தேனேசியாவில் நடைபெற்றது
v இஷ்ரத் ஜஹான் வழக்கில், மாயமான ஆவணங்களைக் கண்டுபிடிப்பதற்காக, கூடுதல் செயலர் பி.கே.பிரசாத் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
v கோவாவில் வரும் 28ஆம் தேதி தொடங்கவுள்ள, சர்வதேச ராணுவத் தளவாடங்கள் கண்காட்சியில் (டிஃப்எக்ஸ்போ இந்தியா 2016) பங்கேற்க அமெரிக்கா, ரஷியா, கொரியா உள்ளிட்ட 46 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன. 2014ஆம் ஆண்டு பிப்ரவரியில், தில்லியில் நடைபெற்றது.
v இந்தியத் தர நிர்ணய ஆணையச் சட்ட மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கூடுதல் தகவல்
ü இந்திய தர நிர்ணய ஆணையம் 1986, நவம்பர் 26 ஆம் தேதி பாரளமன்றத்தால் சட்டம் இயற்றப் பட்டு நடைமுறைக்கு வந்த்து.
ü இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தர நிர்ணயம் , சான்றிதழ் வழங்குவது இதன் பணி.
v சென்னை மௌலிவாக்கம் கட்டட விபத்தையடுத்து, அருகில் இருந்த இரண்டாவது கட்டடத்தை இடிக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மார்ச் 18-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இக்கட்டட விபத்து பற்றி விசாரணை செய்வதற்கு ஒய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது
v சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை, ஜெனீவாவில் திங்கள்கிழமை தொடங்கியது என சிரியா விவகாரங்களுக்கான ஐ.நா. தூதர் ஸ்டெஃபான் மிஸ்துரா திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
v தெற்காசிய நாடுகளை உறுப்பினராகக் கொண்டுள்ள சார்க் கூட்டமைப்பு நேபாளத்தில்  நேற்று தொடங்கியது.
கூடுதல் தகவல்கள்
ü தெற்காசிய நாடுகளிடையேயான ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் 1940-களிலேயே தொடங்கிவிட்டது. ஏப்ரல் 1947-ல், டெல்லியில் நடந்த ஆசிய நாடுகளுக்கிடையேயான உறவு தொடர்பான மாநாடு, 1950-ல் பிலிப்பைன்ஸில் நடந்த பாகியோ மாநாடு, 1954-ல் இலங்கையில் நடந்த கொழும்பு அதிகாரங்கள் மாநாடு ஆகிய மாநாடுகளில் இதற்கான யோசனைகள் விவாதிக்கப்பட்டன.
ü 1970-களின் இறுதியில் ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள், தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதின் அவசியத்தை வலியுறுத்தின. பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் கூட்டாகச் செயல்படுவது உள்ளிட்ட யோசனைகளை அந்த நாடுகள் முன்வைத்தன. 1981-ல் இலங்கையில் நடைபெற்ற கூட்டத்தில் வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட 6 நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு இதுபற்றி விவாதித்தார்கள்.
ü 1983-ல் டெல்லியில் இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாட்டில், சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த இறுதிமுடிவு எடுக்கப்பட்டது. 1985 டிசம்பர் 8-ல் டாக்காவில் சார்க் அமைப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். தெற்காசியாவின் 8 நாடுகள் இவ்வமைப்பில் முழுமையான அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இவ்வமைப்பு  இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2007 இல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14வது உச்சி மாநாட்டில்ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.
ü தலைமையகம் –  நேபாள், தலை நகர் , காட்மாண்டு
ü முதல் மாநாடு வங்காளதேச தலைனகர் டாக்காவில் நடைபெற்றது
ü இதனை உருவாக்குவதற்கு முஜிபுர் ரஹ்மான் முயற்சி மேற்கொண்டார்.
ü இதனுடைய இரண்டாவது மாநாடு, 1986 பெங்களூரில் நடைபெற்றது.
ü 1995 புது தில்லியில் 8வது மாநாடு நடைபெற்றது.
ü 2007ல் புது தில்லியில் 14வது மாநாடு நடைபெற்றது.
ü 1999 சார்க் பல்லுரியின ஆண்டு
ü 2006 -2015ல் வறுமை ஒழிப்புக்கான பத்தாண்டு.
ü சார்க் பேரிடர் மேலாண்மை மையம் புது தில்லியில் அமைந்துள்ளது.
v இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா தொடர்ந்து 3-ஆவது ஆண்டாக ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ விருதைப் பெற்றுள்ளார்.
நுகர்வோர் தினம்
v ன்று உலக நுகர்வோர் உரிமை தினமாக அனுஷ்டிக்கப் படுகிறது. ஒவ்வோரு வருஷமும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமை தினமாகும்.

1960 ஆம் ஆண்டில் லண்டனை மையமாகக் கொண்டு சர்வதேச
 நுகர்வோர் Consumers International (CI)எனும் அமைப்பு  ஆரம்பிக்கப் பட்டது. இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்ற நாடுகள் இணைந்து நுகர்வோர் உரிமைக்கு வலுவான அடித்தளமிட்டன.  1962 ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி, அமெரிக்க காங்கிரஸில் (நம் நாடாளுமன்றம் போன்றது) நுகர்வோர் உரிமை பற்றிப் பேசினார். அவர்தாம் நுகர்வோர் உரிமைகளுக்கு வழி வகுத்த முனோடியவார்.நுகர்வோர் பாதுகாப்புக்காக ஐக்கியநாடுகள் சபை வழிகாட்டுச் சட்டங்களை U N Guide lines for Consume Protection (UNGCP) வகுத்துள்ளது. 1985 ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையால் இது ஏற்றுக்கொள்ளப் பட்டது. அதன் பிறகு உலகில் ஏற்பட்ட டெக்னாலஜி முன்னேற்றங்களையும் கருத்தில் கொண்டு 1999 ஆம் ஆண்டு, மேம்படுத்தப் பட்ட புதிய சட்ட விதிகள் உருவாக்கப் பட்டன.
ü  நுகர்வோர் இயக்கத்தின் தந்தை ரால்ப் ராடார்.
ü நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்டது
ü தேசிய நுகர்வோர் தினம் டிசம்பர் 24 கொண்டாடப் படுகிறது.

Add a Comment

You must be logged in to post a comment

Shopping Basket
error: Content is protected !!