நடப்பு நிகழ்வுகள் 26-29,பிப்ரவரி-2016 – பொருளாதார ஆய்வறிக்கை

நடப்பு நிகழ்வுகள்  26-29,பிப்ரவரி-2016 பொருளாதார ஆய்வறிக்கை
Ø ஆரோவில் சர்வதேச நகரம் உருவான தின விழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொண்டாடப்பட்டது.
 
புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரம், மகான் அரவிந்தரின் முக்கிய சீடரான ஸ்ரீ அன்னை என்று அனைவராலும் அழைக்கப்படும், மீரா அல்போன்சாவின் கனவு நகரமாக 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
Ø முன்னாள் குடியரசு தலைவர் .பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், இன்று அப்துல் கலாம் இலட்சிய இந்திய கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார்.
Ø உலகளவில் தொழிற்சாலை தொடங்குவதற்கான எளிய நடைமுறைகள் தன்மையில் இந்தியா 142-ஆவது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் தொழிற்சாலை தொடங்குவதற்கான இலகுத்தன்மையில், தமிழ்நாடு 12- ஆவது இடத்திலேயே உள்ளது.
Ø தமிழகத்தில் சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அம்மா கைபேசிகளை வழங்கும் (27.2.2016) திட்டத்தினை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் 92 லட்சம் உறுப்பினர்களைக்கொண்டு 6 லட்சத்து 8 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இதில் ஊரகப்பகுதிகளில் சுமார் 4 லட்சத்து 23 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அம்மா கைபேசி திட்டத்தின் கீழ் சமுதாய பயிற்றுனர்களுக்கு கைபேசியுடன் சிம் சேவையும் இலவசமாக வழங்கப்படும். சிம் கார்டு பயன்பாட்டிற்கான மாதாந்திர கட்டணத்தை தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.
Ø மத்திய தோல் ஆராய்ச்சி மையத்துக்கு புதிய இயக்குநராக பி. சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். கண்ணம்மாள் நினைவு விருது, சுலாப் சர்வதேச விருது உள்பட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ø புகழ்பெற்ற நடன கலைஞர் ருக்மிணி தேவி அருண்டேலின் பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.1956 ஆம் ஆண்டு பதம் பூஷன் விருது பெற்றுள்ளார். 1962 ஆம் ஆண்டு விலங்குகள் நல வாரியம் இவருடைய தலமையில் துவங்கப்பட்டது.
Ø பொதுத்துறை வங்கிகளின் உயர்நிலை அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கவும், வங்கிகள் தொடர்பான பிரச்னைகளைக் களையவும் அமைக்கப்பட்டுள்ள வங்கிகள் வாரியத்தின் முதல் தலைவராக, முன்னாள் சிஏஜி வினோத் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.
Ø வைல்டு டிரைல்ஸ் (wildtrails) எனும் செயலி அருகில் உள்ள வனவிலங்குகளைப் பற்றி அறிவதற்காக பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் உருவாக்கியுள்ளார்.
Ø நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படைகளான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஆகியவற்றின் புதிய தலைவர்கள் தில்லியில் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர். தெலங்கானா பிரிவைச் சேர்ந்த, 1982-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வு பெற்ற கே. துர்கா பிரசாத், சிஆர்பிஎஃப் படையின் தலைவராகப்பொறுப்பேற்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான கே.கே.சர்மா, பிஎஸ்எஃப் படையின் தலைவராக பதவியேற்க இருக்கிறார். 
Ø ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் போட்டியின்றி தொடர்ந்து 7வது முறையாக பிஜு ஜனதாதளம் (பிஜேடி) கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Ø ஆசியக் கண்டத்தில் சுற்றுலாப் பயணிகளால் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் 10 சிறந்த கடற்கரைகளில் 3 இந்தியாவில் உள்ளதாக தனியார் இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோவா மாநிலத்தில் உள்ள அகோந்தா, பாலோலேம் ஆகிய 2 கடற்கரைகளும், அந்தமான் தீவில் உள்ள ராதாநகர் கடற்கரையும் சிறந்த கடற்கரைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
Ø சூரிய மின்சக்தி சாதன உற்பத்தித் துறையில், பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டை மீறும் வகையில் அமைந்துள்ள உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்ற இந்தியாவின் முடிவை கிரீன்பீஸ் தன்னார்வ அமைப்பு ஆதரித்துள்ளது.
Ø கடலோரக் காவல் படையின் புதிய தலைமை இயக்குநராக, மூத்த அதிகாரி ராஜேந்திர சிங், சனிக்கிழமை பொறுப்பேற்றார்.
Ø கேரளா தான் நாட்டின் முதல் டிஜிட்டல் மாநிலம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெருமை பொங்க அறிவித்தார். மேலும் இந்தியாவிலேயே முதல் பாலின பூங்காவைத் திறந்துவைத்தார்.
Ø இந்தியாவில் இண்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துவதில் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது இடம் பெற்றுள்ளது என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. முதல் இடத்தை மகாராஷ்டிரா மாநிலம் இடம் பெற்றுள்ளது.
Ø ஈர்ப்பு அலைகளை ஆராய உலகிலேயே 3-வதாக இந்தியாவில் லிகோ மையம்
பொருளாதார ஆய்வறிக்கை 2015-2016
*    நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வரும் நிதியாண்டில் (2016-17) 7 முதல் 7.75 சதவீதம் வரை இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாட்டில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளும், மானியக் குறைப்பும் தொடர வேண்டும் என்றும் ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

*    உலக அள்வில் இந்தியா பொருளாதர வளர்ச்சியில் முதலிடத்தை வகிக்கிறது.
*    உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்: 2015-16-ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.1 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.  ஆனால் அது 7.6 சதவீதமாக குறைந்தது. எனினும் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 முதல் 10 சதவீதமாக இருக்கும்.
*    ரிசர்வ் வங்கியின் இலக்குக்கு ஏற்ப 2016-17-ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 4.5 முதல் 5 சதவீதமாகக் குறையும். 
*    1989ஆம் ஆண்டில் இருந்து 2010-ஆம் ஆண்டு வரை, 1.05 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில், முறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 37 லட்சம் மட்டுமே.
*    மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 10-ஆகக் குறைக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதுகள்
*    ஆண்டுக்கான 88–வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் உள்ள ஹாலிவுட்டில் நடைபெற்றது
*    88–வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தி ரெவளன்ட் படத்தில் நடித்த நாயகன் டிகாப்ரியோவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
*    , சிறந்த இயக்குநருக்கான விருது  தி ரெவளன்ட் படத்தை இயக்கிய அலிஜன்ட்ரோ  ஜி இனாரிட்டுக்கு வழங்கப்பட்டது. இவர் நான்காவது முறையாக ஆஸ்கார் விருதினை பெறுகிறார்.

*    சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவு, நடிகருக்கான விருது என 3 ஆஸ்கார் விருதுகளை தி ரெவளன்ட் படம் தட்டிச் சென்றுள்ளது.
*    சிறந்த திரைப்படமாக ஸ்பாட் லைட் என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
*    சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதினை ரூம் படத்தில் நடித்த நடிகை பிரீ லார்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Ø கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லா சுவாரெஸ் நவர் சாம்பியன் பட்டம் வென்றார்.
Ø மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மகளிர் நடுவர்கள் பணியாற்றவிருப்பது இதுவே முதல்முறையாகும். அவர்களில் ஒருவர் கேத்தி கிராஸ், மற்றொருவர் கிளேர் போலோசாக்.
Ø சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) புதிய தலைவராக ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஜியானி இன்ஃபான்டினோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Ø புதுச்சேரி அடுத்த ஆரோவிலில் சர்வதேச குதிரையேற்றப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Add a Comment

You must be logged in to post a comment

Shopping Basket
error: Content is protected !!