நடப்பு நிகழ்வுகள் மார்ச்-30முதல் 31 வரை -2016- சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-30முதல் 31 வரை -2016-சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்

v உசென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 6 நீதிபதிகளை நியமிப்பதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60-லிருந்து 75-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், உயர் நீதிமன்றம்-உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றில் 34 நீதிபதிகளே உள்ளனர். 41 பணியிடங்கள் காலியாக உள்ளன.
v திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம்.
v ஜப்பான் மொழியில் திருக்குறள் வெளிவரக் காரணமாக இருந்த சேலம் ஓமலூரைச் சேர்ந்த சொ.மு.முத்து (96) உடல் நலக் குறைவு காரணமாக மார்ச் 29ஆம் தேதி மாலை அவரது இல்லத்தில் காலமானார். சொ.மு. முத்துவின் உதவியால் சூசோ மாசூங்கா ஜப்பானிய மொழியில் திருக்குறளை எழுதி முடித்தார். 
v உலகெங்கிலும் அரிய வனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இணைத்து வருகிறது. அதனடிப்படையில், தமிழகக்ததில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் மலையை உலகின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இந்த மாதம் 19-ஆம் தேதி முதல் இணைத்துக் கொண்டது.

   கூடுதல் தகவல்கள்
ü கடந்த ஆண்டு யுனெஸ்கோ பட்டியலில் கனடா நாட்டின் பீவர் மலைப் பகுதியும், இந்தோனேசியாவின் பாம்பங்கன் வனப் பகுதியும் இணைந்தன.
ü தமிழகத்தில் ஏற்கெனவே நீலகிரி மலைப் பகுதி 2000 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் இணைக்கப்பட்டது.
ü நீலகிரித் தொடர் மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகள் 1986ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் உயிர்கோள இருப்பிடமாக” (Biosphere Reserve) ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தின் (UNESCO) “மனிதனும் உயிர்க்கோளமும்” (Man and Biosphere – MAB) திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது. 
ü 2001 ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாப் பகுதியும் யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பெற்றது. 
ü இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 10 பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில், தமிழகம் மூன்று வனப் பகுதிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
ü அகஸ்தியர்மலை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர்மலை தமிழக- கேரள மாநில எல்லைகளையொட்டி 3500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அகஸ்தியர் மலை வனப் பகுதியில் 2,250 தாவர வகைகளும், 337 பறவை இனங்களும், 79 பாலூட்டிகளும், 88 வகையான ஊர்வனங்களும், 46 வகை மீன்களும், 45 நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய சிறிய உயிரினங்களும் உள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
ü மிகப் பழைமையானது: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் இமயமலையைவிடப் மிகப் பழைமையானவை எனக் கண்டறியப்பட்டு, அவற்றை உலகின் பாரம்பரியமிக்க இடமாக யுனெஸ்கோ 2012-இல் அறிவித்தது. 8 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் உருவான புவியியல் அமைப்பே மேற்குத் தொடர்ச்சி மலைகள் என்பது புவியியல் வல்லுநர்களின் ஆய்வு முடிவாகும்.
v இந்தியாவில் இருந்து நேரடியாக வங்கதேசம் செல்லும் முதல் சரக்குக் கப்பல் ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட கிருஷ்ணப்பட்டினத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
v விபத்துகளில் காயமடைவோரை காப்பாற்றும் ஈர நெஞ்சங்களை போலீஸார், விசாரணை அமைப்பினர் தேவையில்லாமல் அலைக்கழிப்பதை தவிர்க்க மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ü சாலைப் பாதுகாப்பு, விபத்தில் உதவுபவர்களுக்கு பிரச்னைகள் ஏற்படாமல் தடுப்பது குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து கடந்த   2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ü இந்தக் குழு அளித்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் 12 முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அதனை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை அளித்தது.
v இணையவழி சில்லறை வர்த்தகத்தில் (இ-காமர்ஸ்) 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
v இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையான இஸ்ரோவரும் மே மாதம் பிஎஸ்எல்வி சி34 ராக்கெட் மூலம் இந்தியாவின் கார்டோசாட் 2சி என்ற செயற்கைக்கோளை விண் ணில் செலுத்தவுள்ளது. அப்போது அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் 21 செயற்கைக்கோள் களையும் அந்த ராக்கெட்டுடன் இணைத்து விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.
v உத்தரப் பிரதேச மாநில பள்ளி களில் தினசரி தேசிய கீதம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
v 4வது அனு உச்சிமாநாடு வாஷிங்டன்னில் நேற்று தொடங்கியது
ü 2012 – சியோல் , தென் கொரியா
ü 2014- த ஹேக் நெதர்லாந்து
ü 2010- வாஷிங்டன் – அமெரிக்கா
vமருத்துவ ஆய்வக சோதனைக்கான விதிமுறைகள் எளிமையாக்கப்ட்டுள்ளன . 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் மருத்துவ ஆய்வக சோதனையை தடை செய்திருந்தது  குறிப்பிடத்தக்கது, ரஞ்சித் ராய் கமிட்டி அளித்த பரிந்துரையின்படி இவ்விதிகள் எளிமையாக்கப் பட்டுள்ளன.
v பயங்கரவாதம் எனும் பொதுவான சவாலை எதிர்கொள்வதற்கு, பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை இந்தியாவும், பெல்ஜியமும் மீண்டும் தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
v கர்நாடகாவில் இன்று (புதன் கிழமை) முதல் தோல் வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வித் துறைக்கான அமைச்சர் ஷரண் பிரகாஷ் பட்டீல் விக்டோரியா மருத்துவமனையில் கர்நாடக மாநிலத்தின் முதல் தோல் வங்கியைத் திறந்து வைத்தார்.
v எகிப்தில் உள்ள புகழ்பெற்ற அயின் ஷாம்ஸ் பல்கலைக்கழகத்தில், இந்தியா தனது ஆய்வு மையத்தை நிறுவ உள்ளது. எகிப்து மட்டுமன்றி அரபு நாடுகளிலேயே ஏற்படுத்தப்படும் முதலாவது இந்திய ஆய்வு மையம் இதுவாகும்.
v இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டுக் கடற்படை வீரரை விடுவிக்குமாறு அந்நாட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று சர்வதேச நிரந்தர சமரச தீர்ப்பாயத்தில் இத்தாலி முறையிட்டுள்ளது.
v மியான்மரின் புதிய அதிபராக ஹிடின் கியா புதன்கிழமை பதவியேற்றார்.50 ஆண்டுகளுக்குப் பிறகு, ராணுவப் பின்னணியைச் சாராத ஒருவர் அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
v பொலிவியாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில், அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி தனது 50-வது சர்வதேச கோலை அடித்து சாதனைப் படைத்தார். அர்ஜென்டினா அணி சார்பில், காஃபிரியேல் பாட்டிஸ்டூடா 56 சர்வதேச கோல்கள் அடித்து  முதலிடத்தில் உள்ளார்.
v டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்
வ.எண்
சரணாலயத்தின் பெயர்
மாவட்டத்தின் பெயர்
1.
முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா
நீலகிரி
2.
கலக்காடு – முண்டந்துரை புலிகள் சரணாலயம்
திருநெல்வேலி
3.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
காஞ்சிபுரம்
4.
பாயிண்ட் கேளிமர் வனவிலங்கு சரணாலயம்
நாகப்பட்டிணம்
5.
கிண்டி தேசிய பூங்கா
சென்னை
6.
இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா
கோவை
7.
கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம்
கன்னியாகுமரி
8.
வேட்டன்குடி பறவைகள் சரணாலயம்
சிவகங்கை
9.
முக்குரித்தி தேசிய பூங்கா
நீலகிரி
10.
பூலிகட் லேக் பறவைகள் சரணாலயம்
திருவள்ளூர்
11.
கிரிஸ்சல்ட் ஜெயிண்ட் அணில்கள் சரணாலயம், ‚வில்லிப்புத்தூர்
விருதுநகர்
12.
கரிகிளி பறவைகள் சரணாலயம்
காஞ்சிபுரம்
13.
கஞ்சிரன்குளம் பறவைகள் சரணாலயம்
இராமநாதபுரம்
14.
வல்லநாடு கருப்பு மான் (பிளாக்பக்) சரணாலயம்
தூத்துக்குடி
15.
மன்னார் வளைகுடா கடல் சார்ந்த தேசிய பூங்கா மற்றும் உயிர்கோள சரணாலயம்
மன்னார் வளைகுடா, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம்
16.
உதயமத்தண்டபுரம் பறவைகள் சரணாலயம்
திருவாரூர்
17.
அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா
சென்னை
18.
கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
பெரம்பலூர்
19.
வுடுவூர் பறவைகள் சரணாலயம்
திருவாரூர்
20.
சித்ரநுடி பறவைகள் சரணாலயம்
இராமநாதபுரம்
21.
குந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
திருநெல்வேலி
22.
வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
ஈரோடு
23.
மேல் செலவனூர் கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம்
இராமநாதபுரம்
24.
திருப்படைமருதூர் பாதுகாப்புச் சரணாலயம்
திருநெல்வேலி