APRIL 10 0888

IYACHAMY CURRENT AFFAIRS|JULY 1 TAMIL|ENGLISH

JULY 1 CURRENT AFFAIRS

DOWNLOAD AS PDF IYACHAMY CURRENT AFFAIRS

  • Prime Minster pays homage to the Great saint and poet, Kabir, at Sant Kabir Nagar on 500th death anniversary of Saint Kabir

  • உத்தரப்பிரதேச மாநிலத்தில், 15-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பழம்பெரும் கவிஞர் கபிர் தாஸின் 500-வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்

  • As part of the ongoing DISHA Week being celebrated from 25thto 29th June, 2018 to mark the successful completion of 2 years of the District Development Coordination & Monitoring Committee (DISHA). DISHA to monitor the progress of 42 schemes across the country

  • DISHA வாரம் ஜீன் 25 முதல் 29 வரை கொண்டாடப் பட்டது. இது மாவட்ட அளவில் திட்ட ஒருங்கினைப்பு மற்றும் கண்கானிப்பு குழுவாகும். திசா என்பது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட 42 திட்டங்களை கண்காணிப்பதாகும்

  • Minister of Commerce & Industry and Civil Aviation launches mobile applicationReUnite” to track and trace missing and abandoned children

  • மத்திய வர்த்தகம் & தொழிற்சாலை மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு இன்று (29.06.2018) ‘ரியுனைட்’ என்னும் கைபேசிச் செயலியைத் தொடங்கிவைத்தார். இந்தியாவில் காணமல்போன மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளைத் தேடவும் பின் தொடரவும் இந்தச் செயலி உதவும்.

  • Sathyasri Sharmila became country’s first transgender lawyer

  • இந்தியாவின் முதல் திருனங்கை வழக்கறிஞராக பதிவு செய்தார் சத்யஸ்ரீ சர்மிளா

  • Tamil Nadu government to observe Sivaji Ganesan Birthday .

  • தமிழ் நாடு அரசு நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதாக அறிவித்துள்ளது. 1996 ல் இந்தியாவில் சினிமாவுக்கு வழங்கும் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதினைப் பெற்றுள்ளார்,

  • The government celebrate July 1, 2018, as ‘GST Day‘ to mark the first anniversary of the new indirect tax regime

  • ஜி எஸ் டி சட்டம் அமல்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி ஜீலை 1 ஜி எஸ் டி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

  • Mumbai’s Art Deco buildings — believed to be the world’s second largest collection after Miami — were added to UNESCO’s World Heritage List alongside the city’s better-known Victorian Gothic architecture.

  • மும்பையில் “விக்டோரியன் கோத்திக்” என்னும் மேற்கத்திய கட்டடக் கலை கொண்டு கட்டமைக்கப்பட்ட பழங்கால கட்டடங்கள் மற்றும் கலைநயமிக்க வேறு பல கட்டங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

  • Tamil Nadu’s Health Minister C. Vijaya Baskar received an award from Union Minister of Health and Family Welfare  J.P. Nadda in New Delhi. the State’s achievement in 2014-16 reducing its Maternal Mortality Rate (MMR) (per 1,00,000 live births)  to 62

  • தமிழ் நாடு சுகாதாரத்துரை அமைச்சர் மத்திய குடும்ப மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தமிழ்னாடு 2014-16 ஆம் ஆண்டில் மகப்பேறு கால இறப்பினை 1லட்சம் பிறப்புகளுக்கு 62 இறப்புகளாக குறைத்ததற்கு விருது வாங்கினார்.

  • Prime Minister Narendra Modi on Saturday greeted the people on the occasion of World Social Media Day on june 30.

  • சமூக ஊடக தினமான ஜீன் 30 ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.

  • Researchers at Duke University show that a polio virus-rhinovirus hybrid may destroy cancer cells in patients.

  • டியூக் பல்களைக் கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் போலியோ வைரசினைக் கொண்டு புற்று நோய் செல்களை அழிக்க முடியும் என்பதனை கண்டுபிடித்துள்ளார்.

  • India celebrates the National Doctors‘ Dayon July 1 to honour the legendary physician, freedom fighter and the second Chief Minister of West Bengal, Dr Bidhan Chandra Roy

  • இந்தியா ஜீலை 1 ஆம் நாள் டாக்டர் பி.சி ராயினை சிறப்பிக்கும் பொருட்டு தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடியது.

Classes Starts from July 11

Online Classes also Available

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – டிசம்பர் 5 , 6 நடப்பு நிகழ்வுகள்

                         டிசம்பர் 5 , 6 நடப்பு நிகழ்வுகள்

  • தமிழக வேளாண் ஆராய்ச்சி மையங்களை இடம் மாற்றக் கூடாது. கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம், சென்னையில் உள்ள மத்திய கடல் நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் ஆகிய நிறுவனங்களை இடமாற்றம் செய்யக்கூடாது என பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

  • வரிச்சலுகை கோரி சர்வதேச நீதிமன்றத்தை நாடிய நிஸான் கார் நிறுவனத்துக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
  • கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி.கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள இரண்டு உலைகள் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் பெற்றவை. வி.வி.இ.ஆர். வகையிலான இந்த அணு உலை, அழுத்த நீர் அணு உலைப் பிரிவைச் சேர்ந்தவை. செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆக்சைடு எரிபொருளைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • ராஜிவ் காந்தி மானஸ் சேவா விருதினை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் செழியன் ராமு குடியரசுத்தலைவரிடம் இருந்து விருதினைப் பெற்றார்.
  • நகர்ப்புற வாழ்வாதார திட்டமான – தீனதயாள் அந்தியோஜனா திட்டத்தினை செயல்படுத்துவதில் தமிழ் நாடு 14 வது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் கேராளவில் வயனாடு மாவட்டத்தில் உள்ள பனாசுரா சாகர் அனையில் 500 கிலோவாட் உற்பத்தி திறனுடன் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
  • உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் முத்தலாக் முறையை பின்பற்றுகிறவர்களை கட்டுப்படுத்த இது தொடர்பாக சட்டம் அவசியம் என்று தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சையது கயோருல் ஹசன் ரிஸ்வி கூறியுள்ளார்.
  • உலகிலேயே முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக தகவல் தொழில்னுட்ப மையம் அமைக்கப்படும் என தெலுங்கான அரசு அறிவித்துள்ளது.
  • இந்தியாவிலேயே முதல்முறையாக 12வயதுக்கு குறைந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை மத்திய பிரதேச அரசு கொண்டுவந்துள்ளது.
  • இந்தியப் பெண் தாரா தற்போது, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் பொருளாதார ஆலோசகர்கள் சபையில் இணைந்துள்ளார்.
  • சூரிய சக்தி கூட்டமைப்பு சர்வதேச ஒப்பந்தம் சார்ந்த உலக அரசாங்களுக்குகிடையேயான சர்வதேச ஒப்பந்தமாக டிசம்பர் 6 முதல் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது.

கூடுதல் தகவல்கள்

  •  சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு என்பது உலகில் கடக மற்றும் மகரரேகை பகுதிகளுக்கிடையே சூரிய ஒளி அதிகம் கிடைக்கக்கூடிய நாடுகளை கொண்ட ஒரு சர்வதேச கூட்டமைப்பு இந்த நாடுகள் சூரிய சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது என்பது இதன் நோக்கமாகும்
  • பாரிஸ் பருவ நிலை மானாட்டில் இந்தியாவால் முன் மொழியப்பட்ட திட்டமாகும்.
  • சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் தலைமையம் இந்தியாவில் அமைந்துள்ளது
  • இதுவரை 46 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது . 19 நாடுகள் இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது
  • இக்கூட்டமைப்பில் உள்ள நாடுகள் இது பற்றி கலந்துரையாட தகவல்களை பரிமாற Digital Infopedia எனும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் வெளினாட்டு வர்த்தகக் கொள்கை 2015-20ன் இடைகால மறுஆய்வு வெளியிடப்பட்டுள்ளது
  • 6வது சர்வதேச சுற்றுலாச் சந்தை அசாம் தலைனகர் கவுஹாத்தியில் துவங்குகிறது.
  • இந்தி பட உலகின் பழம்பெரும் நடிகர் சசி கபூர் காலமானார். சினிமா துறையில் வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதினை 2015 ஆம் ஆண்டு இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஜிம்பாப்வேயின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எமர்சன் நங்கக்வா தலைமையிலான புதிய அமைச்சரவை திங்கள்கிழமை பதவியேற்றது

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL| நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 5,6,7| தமிழ்நாடு வனக்கொள்கை 2016

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 5,6,7| தமிழ்நாடு வனக்கொள்கை 2016

  • தினத்தந்தி நாளிதழின் 75-வது ஆண்டு பவள விழாவில் பத்திரிகை சுதந்திரத்தை சரியாகக் கையாள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

கூடுதல் தகவல்கள்

  • தினதந்தி நாளிதழ் 1942 ஆம் ஆண்டு சிபா ஆதித்தனரால் மதுரையில் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.
  • சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதை எழுத்தாளர் இறையன்பு, மூத்த தமிழறிஞர் விருதினை ஈரோடு தமிழன்பன், சாதனையாளர் விருதை வி.ஜி.சந்தோஷம் ஆகியோருக்கு வழங்கினார். 
  • பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் கடந்த 2013 -ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
  • வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ளவர்கள் தொடர்பாக ‘ஆப்பிள்பை’ என்ற சட்ட நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் 714 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்களைக் கொண்டு விசாரணை நடத்த இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) முடிவு செய்துள்ளது. இப்பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 714 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களும் காணப்படுகின்றன. கருப்புப் பணம் பதுக்கியவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் இப்பட்டியலில் இந்தியா 19-ஆவது இடத்தில் உள்ளது.
  • ஆந்திரத்தின் முக்கிய அடையாளமாகத் திகழும் பங்கனபள்ளி மாம்பழம் உள்ளிட்ட மேலும் ஆறு பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மேற்கு வங்கத்தின் துலபஞ்சி அரிசி, கோவிந்தபோக் அரிசி, தெலங்கானாவின் போச்சம்பள்ளி சேலைகள், ஆந்திரத்தின் துர்கி கற்சிற்பங்கள், எட்டிகோப்பக்கா பொம்மைகள், நாகாலாந்தின் சக்சேசாங் சால்வைகள் ஆகியவையும் நடப்பு ஆண்டில் புவிசார் குறியீட்டை பெற்றுள்ளன.

புவிசார் குறியீடு என்றால் என்ன?

புவிசார் குறியீடு என்பது குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரத்தையும், தனித்துவத்தையும் உலக அரங்கில் கொண்டு சேர்க்கிறது. புவியியல் ரீதியில் ஒரு பகுதியில் இயற்கையாக விளையும் சிறந்த வேளாண் பொருட்களுக்கு இந்திய காப்புரிமை அலுவலகம் புவிசார் குறியீடு வழங்கி வருகிறது.

பொருள்களுக்கான புவிசார் குறியீடுகள் சட்டம் ( பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999) 1999 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது.

பயன்கள்

  • முதலில் இதற்கு சட்டபூர்வ பாதுகாப்பு கிடைக்கிறது.
  • புவிசார் குறியீடு வாங்கப்பட்ட பொருட்களை தவறான வழிகளில் விற்பனை செய்வது தடுக்கப்படுகிறது.
  • ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிப் பதும் உற்பத்தியாளர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கிறது.
  • சர்வதேச அளவிலான சுதந்திர வர்த்தகத்தில் புவிசார் குறியீடுகள் நமக்கான சட்ட பாதுகாப்பினை உறுதி செய்கிறது.

தமிழகத்தில் இருந்து புவி சார் குறியீடு பெற்ற பொருட்கள்

மதுரை மல்லி, பத்தமடை பாய், நாச்சியார் கோயில் விளக்கு, தஞ்சாவூர் வீணை, செட்டி நாடு கொட்டான் மற்றும் தோடர்களின் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் ஆக உள்ளிட்ட  தமிழகத்தை சேர்ந்த 6 உற்பத்தி பொருட்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

  • ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு திங்கள்கிழமை முதல் குளிர்காலத் தலைநகரான ஜம்முவில் இருந்து செயல்படத் தொடங்கியது.

கூடுதல் தகவல்கள்

  • 1872-ஆம் ஆண்டு மகாராஜா குலாப் சிங் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ‘தர்பார் மாற்றம்’ நடைமுறை இப்போது வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும், அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மதிக்க வேண்டும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் மெஹபூபா முஃப்தி கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 35-ஏ பிரிவின்கீழ், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளும், உரிமைகளும் அளிக்கப்பட்டுள்ளது. பிற மாநில மக்களுக்கு அதுபோல் சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்படவில்லை.
  • ஐக்கிய நாடுகளின் பருவ நிலை மாற்றம் தொடர்பான 23 வது மானாடு ஜெர்மனியின் போன் நகரில் நடைபெற்று வருகிறது.
  • உலக பொருளாதர பேரவையினால் வெளியிடப்பட்ட பாலின மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியா 108வது இடத்தில் உள்ளது.
  • டிரம்ப் அதிபர் பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆசிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது 12 நாள் பயணத்தில் ஜப்பான், தென் கொரியா, சீனா, வியத்நாம், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளுக்கு அவர் செல்கிறார். அவரது மனைவி மெலானியா உடன் செல்கிறார்.
  • ‘டியான்குன் ஹாவோ’ ஆசியாவின் மிகப் பெரிய தூர்வாரும் கப்பலை சீனா உருவாக்கியதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன
  • வியத்நாமை ‘டாம்ரே’ புயல் தாக்கியது.
  • ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ‘ஷூட் அவுட்’ முறையில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

தமிழ்நாடு வனக்கொள்கை 2016 வரைவு அறிக்கை  (The Hindu Novemer 5)

 

தமிழ்நாடு அரசு, 2014-ஆம் ஆண்டில், உட்கட்டமைப்பு வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கான உத்தி சார்ந்த திட்டத்துடன் கூடிய தமிழ்நாடு 2025ஆம் ஆண்டு தொலைநோக்குத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது. “பாரம்பரியச் சிறப்பினை பேணி வளர்ப்பதும்’ “உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாப்பதும்” தொலைநோக்குத் திட்டத்தின் முக்கிய .கருப்பொருள்களில் ஒன்றாகும். இதனை  நோக்கமாக வைத்து  வைத்து மாநிலத்தின் வனப்பரப்பளைவை 2025 ஆம் ஆண்டுக்குள் 30 % சதவிதமாக அதிகரிக்க 16 முக்கிய அம்சங்களைக் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நன்செய் நிலங்கள் மற்றும் ஏனைய நீர் நிலைகளைப் பாதுகாப்பது, கடலோர மண்டலங்கள் மற்றும் எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய உயிரின  வாழ்க்கைச் சூழலைப் பாதுகாப்பது மற்றும் மாநிலத்தின் விலங்கியல் மற்றும் தாவரவியல் இனங்களின் பல்வேறு வகைப்பாட்டுத் தொகுதியைப் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

முக்கிய அம்சங்கள்

  • மாநிலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் உயிரின வாழ்க்கைச் சூழலின் நிலைத் தன்மையை உறுதி செய்தல்.
  • பல்வகை உயிரினதாவரத் தொகுதி,வனவிலங்கு மற்றும் மரபியல் வளத்தைப் பாதுகாத்தல்.
  • அழிந்துவிட்ட காடுகளுக்கு புத்துயிர் அளித்து மீண்டும் வளர்த்தல்.
  • கடலோரப் பகுதிகளின் உயிரின வாழ்க்கைச் சூழலின் அமைப்பு முறையைப் பாதுகாத்து நிருவகித்தல்.
  • வன ஆதார நிருவாகம் மற்றும் பெருக்கத்திற்கான வனப்பகுதிகளைப் பாதுகாத்தல்.
  • நீடித்த நிலையான வன மேலாண்மை.
  • வாழ்வாதாரப் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, வனப்பகுதிகளுக்கு வெளியே உள்ள
  • நிலப்பரப்புகளிலும் மரம் வளர்க்கும் பரப்பளவை அதிகரித்தல்.
  • வனப்பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த நீர்வரத்து மேலாண்மை வாயிலாக, நீர் வளத்தைப் பெருக்குதல்.
  • வனப்பகுதிகளைச் சார்ந்திருக்கும் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் மற்றும்
  • வன மேலாண்மையில் குறிப்பிடத்தக்க வகையில் அவர்கள் பங்கேற்க வாய்ப்பளிப்பதை உறுதி செய்தல்.
  • பொருளாதார வளத்தையும், உயிரின வாழ்க்கைச் சூழலின் நிலைத் தன்மையையும், உறுதி
  • செய்வதன் வாயிலாக பழங்குடியினர் நலனை மேம்படுத்துதல்.
  • அறிவியல் சார்ந்த வன மேலாண்மைக்கு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்ப ஆதரவு அளித்தல்.
  • வனவிலங்கு மேலாண்மைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மரம் வளர்க்கும் பரப்பளவை
  • அதிகரிப்பதற்காக வனப்பகுதிகளின் பரப்பளவை விரிவுபடுத்துதல் மற்றும் வனப்பகுதியை பற்றி அறிவுறுத்துதல்.
  • ஊரக எரிசக்தி பாதுகாப்பிற்குரிய மரங்களை வளர்த்தல்.
  • வனப்பாதுகாப்பிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் உயிரின வாழ்க்கைச் சூழல் சுற்றுலா
  • மேற்கொள்ளுதல்.
  • வன மேலாண்மைக்குரிய மனித வளத்தை மேம்படுத்துதல்.
  • பருவநிலை மாற்றங்களைத் தணித்தல்

தமிழ்நாடு வனம் பற்றிய தகவல்கள்

  • மாநில பரப்பளவில் 17.59 % நிலப்பகுதியும் , இந்திய பரப்பளவில் 2.99% காடுகளை தமிழ் நாடு கொண்டுள்ளது.
  • மாவட்ட அளவில் அதிக அளவு பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டமாக தர்ம்புரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

 

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL | NOVEMBER 3,4

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 3 மற்றும் 4

 

  • 63 ஆவது காமன்வெல்த் பாரளமன்ற மானாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் பங்களாதேஷ் சென்றுள்ளார்
  • ஒவ்வொரு அனுமதியை பெறுவதற்கும் கால நிர்ணயம் செய்வதன் மூலம் ஒற்றைச் சாளர முறையினை வலுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு, சமீபத்தில் அவசர சட்டம் மூலமாக தமிழ்நாடு வணிக எளிதாக்கும் அவசர சட்டம் / விதிகள், 2017 ஆகியவற்றை கொண்டு வந்துள்ளது.
  • 53-ஆவது ஜான பீட விருதுக்கு பிரபல ஹிந்தி எழுத்தாளர் கிருஷ்ணா சோப்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கூடுதல் தகவல்கள்

 

  • ஜானபீட விருது 1961 ஆம் ஆண்டு முதல் 8 ஆவது அட்டவனை மற்றும் ஆங்கில இலக்கியத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது
  • இவ்விருதை பாரதீய ஜானபீட எனும் அமைப்பு வழங்கி வருகிறது.
  • இவ்விருதை தமிழ் நாட்டில் இருந்து அகிலன் 1975 ஆம் ஆண்டும் , 2002 ஆம் ஆண்டும் ஜெயகாந்தனும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 21 வது உலக மனநல சுகாதார மானாடு டெல்லியில் தொடங்கியது.
  • நிவேஷ் பந்து எனும் தளம் உணவு தொடர்பான அனைத்து தகவல்கள், முதலீடு கொள்கைகள் உணவுத்துறை தொடர்பான திட்டங்களை வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
  • டெல்லி ஆளுனரின் அதிகாரம் வரம்புக்குட்பட்டது. என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கூடுதல் தகவல்கள்

 

  • டெல்லி மத்திய அரசின் கீழ் இருக்கும் சட்டமன்றத்தை கொண்ட யூனியன் பிரதேசம் ஆகும்
  • அரசியல் அமைப்பு சட்டம், 239ஏஏ பிரிவின் படி டெல்லி யூனியன் பிரதேசம் ஆகும் , இது தான் டெல்லியின் சட்டமன்றம் மற்றும் தேசிய தலைனகர் அந்தஸ்து ஆகியவற்றை வழங்குகிறது.
  • இதன்படி மத்திய ஆட்சிப்பகுதியான டெல்லியை குடியரசுத்தலைவரின் சார்பாக ஆட்சி செய்ய துனை ஆளுனர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் குடியரசுத்தலைவர் நியமிப்பார்.
  • டெல்லியின், நிலம் , காவல்துறை , பொது ஒழுங்கு ஆகியவை மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளவை இவற்றில் மானில சட்டமன்றம் சட்டம் இயற்ற இயலாது.
  • மேலே சொன்ன மூன்று துறைகள் தவிர்த்து டெல்லி சட்டமியற்ற இயலும் ஆனால் அவை ஆளுனரின் இசைவைப் பெறவேண்டும் .
  • இது தொடர்பாக அமைச்சரவைக்கும் , ஆளுனருக்கும் முரண்பாடு இருந்தால் அந்த பிரச்சனைகள் குடியரசுத்தலைவரின் பார்வைக்கு அனுப்பவேண்டும்
  • 1992 ஆம் ஆண்டு 69 ஆவது அரசியலமைப்புச் சட்டப்படி டெல்லி தேசிய தலை நகர் அந்தஸ்து பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  • மாணவர்களிடன் ஸ்டாம்ப் சேகரிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக தீன தயாள் ஸ்பார்ஷ் நிதியுதவித்திட்டம் துவஙக்ப்பட்டுள்ளது. SPARSH(Scholarship for Promotion of Aptitude & Research in Stamps as a Hobby)
  • மரபுசாரா எரிசக்தித் துறையை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச சூரியக் கூட்டமைப்பில் (ஐஎஸ்ஏ) சர்வதேச தொழில் நிறுவனங்களும், வளர்ச்சி வங்கிகளும் இணைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அழைப்பு விடுத்துள்ளார்.

கூடுதல் தகவல்கள்

 

  • 121 நாடுகள் கொண்ட குழுதான் சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு (ஐஎஸ்ஏ). இதன் தலைமையகம் இந்தியாவில் உள்ளது.
  • சூரிய சக்தி கூட்டமைப்பு நாடுகள் எனப்படுபவை , கடக ரேகை மற்றும் மகர ரேகை ஆகிய பகுதிகளுக்கிடையே சூரிய சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு ஆகும்
  • இது 2015 ஆம் ஆண்டு பாரிஸ் பருவ நிலை மாற்றத்தின் போது அறிவிக்கப்பட்டது. உலக வங்கி இதற்கு நிதியுதவி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக கென்னத் ஜஸ்டரை நியமிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியா-கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையேயான 14 நாள் கூட்டு ராணுவப் பயிற்சி, “பிரபல் தோஸ்திக்-2017” ஹிமாசலப் பிரதேசத்தில்
  • தொடங்கியது. நான்காவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் கேரளாவில் நடைபெறவுள்ளது.இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

 

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL| NOVEMBER 2

நவம்பர் -2 நடப்பு நிகழ்வுகள்

  • திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலுக்கு யுனெஸ்கோவின் மிகப்பெரிய விருதான ஆசியா பசிபிக் பாரம்பரிய  விருது வழங்கப்படவுள்ளது.
  • புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ரகுபதி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் காலம் அக். 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, விசாரணை ஆணையத்தின் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து பொதுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கூடுதல் தகவல்கள்

  • 2011-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி ஒரு நபர் விசாரணை ஆணையத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைத்தார்.
  • முதலில் இந்த விசாரணை ஆணையத்தின் நீதிபதியாக தங்கராஜ் செயல்பட்டு வந்தார். அவர் ராஜிநாமா செய்யவே, நீதிபதி ரகுபதி புதிய விசாரணை ஆணையராக நியமிக்கப்பட்டார்
  • தமிழகத்தின் 2 -ஆவது தேசிய வேளாண் விற்பனைச் சந்தை திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தொடக்கி வைக்கப்பட்டது. தமிழகத்தின் முதல் வேளாண்மை விற்பனைச் சந்தை வேலூர் மாவட்டம், அம்மூரில் செயல்பட்டு வருகிறது.
  • தமிழ்நாடு மானில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக ஒய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்தரஞ்சன் தாஸ் மற்றும் ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூடுதல் தகவல்கள்

  • தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 17, 1997 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
  • மானில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை , முதல்வர், சட்டமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய குழு பரிந்துரை செய்வதின் பெயரில் ஆளுனர் நியமனம் செய்வார்.
  • இவர்கள் 70 வயது வரை இப்பதவிகளை வகிக்கலாம்.
  • தேசிய ஒய்வூதியத்திட்டத்தில் தனியார் பணிசெய்பவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வயது வரம்பு 60 லிருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
  • ஜம்மு-காஷ்மீர் மாநில பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு பிரதிநிதி தினேஷ்வர் சர்மாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • அண்மையில் நடைபெற்ற ஜப்பான் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற லிபரல் டெமோக்ராடிக் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான ஷின்ஸோ அபே-வை அந்த நாட்டு நாடாளுமன்றம் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுத்தது.

ஜப்பான் பற்றிய தகவல்கள்

  • தலை நகரம் : டோக்கியா நாணயம் : யெண் , பாரளமன்றத்தின் பெயர் : டயட்
  • ஜப்பான் முதலில் நிப்பான் என அழைக்கப்பட்டது
  • சூரியன் உதிக்கும் நாடு எனவும் அழைக்கப்படுகிறது
  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அரசு முறை பயணமாக ஈரான் தலைநகர் தெஹ்ரான் சென்றார். அங்கு அந்த நாட்டு அதிபர் ஹசன் ரவுகானியை சந்தித்துப் பேசினார்.
  • காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஷாஸார் ரிஸ்வி, பூஜா கட்கர் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – NOVEMBER 1

 நடப்பு நிகழ்வுகள் நவம்பர் -1

  • சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் அகழாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் தமிழர்களின் பண்பாட்டையும், தொன்மையையும் எடுத்துக் காட்டுவதாக தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்தார்.
  • எளிதில் வர்த்தகம் செய்வதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா 100-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த அறிக்கையை ஆண்டுதோறும் உலக வங்கி வெளியிடுவது குறிப்ப்டத்தக்கது.
  • கர்நாடகத்தின் முதல் பெண் டி.ஜி.பி.யாக நீலமணி என்.ராஜு பதவியேற்றார்.
  • இந்திரா காந்தி தேசிய அமைதி விருது 2017 ஆம் ஆண்டிற்கு இசைக்கலைஞ்ர் . டி எ.ம் கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டது.

கூடுதல் தகவல்கள்

  • காங்கிரஸ் கட்சியால் இவ்விருது வழங்கப்படுகிறது
  • தேசிய ஒருங்கிணைப்பு , கலாச்சரம் ,பண்பாடு , கல்வி , சமூகம், சமூகசேவை, பத்திரிக்கை போன்ற துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இவ்விருது வழங்கப்படும்
  • 5 லட்ச ரூபாய் மற்றும் சான்றிதழ் இந்திரா காந்தி இறந்த தினமான அக்டோபர் 31 ஆம் தேதி வழங்கப்படும்
  • 1985 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது
  • இந்திய விமானப்படை வீரர்கள் நீலக்கொடி -2017 இராணுவ ஒத்திகையில் பங்கேற்க இஸ்ரேல் சென்றுள்ளனர்.இவ்வொத்திகை ஆண்டுதோறும் இஸ்ரேல் விமானப்படையால் நடத்தப்படுகிறது. இந்தியா கலந்துகொள்வது இதுவே முதல்முறை.
  • 7வது ஆசிய ஆற்றல் வட்டமேசை மானாட்டில் கலந்து கொள்ள தாய்லாந்து தலைனகர் பேங்காங் சென்றார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
  • நாட்டிலேயே முதன்முறையாக பெங்களூரு பிரிகேட் சாலையில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பெண்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
  • பூட்டானிய அரசர் ஜிக்மி கேசர் நாம்கெயல் வாங்சக், அரசி ஜெட்சன் பேமா வாங்சக், இளவரசர் ஜிக்மி நாம்கெயல் வாங்சக் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர்.

பூட்டான் பற்றிய அடிப்படைத் தகவல்கள்

  • தெற்காசியாவில் முழுவதும் நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ள நாடு
  • தெற்காசியாவில் மாலத்தீவுக்கு அடுத்தபடியாக குறைந்த அளவு மக்கள் தொகையை கொண்டுள்ளது
  • பூட்டான் தலைனகரம் ; திம்பு , இதன் பாரளமன்றம் ஷொட்கு (Tshogdu) என அழைக்கப்படுகிறது.
  • காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கப் பதக்கம் வென்றார்.
  • டி 20 பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
  • மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்.

 

volcano

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 26 & 27 PDF

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 26 மற்றும் 27 / எரிமலைகள் பற்றிய அறிமுகம்.

  • சூரிய ஒளியில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்காக தமிழக அரசு நான்கு நிறுவனங்களுடன் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கூடுதல் தகவல்கள்

  • ஒப்பந்தத்தில் அதிகப்படியாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திடம் (என்.எல்.சி.) இருந்து 709 மெகாவாட் மின்சாரம் பெறப்படும்.
  • திட்டத்துக்கு ஒரு மெகாவாட்டுக்கு ரூ.6 கோடி வீதம் 1,500 மெகாவாட்டுக்கு மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும்.
  • திட்டத்தின் முதல் கட்டமாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது என்.எல்.சி. இந்தியா, ராசி கிரீன் எர்த் எனர்ஜி, நர்பேராம் விஸ்ராம், என்வீஆர் எனர்ஜி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தொடர்பான கூடுதல் தகவல்கள்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy)

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவிவெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் ஆகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பமானது சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீர்மின்சாரம், உயிர்த்திரள் ஆற்றல், உயிரெரிபொருட்கள் என்பவற்றை உள்ளடக்கி உள்ளது

சூரிய சக்தி

சூரிய ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து நேரடியாக பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் (solar energy) எனப்படுகிறது. சூரிய ஆற்றல் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் மற்ற மீள உருவாக்கக்கூடிய ஆற்றல்களான, காற்றாற்றல், நீர்மின்னியல், மற்றும் உயிர்த்திரள் (biomass) ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு பெருமளவில் துணை புரிகிறது. பூமியில் விழும் சூரிய ஆற்றலில் மிகவும் சிறிய பகுதியே ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது.

சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகிறது. சூரிய ஓளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Photovoltaic).
சூரிய வெப்பத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Solar Thermal). சூரிய ஆற்றலை பெற்று, மின்சாரமாக மாற்றி, சேமித்து பயன்படுத்த ஏதுவாக்கும் கருவி ஒருங்கமைப்பை சூரிய ஆற்றல் ஒருங்கியம் எனலாம். அது பின்வரும் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.

  1. பல சூரியக்கலங்கள் (solar cells) சேர்ந்த சோலார் தகடுகள்(solar panels)
  2. ஒருங்கிய கட்டுப்படுத்தி (Controller)
  3. மின்கலம் (battery) (மின்னாற்றலைத் தேக்கிவைக்க
  4. நேர்மாற்றி (Inverter) (தகடுகள் உற்பத்தி செய்யும் நேர் மின்சாரத்தை மாறுதிசை மின்சாரமாக மாற்ற)

தமிழ் நாடு சூரிய மின்சக்தி கொள்கை 2012

தமிழகத்தை பொறுத்தவரை, ஆண்டுக்கு 300 நாட்கள், தெளிவான சூரிய ஒளி கிடைத்து வருகிறது. சூரிய ஒளி மின்சாரத்தை உருவாக்க, தென் தமிழக பகுதிகள், நாட்டிலேயே மிகப் பொருத்தமான பகுதிகளாக விளங்குகின்றன. இதை கருத்தில் கொண்டும், தற்போது நிலவும் மின் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாகவும், சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்க, தமிழக அரசு, “தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை – 2012’யை உருவாக்கியுள்ளது. சூரிய சக்தி மூலம் அடுத்த மூன்றாண்டுகளில், ஆண்டுக்கு 1,000 மெகாவாட் வீதம், 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், சூரிய சக்தி மின்சாரத்தை உருவாக்கும் முக்கிய பகுதியாக தமிழகத்தை உருவாக்குதல், உள்நாட்டிலேயே சூரிய சக்தி சாதனங்களை உருவாக்கும் வசதி, சூரிய சக்தி மின்சாரம் தொடர்பான, ஆய்வு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை இதன் முக்கிய நோக்கம்.

சூர்யஒளி நகரங்கள் ( Solar Cities)

மத்திய புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சகம்,  சோலார் நகரங்களை உருவாக்குவதில் முனைப்புடன் இயங்குகிறது. இதன் படி 10% மின்தேவையை சூர்யசக்தியின் மூலம்  தீர்க்க முடிவு செய்துள்ளது. இவ்வழியில் தமிழ்நாட்டில் கோயமுத்தூர் உள்ளிட்ட நாடு முழுதும் 31 நகரங்களை தேர்ந்தெடுத்து, அவைகளுக்கு 50 லட்சம் வரை நிதி அளித்துள்ளது.

 

  • நிகழாண்டு சாஸ்த்ரா – ராமானுஜன் விருதுக்கு சுவிஸ் நாட்டு கணிதவியல் அறிஞர் மரினா வியாசோவ்ஸ்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

எதற்காக தேர்வு செய்யப்பட்டார்?

 

கணிதவியலில் மிகச் சிறந்த திறன் படைத்தவர். எண் கோட்பாடுகளில் பல தீர்வுகளை ஏற்படுத்தியவர். இப்போது, எண் கோட்பாட்டில் புதிய சாதனை படைத்துள்ள அவருக்கு சாஸ்த்ரா ராமானுஜன் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

சாஸ்திரா விருது பின்புலம்

 

ஆண்டுதோறும் கணிதவியலில் சாதனை படைக்கும் இளம் கணிதவியலாளர்களுக்கு சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சாஸ்த்ரா ராமானுஜன் விருது வழங்கப்படுகிறது. கணித மேதை ராமானுஜன் தனது 32 ஆண்டுகால வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளைப் படைத்ததைக் கருத்தில் கொண்டு சாதனைப் படைக்கும் 32 வயதுக்குள்பட்ட கணிதவியலாளர்களுக்கு 2005 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.

 

  • தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத மாநிலமாக உருவாக்கும் இலக்கில் செயல்பட்டு வருவதாக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு மாநாட்டில் மாநில அரசு தெரிவித்தது.

கூடுதல் தகவல்கள்

  • தேசிய குழந்தைத் தொழிலாளர் நலத் திட்டம் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது
  • மாவட்டந்தோறும் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கடந்த 2007, நவம்பர் 11-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. உணவகங்கள், தொழிற்சாலைகள், வீட்டு வேலை ஆகியவற்றில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனரா என்பது குறித்து இக்குழு அவ்வப்போது ஆய்வு செய்து அறிக்கை அளித்து வருகிறது.
  • ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் மாநில அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

குழந்தைத் தொழிலாளர் தொடர்பான பிற செய்திகள்

  • குழந்தைத் தொழிலாளர் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
  • அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் இருந்து குழந்தைத் தொழிலாளர் முறையை முழுவதும் ஒழிப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
  • இந்தியாவை 2022ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர் இல்லாத நாடாக உருவாக்குதல்

பென்சில் தளம் ( PENCIL PORTAL)

குழந்தைத் தொழிலாளர்கள் தொடர்பான ஆய்வுக்கு உதவும் ‘பென்சில்’ எனும் இணையதளம், கருத்தரங்கில் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆபரேஷன் ஸ்மைல்

காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சகத்தால் 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆபரேஷன் ஸ்மைல் எனும் பெயரில் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், இதுவரையிலும் நாடு முழுவதும் காணாமல் போன 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன

  • சர்வதேச அளவில் தொழில் துறையில் சிறந்து விளங்கும் பெண்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இந்திரா நூயி, சந்தா கோச்சார், ஷிகா சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

கூடுதல் தகவல்

  • அமெரிக்காவில் தொழில்துறையில் சிறந்து விளங்கும் பெண்கள் பட்டியலில் பெப்ஸிகோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) இந்திரா நூயி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • அமெரிக்காவுக்கு வெளியே தொழில் துறையில் தலை சிறந்த பெண்கள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார் 5-ஆவது இடமும்,
  • ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் ஷிகா சர்மா 21-ஆவது இடமும் பெற்றுள்ளனர்.
  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டும் சக்திகள் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் , ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன்
  • நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆய்வு நடத்த விவேக் தேவ்ராய் தலைமையில் 5 நபர் அடங்கிய குழுவை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார்.
  • ‘ஆப்கானிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தை அனுப்பும் திட்டமில்லை; அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானில் வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து தனது பங்களிப்பை அளிக்கும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வந்தார். தில்லியில் அவர், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார்.
  • காண்ட்லா துறைமுகத்தின் பெயர் தீனதயாள் உபாத்யா என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
  • அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) 75 ஆவது ஆண்டு விழா குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பங்கேற்றார்.

கூடுதல் தகவல்

  • இவ்வமைப்பு 1942 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அமைப்பாகும்

குடியரசுத்தலைவரின் கவலை

இந்தியாவில் உள்ள அறிவியல் ஆய்வாளர்களில் பெண்களின் எண்ணிக்கை 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. ஐஐடி-யில் 10 சதவீதம் அளவுக்கு மட்டுமே பெண்கள் கல்வி பயிலுகின்றனர். அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது கவலையளிக்கிறது. இந்த பாலினப் பாகுபாட்டுடன் நாம் எவ்வித சாதனையைப் படைத்தாலும் அது முழுமையானதாக இருக்காது.

பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும் போதுதான் வளர்ச்சி குறித்த நாட்டின் இலக்குகள் முழுமையடையும். பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது இப்போது வரை தீர்க்கப்படாத பிரச்னையாகவே உள்ளது.
இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகளில் 3 முதல் 4 சதவீதம் பேர் மட்டுமே, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சிலில் உள்ளனர். எனினும், இந்திய அறிவியல் துறையில் அவர்களின் பங்களிப்பு 10 சதவீதம் அளவுக்கு உள்ளது. தேச வளர்ச்சியில் இந்த ஆய்வு மையத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

  • கோர்க்காலாந்து தனி மாநிலம் கோரி டார்ஜீலிங்கில் கடந்த நூறு நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்தக் கோர்க்காலாந்து போராட்டத்தை ஜிஜேஎம் கட்சியினர் திரும்பப் பெற்றுள்ளனர்.

கூடுதல் தகவல்கள்

  • மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜீலிங் மலைப்பிரதேசப் பகுதிகளை உள்ளடக்கிய கோர்க்காலாந்து பிராந்தியத்தை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரும் கோரிக்கை அங்கு நீண்டகாலமாக இருந்து வருகிறது. கடந்த 1907-ஆம் ஆண்டு முதல் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அங்கு வெவ்வேறு காலக்கட்டங்களில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    ஏன் தனிமாநில கோரிக்கை?

டார்ஜீலிங் மலைவாழ் மக்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாப்பதற்காகவே இந்தத் தனி மாநிலக் கோரிக்கையை அப்பகுதியினர் முன்வைத்து வருகின்றனர்.

  • மும்பை மாஸாகான் கப்பல் கட்டும் தளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இந்தியக் கடற்படையில் 27/9/17 இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் தராஸா அதிவிரைவு தாக்குதல் கப்பல்.

கூடுதல் தகவல்

  • இந்தியக் கடற்படையில் நீண்ட காலம் பணியாற்றிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு ஓய்வு அளிக்கப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து, ‘திட்டம்-75’ என்ற பெயரில் புதிய நீர்மூழ்கிகளை இந்தியாவிலேயே தயாரிக்க கடந்த 2005-ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது
  • இந்தியாவில் வரும் 2020-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களுக்கான 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதலுக்காக தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருண் சுந்தர்ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

செளபாக்யா திட்டம்

நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மின்சார வசதி கிடைக்க வழி செய்யும் ரூ.16,320 கோடி மதிப்பிலான ‘செளபாக்யா’ திட்டத்தை பிரதமர் மோடி தில்லியில் திங்கள்கிழமை 25/09//2017 தொடங்கி வைத்தார்/

முக்கிய அம்சங்கள்

  • இந்த திட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் ரூ.500 செலுத்தி மின் இணைப்பை பெறலாம்; 10 மாத தவணையில் தொகையை செலுத்தும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • மண்ணெண்ணெய்க்கு மாற்று
  • கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்டவைகளை ஒருங்கிணைத்து ஒரே திட்டமாக செளபாக்கியா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும்.
  • 2011 சமுக பொருளாதார கணக்கெடுப்பின் படி பயனாளர்கள் கணக்கிடப்படுவார்கள். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரிகள் உரியவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற வேண்டும். மொத்த செலவினத்தில் 60% மத்திய அரசும், 10% மாநில அரசும் 30% கடனாகவும் கொடுக்கப்படும்.

இது தொடர்பான முந்தைய திட்டங்கள்

தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா

ஃபீடர்களை பிரிப்பது, துணை மின்கடத்தல், விநியோக வசதிகளை பலப்படுத்துவது, நுகர்வோர் இணைப்புகளில் மட்டுமின்றி, விநியோக டிரான்ஸ்பார்மர்கள், ஃபீடர்களிலும் மின்சாரத்தை அளவிடுவது, கிராமப்புறங்களை மின்மயமாக்குவது,குறு மின் கட்டமைப்பு, பகுதி மின் கட்டமைப்பு விநியோக இணைப்புகளை வழங்குவது ஆகியவை இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளாகும்.

ராஜிவ் காந்தி கிராமின் வித்யுத்திகரன் யோஜனா 2005

இத்திட்டத்தின் படி ஊரகப்பகுதியில் உள்ள  அனைத்து  கிராமங்களுக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை மின்சார வசதியளித்தல் என்பது நோக்கமாகும்.

  • காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் உள்ள வூலர் ஏரியினனை தூய்மைப்படுத்தி குப்பை பொறுக்கும் சிறுவன் பிலால் ஒருவன் தனி ஆளாக வருடத்திற்கு 12 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்பொழுது பிலால் ஸ்ரீநகர் நகராட்சி ஆணையத்தின் விளமபரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளான்.
  • இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள அகுங் எரிமலை சீறத் தொடங்கியதையடுத்து பாதுகாப்பு கருதி அதனை சுற்றியுள்ள 57,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

 

எரிமலைகள்

புவிப்பரப்பில் உள்ள சிறு துவாரம் அல்லது பிளவின் வழியாகப் புவியின் கீழ் அடுக்குகளிலிருந்து மேக்மா முதலிய பொருள்கள் வெளிப்படுவதை எரிமலை எனலாம். மேக்மா வெளிப்படும்போது அதன் வெப்ப =நிலை அதிகமாப் இருப்பதாலும் அதிலுள்ள வாயுக்கள் எரிவதாலும், இப்பொருள்கள் ஓரிடத்தில் குவிந்து மலைபோல் தோற்றமளிப்பதாலும் இவற்றை எரிமலை என்கிறார்கள். எரிமலைகளில் சில பலத்த சத்தத்துடன் வெடிக்கும் தன்மைடையவை. சிலவற்றில் சத்தம் ஏதும் இல்லாமல் மேக்மா முதலிய பொருள்கள் வெளிப்படுகின்றன.

எரிமலைகளை அவை செயல்படும் விதத்தை வைத்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் 1. செயல்படும் எரிமலை (Active valcano), 2. தூங்கும் எரிமலை (Dormant valcano), 3. செயலிழந்த எரிமலை  (Extinct valcano)

செயல்படும் எரிமலைகள்

இவைகள் எப்போதாவது மேக்மாவை கக்கி இருக்கலாம்  இது மீண்டும் மேக்மாவை வெளியிடலாம் எனக் கருதும் எரிமலைகள் செயல்படும் எரிமலைகள்.

தூங்கும் எரிமலைகள்

இவைகள் மேக்மாவை வைத்துக்கொண்டிருக்கின்றன ஆனால் எப்போது வேண்டுமானலும் மேக்மாவை வெளியிடும் என எதிர்ப்பாக்கப்படுவை தூங்கும் எரிமைலைகள் என அழைக்கப்படுகிறது.

செயலிழந்த எரிமலை

இவைகள் எல்லா மேக்மாவையும் வெளியிட்டு விட்டது  எதிர்காலத்தில் மேக்மாவை வெளியிடாது எனக்கருதும் எரிமலைகள் ஆகும்.

வடிவம் மற்றும் அளவின் அடிப்படையில்

ஒவ்வொரு எரிமலையின் வரலாறும் தனிசிறப்பு வாய்ந்தது. எரிமலைகள், அதன் வடிவம் மற்றும் அளவு போன்றவற்றில் வேறுபடுகின்றன. எனினும் எரிமலைகள் காட்டுகிற வெடித்தல் முறை ஒரளவிற்கு ஒத்திருப்பினின், அதன் அடிப்படையில் எரிமலைகளை வகைப்படுத்தலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். எரிமலைகள் வெடிக்கிற தன்மைகள் மற்றும் அவற்றின் வடிவ பண்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எரிமலைகளை மூன்று விதமாக வகைப்படுத்தலாம். அவையாவன:

(1) கேடய எரிமலைகள்,  (2) கரி சிட்டக்கூம்புகள் மற்றும் (3) பல சிட்டக்கூம்புகள்.

கேடய எரிமலைகள் (Shield  Volcanoes): எரிமலையின் மத்தியிலுள்ள முகட்டு வாய் ஒன்றிலிருந்து லாவா பெருமளவில் வழிந்து, விரிந்து பரவுகிறபொழுது, அந்த எரிமலை கும்மட்ட ( DomeDome) வடிவத்தையொத்தத் தோற்றத்தைப் பெறுகிறது. இவ்வகை எரிமலைகள் கேடயளரிமலைகள் அழைக்கப்படுகின்றன. கேடயளரிமலைகள் பசால்டிக்  லாவாவினால் கட்டப்படுகிறது.

கரி சிட்டக்கூம்புகள்Cinder Cinder Cones): கரிச்சிட்டக் கூம்புகள் உருவத்தில் மிகச் சிறியவை. சுமார் 100 முதல் 400 மீட்டர் வரை உயரத்தைக் கொண்டிருப்பவை. மத்திய முகட்டுவாய் ஒன்றிலிருந்து பெருத்த ஒசையுடன் அதிவேமாக வெடித்துச் சிதறுகிற பாறை துண்டுகளால் ஆனவை. மேலே எழுகிற மாக்மாவினுள் வாயுக்கள் பெரும் அளவில் திரளுகிற பொழுது, கரி சிட்டக் கூம்புகள் உருவாகின்றன. இவை பசால்டிலிருந்து அதற்கு இடைப்பட்ட கூட்டுப்பொருள் வரையிலான மாக்மாக்களால் வளர்ச்சிப் பெறுகின்றன. இவ்வகை எரிமலைகள் அடுத்தடுத்துக் கூட்டமாக காணப்படும்.

பல்சிட்டக்கூம்பு  (Composite Cones): புவியின் பரப்பில் காணப்படுகிற எரிமலைகளுள், ஒவியம் போன்று கண்ணைக்கவருகிற தோற்றத்தைக் கொண்ட எரிமலைகளை, “பல்சிட்டக்கூம்புகள் என அழைக்கிறோம் இவை நிலத்தின் மேல்வழிகிற லாவாவினாலும் பெரும் ஒசையுடன் வெடித்துச் சிதறுகிற பாறைகளினாலும் மாறிமாறி அமைக்கப் பட்ட அடுக்குகளால் ஆனவை. இவற்றின் உயரம் 100 மீ-3500 மீட்டர் வரை காணப்படும். பல்சிட்டகூம்புகளின் மாக்மா, பசால்ட் முதல் கிரானைட் வரையிலான மாறுபட்ட வேதியல் பண்புகளை கொண்டிருக்கிறது.

மேக்மா

புவிக்கடியில் 50-800 கி. மீட்டர் ஆழத்தில் போதுமான அளவுக்கு அழுத்தம் குறைந்தாலும் அல்லது போதுமான” அளவு வெப்பம் அதிகரித்தாலும் பாறைகள் உருகுகின்றன. இவ்வாறு புவிக்கடியில் உருகிய நிலையிலுள்ள பாறைகளை மேக்மா என்பர். மேக்மாவோடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகன் மற்றும் அசைவுகளை எரிமலை எழுச்சிக் கோட்பாடு என்பர்.

உருகிய நிலையிலுள்ள பாறை எந்தத் திசையில் அழுத்தல் மிகக் குறைந்து காணப்படுகிறதோ அத்திசையில் வழக்கமாக மேல் நோக்கிச் செல்கிறது. இவ்வாறாகக் கொதி திலையிலுள்ள திரவம் ஆங்காங்கே பாறை அடுக்குகளுக்கு இடையே உள்ள கீறல்கள் மற்றும் வெற்றிடங்களில் பாய்ந்து புவிக்கடியிலேயே திடநிலையை அடைகிறது. சில நேரங்களில் இஃது அடைப்பற்ற எரிமலையின் வாயிலாகவோ அல்லது புவிக்கடியில் உள்ள பாறை களிலுள்ள வெடிப்புகள் வழியாகவோ புவியின் மேற்புறத்தை அடைகிறது. சில நேரங்களில் இப்பாறைக் குழம்பு புவிக்கடியில் வெகு ஆழத்தில் உறைந்து போகிறது. இவ்வாறு உறைந்த மேக்மாவை அக்னிப்பாறைகள் (தீப்பாறைகள் நெருப்பு- Igneous Rocks) என்பர். இவ்வாறு மேக்மா பல்வேறு ஆழங்களில் பல்வேறு நிலைகளில் உறைவதற்கேற்ப பல பெயர்கள் கொடுக்கப்பட் டுள்ளன. புவிக்கடியில் குளிர்ந்து இறுகித் தோன்றிய அக்னிப் பாறைகளைத் தலையீட்டு (intrusive ) அக்னிப் பாறைகள் என்றும், மற்றும் புவிக்குமேல் வந்து குளிர்ந்து தோன்றிய பாறைகளைத் தள்ளல் பாறைகள் (extrusive  rocks) என்றும் கூறுவர். பாத்தோலித், லாக்கோலித், கிடைப்பாறை (sill Si) மற்றும் செங்குத்து அல்லது டைக்குப் (Dyke ) பாறைகள் ஆகியவை தலையீட்டு அக்னிப்பாறையின் சில வடிவங்கள் ஆகும்.

எரிமலையின் அமைப்பு

பாத்தோலித் ( batholithsBatholith) என்பது குமிழ் வடிவமான பாறைத் திரள் தலையீட்டு அக்னிப்பாறை பெரும்பாலும் கிரானைட்டால் ஆனது. இது லாக்கோலித்தைக் காட்டிலும் மிகப் பெரியதும் பல நூறு சதுரக் கிலோமீட்டர் பரந்தும் காணப்படும். அவை அடிப்புறத்தில் காணப்படுவதோடு வெகு ஆழம் வரை தொடர்ந்து காணப்படுகின்றன. லாக்கோலித் தலையீட்டு மேக்மாவால் ஆனதும் புவியோட்டிற்கு அடியில் படிவதும் பூமியின் மேற்பரப்பிற்கு வராததும், மேல்பரப்பு வளைந்தும் காணப் படுவதுமாகும். மேக்மா இரண்டு பாறை அடுக்குகளுக்கு இடையே போய் உறைந்து காணப்படும் அமைப்பைச் சில் (s ill ) என்கிறோம். அதனுடைய கனம் சில அங்குலம் முதல் பல நூறு அடிவரை உள்ளது. ஆனால் அதனுடைய இடை நீளம் அதன் கனத்தைப் போல் பன்மடங்காக உள்ளது. மேக்மா துளை வழியாக உந்தி வரும்போது உண்டாகும் சில் ( sill si) சில நேரங்களில் டைக்காக (dykedyke) மாறுகிறது. ஏனெனில் டைக், சில் போல் கிடையாக இல்லாமல் செங்குத்தாக உள்ளது.

பூமிக்கடியில் உள்ள மேக்மா மிக மெதுவாகக் குளிர்ச்சி அடைகிறது. அவ்வாறு மிக மெதுவாகக் குளிர்ச்சி அடையும்

எரிமலைச் செயல்பாடு

போது பல்வகைப்பட்ட மூலகங்கள் படிகங்க்ளாகின்றன. புவிக் கடியில் வெகு ஆழத்தில் சென்று உறைகின்ற பாறைகள் முழுவதும் படிக வடிவம் கொண்டனவாக உள்ளன. அவ்வகையான படிக வடிவ அக்கினிப் பாறைகளைப் பாதாளத்திலமைந்த பாறைகள் ( Plutonic Plutonic) என்பர். கிரானைட் ( Granite granite) இதற்குச் சிறந்த உதாரணமாகும். உருகிய நிலையிலுள்ள பாறைப் பொருள்கள் பூமியின் மேற்பரப்பில் மிக வேகமாக உறைவதால், அவை முழுவதும் படிக வடிவம் பெற்று இருப்பதில்லை. எனவே அவை பளபளப்பான இழைத்தன்மையுடையனவாய் உள்ளன.

எரிமலைச் செயல்கள்  (Volcanic Activities)

பூமிக்கடியில் உருகிய நிலையிலுள்ள பாறைக் குழம்பு தப்பி புவியின் மேற்பரப்பிற்கு வருவதால் எரிமலைகள் உண்டகின்றன. இதற்குப் புவியின் உள்மையத்திலுள்ள உருகிய பாறைக் குழம்பு புவியின் மேற்பரப்பிற்குத் தப்பி வரப் பாதை வேண்டும். இப்படிப்பட்ட வழிகள் சற்றேறக்குறைய வட்ட வடிவமான பள்ளங்களோ அல்லது நீண்ட வெடிப்புகளோ ஆகும். இவ்விரண்டு வகையான வழிகளும் உலகில் எரிமலை வெடிப்புகளை உண்டாக்குகின்றன.

எரிமலை ஒரு சாதாரணமான கூம்பு வடிவுடைய குன்று ஆகும். இக் கூம்பின் மேற்பரப்பில் வட்டவடிவமாக உள்ளி பள்ளத்தை எரிமலைவாய் (  CraterCrater) என்று கூறுவர். இந்த எரிமலைவாயின் நடுவில் வழக்கமாக ஒரு பள்ளம் இருக்கும். இது உருகிய பாறைக் குழம்பை வெளியேற்றுவதற்கான வழியாகப் பயன்படுகிறது. இவ்வாறு உருகிய நிலையில் வெளியேறிய பாறைக் குழம்பை லாவா  ( LavaLawa) என்பர். ஓர் எரிமலை வெடிப்பு என்பது, எப்போதும் சாதாரணமாக உருகிய பாறைக் குழம்பை வெளிக் கக்குவதோடு மட்டுமல்லாமல் அதிபயங்கரமாக வெடிச் சப்தங்களையும் அடிக்கடி ஏற்படுத்துவதுண்டு. பெரியதும் மற்றும் சிறியதுமான பாறைத் துணுக்குகள் சில நேரங்களில் மிக உயரத்தில் தூக்கி எறியப்படுவதுண்டு. எரிமலைவாய் வழியாகப் பெருமளவு நீராவியும் மற்றும் வாயுக்களும் வெளிவருவதுண்டு. இவ்வாறு எறியப்பட்ட பெரிய பாறைத் துணுக்குகளை பரல்பாறை (breccias ) என்றும், சிறு துணுக்குகளைக் கரிசிட்டம் ( Cinder cinder) அல்லது சாம்பல் ” என்பர். மிக நுண்ணிய பொருள்களே எரிமலைத் தூசி ஆகும். உதாரணமாக, இம்மாதிரியான எரிமலை வெடிப்பில் நீராவியையும் மற்றும் தூசியையும் தாங்கிய கருமை நிறமுடைய பெரும் முகில்கள் வானளவு உயர்ந்து செல்வதோடு, பெரும் கன அளவுடைய, வெப்பநிலை மிக மிக அதிகமுள்ள நீராவி மற்றும் விஷ வாயுக்கள் வெடிப்பிற்கு முன் தோன்றுகின்றன. இம் முகில்கள் காற்றடிக்கும் திசையில் வெகு தூரத்திற்குப் பரவி இருக்கும். நீராவி மற்றும் மேல் எழும்பும் காற்று நீரோட்டங்கள் குளிர்ந்து மின்னல் இடியுடன் கூடிய பெருமழையாகப் பெய்யும்.

எரிமலை வெடிப்புக்குப் பின் எரிமலை கக்குதல் சாதாரணமாக மெதுவாக நடந்து கொண்டு இருக்கும். கூம்பு வடிவுடைய எரிமலையானது எரிமலை வெடித்துக் கக்கும்போதோ அல்லது அதன் பிறகோ திடப்பொருள்கள் மற்றும் திரவப் பொருள்கள் எரிமலை வாயைச் சுற்றி வட்டவடிவமாகப் படிவதால் இவ்வாய் வளர்ந்துகொண்டே போகிறது.

உலகில் உள்ள பல பழைய எரிமலைகளில் கக்குதல் தோன்றுவதில்லை. இவ்வெரிமலைகளை இறந்த எரிமலைகள் என்பர். தூங்குகின்ற எரிமலைகள் பல ஆண்டுகளாக நெருப்பைக் கக்குவது இல்லை. ஆனால், இஃது எந்த நேரத்திலும் கக்கக்கூடும். சுறுசுறுப்பான எரிமலையில் கக்குதல் எப்போதும் நடந்துகொண்டு இருக்கிறது.

எரிமலை வாயிலாக வெளிவந்த பாறைகள் சிதைவடைந்து செழிப்புள்ள மண்ணாக மாறுகிறது. தக்காணப் பீடபூமியின் வடமேற்குப் பகுதியில் பெரும்பகுதி கருமையான களிமண்ணால் மூடப்பட்டுள்ளது. எரிமலை விளைவால் தோன்றியவையே உருகிய பசால்ட் பாறை பெருமளவில் வெடிப்புகளின் வ்ழியாக வெளிவந்து இந்தப் பகுதியில் படிந்து உள்ளது. காலப் போக்கில் தக்காணப் பீடபூமியில் உள்ள பசால்ட்டிக் பாறை. சிதைவடைந்து கருமண்ணாக மாறியது.

செயல்படுகின்ற எரிமலை வட்டாரங்கள் (Regions of Volcanic Activity)

உலகில் எரிமலைகள் ஓர் ஒழுங்கற்ற தன்மையில் அமைந்துள்ளன. பசிபிக் பேராழியில் சில செயல்படும் எரிமலைகள் உள்ளன. ஜப்பான், பிலிப்பைன்ச் தீவுகள் மற்றும் கிழக்கு இந்தியத் தீவுகள் ஆகிய பிரதேசங்களில் செயல்படும் எரிமலைகள் உள்ளன. தென் அமெரிக்கா, மற்றும் வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில், அதாவது ஆண்டிஸ் மற்றும் கார்டிலிரா மலைத் தொடர்களில் பல செயல்படும் எரிமலைகள் உள்ளன. இமயமலையில் எரிமலைகள் இல்லை. மத்தியதரைக்கடல் பிரதேசத்தில் மிகப்பெரிய எரிமலைகளில் சிலவான வெசுவியஸ் (Vesuvius ) இத்தாலியிலும் எட்னா மலை சிசிலித் தீவிலும் உள்ளன.

எரிமலைகளின் பரவல் குறிப்பிடும்படியான புவியதிர்ச்சி தோன்றுகின்ற பிரதேசங்களில்தான் உள்ளது. இவை அண்மைக்காலத்து மலை அமையும் பிரதேசங்களில் காணப்படுகின்றன. புகழ் பெற்ற பசிபிக் மண்டலம் (Pacific  Belt) என்று சொல்லப்படும் பண்டலம் பசிபிக் பேராழியில் உள்ள கொப்பறையின் ஓரத்தில் அமைந்துள்ளது. இது தென் அமெரிக்காவிலிருந்து அலாஸ்கா வரையும், அலாஸ்காவிலிருந்து ஜப்பான் வரையிலும், ஜப்பானி லிருந்து பிலிப்பைன்ஸ் வரையிலும் பரந்துள்ளது. மத்திய தரைக்கடல் வட்டாரம், கிழக்கு மேற்காக மத்திய அமெரிக்கா விலிருந்து மேற்கிந்திய தீவுகள் வழியாக அசோர்ஸ் கேனரி தீவுகள் மற்றும் மத்தியதரைக்கடல், மத்தியதரைக் கடலிலிருந்து துருக்கி, ஈரான் மற்றும் இராக்கிலிருந்து கிழக்கிந்திய தீவுகள் செல்லுகையில், அது பசிபிக் மண்டலத்தின் குறுக்காகச் செல்கிறது. இஃது இவை இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் காட்டுகிறது. இளம் மலைகள் அதிகமான மடிப்புகளாலும் பிளவுகளாலும் தோன்றுகின்றன. அவ்வாறு படிப்புகள் தோன்றுகையில் பல பிளவுகள் தோன்றுகின்றன. புவியோட்டில் தோன்றிய இவ்வகையான பிளவுகளின் வழியாக மேக்மா மேலேறி எரிமலைக் கக்குதலும் மற்றும் தலையீட்டுதல் மற்றும் தள்ளல்களைத் தோற்றுவிக்கின்றன. எனவே, குறிப்பிடத் தக்க எரிமலைகளின் செயல்கள் ஒட்டு உரு அழிவதோடு தொடர்புள்ளதுபோலவும் தோன்றுகிறது.

பசுபிக் பெருங்கடல்  நெருப்பு வளையங்கள்

Admission Open for

  1. TNPSC Group I
  2. TNPSC GroupII ( Preliminary)
  3. VAO & Group 4

Classes Starts from October First Week

 

DOWNLOAD CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 26 & 27

 

605699-rajiv-mehrishi

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 25 PDF

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 25 / இந்திய கணக்கு தணிக்கை அலுவலர்/ செறிவூட்டப்பட்ட யுரேனியம்

 

  • மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை சார்பில் கைவினை பொருட்கள் மற்றும் சமையல் வகைகளின்சங்கமம் விழா (உனார் ஹட்) கண்காட்சியை புதுவையில் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி.
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று ( 25/9/2017) பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி கர் யோஜனா என்ற திட்டத்தை துவங்கி வைக்கிறார். இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமப்புரங்களுக்கும் மின்சாரம் வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம்.
  • அணுமின் நிலையங்களுக்குத் தேவையான யுரேனியத்தை பெறுவதற்காக உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது

 

யூரேனியம் பற்றிய கூடுதல் தகவல்கள்

 

கதிரியக்க தனிமமான யூரேனியம்  ஜெர்மனை சார்ந்த வேதியலாளர் மார்டின் கிளாபார்த் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடைய அனு எண் 92 ஆகும். இது பெரும்பாலும் பாறைகளுக்கு இடையே காணப்படும் ஒரு தனிமமாகும். யூரேனியத்தை நியூட்ரானைக் கொண்டு தாக்கும் போது பிளவு பட்டு ஆற்றல் உற்பத்திக்கு காரணமாகிறது.

 

செறிவூட்டப்பட்ட யூரேனியம் என்றால் என்ன?

 

நீங்கள் ஒரு கிலோ உருளைக் கிழங்கு வாங்கினால் எல்லாமே ஒரே அளவில் இருப்பது கிடையாது. ஏதோ இரு உருளைக் கிழங்குகள் பார்ப்பதற்கு ஒன்றாக இருந்தாலும் எடை வித்தியாசம் இருக்கும்.

 

அணுக்கள் விஷயத்தில் இப்படித்தான். சிறிய யுரேனியக் கட்டியாக இருந்தாலும் அதில அடங்கிய கோடானு கோடி அணுக்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. சில யுரேனிய அணுக்கள் அதிக எடை கொண்டவை. அபூர்வமாக வேறு சில யுரேனிய அணுக்கள் சற்றே எடை குறைந்தவை. எடை வித்தியாசத்துக்குக் காரணம் உண்டு.

 

எல்லா யுரேனிய அணுக்களிலும் சொல்லி வைத்த மாதிரி 92 புரோட்டான்கள் இருக்கும். எலக்ட்ரான்களும் அதே எண்ணிக்கையில் இருக்கும். ஆனால் யுரேனிய அணுக்களின் மையத்தில் புரோட்டான்களுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கின்ற நியூட்ரான்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் உண்டு

சிலவற்றில் 143 நியூட்ரான்கள் இருக்கும். இந்த எண்ணிக்கையுடன் புரோட்டான்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் 235 வரும். ஆக இந்த வகை அணுக்களுக்கு யுரேனியம்-235 ( சுருக்கமாக U-235) என்று பெயர்.  ஆனால் யுரேனியக் கட்டியில் பெரும்பாலான அணுக்களில் 146 நியூட்ரான்கள் இருக்கும். இந்த வகை அணுக்களை U-238 என்று குறிப்பிடுவர்.

இயற்கையில் கிடைக்கின்ற  எந்த ஒரு யுரேனியக் கட்டியிலும் 0.7 சதவிகித அளவுக்குத் தான் U-235 அணுக்கள் இருக்கும். மீதி அனைத்தும் U-238 அணுக்களே. ஒரு யுரேனியக் கட்டியிலிருந்து U-235 அணுக்களை மட்டும் தனியே பிரிக்க முடியும். இதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் உண்டு என்றாலும் எல்லாமே சங்கடம் பிடித்த வேலை. பெரும் செலவு பிடிக்கக்கூடியது. இவ்விதமாகப் பிரித்து
ஒரு யுரேனியக் கட்டியில் U-235 அணுக்களின் சதவிகித அளவை அதிகப்படுத்துவது தான் செறிவேற்றுதல் ஆகும்.செறிவேற்றப்பட்ட யுரேனியத்தை ஆங்கிலத்தில் enriched uranium  என்பார்கள்

கூடுதல் தகவல்

  • சர்வதேச அளவில் யுரேனியம் ஏற்றுமதியில் உஸ்பெகிஸ்தான் 7-ஆவது இடத்தில் உள்ளது.
  • ஆஸ்திரேலியாவில் இருந்து யுரேனியம் கொண்டு வரும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தியா ஆஸ்திரேலியா இடையே இரு நாடுகள் இடையே கடந்த 2014-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
    கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அது நடைமுறைக்கும் வந்துவிட்டது. எனினும், ஆஸ்திரேலியாவில் எடுக்கப்படும் யுரேனியம் இயற்கையாகவே உயர்தரமாக இல்லை.
  • மத்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளராக (சிஏஜி), மத்திய உள்துறையின் முன்னாள் செயலர் ராஜீவ் மஹரிஷி திங்கள்கிழமை பொறுப்பேற்கவுள்ளார்
  • நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது
  • தொடர்ந்து நான்காவது முறையாக ஜெர்மனின் அதிபராக பதவியேற்கிறார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கூடுதல் தகவல்

  • அதிபர் தேர்தலில் மூன்று முறை அதிபராகாப் பதவி வகித்துள்ள ஏஞ்சலா மெர்கல் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் போட்டியிட்டார்.
  • அவருக்கு போட்டியாக சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த மார்டின் ஸ்கல்ஸ் போட்டியிட்டார்.
  • இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா.

 

கணக்கு தணிக்கை அலுவலர் (The Comptroller and Auditor-General of India)

பாராளுமன்றமுறை ஜனநாயகத்தின் இன்றியமையாத தேவை சுதந்திரமான தணிக்கைக்கு ஏற்பாடு செய்வதாகும்., பாராளுமன்ற அடிப்படையைக்கொண்ட அரசாங்கத்தில் நிர்வாகம் அதனுடைய எல்லா நடவடிக்கைகளுக்கும் சட்டத்துறைக்குப் பொறுப்புடையதாக இருக்கிறது. இந்த நிர்வாகப் பொறுப்பை, சட்டத்துறை திறமையோடு நிறைவேற்றுவதற்கு நிர்வாகத் துறையின் நடவடிக்கைகளைச் சரிபார்க்கவும், அவை ஒவ்வொன்றைப்பற்றியும் அதனுடைய தீர்ப்புகள் பொருத்தமான முறையில் தகுதியுடையனவாக இருந்தால்தான் முடியும். ஒரு சில நிர்வாக நடவடிக்கைகளை யார் வேண்டுமானலும் தணிக்கை செய்யமுடியுமென்றாலும், வேறு சிலவற்றைச் சாதாரண மனிதர்கள் தணிக்கை செய்வது கடினமாகும். நிர்வாகத்தினால் செய்யப்பட்ட நிதி வரவுசெலவுகள் சரியான முறையில் செய்யப்பட்டனவா அல்லவா என்பதை அறிய, கணக்குகளைச் சோதிப்பதும் மதிப்பிடுவதும் தொழில் நுணுக்கத் துறையைச் சேர்ந்த வேலையாகும். பாராளுமன்றம் பொதுவாக, சாதாரணமானவர்களை உடையதாக இருப்பதால், அத்தகைய தணிக்கையைச் செய்வதற்குப் பொருத்தமான  அமைப்பன்று. இருப்பினும், அரசாங்கத்தின் நிதிபற்றிய நடவடிக்கைகளைத் தணிக்கை செய்யவேண்டியதும் வரி செலுத்தியவர்களின் பணம் சரியானவாறு செலவழிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டியதும் பாராளுமன்றத்தின் பணியாகும். இக் காரியத்திற்குப் பாராளுமன்றம், நிபுணர் ஒருவரின் உதவியைப் பெறவேண்டியது அவசியமாகிறது. ஆகையால்தான் கணக்கு தணிக்கை அலுவலர் பதவி, பாராளுமன்றமுறை மக்களாட்சியின் இன்றியமையாத ஓர் அம்சமாகிறது. கணக்கு தணிக்கை அலுவலர் சிறப்பு ஆலோசனை தான்  பாராளுமன்றம் திறமையோடு அதன் வேலையைச் செய்வதற்கு உதவுகிறது. அத்தகையதொரு முக்கியப் பணியைச் செய்வதால்தான் கணக்கு தணிக்கை அலுவலர் பாராளுமன்ற முறை அரசாங்கத்தின் இயக்கத்தில் இன்றியமையாததொரு கருவியாகக் கருதப்படுகிறார். இத்துறையில் செய்யப்படுகின்ற முக்கியமான பணிதான் அவருடைய பதவியை (office) நம்முடைய மக்களாட்சி அரசியலமைப்பின் நான்கு தூண்களில் ஒன்றாக ஏற்படுத்துகிறது. சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவை இதர மூன்று தூண்களாகும்.

கணக்கு தணிக்கை அலுவலர் பதவியைப்பற்றிய அரசிகம்லமைப்பு ஏற்பாடுகளில் குறிப்பிடத்தக்க புதுமை எதுவுமில்லை. அத்தகைய பதவி (இந்தியப் பொதுத் தணிக்கையாளர்) 1919ஆம் ஆண்டிலிருந்தே இந்திய அரசியலமைப்பு இயந்திரத்தின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்துவந்திருக்கிறது. இப்பதவியைப் பற்றிய கருத்தே இங்கிலாந்திலிருந்து வருவதாகும். அங்கு இது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வரலாற்றையுடையதாக இருக்கிறது.

கணக்கு தணிக்கை அலுவலரின் மேம்பாடு

இந்தியாவில் தணிக்கைத்துறைத் தலைவர் முதல்தடவையாக சட்டபூர்வமான அங்கீகாரம் பெற்றது 1919ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தினலாகும். அத்தகைய அங்கீகாரம், நிர்வாகத் துறையினின்றும் முழுச் சுதந்திரமாக அவர் நடப்பதற்கு இயலாது . கவுன்சிலில் அங்கம் வகித்த இந்திய அமைச்சரினால் விதிக்கப்படும் பொதுவான அல்லது சிறப்பு உத்தரவுகளுக்குட்பட்டுத் தணிக்கைத்துறைத் தலைவர் ஒரு தணிக்கையைச் செய்யவேண்டும். அரசாங்கக் கணக்குகளைப் பற்றிய அவருடைய அறிக்கைகள் அந்த அதிகாரிக்கு கவர்னர் ஜெனரல் மூலமாக அனுப்பப்படவேண்டும். 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம் தணிக்கைத்துறைத் தலைவரைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய மந்திரிக்கு இருந்த அதிகாரத்தை ஒழித்து அவருடைய சுதந்திரத்தைக் கணிசமாக அதிகரித்தது. தணிக்கைத்துறைத் தலைவர் அவருடைய ஆண்டுத் தணிக்கை அறிக்கைகளைச் சம்பந்தப்பட்ட சட்டசபைகளுக்கு இந்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள்மூலமாக அனுப்பவேண்டும்.

பாரளாமன்ற ஜனநாயகத்தில், தணிக்கை செய்வதற்கு சுதந்திரமான அமைப்பு  அவசியமென்று உணர்ந்து அரசியலமைப்பைப் படைத்தவர்கள் முழுச் சுதந்திரமுடையவராகச் செய்தனர். அதனால் அவருடைய வேலைகளை அச்சமில்லாமலும் திறமையாகவும் அவர் செய்வதற்கியலும் என்று கருதப்பட்டது.

கணக்கு தணிக்கை அலுவலரின் சுதந்திரம்

  • 148ஆம் விதியின் கீழ்த் கணக்கு தணிக்கை அலுவலர், குடியரசுத் தலைவரின் கையால் எழுதப்பட்டு, முத்திரை பொறிக்கப்பட்ட ஆணை  ஒன்றினல், உச்ச நீதிமன்ற நீதிபதியொருவர் நியமிக்கப்படுவது போல நியமிக்கப்படவேண்டும்.
  • உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் எந்த அடிப்படைகள் காரணமாக எவ்வாறு பதவியிலிருந்து விலக்கப்படலாமோ, அவ்வாறே கணக்கு தணிக்கை அலுவலரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்,
  • தணிக்கைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட எவரும் பதவியேற்பதற்குமுன், குடியரசுத்தலைவர்  முன்பாக உறுதிமொழி செய்து அதன்படி நடப்பதாக, அதற்காகவே ஏற்படுத்தப்பட்ட முறைப்படி பிரமாணம் செய்யவேண்டும்.
  • அவருடைய சம்பளமும் இதர ஊழிய நிபந்தனைகளும் பாராளுமன்றத்தால் தீர்னிக்கப்படும். ஆனால், ஒருமுறை நியமிக்கப்பட்ட பிறகு வேலைக்கு வாராமல் விடுப்பெடுத்துக்கொள்ளல், பதவியிலிருந்து ஓய்வு பெறல் அல்லது ஓய்வெடுத்துக்கொள்ளவேண்டிய வயது ஆகியவைபற்றிய அவருடைய உரிமைகளோ அல்லது ஊதியமோ அவருக்குப் பாதகமாக மாற்றியமைக்கப்படக் கூடாது. தற்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியொருவர் பெறுகின்ற சம்பளம் போன்றே, தணிக்கைத்துறைத் தலைவரும் பெறுகிறார்,
  • பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகோ அல்லது விலகியபிறகோ, இந்திய அரசாங்கத்தின் கீழோ அல்லது ஏதாவதோர் மானில அரசாங்கத்தின் கீழோ வருவாய் உடைய பதவியொன்றை வகிக்கத் தகுதியற்றவராவார்.
  • அலுவலக ஊழியர்களது ஊதியங்கள், மற்றவைகள் உட்படத் கணக்கு தணிக்கை அலுவலர் அலுவலக நிர்வாகச் செலவுகளெல்லாம் இந்தியக் பொது நிதியிலிருந்து அளிக்கப்பட வேண்டும்.
  • இந்தியத் தணிக்கைக் கணக்குத் துறையில் செயலாற்றும் பணியாளர்களது பணிவிதிகளும், தணிக்கைத் துறைத் தலைவரது ஆட்சி அதிகாரங்களும், தணிக்கைத்துறைத் தலைவரைக் கலந்துகொண்ட பிறகு குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப் படவும் வகை செய்யப்பட்டிருக்கிறது. அத்தகைய விதிகள் அரசியலமைப்பின் ஷரத்துகளுக்கும், பாராளுமன்றத்தால் தற்காகச் செய்யப்படும் சட்டத்திற்குட்பட்டும் இருக்க வேண்டும், இந்த ஷரத்துகளை அவற்றேடு தொடர்புடைய உச்ச் நீதிமன்ற நீதிபதிகளைப்பற்றிய ஷரத்துகளோடு ஒப்பிட்டும் பார்க்கும்போது  இவ் இருவகையின் நோக்கப் பரப்பு, பெரும்பாலும் ஒரேமாதிரியாக இருப்பதையும், கணக்கு தணிக்கை அலுவலர் பதவி அதன் சுதந்திரத்தைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்ற அடிப்படையில் ஏற்பட்டிருக்கிறதென்பதையும் அது விளக்கும். அம் முறையில் கணக்கு தணிக்கை அலுவலர், அவருடைய பொறுப்புகள் நிறைவேற்றத்தைப் பொறுத்தவரை அரசியலமைப்பு ஆதாரத்தையும், அதனுடைய தெளிவான ஏற்பாடுகளினால் பாதுகாப்புடையதாக இருப்பதையும் துணையாகக்கொண்டு பணியாற்ற முடியும்.

பணிகளும் கடைமைகளும்

கணக்கு தணிக்கை அலுவலர் கடமைகளும் அதிகாரங்களும் 149, 150ஆம் விதிகள் தணிக்கைத்துறைத் தலைவரது கடமைகளையும் அதிகாரங்களையும் எடுத்துக் கூறுகின்றன. 149ஆம் விதியின்படி, மத்திய அரசின்  கணக்குகள், யூனியன் அல்லது மாநிலங்களால் ஏற்படுத்தப்பட்ட அதிகாரக் குழு அல்லது நிலையத்தின் கணக்குகள் ஆகியவற்றின் தணிக்கைக்கு, தணிக்கைத்துறைத் தலைவரது அதிகாரங்கள், கடமைகள்பற்றிய விதிகளை வரையறை செய்யப் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் தரப்பட்டிருக்கிறது. மேலும், அத்தகைய அதிகாரங்களையும் கடமைகளையும் பாராளுமன்றம் ஏற்படுத்துகின்றவரையிலும் அரசியலமைப்பு இயங்க ஆரம்பிப்பதற்கு முன்பு, இந்தியத் தணிக்கைத்துறைத் தலைவர் என்னென்ன கடமைகளையும் அதிகாரங்களையும் செலுத்திவந்தாரோ அத்தகையனவற்றை அவர் செய்வதற்கு அது ஏற்பாடு செய்திருக்கிறது. இத் துறையில் பாராளுமன்றம் இது தொடர்பாக  சட்டம் இயற்ருததால், இந்திய டொமினியன் அரசியலமைப்பின்கீழ் அவருக்கு முன்பிருந்தவர் ஆற்றிவந்த பணிகளுக்கு இணையான அதே பணிகளைத் கணக்கு தணிக்கை அலுவலர் செய்து வருகிறார், 150ஆம் விதிக்கிணங்க மத்திய அரசு மற்றும் ,  மாநிலங்கள் ஆகியவற்றின் கணக்குகள் எவ்வமைப்பிலும் முறையிலும் இருக்கவேண்டும் என்பதை குடியரசுத் தலைவரின்  ஒப்புதல்படி   செய்யத் கணக்கு தணிக்கை அலுவலர் அதிகாரம் பெற்றிருக்கிறார்,

1971 ஆம் ஆண்டு கணக்கு தணிக்கை அலுவர் சட்டத்தின் படி அவர் கீழ்க்கண்ட பணிகளை செய்கிறார். இச்சட்டம் 1976 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.

பிரதானப் பணிகள்

  • மத்திய அரசு, மானில அரசு மற்றும் சட்டசபையை கொண்டுள்ள யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் இந்தியப் பொது நிதியின் கீழ் செய்யப்படும் செலவு தொடர்பாக தணிக்கை செய்தல்
  • இந்திய அவசர கால நிதி மற்றும் பொது நிதி ஆகியவற்றையும் மேலும் மானில அவசர கால நிதி மற்றும் பொது நிதியையும் அது தொடர்பான செலவுகளையும் ஆய்வு செய்தல்
  • மத்திய மற்றும் மானில அரசின் பல்வேறு துறைகளுக்கான , வியாபாரக் கணக்கு , இலாப நட்டக் கணக்கு செலவு ஆகியவற்றை தணிக்கை செயதல்
  • மத்திய மானில அரசுகள் முறையாக உருவாக்கப்பட்ட வழிமுறைகளின் படி பணத்தினை செலவு செய்திருக்கிறாதா என்பதை உறுதி செய்தல்
  • வேறு ஏதேனும் கணக்குகளை தணிக்கை செய்யுமாறு குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுனர் கேட்டுக்கொண்டால் அதனை தணிக்கை செய்தல்
  • தணிக்கை அறிக்கையை , குடியரசுத் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட மானில ஆளுனரிடம் சமர்ப்பித்தல் ( விதி 151)
  • கணக்கு தணிக்கை அலுவலர் முக்கியமான பணி, அப்பணி சட்டப்படி அவர் ஆற்றவேண்டிய பணிகளுள் ஒன்றாக இல்லாவிட்டாலும், பொருளாதார நிலைமையை நோக்கமாகக் கொண்டு கணக்குகளைச் சோதனை செய்வதும், எங்கு அதிக மாகவும், அவசியமில்லாமல் வீணடிக்கப்பட்டும் இருக்கிறதோ அத்தகைய இனங்களை அரசினர் கணக்கை ஆராயும் பொதுக்கணக்கு குழுவின் (Public Accounts Committee) கவனத்திற்குக் கொண்டுவருவதுமாகும்..

கணக்கு தணிக்கை அலுவலரும் பொது கணக்கு குழுவும்

நிதி ஒதுக்கீடுபற்றிய் கணக்குகளையும், அவைகளைப்பற்றிய கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கைகளையும், அவைபோன்ற பாராளுமன்றத்திடம் வைக்கப்பட்ட இதர கணக்குகளையும், பொது கணக்கு குழு சரியென்று அதற்குத் தோன்றுமாறு சோதனை செய்யவேண்டியது அதன் கடமையாகும். அத்தகைய சோதனையின் நோக்கம், நிதித்துறையில் மேற்கொள்ளப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அது பாராளுமன்றத்திற்குப் பொறுப்புடையதாக இருப்பதை உறுதிப் படுத்துவதற்காகும். அதனுடைய தேர்வாராய்வுகளை மேற்கொள்வதற்கு அக்குழு, அரசாங்கக் கணக்குகளின் சிக்கல்களை எல்லாம் ஆராய்கின்ற தணிக்கைத்துறைத் தலைவரின் ஆலோசனையை பெறுகிறது. அக் குழு, அதன் முன்தோன்றி சாட்சியளிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கும் துறையைச் சேர்ந்த சாட்சிகளை, அவர்கள் எத்துறையைச்  சேர்ந்தவர்களோ அத் துறையைப்பற்றிய கணக்கு தணிக்கை அலுவலரின் ஆண்டறிக்கைகளில் காணப்படும் குற்றச்சாட்டுகளுக்கான அவர்களுடைய சாட்சியங்களை ஆய்கிறது. பொதுக் கணக்கு  குழுவின் வெற்றி அல்லது தோல்வி முக்கியமாகத் கணக்கு தணிக்கை அலுவலரின்  ஆண்டறிக்கைகளின் தரத்தைப் பொறுத்ததாகும். அவருடைய அறிக்கைகள், உதவி மான்யங்கள் வழங்கப் படாமல் பாராளுமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மீறப்படாதிருப்பதை உறுதி செய்வதற்கு உதவுவதோடு, அவ்வொதுக்கீடு அடிப்படையிலான செலவு ஏற்படுத்தப்பட்ட விதிகளுக்குட்பட்டிருக்குமாறு செய்யவும் உதவுகிறது. அதோடு மட்டுமல்லாது அவர் பாராளுமன்றத்தின் சார்பாக அரசாங்கச் செலவுத் திட்டத்தின் சிறப்பு, உண்மைத் தன்மை, சிக்கணம் ஆகியவற்றையும் தனக்குத்தானே திருப்தி செய்துகொள்ள வேண்டும்.

வரி கொடுப்போரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகச் செய்யப்படும் கணக்கு தணிக்கை அலுவலரின் சேவையின் மதிப்பு அளவிடற்கரியதாகும். நாட்டு நிதிக்குப் பாதுகாவல் தணிக்கை. பாராளுமன்றத்தின் சார்பாக அரசாங்கத்தின் நிதித்துறை நடவடிக்கைகளை மேற்பார்வையிடுபவராக இருப்பவர் தணிக்கைத் துறைத் தலைவர். ஆண்டுதோறும் அரசாங்கச் செலவு வேகமாக அதிகரித்துக்கொண்டுவரும் இந்தியா போன்ற நாடொன்றில், அரசியலமைப்பில் கொள்ளப்பட்டிருக்கும் ஜனநாயகக் கொள்கைகளை உரிய முறையில் அடைவதற்குத் கணக்கு தணிக்கை அலுவரின் பங்கை அதிகப்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் வாய்ப்பிருக்கிறது. எனவே தான் இவ்வலுவலகம் மிகவும் முக்கியமானதென்றும் , பொதுப் பணத்தின் பாதுகாவலன் என்றும் அறியப்படுகிறது.

 

CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 25