நடப்பு நிகழ்வுகள் மார்ச்-11-14 ,2016 ஆதார் திட்டம்
v அரசியலில் பெண்கள் அதிகாரமுள்ளவர்களாக பரிணமிக்க வேண்டும் என்று தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் தெரிவித்தார்.
v பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடப் பரப்பளவு குறித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. முன்னாள் துணைவேந்தர் சிட்டிபாபு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்று, தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகளை வகுத்து 2004-ஆம் ஆண்டு ஜூலை 21-இல் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதில், மாநகராட்சி, மாவட்ட தலைநகரம், நகராட்சி, பேரூராட்சி, கிராமம் என 5 வகைகளாகப் பிரித்து, அதற்கு உள்பட்ட இடங்களில் இயங்கும் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இட பரப்பளவு விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
v தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்ட மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலம் முறையீட்டாளர்களுக்கு, சுமார் ரூ.138.94 கோடி தீர்வுத் தொகை பெற்றுத் தரப்பட்டது.
v விடுதலைப் போராட்ட வரலாற்றிலும், திருநெல்வேலி வரலாற்றிலும் முக்கிய இடம் பிடித்த “திருநெல்வேலி கலகம்‘ பிறந்த நாள் (மார்ச் 13), அரசு விழாவாக அங்கீகாரம் கிடைக்கப் பெறாமலேயே ஆண்டுகளைக் கடந்த வண்ணம் உள்ளது
விடுதலைப் போராட்ட வரலாற்றில் திருநெல்வேலி மாவட்டம் குறிப்பிடும்படியான பங்களிப்பை அளித்துள்ளது. பூலித்தேவன், கட்டபொம்மன், சுந்தரலிங்கம், பாரதியார், வ.உ.சி, வாஞ்சிநாதன் ஆகியோர் வித்திட்ட நாட்டுப்பற்று உணர்வால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு, எழுச்சி ஏற்பட்டது. 1906-இல் தூத்துக்குடி, கொழும்பு துறைமுகங்களுக்கு இடையே வாடகைக் கப்பல்களை இயக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கப்பட்டது. இந்த கம்பெனிக்கு நிதி திரட்ட வ.உ.சி உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தனர். 1908-இல் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் பங்கேற்ற சுதேசி இயக்க பிரசாரக் கூட்டங்கள் திருநெல்வேலி, தூத்துக்குடியில் நடைபெற்றன. அன்னிய நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆங்கிலேயர்களை எதிர்த்து சிறை சென்ற விபின் சந்திரபால் விடுதலை பெற்ற நாளான 1908-ஆம் ஆண்டு, மார்ச் 8-ஆம் தேதியை, சுயராஜ்ய நாளாக விடுதலைப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர். இதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாமிரவருணி ஆற்றின் தைப்பூச மண்டபத்தில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோர் எழுச்சி உரையாற்றினர். தூத்துக்குடியில் விபின் சந்திரபால் விடுதலை விழாவைக் கொண்டாடிவிட்டு திருநெல்வேலிக்கு திரும்பிய வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் 1908-ஆம் ஆண்டு, மார்ச் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு “திருநெல்வேலி கலகம்‘ எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்த வழக்கில் வ.உ.சி.க்கு 40 ஆண்டுகளும், சுப்பிரமணிய சிவாவுக்கு 10 ஆண்டுகளும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
v நாட்டின் முதல் நிலநடுக்க எச்சரிக்கை, பாதுகாப்பு சாதனம் சென்னையில் அண்மையில் பரிசோதிக்கப்பட்டது. ஹரியானா மாநில அரசின் வழிகாட்டுதலின்படி “டெரா டெக்காம் பி.லிட்‘. நிறுவனம், ஜெர்மனியின் “செக்டி எலக்ட்ரானிக்ஸ் ஜி.எம்.பி.ஹெச்‘ நிறுவனத்துடன் இணைந்து அவசரகால நிலநடுக்க எச்சரிக்கை, பாதுகாப்பு சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக, இந்த நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பு, சண்டிகரில் உள்ள, ஹரியானா அரசின் துணைத் தலைமை செயலகத்தில், மார்ச் 14-இல் நிர்மாணிக்கப்படவுள்ளது. உலக அளவில் நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கை செய்வதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளையும், வேகத்தையும் முடுக்கத்தையும் சாதனம் கணிக்கும். 25 நாடுகளில் பொருத்தப்பட்டுள்ள இந்தச் சாதனம், நிலநடுக்கத்தின் ஆரம்ப கட்ட அலைகளை மிகத் துல்லியமாகக் கணித்து எச்சரிக்கை கொடுக்கும்.
v தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக சிறைக் கைதிகளும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்காணி கூறினார்.
v உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் 150-ஆவது ஆண்டு விழாவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பேசினார்.
v மருந்துகளின் பாதுகாப்பையும், அவற்றின் பலனையும் உறுதிசெய்யும் வகையில் அளவுக் கட்டுப்பாடு செய்யப்பட்ட கூட்டு மருந்துகளான (எஃப்டிசி – ஃபிக்ஸ்டு டிரக் காம்பினேஷன்) பென்ஸிடில், கோரஸ் உள்ளிட்ட 350 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அரசு தடைவித்துள்ளது.
v மத்திய, மாநில அமைச்சர்களும் தகவல் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின்படி பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள் என்று மத்திய தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
v நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு திங்கள்கிழமை ஆலோசனை நடத்துகிறது. அனைத்துக் கட்சிகளிடமும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் வகையில், பாஜக எம்.பி. எஸ்.எஸ்.அலுவாலியா தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது
v நக்ஸலைட் தீவிரவாதிகள் நடத்தி வரும் நீதிமன்றங்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 53 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் ஜன் அதாலத் என்ற பெயரில் நக்ஸலைட்டுகள் நடத்தி வரும் நீதிமன்றங்கள் மூலம் 18 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில், இதுபோன்று 15 பேருக்கும், கடந்த 2013ஆம் ஆண்டில் 20 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
v தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தனது 31வது ஆண்டு துவக்க விழாவைக் கொண்டாடியது, வாகன் சம்ன்வய ‘Vahan Samanvaya’ என்ற செயலியையும் அறிமுகப் படுத்தியது, தேசிய குற்றவியல் ஆவன காப்பகம் 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
v உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 22 ஆவது இடம் பெற்றுள்ளது. இதில் மொத்தம் 60 நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டது.
v தில்லியில் இந்தியா மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) சார்பில், “முன்னேறுகிறது ஆசியா‘ என்ற தலைப்பிலான மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. உலக அளவில் இந்தியா வேகமாக பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடாக உள்ளது. முதலீட்டுக்கு உகந்த இடங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சர்வதேச செலாவணி நிதியத்தின் மேலாண்மை இயக்குநர் கிறிஸ்டின் லார்கேட் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
ü சர்வதேச செலாவணி நிதியத்தில் இந்தியாவின் பங்கு 2.44 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ü வாக்குரிமைப் பங்கும், 2.34 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ü பிரிக் அமைப்பில் இருக்கும் பிரேசில், சீனா, இந்தியா, ரஷியா ஆகிய 4 நாடுகளும், சர்வதேச செலாவணி நிதியத்தின் முதல் 10 நாடுகள் வரிசையில் முதல்முறையாக இடம்பிடித்துள்ளன.
ü சர்வதேச நிதியம் 1945 ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது.
ஆதார் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது
கூடுதல் தகவல்கள்
ஆதார் அட்டை
இந்தியாவில் ஆதார் அட்டை வழங்கப்படுவதன் நோக்கமே இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தனித்தனி அடையாள எண் வழங்கி அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைப்பதை உறுதி செய்வதிற்காகத் தான்.மக்களுக்கு பல்வேறு சலுகைகள் எளிதாக கிடைக்கும் வகையிலும் அதற்கான திட்டங்களை அரசு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தும் வகையில்தான் இத்திட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது, எ.கா சமையல் எரிவாவுக்கான மானியம் வழங்குதல், போன்றவை
இத்திட்ட்த்தை செயல்படுத்துவதற்காக ஆதார் ஆணையம் 28,ஜனவரி 2009 ல் அமைக்கப்பட்டது. இவ்வாணையத்தின் முதல் தலைவராக திரு நந்தன் நில்கேனி நியமிக்கப் பட்டார். இவ்வாணையம் திட்டக் குழுவால் அமைக்கப் பட்டது.60 கோடிப்பேருக்கு ஆதார் அட்டை வழங்கும் பணியை செய்கிற்து.
ü மீதி 60 கோடி மக்களுக்கு தேசிய மக்கள் தொகை ஆணையம் இப்பணியை மெற்கொள்கிறது.
ü ஆகஸ்ட் 2009 ஆம் ஆண்டு மஹாரஸ்ட்ரா மாநிலம் தெம்ளி என்ற கிராமத்தில் முதன் முறையாக ஆதார் அட்டை வழங்கப் பட்டது
ü ஆதார் அட்டை வாங்குவது கட்டாயமல்ல விருப்பத்தின் பேரில் வாங்கலாம்.
ü கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அரசின் பயன்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமல்ல என்று கூறியது.
சிறப்பம்சங்க்ள்
v இது 12 தனித்துவ எண்ணைக் கொண்டது
v பயனாளிகளின் கருவிழி மற்றும் கை ரேகைகளை பதிவு செய்கிறது.
v முகவரி போன்ற அடிப்படை தகவல்களை பதிவு செய்ய்படுகிறது
பயன்பாடுகள்
ü திட்டத்திற்கான பயனாளிகளை அடையாளம் கானுதல்
ü சமூக நலத்திட்ட்த்திற்கு தகவல்களை பயன்படுத்துதல்
ü விரைவான சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல்
ü கணக்கெடுப்பு போன்ற வகைகளுக்கு பயன்படுத்துதல்
ü போலியான பயனாளிகளைக் கண்டறிதல்
ü இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையாக இருக்கும்.
ü ஆதார் அட்டை என்பது ,இந்தியாவில் வசிக்கிறார் என்பதற்கான சான்று மட்டுமே ஆகும், இது குடியிரிமைக்கான அட்டை ஆகாது
ü கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஜாம் ( JAM , JanDan, Adhar,Mobile) என்ற திட்டம் கொண்டுவரப்பட்டு பயனாளிகளை முறையாக அடையாளம் கானத் துவங்கினர்.
ü இதன்மூலம் சமீபத்தில் நடந்த சென்னை வெள்ளப் பெருக்கின் போது நிவாரணம் உடனடியாக வழங்குவதற்கு உதவியது.
v ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் “வாழும் கலை‘ அமைப்பு சார்பில், தில்லியில் யமுனை நதியோரச் சமவெளியில் “உலகக் கலாசாரத் திருவிழா‘ வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
v நீதிமன்றங்களுக்கு சட்டமியற்றும் அதிகாரமோ அல்லது சட்டமியற்றும்படி ஆட்சியிலிருப்போருக்கு உத்தரவிடும் அதிகாரமோ கிடையாது” என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
v குஜராத் மாநிலம் காக்ரபார் அணுமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை திடீரென கனநீர் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அணுமின் நிலையத்தில் ஒரு அணு உலையில் மட்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
v இந்தியாவுக்கும், பிரான்ஸுக்கும் இடையிலான கலாசார உறவை மேம்படுத்த பாடுபட்டதற்காக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஓவியர் சக்தி பர்மனுக்கு “நைட் ஆஃப் தி லீஜியன்‘ என்ற, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
v மகளிருக்கான தேனா ஸ்திரி சக்தி என்ற சிறப்பு சேமிப்புக் கணக்கை தேனா வங்கி அறிமுகப் படுத்தியுள்ளது.
v உலகின் அதிவேக ரிட்லி சைக்கிள் சென்னையில் அறிமுகப் படுத்தப் பட்டது.
v இந்தியாவில் எய்ஸ்ட் எனப்படும் எச்ஐவி கிருமி பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் என்றும், உலக அளவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளதாகவும் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எய்ஸ்ட் எனப்படும் எச்ஐவி கிருமி பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் என்றும், உலக அளவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளதாகவும் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
v உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள தடங்கல்களை நீக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவுக்கு, நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சட்டத்திருத்த மசோதாவில், நீதிபதிகள் விடுப்பு நடைமுறைகள், 10 ஆண்டுகளுக்கு மேல் வழக்குரைஞர்களாகப் பணியாற்றுபவர்களை உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்துவது ஆகியவை தொடர்பான விதிமுறைகளும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
v இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இருக்கும் சீக்கியர்கள் எண்ணிக்கையைவிட தனது அமைச்சரவையில் சீக்கியர்கள் அதிகம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.
vஐ.நா. தடையையும் மீறி, ஈரான் ஏவுகணைப் பரிசோதனைகளை நடத்தியது குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்துக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
v அரபு லீக் அமைப்பின் புதிய பொதுச் செயலராக, எகிப்து நாட்டைச் சேர்ந்த அகமது அபுல் கெய்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் தகவல்கள்
ü அரபு கூட்டமைப்பு 1945 ஆம் ஆண்டு எகிப்து தலைநகர் கெய்ரோவில் உருவாக்கப் பட்டது
ü தற்போது 22 உறுப்பினர்கள் இக்கூட்டமைப்பில் உள்ளனர்.
v செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகியவை கூட்டாக இணைந்து புதிய டிஜிஓ என்ற விண்கலத்தை அந்த கிரகத்துக்கு அனுப்புகின்றன. டிஜிஓ என்ற விண்கலத்தை உருவாக்கியுள்ளன. இந்த விண்கலம் கஜகஸ்தானின் பைகானூரில் உள்ள ரஷ்ய ஏவுதளத்தில் இருந்து வரும் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. யாபரேலி என்ற வட்டவடிவிலான ஆய்வு கலம் ‘டிஜிஓ’ விண்கலத்தில் இருந்து பிரிந்து செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யும். இந்த முயற்சி வெற்றி பெற்றால் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
v தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் இந்தியாவின் விஜேந்தர் சிங்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இங்கிலாந்தின் லிவர்பூலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் மூன்றே சுற்றுகளில் ஹங்கேரியின் அலெக்சாண்டர் ஹார்வத்தை தோற்கடித்தார் விஜேந்தர் சிங்.
v ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்த ஆறரை வயது சிறுமி கே. தர்ஷினி இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார். கோவை பந்தயசாலையில் கால் ஸ்கேட்டிங் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் நிர்வாக ஆசிரியர் மன்மோகன் தொடங்கி வைத்தார்.