நடப்பு நிகழ்வுகள் 23,பிப்ரவரி-2016-குஜராத் தகவல்கள்

நடப்பு நிகழ்வுகள்  23,பிப்ரவரி-2016-குஜராத் தகவல்கள்

v நாகை மாவட்டம், தில்லையாடியில் உள்ள தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் வள்ளியம்மையின் 102-ஆவது நினைவுநாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. வள்ளியம்மையின் முன்னோர்கள் தில்லையாடியிலிருந்து தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர்கள். அங்கு 1898ஆம் ஆண்டு வள்ளியம்மை பிறந்தார். தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு எதிராக, இந்தியர்களின் உரிமைக்காக மகாத்மா காந்தி நடத்திய போராட்டத்தில் பங்கேற்று வள்ளியம்மை சிறை தண்டனையை அனுபவித்தார். சிறையிலேயே நோயுற்ற அவர் விடுதலையான பின்னரும் நோயால் அவதியுற்று 16 வயது கூட பூர்த்தியாகாத நிலையில் 1914-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
v ஏழை-எளிய மாணவர்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் மேஜை விளக்குகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்
v புதிதாக தொடங்கப்பட்டுள்ள “தூய்மை சுற்றுலா செல்லிடப்பேசி செயலியில் தமிழகத்தின் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், மாமல்லபுரம் கடற்கரைகோயில் உள்பட 25 நினைவுச் சின்னங்கள் இடம் பெற்றுள்ளன. நாட்டில் நினைவுச் சின்னங்களில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில், பொதுமக்கள் புகார்களைத் தெரிவிப்பதற்காக “தூய்மை சுற்றுலா செல்லிடப்பேசி செயலிதொடங்கப்பட்டுள்ளது.
v சீனாவின் ஷாங்காய் நகரில், வரும் 26ஆம் தேதி முதல் 2 நாள்கள் நடைபெறும் ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்க மாட்டார்.
v சுற்றுலா நாடான ஃபிஜி தீவு பகுதியில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பட்ட கடும் வின்ஸ்டன்  புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்தது. 
v தேசிய அனல் மின் நிறுவனத்தில் (என்டிபிசி) மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 5 சதவீத பங்கு விற்பனை செவ்வாய்க்கிழமை (பிப்.23) தொடங்குகிறது.
v ஆசிய இண்டோர் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில்தமிழகத்தைச் சேர்ந்த பிரேம் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 
 
குஜராத்- தகவல்கள்
குஜ்ஜர்களின் நாடு. குர்ஜார்ராட்ரா என்று அழைக்கப்பட்டுப் பின்னாளில் குஜராத் ஆனது.
வரலாறு
சபர்மதி, மாகி நதிகளின் கரையோரங்கள், லோத்தல், ராம்பூர், ஆம்ரி உள்ளிட்ட இடங்களில் கற்கால மனிதர் வாழ்ந்த தடயங்களும் சிந்து சமவெளி நாகரிகத்தின் மச்சங்களும் உள்ளன. குஜராத் பழங்காலத்தில் எகிப்து, பஹ்ரைன், பாரசீக வளைகுடா நாடுகளுடன் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியிருக்கிறது.
பண்டைய குஜராத்தை மவுரிய வம்சம் ஆண்டது. பிறகு சாகர்கள், மைத்ராகா வம்சத்தினர் ஆண்டனர். அவர்களுக்குப் பிறகு, சாதவாகனர் வம்சம், குப்த பேரரசு, சாளுக்கிய வம்சம், ராஷ்ட்ரகூடர், பாலா பேரரசு, குர்ஜாரா- ப்ரத்திகாரா பேரரசு, சவ்ரா, சோலங்கி, பாகிலா பழங்குடி வம்சங்கள், ராஜபுத்திரர்கள், வகேலாக்கள் என்று குஜராத்தில் பல அரசுகள் மாறி மாறி வந்துள்ளன. கி.பி.1297-ல் அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியும் குஜராத்தில் ஏற்பட்டது. குஜராத்தின் முதல் சுல்தானாக ஜாபர்கான் முசாபர் ஆனார். பின்னர் மராத்தியர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
1600-களில் டச்சு, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் குஜராத்தின் கடலோரப் பகுதியில் தங்களின் தளங்களை நிறுவினர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி 1614-ல் சூரத்தில் முதல் தொழிற்சாலையை நிறுவியது. பின்னர் ஆங்கிலேயர்- மராட்டியர் போர் நிகழ்ந்தது. ஆங்கிலேயர் ஆதிக்கம் வளர்ந்த போது, பாம்பே ராஜதானி உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் குஜராத் வந்தது.
இந்தியாவின் நகை
இந்திய விடுதலையின் விதையைப் போன்ற காந்தியடிகள் பிறந்தது இந்த மண்ணில்தான். சர்தார் வல்லபாய் பட்டேல், மொரார்ஜி தேசாய், உள்ளிட்ட விடுதலை வீரர்களின் தலைமையிலான போராட்டம் ஆங்கிலேயரை உலுக்கியது.
நாடு விடுதலையடைந்த பிறகு 1948-ல் குஜராத்தி மொழி பேசும் மக்களை உள்ளடக்கிய தனி மாநிலக் கோரிக்கையாக மகா குஜராத்முழக்கம் முன்வைக்கப்பட்டது. 1960 மே 1-ல் பாம்பே ராஜதானி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. குஜராத், மகாராஷ்ட்ரம் மாநிலங்கள் உதயமாகின. குஜராத்துக்கு முன்பு அகமதாபாத் தலைநகராக இருந்தது. 1970-ல் அது காந்தி நகருக்கு மாற்றப்பட்டது. குஜராத்துக்கு இந்தியாவின் மேற்குப் பகுதி நகைஎன்னும் பெயர் உள்ளது.
மக்களும் மொழியும்
குஜராத்தின் எல்லையாக, 1600 கி.மீ நீளத்துக்கு கடற்கரை உள்ளது. மேற்கில் அரபிக்கடலும், வடக்கில் பாகிஸ்தானும் வடகிழக்கில் ராஜஸ்தான், கிழக்கில் மத்தியப் பிரதேசமும் தெற்கில் மகாராஷ்ட்ரா, டாமன் டையூ, நாகர் ஹவேலி ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன.
மக்கள் தொகை ஏறத்தாழ 6 கோடிப்பேர் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் என்ற பாலின விகிதாச்சாரம். எழுத்தறிவு 79.31 சதவீதம். இந்து மதத்தை 89.09 பேரும் இஸ்லாமை 9.06 பேரும் சமணத்தை 1.03 பேரும் மற்றவர்கள் ஏனைய மதங்களையும் பின்பற்றுகின்றனர்.
சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழிகளின் கலவையே குஜராத்தி மொழி. பெரும்பாலும் குஜராத்தி, இந்தி பேசுகின்றனர். உருது, அராபி மற்றும் பாரசீகம், மராத்தி, மார்வாரி, பஞ்சாபி, தமிழ், தெலுகு, பெங்காலி, ஒரியா, மலையாளம் என பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன.
தொழில் வளம்.
ரசாயனம், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மருந்து உற்பத்தி, சிமெண்ட், ஜவுளி, முத்து மற்றும் நகைகள், துறைமுக மேம்பாடு, வாகன மற்றும் பொறியியல்உற்பத்தியில் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியை குஜராத் எட்டியுள்ளது.
வேளாண்மை
மாநிலத்தில் நர்மதை, தபி உள்ளிட்ட 61 நதிகள் பாய்கின்றன. 63 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். கோதுமை, எண்ணெய் வித்துகள், பருத்தி, நிலக்கடலை, பேரீச்சம், கரும்பு, பால் மற்றும் பால் பொருட்கள், மாம்பழம், வெங்காயம், கத்திரிக்காய், இஞ்சி ஆகியவை மகசூல் செய்யப்படுகின்றன.
கலாச்சாரச் செழுமை
இந்து, இஸ்லாமிய, ஐரோப்பிய கலாச்சாரங் களை உள்வாங்கிய கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது குஜராத். கார்பா, கார்பி, ராஸ், தாண்டியா நடனங்கள், ஹல்லிசாகா குழு நடனங்களும் லுல்லாபீஸ், நுப்தியல் மற்றும் ரான்னடே பாடல்களும்பாவை, ராம்லீலா நாடகங்களும் பிரசித்தி பெற்றவை. 1650-களில்  அக்யான் என்ற கதை சொல்லும் வழக்கம் இருந்தது.
சுற்றுலா
குஜராத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளன. இவற்றில் அக்ஷார்தம் கோயில், அம்பாஜி கோயில், துவாரகாதேஷ், பகவத், சோம்நாத் மற்றும் சூரியக் கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. லகோட்டா, உபக்கோட், தபோய், ஓகா, சின்ஜுவாடா, பத்ரா உள்ளிட்ட இடங்களில் உள்ள பழங்கால கோட்டைகளும், மகாத்மா காந்தியின் நினைவுகளைத் தாங்கி நிற்கும் காந்தி சமரக் சங்கராலாயா அருங்காட்சியகமும் உலக மக்களைக் கவர்ந்து இழுக்கின்றன.
சிங்கங்களின் புகலிடமாகத் திகழும் கிர் காடுகள், பிளாக் பக் தேசியப் பூங்கா, மரைன் தேசியப் பூங்காக்கள் மற்றும் 21 பறவைகள் சரணாலயங்கள் இங்கு உண்டு. அதனால் ஒரு சுற்றுலா தேசமாக குஜராத் திகழ்கிறது.
ஆளுமைகள்
பாகிஸ்தானின் தந்தை எனப்படும் முகமது அலி ஜின்னா, சர்தார் வல்லபாய் படேல், இந்த அணு விஞ்ஞானி விக்ரம் சாராபாய்உள்ளிட்ட ஆளுமைகளின் தேசம் இது. காந்தி பிறந்ததாலேயே குஜராத்துக்கு ஏகப்பெருமை. இந்தியா முழுவதுமே காந்தி தேசமாக இருந்தாலும் காந்தியின் பிறந்த தேசம் குஜராத் என்பதால் வந்த பெருமை அது.
 

 

Add a Comment

You must be logged in to post a comment

Shopping Basket
error: Content is protected !!